திங்கள் நூடில்ஸ்


ரெண்டு நாளா உறவினர் ஒருத்தரின் திருமணம் காரணமாக பதிவுப்பக்கமே வரலை. இன்று தான் வந்தேன்.வந்து பதிவுகளை வாசித்தால் நம்ம சந்ருவின் வலை திருடப்பட்டுள்ளது கேள்விப்பட்டு அதிர்ந்து போய் எனது கடவு சொல்லையும் மாற்றி விட்டேன், நம்ம சேரன் கிரிஸ் போன்ற தொழில்நுட்ப ஸ்பெசலிஷ்ட்கள் அவருக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்

-----------------------------------------------------
-----------------------------------------------------
 நேற்று என்னுடன் பஸ்ஸில் பயணித்தவர் என்னுடன் பேசும் போது அவர் புதிதாக இணைய இணைப்பு பெற்று கொண்டதாக தெரிவித்தார். நானும் ஆஹா நமக்கு கதைக்க ஒருத்தர் கிடைத்திட்டார் என நினைத்து சந்தோஷமாக நம்ம பதிவுலக கதையெல்லாம் சொன்னேன், கடைசியில் அவர் சொன்னது தான் எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது, அவர் என்கிட்ட சொன்னது  “ என்ன கனெக் ஷன் வாங்கி என்ன புண்ணியம் இப்ப தான் அரசாங்கத்தில ஆபாச இணைய தளங்களை எல்லாம் தடை செஞ்சிட்டாங்களே, ஆமா நீங்க எல்லாம் எப்படி பார்க்கிறீங்க என கேட்டார்” இன்டர்நெட் என்றால் இன்னும் இப்படி தான் என ரொம்ப பேர் எண்ணியிருக்காங்க.
-----------------------------------------------------
-----------------------------------------------------
வெற்றி எப் எம்மின் கண்டி அலைவரிசை 101.5 ல் இப்ப முழுமையாக லக் எப் எம் தான் கேட்கிறது. அவங்க அலைவரிசை 101.3 என நினைக்கிறேன், முன்னர் கொஞ்சம் கொஞ்சம் கேட்டது. இப்ப முழுமையாகவே வெற்றியின் அலைவரிசையை அந்த வானொலி முற்றுகையிட்டு விட்டது. இதெல்லாம் விசாரிக்க யாருமில்லையா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
இதுவும் அப்படிதான் வெற்றியிலும் சூரியனிலும் கந்தசாமி திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வானொலி தாங்கள் தான் என கூறுகிறார்கள். நான் கேட்டு பார்த்த வரையில் வெற்றி எப் எம் மட்டுமே வீ கிரியேசன்ஸ் மற்றும் படத்தின் இலங்கை விநியோகஸ்தர்களிடமும் ஒப்பந்தமிட்டு இருக்கிறது. அப்படியானால் சூரியனில் பொய் சொல்லுகிறார்களா? அல்லது எங்களை ஏமாற்றுகிறார்களா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
விடுமுறையில் பசங்க படம்  பார்க்க கிடைத்தது. அருமையான படம். தமிழில் கதாநாயகர்கள், கதாநாயகி,  லவ் என புளித்து போன விடயங்கள் இல்லாத படம். சிறுவர்கள் பேசுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் இப்ப எல்லா சின்னதுகளும் இப்படி தான் பேசுது. ஆகவே இத ஏற்று கொள்ள தான் வேண்டும்.
 -----------------------------------------------------
-----------------------------------------------------
 திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணிக்கு கமல் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவி போட போறாங்க. எப்படியும் வார நாள் என்பதால இத எனக்கு பார்க்க கிடைக்காது என்பது ரொம்ப கவலை. அந்த நிகழ்ச்சி பதிவிறக்க கிடைச்சா யாராவது சொல்லுங்க (அட்வான்ஸ் புக்கிங்)
-----------------------------------------------------
-----------------------------------------------------
ஏழை சிறுவர்களுக்கு இலவச  இதய ஆப்பரேஷன் செய்ய இருப்பதாகவும், தேவையானவர்கள் தொடர்பு கொள்ள சொல்லியும், இன்று எனக்கு நண்பனொருவனிடமிருந்து வந்த தகவல் கீழே. தகவல் உண்மை என்றால் உங்களுக்கு முடிந்த அளவுக்கு இந்த தகவலை பகிர்ந் கொள்ளுங்கள் (தகவலின் நம்பகத்தன்மை பற்றி என்னாபல் உறுதி கூற முடியாது)லோஷனுடன் நயன்தாரா (பதிவர் சந்திப்பு)

எப்படியோ பதிவர் சந்திப்பு எழுதிய எல்லாரும் நம்ம நயன்தாரா அக்கா பத்தியும் எழுதிட்டாங்க. நான் அதுல கொஞ்சம் மேலே போய் படமும் போட்டுட்டேன். படம் பதிவின் கடைசியி்ல் இருக்கு. எல்லாரும் ஜுஸ், கலவை, பரோட்டா எல்லாம் எழுதுறாங்களே நானும் அது மாதிரி எழுத பார்த்த முயற்சி தான் இது.

