ஆஸ்திரேலியா மண் கவ்வியது

அப்பாடா என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது, ஒரு மாதிரி ஆஸ்திரேலியாவை அவங்க சொந்த மண்ணிலேயே தோற்கடித்தது தென்னாபிரிக்கா. அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர் தோல்விகள், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கவசம் கீழே இறங்கி கொண்டிருக்கின்றது போலே தான் தெரிகிறது. சென்ற ஆண்டே இது நடந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் தகிடு தத்தம் மூலம் இலங்கை, இந்தியா அணிகள் அந்த தொடரை வெல்ல முடியாத மாதிரி செய்து விட்டார்கள். கடந்த போட்டியில் தென்னாபிரிக்கா போட்டியில் ஓட்ட எண்ணிகையை துரத்தியது போல இலங்கையும் துரத்தியது சங்ககார 200 ஓட்டங்களை நெருங்கினார், ஆனால் வழமை போல் நடுவரின் உதவியோடு 192 ஓட்டங்களுக்கு அவரை வெளியேற்றினர், இலங்கை அணி 410 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து 96 ஓட்டங்கள் தோல்வி அடைந்தது, அடுத்த முறை இதே போல் சிக்கியது இந்தியா அணி முடிந்த அளவு கள்ள விளையாட்டு விளையாடி Andrew Symonds ஆகி அவுட் பல முறை விளையாடியது, கீழே விழுந்த பந்தை கேட்ச் எடுத்ததாக கூறியது, என ரொம்ப கீழ்த்தரமான விளையாட்டை விளையாடி போட்டியை வென்றது ஆஸ்திரேலியா அணி.

ஷேன் வார்னே மற்றும் மக்ராத் இல்லாத ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு சும்மா நம்ம கிளப் போட்டிகள் அளவுக்கு தான் என இன்று தென்னாபிரிக்கா நிருபித்து உள்ளது, அதிலும் புதிதாக வந்த டும்னி சும்மா கலக்குறாரு ஐயா. அவரை மிட்சில் ஜோன்சன் எவ்வளவோ முறை வம்புக்கு இழுத்தும் மனுஷன் அசைந்து கொடுக்கவே இல்லை. ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றம் சீக்கிரம் நடக்கும் என எதிர் பார்க்கலாம், அவற்றில் சில 

01 ஹய்டேன் ஒய்வு அல்லது கட்டாய ஓய்வு  

02 Hussay அணியில் இருந்து தூக்கப்படல்  

03 புதிய பந்து வீச்சாளர்கள் அணிக்குள் வருதல்  

04 Brett Lee ஓரம் கட்டபடுதல்
* பின் குறிப்பு கட்டயமாக stayn அல்லது ntini அல்லது வேறு யாராவது ஒரு பந்து வீச்சாளர் பந்தை வீசி எறிவதாக குற்றச்சாட்டு, அல்லது இன வெறியை காட்டி ஆஸ்திரேலியரை திட்டினர் என தென்னாபிரிக்கா வீரர் ஒருவருக்கு குற்றச்சாட்டு, அல்லது பந்தை சேத படுத்தியதாக தென்னாபிரிக்கா அணி மீது புகார் என மேற்கூறியவற்றில் எதாவது அல்லது வேறு விதமாக எதையாவது எதிர் பார்க்கலாம். பார்ப்போம் என்ன விதத்தில் ஆஸ்திரேலியா பழி வாங்கும் என...........சுஜாதா அவார்ட்ஸ் 2008 (மாதிரி)

ஒவ்வொரு வருடமும் நவீன எழுத்துலக வேந்தன் சுஜாதா அவரது விருதுகளை அறிவிப்பது வழக்கம், இந்த வருடம் அந்த மகத்தான எழுத்தாளர் எம்மிடையே இல்லை, ஆகவே நான் அந்த இந்த வருடம் அவருக்காக அந்த கடும் பணியை தொடர்ந்து, எதோ என்னால் முடிந்தவரையில் விருதுகளை வழங்குகிறேன்

என்னால் முடிந்தவரையில் சினிமா, இசை, கிரிக்கெட், சர்வதேச விடயங்களுக்கு எனக்கு தெரிந்த அளவுக்கு இந்த விருதுகளை வெளியிடுகிறேன்

