மறக்க முடியாத கிரிக்கட் இனிங்ஸ்



1996 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் உச்ச கட்டம், அரையிறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகள் சந்திக்கின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தித்து அதில் சனத் ஜயசூரியவின் புயல் வேக பேட்டிங்கினால் இந்திய பந்துவீச்சாளர்களை இல்லாமல் செய்து இலங்கை அணி இலகுவாக வென்றது. ஆனாலும் அப்போட்டியில் சச்சின் சதம் ஒன்றை பெற்றும் இந்தியாவால் வெல்ல முடியவில்லை.

சனத், களுவித்தாரண என்னும் போர்மில் இருக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி மற்றும் ஏற்கனவே இந்தியாவை வென்ற நம்பிக்கையுடன் இலங்கையும் ஏற்கனவே தோற்றாலும் இம்முறை பழிக்குப்பழி வாங்குவோம் மேலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சச்சின் இருக்கும் அசகாய போர்மில் வெல்லலாம் என்கிற நம்பிக்கையில் இந்திய அணியும் 120,000 என்கிற மாபெரும் ரசிகர்கள் முன்னால் கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நம்பிக்யுடன் போட்டியிட தயாராகின. டாசில் வென்ற இந்திய தலைவர் அசாருதீன் இலங்கை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால் அவர்களை தோற்கடிப்பது கடினம் என இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

முதல் ஓவரில் சனத் களுவித்தாரண இருவரும் ஆட்டமிளந்துவிட்டனர் போட்டி இந்தியா வசமாகியது. அப்போது தான் துடுப்பெடுத்தாட இறங்கினார் அரவிந்த டீ சில்வா. துரதிஷ்ட வசமாக நின்று ஆடும் குருசிங்கவும் ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்தார். அந்த இக்கட்டான நிலமையில் இந்தியா போட்டியை இந்தியா வசமிருந்து அழகான, நேர்த்தியான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை பக்கம் பறித்தெடுத்தார் அரவிந்த. சிறி நாத், பிரசாத், கும்ப்ளே என எல்லா பந்து வீச்சாளர்களது பந்தையும் எல்லைக் கோட்டுக்கு அடித்து விரட்டினார். போட்டியின் பின் சிறிநாத் ஒரு பேட்டியில் “அந்த நிமிடத்தில் அரவிந்தவுக்கு எங்கு பந்து வீசுவது என தெரியவில்லை. அவ்வளவு அழகாக ஆடினார்” என கூறினார்.

இவ்வளவுக்கும் ஜயசூரிய போன்று 30 யார் வட்டத்துக்கு வெளியே பந்தை தூக்கியெல்லாம் போடவில்லை எல்லாம் நேர்த்தியான கிரிக்கட் ஷொட்கள். 47 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்று கும்ளேயின் பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்த போது, போட்டி இலங்கைக்கு சாதகமாக மாறியிருந்தது. இவ் ஓட்டங்களில் அவர் 14 பௌண்டரிகளை பெற்றிருந்தார்.

இந்த ஆட்டம் தான் எனக்கு கிரிக்கட்டில் மிகவும் பிடித்த இனிங்ஸ். அதற்கு காரணம் அரவிந்த துடுப்பெடுத்தாட வந்த போது ஓட்டங்கள் இல்லாமல் இரண்டு முக்கிய விக்கட்டுகளை இழந்து தத்தளித்த கொண்டிருந்தது குருசிங்கவும் 1 ஓட்டத்தோடு ஆட்டமிளந்தார். முழு Pressure இலங்கை அணி மீது இருந்த போது அடித்து ஆடிய விதம் மிக அருமை. என்னை பொறுத்த வரையில் இது தான் அரவிந்த விளையாடிய மிக சிறந்த இனிங்ஸ் (இறுதிப்போட்டியில் முழு அணியினரும் நன்றாக விளையாடினர். அரவிந்த சதத்தை பெற்றாலும் குருசிங்க, ரணதுங்க அவருக்கு ஆதரவாக துடுப்பெடுதாடினார்)


3 Responses
  1. ARV Loshan Says:

    அருமையான இனிங்ஸ் ஒன்றைக் கண் முன் கொண்டு வந்தீர்கள்..
    அரவிந்த தான் இலங்கையால் உருவாக்கப்பட்ட முதலாவது முழுமையான கிரிக்கெட் வீரர் எனலாம்..

    அந்தப் போட்டியில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு இனிங்ஸ் என் all time favourite ரொஷான் மகநாம அடித்த அரை சதம்.. :) அதுவும் cool and class


  2. Unknown Says:

    இலங்கை உருவாக்கிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் அரவிந்த என்கிறேன் நான்...
    இல்லை என்பீர்களா?
    அரவிந்தவை நீங்கள் எந்த வழகத் துடுப்பாட்ட வீரர் என வகைப்படுத்த முடியாது... தேவையான நேரத்தில் அடிப்பார், தேவையான நேரத்தில் நின்று ஆடுவார்...
    உலகத்தில் உருவாகிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அரவிந்தவை விக்கிபீடியா வர்ணிக்கிறது...

    சில முன்னணி துடுப்பாட்ட வீரர்களை ஒப்பிட்டு ஓர் பதிவிடலாம் என நம்புகிறேன்... சில நாட்களாக கொஞ்சம் வேலை... பார்ப்போம்...


  3. நன்றி லோஷன்,
    நன்றி கோபி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..