---------------------------------------------------------------
---------------------------------------------------------------
முதலாம் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் மெக்கலம் துணை விக்கட் காப்பாளர் ஜெசி ரைடர் இருவரும் வயிற்று உபாதை வந்து, இருவருக்கும் விளையாட இயலாத நிலை வந்த போது, சங்கக்கார பெருந்தன்மையாக விளையாடும் பதினொருவர் அல்லாத மேலதிக வீரரை விக்கட் காக்காளராக விளையாட அனுமதித்தார், இதிலே விஷயம் என்ன வென்றால் இதே சங்கக்கார நியுசிலாந்தில் சதமடித்த போது வாழ்த்த சென்ற முரளியை ரன் அவுட் செய்தது இதே மக்கலம் தான்.
இப்ப போட்டி முடிந்து விட்டது, முரளியின் பந்து வீச்சில் சந்தேகம் அவரது ஒவ்வொரு பந்தையும் சோதிக்க புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவருமாறு முன்னாள் நியுசிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்க் ரிச்சர்ட்சன் கேட்டுள்ளார். மனுசன் பாவம்யா, எத்தன தடவைதான் சோதித்து பார்த்திட்டு இவரின் பந்து வீச்சில் எந்த குறையும் இல்லைனு சொல்லுவாங்க..
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
இலங்கை கல்வி முறையில் தெரிந்தோ தெரியாமலோ ஆண்டு 5 புலமைப்பரிசில் முக்கிய இடம் வகிக்கிறது. மாணவர்கள் அதுக்கு விழுந்து விழுந்து படிச்சிட்டு பரீட்சைக்கு போனா, அங்க வினாத்தாள் வரலையாம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்தாங்களாம். பாவம் அதுக்கு அப்புறம் அவங்க பரீட்சை எந்த மனநிலையோட எழுதினார்களோ? இலங்கை பரீட்சைகளில் இப்ப அடிக்கடி குளறுபடி நடக்குது. சம்பந்த பட்டவங்க கவனிச்சா நல்லது. மாணவர்களின் கல்வி ஆர்வத்தை இது குறைக்கலாம்.
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
ஆதவன் பாட்டு கேட்டேன். எல்லாமே வழமை போலவே இருந்தது.  வழமை போலவே சிறப்பான பாட்டை பாடினது கார்த்திக். வழமை போலவே எங்கேயோ கேட்டது போன்ற உணர்வு. அப்ப வழமை போலவே இந்த பாட்டுகளும் ஹரிஸுக்கு ஹிட் தான். 
---------------------------------------------------------------
---------------------------------------------------------------

பதிவர் சந்திப்பில் சினிமா பதிவுக்கு மட்டும் தான் அதிக ஒட்டுக்கள் விழும் என ஒரு கருத்து கூறப்பட்டது. அது உண்மைதான், எனக்கும் அப்படி நடந்துள்ளது. ஆனால் இங்கு நான் ஒரு விஷயத்ததை தெளிவு படுத்த வேண்டும். சிறப்பாக எழுதி இருக்கிறாங்க என நினைக்கிற பதிவுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அது போதும். நல்ல பதிவுகள் அதிகமாக எழுதப்படும். நான் நீரற்று போவதை பற்றி எழுதிய பதிவுக்கு வெறும் 3 வாக்கு கிடைத்தது, ஆனால் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய பதிவுக்கு 31 வாக்குகள் கிடைத்தது. தொடர்ந்து 3 நாள் தமிழிசில் அதிக வாக்குகள் கிடைத்த இடுகையாக முன்னணியில் இருந்தது.


---------------------------------------------------------------
---------------------------------------------------------------
லோஷனும் நயன்தாராவும் இருக்கும் படம் பார்த்த லோஷன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கலாம் என கூறினார். ரொம்பவே ஆணி புடுங்க இருப்பதால் அடுத்த பதிவிலே அந்த படத்தை இணைக்கிறேன்.

இலங்கை பதிவர் சந்திப்பு ஒரு பட தகவல்

நான் சும்மா கலாய்க்க வேண்டி சில பதிவர்களின் படங்களை சுட்டு (அவங்க அனுமதி வாங்காட்டி சுடுறது தானே?) அதல சில கொமெண்ட்ஸ் போட்டு வச்சிருக்கேன். யாராவது வேண்டாம் என்றால் சொல்லுங்க. வாரவங்க, உங்க கருத்த சொல்லிட்டு போங்க
 
இதுல புல்லட் ஒரு படத்தில என்ன நினைத்திருப்பார் என நான் சொல்ல வில்லை நீங்கள் அவர் என்ன நினைத்திருப்பார் என பின்னூட்டத்திலே சொல்லி விடுங்களே...கூகுல் நிறுவனத்துக்கு கேக் வெட்டிய இலங்கை தமிழ் பதிவர்கள்.

