அரைச்சதம் தாண்டிவிட்டேன்..


அரைச்சதம் அடைந்து விட்டேன். ஆம் இது எனது ஐம்பதாவது பதிவு. 2008 மார்ச் மாதமளவில் பதிவுலகிற்கு வந்த நான் 2009 செப்டெம்பர் மாதம் தான் அரைச்சதம் தான் கடந்திருக்கிறேன். ஆரம்பத்தில் மிக மெதுவாக தட்டி தட்டி ஒவ்வொரு ஓட்டமாக எடுத்த நான் இலங்கை பதிவர் சந்திப்பிற்கு பின் கொஞ்சம் வேகமாக அடித்து ஆடுகிறேன்.

சென்ற வருடம் நான் போட்ட பதிவுகள் வெறும் 9 மாத்திரமே ஆகும், இந்த வருடம் ஜுலை வரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 13 ஆகும். ஆனால் அதற்கு பிறகு தான் என்னுடைய இனிங்ஸ் வேகமாக தொடங்கியது. இந்த பதிவு இந்த இரண்டு மாதங்களில் நான் போடும் 28வது பதிவு.  இலங்கை பதிவர் சந்திப்பு காரணமாக தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதற்கு காரணம் சந்திப்பிற்கு முன் எனக்கு எழுத ஆசை ஆனால் எனது பதிவு வாசிக்கப்படுகிறதா என தெரியாது, காரணம் பின்னூட்டம் அதிகம் கிடைக்காது. பொலோயர்கள் 4 அல்லது 5 மட்டுமே. ஆனால் அதற்கு பிறகு கிரமமாக பின்னூட்டம், பொலோயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதன் பின்னரே நான் எழுதியதை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்தேன். மேலும் இப்போது பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க இன்னுமொரு காரணம் வந்தியின் ”கொஞ்ச நேரம் பொன்னான நேரம்... ” என்கிற பதிவு. இதன்படி ஆணிபிடுங்கிக் கொண்டு இடையிடையே கிடைக்கும் கொஞ்ச கொஞ்ச நேரங்களில் எழுதி சேமித்து வைத்து கொண்ட முழுமையானதும் அதை பதிவிடுகிறேன்.

இன்னுமொரு விடயம் நான் தனியாக வசித்து வருகிறேன். எனது ஓய்வு நேரத்தை அநேகமாக தொ(ல்)லைகாட்சி அல்லது கணனியில்தான் போக்குகிறேன், ஆகவே பதிவிட எனக்கு கிடைக்கும் நேரம் ஒப்பீட்டளவில் அதிகம். ஒரு வகையில் இப்பதிவுலகம் எனது தனிமையை போக்கும் துணையாகவும் இருந்து வருகிறது.

பதிவுலகம் ஏராளமான நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள் நாட்டிலும் கடல் கடந்தும் பல நட்புகள் எனது தளத்துக்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. நானும் 50 பதிவுகள் அதுவும் இந்த வருடத்திலே எழுதுவேன் என நினைத்திருக்கவில்லை. அதுவும் யாழ்தேவி திரட்டி நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்த காலத்திலேயே எனது 50வது பதிவு எழுதக்கிடைத்ததும் அதிஷ்டம்தான்

எனது 50 பதிவுகளுக்கு ஆதரவு தந்த பதிவுலக நட்புகளே! தொடர்ந்து எனக்கு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.


13 Responses
  1. வாழ்த்துக்கள் யோ.
    நன்றிகள் என்னுடைய ஒரு பதிவு உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் நானும் ஏதோ எழுதியிருக்கின்றேன் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.


  2. வாழ்த்துக்கள்.


  3. வாழ்த்துக்கள் யோ...
    தொடரட்டும் உங்கள் பணி


  4. பாராட்டுக்கள் யோ ....ஐம்பது அல்ல ஐம்பதாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். தொடர்க. நாங்களும் உங்களுடன் இருக்கிறோம். நட்புடன் நிலாமதி. ..


  5. வாழ்த்துக்கள்
    நண்பா...


  6. வாழ்த்துக்கள் யோ! இன்னும் 100 - 200 - 250 - 500 - ......... என்று தொடரட்டும்!


  7. ARV Loshan Says:

    வாழ்த்துக்கள் யோ!
    உங்கள் வேகமும் தாகமும் அதிகரிக்கட்டும்.. நட்சத்திரப் பதிவரானமைக்கும் வாழ்த்துக்கள்..

    சகல துறைகளிலும் தொட்டு கலக்குகிறீர்கள்,,


  8. ஹேமா Says:

    வாழ்த்துகள் யோகா.இன்னும் நிறைய எழுதவேணும்.நிறையச் சாதனைகள் செய்யவேணும்.


  9. வாழ்த்துக்கள் யோ……….
    எதிர்காலத்தில் பம்மல் பதிவுகளுடன் காத்திரமான பதிவுகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். ஐம்பதிற்கும், நட்சத்திரத்துக்கும் வாழ்த்துக்கள்.


  10. Unknown Says:

    வாழ்த்துக்கள் சகோதரரே...
    தொடர்ந்து எழுதுங்கள்...
    பதிவர் சந்திப்பில் பின்னர் உங்கள் தளத்தை தொடர்ந்து பார்த்து வருகிறேன்... கலக்குகிறீர்கள்...
    மீண்டும் வாழ்த்துக்கள்...


  11. மேலும் பல இடுகைகள் வெளிவர வாழ்த்துக்கள்


  12. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா!?


  13. நன்றி வந்தியத்தேவன்
    நன்றி வேந்தன்
    நன்றி kiruthiga
    நன்றி நிலாமதி
    நன்றி ஜெட்லி
    நன்றி தங்க முகுந்தன்
    நன்றி LOSHAN
    நன்றி ஹேமா
    நன்றி மருதமூரான்.
    நன்றி கனககோபி
    நன்றி உலவு.காம்
    நன்றி பிரியமுடன்...வசந்த்
    நன்றி வால்பையன்


    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் முழுமனதோடு நன்றிகள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.