2008 சினிமா விருதுகள்
சிறந்த நடிகர் - சூரியா (வாரணம் ஆயிரம்)
சூர்யா மற்றும் கமலஹாசன் இருவருக்குன் இடைளன கடுமையான போட்டியில் இறுதியில் வெல்வது சூரியா வாரணம் ஆயிரம் படத்துக்காக

சொதப்பல் - ஒருவர் இருவர் இல்லை முக்கியமாக எதிர் பார்க்கப்பட்ட சாந்தனு சக்கரகட்டி படத்தில் முன்னியில் இருக்கிறார்

சிறந்த நடிகை - நயன்தாரா ( யாரடி நீ மோகினி படத்துக்காக ; பில்லாவுக்கு இல்லை )

சொதப்பல் நடிப்பு - த்ரிஷா குருவி படத்தில் பிச்சு உதறியதுக்கு

சிறந்த காமெடியன் - வடிவேலு (பல படங்கள்)

சிறந்த அறுவை காமெடியன் - சந்தானம் பல படங்களில் எங்கள் காதை கிழித்த காரணத்தால்

சிறந்த வில்லன் -ஜெயராம் (சரோஜா )

சொதப்பல் - பல பேர் என்னை திட்டினாலும் "ரஜினிகாந்த்" ("குசேலன்" படம் வாசு என்ற மசாலா இயக்குனர் மற்றும் ரஜினி என்ற மாஸ் நடிகர் இல்லாமல் இருந்தால் சிறந்த ஒரு படமாக வந்திருக்கும்)

சிறந்த டைரக்டர் - கெளதம் வாசுதேவ மேனன் (வாரணம் ஆயிரம்) இவரது திறமைக்கு ஒரு சிறிய சான்று படத்தில் கார்திக் பாடிய "அவ என்ன " என்னும் ஆடக்கூடிய பாடலை காட்சியமைப்பின் மூலம் எல்லாரையும் ஒரு சோக கட்டத்துக்கு கொண்டு சென்றது

சிறந்த சொதப்பல் - கலா பிரபு ( ரஹ்மான் போட்டு கொடுத்த சிறந்த பாடல்களை மற்றும் அற்புதமான இசை, சிறந்த விளம்பரம் எல்லாத்தையும் சொதப்பியதுக்கு)

சிறந்த படம் - தசாவதாரம் (எல்லாரும் பட்ட கஷ்டத்துக்கு சிறந்த பலன்)

சிறந்த சொதப்பல் -குசேலன், ஏகன் மற்றும் குருவி (ஓவர் பில்டப் இந்த படங்கள் ஓடாததுக்கு காரணம் )

சிறந்த அலட்டல் - சக்கரகட்டி

இசை விருதுகள்
சிறந்த இசை அமைப்பாளர்- A.R. ரஹ்மான் (சக்கரகட்டி படத்தில் மெலடி, பாஸ்ட் என எல்லா விதமான பாடல்களையும் போட்டு அசத்தியதுக்கு, இங்கே ஹரிஸ் ஜெயராஜ் கடும் போட்டியை கொடுத்தாலும் தமிழ் இசையை உலகுக்கு கொண்டு சென்றது ரஹ்மான் தான் மற்றும் ஹரிஸ் ஜெயராஜின் பாடல்கள் எங்கேயோ கேட்ட ஞாபகத்தை தருவதும் சிறந்த இசை அமைப்பாளர் விருதை கொடுப்பதை தடுக்கிறது

சிறந்த சொதப்பல் - யுவன் (ஏகன் படத்துக்காக, பில்லா என்னும் சூப்பர் ஹிட் மியூசிக் தந்த கூட்டணி எதிர்பார்பை பூர்த்தி செய்யாத காரணத்தினால் )

சிறந்த பாடகர் - ஹரிஸ் ராகவேந்தரா (தாம் தூம்), ஹரிஹரன் (வாரணம் ஆயிரம்)

சிறந்த சொதப்பல் - கமலஹாசன் (முகுந்தா முகுந்தா என்ற சிறந்த பாடலை கடைசியில் தின்றதுக்காக)

சிறந்த பாடகி - சின்மயி ( பல பாடல்கள்)

சிறந்த சொதப்பல் - பாடகிகள் யாரும் அநேகமாக சொதப்பவில்லை

சிறந்த மெலடி - "கண்கள் இரண்டால்" மற்றும் "முன்தினம் பார்த்தேன் "