ப்ளாக்கர் தொடங்கி 10 வருஷம் ஆகியதுக்கு கூகுல் நிறுவனம் தான் உண்மையிலும் கேக் வெட்டி இருக்கணும் (2003 பெப்பரவரி மாதம் தான் கூகுல் ப்ளாக்கரை வாங்கியதால் அவங்க 10 வருட கொண்டாட்டத்தை 2013ல தான் செய்வாங்களோ?), ஆனால் அண்ணாமைலைக்கு பால் மாதிரி நம்ம இலங்கை பதிவர்கள் அவங்களுக்காக கேக் வெட்டி சந்திப்ப தொடங்கினப்பவே நெனச்சேன் ஏதும் வில்லங்கம் இருக்குமோன்னு நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை. வந்தியத்தேவன் அவர்கள் எல்லாரையும் இந்த சந்திப்பு பற்றி எழுத சொன்னார். நானும் அப்படி தான் எழுத யோசிச்சேன் அப்புறம் தான் தோணிச்சி எல்லாரும் மாதிரி எழுதினால் கந்தசாமி படம் பார்த்து விமர்சனம் பண்ணின மாதிரி (வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுகிழமை வரை பதிவுப்பக்கம் போக முடியல, கந்தசாமி படம் பற்றி தான் எல்லாரும் எழுதி இருக்காங்க)  ஆகியிருக்கும், ஆகவே அந்த சந்திப்ப வேறு விதமா எழுதிட்டேன்.

* இலங்கை ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலே ஞாயிற்றுக்கிழமை நாள் தொடங்கி (அதாங்க  00.00 மணிக்கு  தானே நாள் தொடங்கும்)  சில மணிகளே ஆகிய அதிகாலை 5 மணிக்கு எழும்பி (நல்ல வேளை என்னுடன் இருக்கும் நண்பர்கள் நோன்பு ஆரம்பிக்க அதிகாலை 4 மணிக்கு எழும்புவதால் என்னை எழுப்பி வி்டார்கள்.) 6 மணிக்கு கொழும்பு பஸ்ஸில் ஏறி கொழும்பு தமிழ்ச்சங்கத்துக்கு சரியாக 9 மணிக்கு (நம்ம டைம் விஷயத்தில எப்பவும் ஷார்ப்புன்னு காட்டதான்) போய் சேர்ந்து விட்டேன். எனககு அந்த இடம் புதிது என்பதால் முதல் நாளே வந்தி டிவிட்டரிலும் லோஷன் தொலைபேசியிலும் எப்படி வர வேண்டும் என கூறி இருந்ததால் நான் இடத்தை தேடி கஷ்ட படவில்லை.

* சதீஷின் இனிய அறிவிப்போடு தொடங்கியது இலங்கை பதிவர்களின் இனிய சந்திப்பு

* புல்லட் பதிவுல  மட்டும் தான்  டுமீல் சுடுவார்னு  பார்த்தால் மனுசன் அங்கயும்  பம்மலா கடிச்சிட்டாரு. சிரிச்சி சிரிச்சி மனுசன கலாய்ச்சிட்டாரு ஆனா பாவம் எல்லாத்துக்கும் சாப்பிட குடிக்க கொடுத்து கைப்புள்ள மாதிரி ஆகிட்டாரு.

 * பதிவர் அறிமுகத்தில் எழுத்துக்களாக தெரிந்த நண்பர்களின் முகமும் அறிய பெற்றோம். (நான் என்னைப் பற்றி கூறும்  போது "அவனா இது?"  என கொஞ்சப் பேர் சொன்னாங்க மாதிரி இருந்தது. அவங்கள நான் பின்னூட்டத்தில கவனிச்சிக்கறேன்.)

* ஆரம்பத்தில் வந்தி, லோஷன், ஆதிரை அங்கே இங்கே ஓடி ரொம்ப பிலியா இருந்தாங்க. ஏற்பாட்டு குழு சிங்கங்களாச்சே ஆகவே அவங்க பிஸியாத்தான் இருப்பாங்க.

* சேது ஐயா பேச தொடங்கிறப்ப அநியாயமா நேரத்த வீணடிக்கிறாரே என யோசிச்சேன், ஆனால் அப்புறம் அவர் பேச பேச அவரது தமிழ் புலமை கண்டு வியந்தேன் (நான் விளக்கு என்பதை வௌக்கு என கூறுவதை கண்டிருக்கிறேன். இது ஔகாரமாக எடுக்கப்பட கூடிய சாத்தியங்கள் இருப்பதை மிக அழகாக சுட்டிக்காட்டினார்.)

* எழில் வேந்தன் மற்றும் மேமன்கவி என்போரை நேரில் காண கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ந்தேன்.

* சுபானு பதிவுச்சட்டங்கள் பற்றி கூறினார்.

