அழுதது - தோழனின் மரணத்தில்
ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)
இசைத்தது - கிட்டார் (இசை தான் வருதில்லை. கொடூரமா இருக்குது.)
ஈர்த்தது - பள்ளி கால நினைவுகள், பக்கத்தில் கணக்கு படித்தவள்
உருண்டது - என் தலை, நண்பின் காதலில்
ஊசியானது -நான் செய்யாத பிழைக்கு ஆசிரியர் தண்டித்த பொழுது
எழுந்தது - விழுந்த பின் (விழுந்து விழுந்து படிக்கையில் சொன்னேங்க)
ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)
ஐயம் கொண்டது - என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்)
ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)
ஓடியது - நாய்க்கு பயந்து (ஆயுசுக்கும் மறக்காது அந்த ஓட்டம்)
ஔடதமாகியது - (அதாங்க மருந்தாகியது) - இது வரைக்கும் இல்லை. இனி பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
//என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //
ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?
///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//
யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.
அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....
//ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.
ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...
//ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//
கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....
//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//
அட ...
காதல்ல இதெல்லாம் சகஜம் பாலு
//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.
கனககோபி said...
//என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //
ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?//
அது வேற இது வேற. அவங்க பாவம் இப்ப எல்லாம் டீவியே பார்க்கிறதில்லை.
சப்ராஸ் அபூ பக்கர் said...
///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//
யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.
அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....//
நன்றி சப்ராஸ் எப்படி போகுது நோன்பு? இன்று 13ம் நோன்பா?
ilangan said...
//ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.
ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...//
இதையெல்லாம் பொது இடத்தில கேட்க கூடாது இலங்கன். அப்படியும் தான்..
பிரியமுடன்...வசந்த் said...
//ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//
கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....
சத்தியமா அப்ப மட்டும் தான் வசந்த். நான் உண்மைக்குமே நல்லவன்..
இதுக்கு மேல கேட்டா அழுதுடுவேன்.
பிரியமுடன்...வசந்த் said...
//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//
அட ...
காதல்ல இதெல்லாம் சகஜம் பாலு//
இது எனக்கில்ல தானே வசந்த்
Geetha Achal said...
இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html
அன்புடன்,
கீதா ஆச்சல்//
ரொம்ப நன்றி கீதா அக்கா. உங்க விருது என்னை ஊக்கப்படுத்துகிறது
சந்ரு said...
//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.//
உண்மைய இப்படி எல்லாம் கேட்கலாமா சந்ரு
நல்லா இருக்கு யோ.. கவிதை மாதிரியும் இருக்கு..
நீங்களும் நாடோடியா? ;)
//உருண்டது - என் தலை, நண்பின் காதலில்//
உங்கள் பதிவுகளின் மேலுள்ள திகதியைக் கொஞ்சம் கவனியுங்கள்.. தவறாக உள்ளது.