சிறந்த குத்து - "நாக்க மூக்க" (எல்லாரையும் ஆட்டு விததுக்காக )

சிறந்த புது வரவு - ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம் படத்துக்கு அற்புத இசை வழங்கியது மற்றும் "கண்கள் இரண்டால்" என்ற சிறந்த பாடலை வழங்கியது

வருடத்தின் சிறந்த பாடல் : "Texi Text" (சக்கரகட்டி) , " முன்தினம் பார்த்தேன்" (வாரணம் ஆயிரம்)

என்னுடைய அடுத்த பதிவிலே கிரிக்கெட் மற்றும் சர்வதேச விருதுகளை அறிவிக்கிறேன், இப்போதைக்கு எனக்கு நேரம் இல்லை... கூடிய விரைவில் விருது அறிவிப்புகள் தொடரும்


இனி புகைக்க மாட்டோம்

இது முற்றிலும் புகைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது...

எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலில் இருந்த புகை பிடிப்புக்கு எதிரான சில புகை படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்இங்கிலாந்து பயோ டேட்டா


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயோ டேட்டா குமுதம் ஸ்டைலில்

பெயர் : இங்கிலாந்து கிரிக்கெட் டீம்
டிரைவர் : முன்னர் வோகன் இப்பொழுது கெவின் பீட்டர்சன்
நீண்டகால தொழில் : எல்லா நாட்டிலும் அடி வாங்குவது
தற்போதைய தொழில் : இந்தியாவில் செமத்தியாக வாங்கி கட்டி கொள்வது
நீண்டகால எதிரி : ஆஸ்திரேலியர்கள்
தற்போதைய எதிரி : இந்தியர்கள்
ஒரே பெருமை : கிரிக்கெட் உலகின் தாயகம்
ஒரே எரிச்சல் : யுவராஜ் சிங்
ஒரே நிம்மதி : இந்த முறை IPL விளையாடலாம்
விளையாட்டு பிள்ளை : அன்ட்ரெவ் பிளின்டோப்
மறக்க முடியாதது : ஷேன் வார்ர்ன் & முரளிதரன்
சமீபத்திய சாதனை : பாகிஸ்தான் பந்தை சேதபடுத்தியாதாக
கூறி வென்றது
நீண்டகால சாதனை : கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டு சென்றது
நீண்டகால வேதனை : ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாதது
குறிக்கோள் : எப்படியாவது யுவராஜ் சிங் விக்கெட்டை வீழ்த்துவது


A.R. Rahman எனக்கு பரிச்சயமானது இப்படித்தான்

வார இறுதி எதாவது மியூசிக் சம்பந்தமாக எழுத வேண்டும் என உட்கார்ந்து விட்டேன் என்ன எழுதுவது என யோசிக்கையில் எனக்கு பிடித்த பாடல்களை பற்றி எழுதலாம் என முதலில் யோசித்தேன், எப்படியும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி எழுதினால் அதில் A.R. Rahman பற்றி தான் எழுத வேண்டி வரும், ஆகையால்
A.R. Rahman பற்றியே எழுதி விடுகிறேன்...

எனக்கு A.R.R. அறிமுகமானது நான் ஒன்பதாம் வகுப்பு அதாவது பதம் ஆண்டு படிக்கையில், அப்போதைய என் போன்ற டீன் ஏஜ் மாணவர்களின் ஏக்கங்கலான ஹிந்தி பாடல்கள் எல்லாம் ஆங்கில பாடல்களை போல கேட்க மிக அருமையாக இருக்கின்றது எப்ப நம்ம தமிழ் பாடல்கள் இப்படி வர போகுது என எதிர் பார்த்திருந்த போது தான் "சின்ன சின்ன ஆசை" பாடல் எங்களை எல்லாம் யாருடா இந்த புது இசை அமைப்பாளர் என கேட்டு வியந்தோம், அப்புறம் யாரோ ரகுமானாம்டா சின்ன வயசாம்டா என பேசி கொண்டோம், மேலும் அதே படத்தில் உள்ள "புது வெள்ளை மழை" புது விதமான ஒரு மெலடியை வழங்கியது. அந்த நேரத்தில் என்னக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுதான் (இன்னும் எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடலுக்கு இடமுண்டு)... S.P.B. யின் காலத்தை வென்ற குரலின் இனிமையான பாடலான "காதல் ரோஜாவே" அப்போதைய காலங்களில் தாலாட்டு ஆகவே இருந்தது முற்றிலும் உண்மை, இப்படியே A.R.R இன் பாடல்களை கேட்டு கேட்டு என் வகுப்பு தோழர்கள் எல்லாம் A.R.R. ரசிகர்களாகவே மாறி விட்டோம்.


ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல் மாத்திரம் ஹிட் ஆகும் காலத்திலேயே ரோஜா படம் வந்து ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகலாம் என தமிழ் இசை வரலாற்றை திருப்பி போட்டது...

இப்படியே நாங்கள் A.R.R. பாடல்களுக்கு ரசிகர்களாக மாறி இருந்தோம், நாங்கள் G.C.E. (O/L) வகுப்பில் படித்து கொண்டிருந்த நேரம் வந்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் எங்களை ஆடவைத்தன, அதே வருடம் வந்த Bombay படத்தில் இருந்த "உயிரே உயிரே" பாடல் எங்களை உருக வைத்து A.R.R இன் பைத்தியமாகவே மாற்றி விட்டது, ஹரிஹரன் ரசிகர்கள் அதிகம் பேருக்கு பிடித்த பாடல் இதுவாகவே இருக்கும்...இப்பதிவு தொடரும்


லேப்டாப் வாங்கலியோ லேப்டாப்

இது என் சொந்த சரக்கு அல்ல மின்னஞ்சலில் வந்தது... புதிது புதிதா என்னென்னவோ வரும் போது நாம லேப்டாப் தயாரிப்பாளர்கள் புது விதமாக லேப்டாப் மாதிரிகளை வெளியிட்டிருப்பதாக என் தோழி ஒருத்தி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருந்தாள், உண்மையோ இல்லை இது கிராபிக்ஸ் வேலையோ தெரியாது, ஆனால் இப்படங்கள் ரசிக்க தக்கவையாக இருக்கிறது, so ரசிப்போம், சுவைப்போம்
வாழ்த்துவோம் வரவேற்போம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுகிடையிலான டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன... யாராலும் வெல்ல முடியாத அணி என பெயரெடுத்துள்ள மன்னிக்கவும்.... பெயரெடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய 2-0 என வெற்றி கொண்டது.. ஆசியர்களான எமக்கு சந்தோசத்தை தரும் விடயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,


பல காரணங்களுக்காக இப்போட்டி தொடர் பலராலும் மறக்க முடியாது,

கங்குலி, கும்ப்ளே (சில வேளை டிராவிட்) விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி தொடர், இனி இந்திய அணியின் Fab 5 என இருந்தது இனி Fab 3 (டிராவிட்டை அணியை விட்டு நீக்காமல் இருந்தால் அல்லது அவராகவே அண்ணியை விட்டு நீங்காமல் இருந்தால்) அல்லது Fab 2 என மாற வேண்டிய நிலை உள்ளது, ஆனால் இந்திய அணியின் பேட்டிங் இன்னும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறது, காம்பிர், விஜய், மிஸ்ரா என புதிதாக வந்தவர்களும் நல்ல போர்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விசயமாகவே நோக்க வேண்டும்...

உலக போலீஸ்காரன் அமெரிக்கா என்பது போல உலக கிரிக்கெட் தாதா, சண்டியர், முரடர்கள், etc.................. இன்னும் எப்படி வேண்டும்னாலும் நீங்கள் எழுதி கொள்ளுங்கள் என நினைத்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது எப்படியும் ஒரு பெருத்த அவமானமாகவே இருக்கும், முக்கியமாக கவரி மான் பரம்பரையை சேர்ந்த ரிக்கி பாண்டிங்க்கு இந்த தோல்வி ரொம்ப கசப்பாகவே இருக்கும் என்பது நிச்சயம், கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால் எப்படியும் நடுவர்கள் துணை கொண்டாவது வெற்றி பெற்றிருப்பார்கள்... சென்ற முறை கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியர்கள் விளையாடிய விதம் எல்லாருக்கும் நினைவு இருக்கலாம்...