* யாழ் தேவி திரட்டி பற்றி ரொம்பவும் காரசாரமாக விவாதித்தார்கள், ஆனாலும் எல்லாரும் ஒன்று பட்ட ஒரு விடயம் நம்மவருக்காக ஒரு திரட்டி முக்கியம் என்பது, ஆகவே “யாழ்தேவி ” திரட்டிக்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாகவே நான் இதனை கருதுகிறேன்.  இதனை அவர்கள் விமர்சனமாகவே எடுத்துக் கொள்ளவார்கள் என நினைக்கிறேன், காய்ந்த மரமே கல்லடிபடும் என நமக்கு நன்றாக தெரியும்.

* தமிழ் விசைப்பலகை பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டன (எனக்கும் ஆங்கிலத்தில் AMMA என எழுதி தமிழில் அம்மா என மாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் காரணம் எனது தாய் மொழியை எழுத நான் வேறு மொழியை கடன் வாங்க கூடாது என்பதால்)

* அடைமொழி வைத்து எழுதுபவர்கள் பற்றி ரொம்ப விவாதிச்சாங்க, அவங்கள வந்தி கவனிச்சி கிட்டாரு.

* பெண்கள் யாருமே பேசவி்ல்லை, முதல் சந்திப்பு என்பது தான் காரணமாக இருக்குமோ? (நானும் தான் அமைதியாக இருந்தேன், அதை வந்தி கிண்டலுடன் கூறினார்)

* ஹிட்ஸ் கிடைக்க நயன்தாரவின் சிங்கம், நமீதா என கவர்ச்சியா தலைப்பு வைக்க சொல்லி சிங்கப்புர் போய் வந்த சிங்கம் லோஷன் சொன்னார்.

* நண்பர் கௌ போய் மது லைவ்ஸ் ரீம் மூலம் இதை நேரடியாக ஒளி மற்றும் ஒலி பரப்பினார்.

* ஊரோடி தளத்தை எழுதும் நண்பர் 10 புதிய பதிவர்களுக்கு தனது ஹொஸ்டிங்கில் இலவசமாக இடம் தருவதாக கூறினார்.

* சேரன் கிரிஸ் மிக அழகாக தொழில்நுட்பங்களை விளக்கினார்.

* வந்தியத்தேவனின் பின்னூட்டங்களின் பின்னூட்டத்தோடு சநதிப்பு இனிதாகவே நிறைவுபெற்றது (வில்லங்கமா எதுவுமே நடக்க வில்லை).

* மொக்கை என்ற பதத்தைவிட நம்ம நாட்டு வசனமான பம்மல் என்னும் வசனம் பாவிக்கலாமே என பலர் கூறினார்கள், அதுவும் சரிதான்


நிகழ்வின் பின்னெ எனக்கு தோன்றிய சில விடயங்கள் தப்பாக இருக்கலாம் அப்படி தப்பு என நினைத்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்


* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம, ஏனென்றால் வடக்கிலிருந்த ஒருவரைம் தெற்கிலிருந்த ஒருவரையும் மலையகத்திலிருந்து ஒருவரையும் ஏன் இணையம் மூலம் பல நாடுகளிலுள்ளவர்களையும் இணைத்தது எம் தமிழ் மொழி தான் என்பது என் கருத்து. 


* கையெழுத்து மறைந்து இனி தமிழ் மெல்லச் சாகும் என எல்லாரும் நினைத்திருந்த நேரத்தில் பதிவுலகம் மொழியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு பாடசாலை விட்டு பதிவுலகம் பக்கம் வரும் வரை தமிழை எழுதும் வாய்ப்பு அமையவில்லை, அந்த வகையில் இந்த பதிவுலகம் எம்மொழியை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. மொழிக்கான ஊடகம் மாறும் அதாவது ஏட்டுசுவடியிலிருந்து காகிதத்துககு வந்தது இன்று இணையத்தில் கோலோசசுகிறது.

ரொம்ப எழுதிட்டேனா? அப்படி என்றால் மன்னித்து விடுங்கள்

வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவேஎன் முதல் விருது - சப்ராஸ் அபூ பக்கருக்கு நன்றி

நேற்று பதிவர் சந்திப்புக்கு கொழும்பு போய் வந்த களைப்பு நீங்கி இன்று அந்த சந்திப்பு பற்றி எழுதலாம் என நினைத்து எனது பதிவு தளத்துக்கு சென்றால் அங்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது, நண்பர் சப்ராஸ் எனக்கு "Scrumptious Blog Award" எனும் விருதை வழங்கியிருந்தார். ரொம்ப சந்தோசப்பட்டேன் ஏனென்றால் எனது எழுத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்ததை இட்டு, அதற்கு அடுத்து தான் அவர் ரொம்பவே கஷ்டமான ஒன்றையும் கொடுத்திருந்தார், இதை இன்னும் 10 பேருக்கு வழங்க வேண்டுமாம். அநேகமாக நான் எல்லாருடைய பதிவுகளையும் வாசிப்பேன், ஒரு பின்னூட்டத்தையும் போட்டு வைப்பேன் காரணம், என்னை பொருத்த வரையில் எனக்கு வந்த பின்னூட்டங்கள் எனது எழுத்துகளுக்கு வந்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். நான் அடிக்கடி விஜயம் செய்யும் 10 பேருக்கு இந்த விருதை வழங்குகிறேன் நீங்களும் இன்னும் 10 பேருக்கு வழங்கினால் அவர்களது படைப்புகளுக்கு ஊக்கமாக இது அமையும் என கருதுகிறேன். அவர்களுக்கு விருது வழங்க நான் நிச்சயமாக தகுதியற்றவன் தான், ஆனால்  தொடர்ந்து உங்களை வாசிக்கும் உங்கள் ரசிகனால் வழங்கப்பட்ட பாராட்டாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

