ஹர்பஜன் சிங் - சுய அறிக்கைமுழுப் பெயர் - ஹர்பஜன் சிங்


செல்லப்பெயர் - பாஜி (சாப்பிடுற பஜ்ஜி இல்லீங்க, பாஜி)


முழு நேர தொழில் - ரவுடி, டான்ஸ் போட்டி (நானும் ரவுடிதான்  நானும் ரவுடிதான்..)


பகுதி நேர தொழில் - கிரிக்கட் (அங்கயும் முழு நேர தொழிலை காட்டுவேன்)

ரொம்ப சந்தோஷபட்டது - சைமண்ட்ஸ்க்கு தண்டனை (என்னா மாதிரி நடிச்சேன்)பிடித்த பாடல் (முன்பு) - என்னம்மா கண்ணு சௌக்கியமா? (எதிர்பாட்டு படிக்கிறது சிறிசாந்த்)

பிடித்த பாடல் (தற்போது) - ஆண்டவன பார்க்கனும் (கேப்டன் பதவி கேட்கணும்)முணுமுணுப்பது - கமரா காரன் தப்பிச்சிட்டான்! (மாட்டாதடா மவனே!)

எதிரி (வெளிப்படையாக) - சைமண்ட்ஸ், சிறிசாந்த் (என்னை பார்த்த சும்மா அதிருது இல்ல)

எதிரி (மனதில்) - தோனி (தலைவர் பதவி கேக்குறேன், கண்டுக மாட்டேன்கிறாங்க)

நண்பன் - யுவராஜ் சிங் (என்னை போலவே சண்டைக்காரன்)

எரிச்சல் - லைசன்ஸ் இல்லாம காரோட்டி புடிச்சிட்டானுங்க ( லைசனா முக்கியம், ஹம்மர் இல்ல)

சாதனை - கோபம் வந்தால் அடிச்சிடுறது (பொய் சொல்லி தப்பிச்சிடுவேன்)

கடுப்பு - யுவராஜ் பிரீத்தி ஜிந்தாவை கட்டிபிடிச்சிட்டான் ( எங்க IPL  டீமிலயும் இருக்குதே...)

பொறாமை -  ஜீனியர் தோனிக்கு எவ்வளவு விளம்பரம் (இன்னும் ஏதாவது செஞ்சி பேமசாகனும்)

வேதனை - அடிக்கடி தண்டனை கொடுத்துடுறாங்க (அந்த சட்டத்தை எழுதுனவன் மாட்டட்டும்)

 இந்த பதிவை பார்த்திட்டு இந்திய ரசிகர்கள்அல்லது ஹர்பஜன் என்னை அடிக்க வந்தால், நான் அவர்களை அன்றூ சைமண்ட்சிடம் மாட்டிவிடுவேன் என கூறிக்கொள்கிறேன்.

10 Responses
 1. நாளைய பத்திரிகைகளில்

  கண்டியில் பிரபல வலைப்பதிவர் ஹர்பஜனினால் நையப்புடைக்கப்பட்டார்.

  நல்லகாலம் ஹர்பஜன் கொழும்பில் நிற்கும் போது இந்தப் பதிவு எழுதவில்லை, எழுதியிருந்தால் கண்டி ஏசி பஸ் பிடித்து ஹர்பஜன் யோகாவைத் தேடிவந்திருப்பார், தப்பிவிட்டீர்கள்.


 2. சொல்லவே இல்ல இப்படி எல்லாம் எழுதுவிங்க என்று...


 3. கடுப்பு - யுவராஜ் பிரீத்தி ஜிந்தாவை கட்டிபிடிச்சிட்டான் ( எங்க IPL டீமிலயும் இருக்குதே...)//

  :)))


 4. //செல்லப்பெயர் - பாஜி (சாப்பிடுற பஜ்ஜி இல்லீங்க, பாஜி)


  முழு நேர தொழில் - ரவுடி, டான்ஸ் போட்டி (நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்..)//

  நீங்க சொல்றது மாளிகாவத்தை பாஜி யா? போட்டுட்டாங்களே.. கவனம்.. புதிய தலைமை உங்களை கவனிக்கலாம்..


 5. அவனை செல்லமா வேற யாரோ கூப்பிடுறாங்களா? நான் என்ட றோட்டில நிக்கிற நாய்க்கு பஜ்ஜி எண்டு பெயர் வைக்கப்போறன்..


 6. LOSHAN Says:

  மவனே.. ஹர்பஜன் என்கிட்டே மட்டும் மாட்டினே.. #@@*&)(%$@!&*($#@( பஞ்சாபி கெட்ட வார்த்தைங்க்னா)

  பார்த்தாலே எரிச்சல் வரும் ஒருவராகி விட்டார்..

  கலக்கல் யோ பின்னி எடுத்திட்டீங்க.. வந்தி சொன்னது போல நீங்கள் தாமதமாகப் போட்டதும் நல்லதே..


 7. //பகுதி நேர தொழில் - கிரிக்கட் (அங்கயும் முழு நேர தொழிலை காட்டுவேன்) //

  அருமை...

  //LOSHAN said...
  மவனே.. ஹர்பஜன் என்கிட்டே மட்டும் மாட்டினே.. #@@*&)(%$@!&*($#@( பஞ்சாபி கெட்ட வார்த்தைங்க்னா) //

  விஜய் மொழியில கதைக்கிறார் லோஷன் அண்ணா... நேற்று வெற்றி ரீ.வி விளம்பரத்துக்கு விஜய் மட்டும் காட்டேக்கயே யோசிச்சன் எங்கயோ உதைக்கிது எண்டு....

  //புல்லட் said...
  அவனை செல்லமா வேற யாரோ கூப்பிடுறாங்களா? நான் என்ட றோட்டில நிக்கிற நாய்க்கு பஜ்ஜி எண்டு பெயர் வைக்கப்போறன்.. //

  தன்மானச் சிங்கம் புல்லட் வாழ்க...

  யோ வொய்ஸ்...
  உங்கள் பதிவு அருமை...
  கலக்குகிறீர்கள்...
  வாழ்த்துக்கள்...


 8. அருமை அருமை.

  விழுந்துவிழுந்து சிரிக்கிற பதிவு. :)))


 9. இவ்வார யாழ்தேவி நட்சத்திரப் பதிவரான யோ!
  உமக்கு வாழ்த்துக்கள்!


 10. நன்றி வந்தியத்தேவன்
  நன்றி சந்ரு
  நன்றி வழிப்போக்கன்
  நன்றி என்ன கொடும சார்
  நன்றி புல்லட்
  நன்றி LOSHAN
  நன்றி கனககோபி
  நன்றி ஊர்சுற்றி
  நன்றி தங்க முகுந்தன்

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்