இந்திய அணிக்கு இந்த தொடரில் முக்கியமாக ஆக்ரோஷமான அணி தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார், கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு துணிச்சலான ஒருவர் தலைமை பொறுப்பை எடுத்துள்ளார், எனக்கு Mark Taylor மற்றும் Sharne Warne இருவரின் காப்டன்ஷிப் ரொம்ப பிடிக்கும் Attacking Captains, இப்போ ரொம்ப நாளைக்கு பிறகு இந்த மாதிரி ஒரு கேப்டன் கிடைத்துள்ளார்....

இப்படி பல காரணம் இருந்தாலும் இன்னொரு விடயத்தினாலும் இப்போட்டி தொடர் முக்கியமானது, நீண்ட நாளைக்கு பிறகு ஹர்பஜன் சிங்க் போட்டி தடை, தண்டம், எச்சரிக்கை இல்லாமல் முடித்துள்ளார் அதுவும் அவரது பரம வைரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.....நீண்ட காலமாக விளையாடி வந்த கங்குலி, கும்ப்ளே (டிராவிட்ஐயும் சேர்க்க வேண்டி வரலாம்) வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம், புதிதாக வந்துள்ள விஜய், மிஸ்ரா போன்றோரை வரவேற்போம்.


Salute to Kapildev - (ICL) எனது பார்வையில்

கடந்த ஒன்றரை மாத காலமாக எனது மாலை நேர வேலைகளை ஒழுங்காக செய்ய முடியவில்லை, இதற்கு முக்கியமான காரணம் ICL போட்டிகள், பலருக்கு இது என்னவோ Cricket Board களால் ஒதுக்கப்பட்ட வீரர்களின் போட்டியாகத்தான் இன்னும் பார்கிறார்கள், ஆனால் தொடர்ந்து என்னை போல் இப்போட்டிகளை பார்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு, இந்தியாவில் இத்தனை காலம் இந்த அளவு வீரர்களை வைத்திருந்து, அவர்களை கவனிக்காமல் இன்னும் மூத்த வீரர்களையே வைத்து காலம் தள்ளிஇருந்தது புரியும், எத்தனையோ திறமை உள்ள வீரர்கள் இந்த போட்டிகளில் பிரகாசித்தும் இனி அவர்களுக்கு இந்தியா தேசிய அணியில் வைப்பு இல்லை என நினைக்கும் போது கவலை அளிக்கிறது..

என்ன தான் இந்தியா கிரிக்கெட் போர்டு முழு இந்தியா கிரிக்கெட் Control ஐ தன் கீழே வைத்திருந்தாலும் கபில் தேவ் என்னும் போராட்ட குணம் உள்ள வீரன் தான் எத்தனை பிரச்சனை வந்தாலும் தனியே போராடி இப்போட்டிகளை நடத்தி காட்டியது மட்டுமல்லாது பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளார், Sothi, Ali Murthaza, Mishra, Rayudu, Binny, Vignesh, Sathis, Abbas Ali, Sharma என பல இளம் வீரர்கள் இங்கு தங்களது திறமையை காட்டுகின்றனர், எனக்கு Ali Murthza மற்றும் Reethindhar Sothi இருவரையும் அவர்களின் போராட்ட குணங்களுக்காக பிடிக்கும், கடைசி வரை போராடும் இவர்கள் Kapil Dev இன் Followers ஆக தான் நான் பார்க்கிறேன்....


என் முதல் பதிவு

எனக்கு எழுதும் ஆர்வம் சிறிய வயதிலிருந்தே இருக்கிறது, ஆனால் எதில் எழுதுவது என யோசித்திருந்த எனக்கு Blog ஒரு சிறந்த வாய்பாகவே அமைந்திருந்தது, ஆனால் எப்படி தொடங்குவது, இது சாத்தியமாகுமா என எல்லாம் நினைத்திருந்த நேரத்தில் தான் தமிழ் Unicode Typing எனக்கு பரிச்சயமானது, மேலும் Loshan இன்ட வலை பூவை பார்த்த பின் தொடங்கலாம் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது, எனவே தொடங்குகிறேன் எதையாவது எழுதி வைக்கலாம் என்ற முடிவோடு, இன்னும் எந்த விடயங்களை பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்யவில்லை, என்னை பாதித்தவைகளை என்னால் en நண்பர்களிடம் கதைக்க முடிந்தவைகளை இங்கு நான் பதிக்க விரும்புகிறேன்.....