01. வந்தியத்தேவன்
     இலங்கையின் மூத்த பதிவர், நான் எழுதுவதை ஊக்குவிக்கிறவர்,  03 வருடமாக எழுதுபவர், எனது வலை பற்றி மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் வந்ததை அதே கணம் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார், இந்த செயலில்  அவர் பதிவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என தெரிய வந்தது,

02. லோஷன்
    நான் எப்பொதும் வாசிக்கும் பதிவுகளை எழுதுபவர், ஜனரஞ்சக பதிவுகளை எழுபவர், எப்போதுமே எனக்கு பிடித்த அறிவிப்பாளர்.

03. வால்பையன்
  நான் எழுத தொடங்கி என்னை யாரும் பின் தொடரவில்லையே, நம்ம பதிவுகள் யாரையும் சென்றடையவில்லையோ என என நினைத்திருந்த போது என்னை பின் தொடர்ந்த முதலாமவர்.

04. சந்ரு 
 எப்பவுமே தன் கருத்துக்களை சொல்லுறவங்கள எனக்கு பிடிக்கும், வால்பையனுக்கு தன் கருத்துக்களை மறுப்பு அறிக்கையாக சொல்லி ஆனால் அவர் கூறிய நல்ல கருத்துக்களை ஏற்று கொண்டார், மற்றவர் மீது தன் கருத்துக்களை திணிக்காமல் தனது சொந்த கருத்தை தெரிவிப்பவர்.

05. நிலாமதி அக்கா
சிறிய சிறிய கதைகளை உணர்வுபூர்வமாக வழங்குபவர்.

06 மற்றும் 07. கீதா ஆச்சல் மற்றும் அம்மு
இவங்க பக்கத்துக்கு போய் பாருங்க எப்படியும் சமைக்க கத்துக்கணும் என்று தோணும், இவங்க குறிப்ப பல பேருக்கு காட்டி பேர் வாங்கிட்டேன்.

08. சசதீஷ்
 சதஷ் என்ற பேருக்கு முன்னால் சேர்த்ததனால் சசதீஷ் என எழுதி இருக்கிறேன் சரியோ தெரியவில்லை, லோஷனை போல ஜனரஞ்சக பதிவுகளை எழுதுறவர், இந்திய சினிமாக்களுக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக விருது கொடுக்கிறவர்.

09. கணிணி மென்பொருட்களின் கூடம் எழுதும் வடிவேலன்  அவர்கள்
  கணினி மென்பொருட்கள் சம்பந்தமாக அழகாவும் தெளிவாகவும் எழுதுபவர்

  என்ன 09 விருதுகள் தானே கொடுத்தேன் என்று பார்க்கிறீர்களா? 10வது  விருதை நான் எப்போதும் வாசிக்கும் நண்பர் சப்ராஸுக்கு வழங்குகிறேன். நீங்கள் எனக்கு  தந்ததால் நான்  உங்களுக்கு தர வேண்டியதில்லை  எனறு இல்லையே ஆகையல உங்களுக்கும் ஒன்று.


திரும்பவும் செல்லிக் கொள்ள  வேண்டியது என்ன வென்றால் இவன் பெரிய இவனா விருது கொடுக்க வந்துட்டான் என நீங்கள்  யோசிக்க வேண்டாம்  உங்களை எல்லாம் ரொம்ப வாசிக்கிறவன்  என்ற ரீதியில் (உரிமையில்) தந்திருக்கிறேன்.

நன்றி  வணக்கம் வாழ்த்துக்கள்இவங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறது மாதிரி

அவசரமா ஏதாவது பதிவ போடணும யோசிச்சேனா அப்புறம் என் கிட்ட  இருந்த சில படங்கள போட்டுட்டேன், அதுக்கு கீழே  கொஞ்சம் உளறியும் இருக்கேன் பார்த்திட்டு  சொல்லுங்க. படத்தில கிளிக் பண்ணுனா படம் பெருசா தெரியும்ங்கணணா
 
கில்லி நொ.  10
 
இவர தான் சுமைதாங்கின்னு சொல்லு வாங்களோ?
கில்லி நொ.  09
 
எயார் போர்ட்ல பெகேஜ் கொண்டு போறார், ஆமா மனுசன் எங்க? பெகேஜ் வண்டிக்குள்ளேயா இருக்காரு?
கில்லி நொ.  08
  
யப்பா கில்லி படம் பார்த்த மாதிரியே இருக்குங்கண்ணா!  தொங்கி தொங்கி எயார் கண்டின் ரிப்பேர் செய்யுறார்.
கில்லி நொ.  07
 
வாகனம் ரிப்பேர்னா ”இவர் புகுந்து விளையாடுவார்னு” சொல்லுவாங்களே அது இவர பார்த்து தானா?
கில்லி நொ.  06
  
லிப்ட்ல மேலே சாமான் போனாலும், இவரும் போனா தான் வேலை நடக்குமோ?
 கில்லி நொ. 05
 கேபிள் பிக்ஸ் பண்ணுராரு! நம்ம கேபிள் சங்கர் சார் இப்படி இருந்தது வந்தனால தான் அந்த பேரு வந்திருக்கும்னு நெனக்கிறேன்.

 கில்லி நொ. 04
 
இதுக்கு மேலே ஏறி நின்னு பெயின்ட் அடிச்சி பழகினா, விஜய காந்த் மாதிரி பறக்கலாமோ?
 கில்லி நொ. 03
 
நம்ம தமிழ் ஹீரோ ஒருத்தரு வில்லா வளைஞ்சி இந்த மாதிரி நடிச்சிருக்காரே, ஆனா இவரு பிளேன் ரிப்பேரு பண்ணுறாருங்கண்ணா
 கில்லி நொ. 02
 
நிலத்துக்கும் வானத்துக்கும் கனெக்சன் குடுக்குறாரோ? “தல” கவனம்.
 கில்லி நொ. 01
 
இவர தொட்டா ஷாக் அடிக்குமா அடிக்காதா?
கீழே இருக்கவரு கில்லி எல்லாம் இல்ல அதுக்கும் மேல நீங்க என்னா வேண்டும்னாலும் வச்சிக்கலாம். வட கொரியா இராணுவத்தில உள்ள புரட்சிக் கலைஞர், இவர புல்லட் எல்லாம்  ஒன்னும் பண்ணாது.
 இவ்வளவு கில்லிங்க படத்த  பார்த்து சூடாகிட்டீங்கண்ணா இந்த கில்லினி தீபிகா அக்கா படத்த பார்த்து கொஞ்சம் கூலாகிக்குங்க
தொழிநுட்பத்துக்கு அடிமையாகிட்டீங்களா - வாங்க சிரிப்போம்

இதுவும் வழமை போல டப்பிங்தான் பிடிச்சிருந்தா ஒரு ஓட்டும், பயனுள்ள கருத்தும் சொல்லிட்டுப்போங்க.

இது சிரிக்க மட்டுமே சொல்லும் விஷயம் , சீரியஸ் எதுவுமே இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

01. அப்பாவுக்கு மகன் அனுப்பும் மெயில்02. பெயர் பிடிக்காத மாணவன்03. சின்னவங்க கதைக்கிறாங்க04. இவரு பாஸ்வேர்ட தேடுறாரு!


05. அப்பா மகன்கிட்ட கேள்வி கேக்கிறாரு06. ஸ்கேனிங் ரிப்போர்ட் வாங்க போன தாயொருத்தி


ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 விடயங்கள்

இதுவும் எனக்கு வந்த மின்மடல் தான், அதை தமிழ் படுத்த முயற்சிக்கிறேன்.

பொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு (பெண்கள் மட்டும் அப்படி செய்ய மாட்டாங்கன்னு சொல்லி கேக்க கூடாது, ஏனென்றால் எனக்கு இந்த மின் மடலை அனுப்பியவர் ஒரு பெண் தோழி). அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ் ( ஆண்கள் என்னோடு கோவிக்க கூடாது).01. காதலன் கடைசி நிமிடத்தில் இருவரும் போக இருந்த பயணத்தை அல்லது வெளியே செல்லுவதை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்.
காதலாகள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்

02. வெளியே செல்லும் போது சில இடங்களை வேண்டாம் என கூறுதல்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

03. அவரது சொந்தங்களுடன் பழகுவதை விரும்பாமல் இருத்தல்
அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றோரோடு நீஙகள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம். தனது மகன் அல்லது சகோதரன் ”வேறு பெண்ணை அல்லவா காதலிக்கிறான்” என உங்களிடம் சொல்லிவிட கூடிய அபாயம் இருக்கிறது. நண்பர்களிடம் ”மச்சான் நான் ரெண்டு பிகர லவ் பண்ணுறேன்” சொல்லும் நம்ம பிரதர்ஸ் தனது தாய், சகோதரிகளிடம் அப்படி சொல்ல மாட்டாங்க.

04. கண்கள் அலைபாய்தல்
உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.

05. அவரது தொலைபேசி, மடிக்கணனி, பர்ஸ் போன்றவற்றை உங்களிடமிருந்து மறைத்தல்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.

06. உங்களை செல்லப் பெயர் கொண்டு அழைத்தல்
அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.

07. அவள் எனது முன்னால் காதலி இப்போ நாங்க ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் என கூறல்

ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டோம் என கூறி அவரோடு தொடர்பில்லை சும்மா கதைப்போம் என கூறினாலும் கவனித்துக் கொள்ளவும்.

ஆண்கள் என்னோடு கோபித்துக் கொள்ள கூடாது உங்களுக்காக ஒரு நவீன பேஷன் உடையோடு ஒரு பெண்ணின் படம்


Show Hidden Files & Folders வேலை செய்யவில்லையா?

Show Hidden Files & Folders என்பதை தெரிவு செய்தும் Hide ஆன பைல்கள் தெரிய வில்லையா? அப்போ இதை படியுங்கள். இந்த பதிவில் பயன்பெற்றீர்கள் என்றால் ஒரு பின்னனூட்டத்தை போட்டுவிட்டு போங்கள். இல்லாவிடின் வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

எனது கணனியில் விண்மோஸ் எக்ஸ்பீ வைத்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு பைலை ஒளித்து வைக்க வேண்டி வந்தது. அந்த பைலை Hide பண்ணிவைத்து விட்டு, இன்று அதை மீண்டு்ம் பார்க்க போனால் "Show Hidden Files & Folders" என்கிற ஒப்சனை கிளிக் செய்தால் மீண்டும் மீண்டும் ”Do not Show Hidden Files & Folders" என்கிறதே வந்து ஒளித்து வைத்த பைலை காட்ட மாட்டேன்கிறது.

என்னடா செய்வதென்று யோசித்து கடைசியில் கூகுலாண்டவரிம் தேடி கண்டு பிடித்தேன். என் போன்று யாராவது கஷ்டப்படடிருந்தால் அவர்களுக்காக இந்த வழிமுறையை இங்கு தந்துள்ளேன்.01. ஸ்டார்ட் மெனுவிலுள்ள ரன் கமாண்ட்டை கிளிக் பண்ணவும். அதில் "REGEDIT" என டைப் செய்து என்டர் பண்ணுங்கள்

02. HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL என்னும் கீயை தெரிவு செய்யவும். கீழே படம் தரப்பட்டுள்ளது. படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் பண்ணவும்.

03. CheckedValue என்னும் கீயை தெரிவு செய்து அதன் வலது பக்கத்திலுள்ள அதன் (hexadecimal) பெறுமதியை 1 என மாற்றவும். கீழே தரப்பட்ட படத்திலுள்ளதை போல். பின் ரெஜிஸ்டிரி எடிட்டரை மூடவும்


04. இனி வழமை போல் டூல்ஸ் போல்டர் ஒப்சன்ஸ் போய் ல் "Show Hidden Files & Folders" என்கிற ஒப்சனை கிளிக் செய்தால், Hide ஆன பைல்களை காணலாம்.

குறிப்பு . ரெஜிஸ்ரியை கையாள்வதில் அனுபவமற்றவர்ககள் சற்று கவனமாகவே அதை கையாளவும். பிழையாக பெறுமதியை மாற்றினால் சில வேளை சிஸ்டத்தை ஹேங்க் செய்துவிடும்.நேத்தைய மேட்ச்ல பார்த்த பேனர்களும் அதற்கான எதிர்பாட்டும்

நேத்து இலங்கை பாகிஸ்தான் டுவென்டி டுவென்டி மேட்ச்ல மொத்த அரங்கும் ரசிகர்களால் நிரம்பி இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு இலங்கைல இப்படி ஒரு கூட்டம் மேட்ச் பார்க்க

மேட்ச ரசிச்சனோ இல்லையோ நேத்து நான் ரசிச்ச இரண்டு விஷயம்

01. மேட்ச் பார்க்க வந்த அழகான பொண்ணுங்க (உண்மையதான் சொல்லுறேன் நம்ம நாடு பொண்ணுங்க உடுக்கிற விஷயத்தில எங்கேயோ யோட்டுச்சி..)

02. ரசிகர்கள் பிடிச்சிருந்த பேனர்கள் அவற்றில் சில கீழே (சிறந்த பேனருக்கு பரிசாமே.. அப்ப ரசிச்சி பார்த்த எங்களுக்கு எதுவுமே இல்லையா?) அந்த பேனர்களுக்கான என் எதிர்கேள்வி நீல நிறத்திலே.

L.B.W. - Life Before Wife


அப்ப கிரிக்கட்ல L.B.W. னா கஷ்ட காலம் ஆனா வாழ்க்கைல L.B.W. னா வசந்தகாலமா?

Younis Khan I Miss you

அப்ப மத்தவங்க எல்வாம் Mrs. U வா? இல்லாட்டி Mr. U வா?

Sana age is not a matter unless you Performing

இவரு என்னா சொல்ல வாராரு.. சனத் 70 வயசு கிழவனா விளையாட வந்தா பார்ப்பாறாமா?

Ramiz : When you going to Retire?
Sanath : When the day u cut hair like me.


அப்ப சனத் விலகனும் என்றால் ரமீஸ் ராஜாவ மொட்டையடிக்க (தலைய சொன்னேன்) வைக்கனுமோ?

All the Actions on Ten Sports

என்னாது டென் ஸ்போர்ட்ஸ்காரங்க சண்டை போட்டுகிறாங்களா?

Younis Out Whos Next


நேத்து தான் அவர் விளையாடவே இல்லையே அப்புறம் எப்படி அவர் அவுட் ஆனாரு?

Twinkle Twinkle Little Star
Mirando is my Super Star


அப்ப நம்ம ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் இல்லையா?

Sanath
Older the Bull
Harder the Stroke


அப்ப ஏன் இந்த விளையாட்டுக்கு வந்தாராம்? அதுக்கு போறதுதானே!


சச்சின் - அரவிந்த டீ சில்வா.. யார் சிறந்த வீரர்

சச்சின் டெண்டுல்கார், அரவிந்த டீ சில்வாவை விட சிறந்த பேட்ஸ்மேனா? ” இது இன்று எங்கள் நண்பர்களுக்கிடையில் நடந்த விவாதம். இதில் என் கருத்து சிறந்த வீரர் அல்ல வேண்டுமானால் அவரை நல்ல வீரர் என வைத்துக்கொள்ளலாம். ஒரு வகையில் பார்த்தால் சுயநலம் கொண்ட கிரிக்கட்டராகவே சச்சினை உலகம் பார்க்கிறது.. நானும் அப்படியே!


இது பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். அதன் பின் இது பற்றி விரிவாக ஒரு பதிவு இடுகிறேன்..

இலங்கை பாகிஸ்தான் தொடர் - ஒரு சிறு அலசல்இலங்கை பாகிஸ்தான் தொடர் முடிய இன்னும் ஒரே ஒரு டுவென்டி டுவென்டி போட்டி மாத்திரமே உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பற்றி ஒரு சிறு அலசல்தான் இந்த பதிவு.
இத்தொடரில் மிக சிறந்த கண்டுபிடிப்பு
இலங்கை அணி
01. அஞ்சலோ மத்தியுஸ்
ஆரம்பத்தில் மஹரூப்பை வெட்டி மத்தியுஸ’க்கு இடம் வழங்கியது எங்களுக்கு பிடிக்காத விடயமாக இருந்தாலும், தனது விளையாட்டு திறமையினால் அவரது தெரிவு சரி என நிரூபித்து விட்டார், இப்போதைய இலங்கை அணியில் எனக்கு பிடித்த இளம் வீரர் இவர்தான். பந்துவீச்சா? துடுப்பாட்டமா? பந்து தடுப்பா? எல்லா விதத்திலும் சும்மா புகுந்து விளையாடுகிறார். இலங்கை அணியின் எதிர்கால தலைவர் ஆக கூடியவர்.

02. ரங்கன ஹேரத்
ஏற்கனவே விளையாடி இருந்தாலும், முரளி இல்லாமல் வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தனித்து இலங்கைக்கு டெஸ்ட் வெற்றியை கொண்டு வந்து தர இயலும் என நிரூபித்து காட்டியவர், முதல் போட்டிக்கு முதல் நாள் தான் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார். வந்தார் வென்றார் என இவரை கூறலாம்.

03. திலின துஷார மிரண்டோ மற்றும் நுவன் குலசேகர
முரளி இல்லாத குறையை எப்படி ஹேரத் நிரப்பினாரோ. அதே போல் சமிந்த வாசின் இடத்தை இவர்கள் நிரப்பினார்கள். எதிர்கால இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பெரும் சேவையை இவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்

இத்தொடரில் மிக சிறந்த கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் அணி

01. மொஹம்மட் ஹமீர்
இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடிய, விளையாட முயன்ற ஒரே வீரராக இவரைத்தான் நான் நினைக்கிறேன். 17 வயது நிரம்பிய இந்த இளம் வீரர் சகல இலங்கை துடுப்பாட்ட வீரர்களையும் தனது பந்து வீச்சில் திணறடித்தார் என கூறலாம். சிறப்பாக கையாண்டால் வசீம் அக்ரம் போல இவரை உருவாக்கலாம். ஆனால் இவர் விளையாடுவது பாகிஸ்தான் அணியில்... நீண்ட காலம் இவரை அணியில் வைத்திருந்தாலே ஆச்சிரியம் தான், ஏனென்றால் அணித்தெரிவில் அரசியல் விளையாடும் நாடு பாகிஸ்தான்...

ரொம்பவே ஏமாற்றியவர்கள்
இலங்கை
01. அஜன்த மென்டிஸ்
ஏற்கனவே முரளியோடு விளையாடும் போது விக்கட்டுகளை அள்ளி குவித்தவர், எனவே முரளி இல்லாத போது சும்மா கலக்குவார் என எதிர்பார்த்த போது ஹேரத் அணிக்கு கை கொடுக்க இவர் கைவிரித்து விட்டார்.

02. திலான் சமரவீர
ஏற்கனவே முடிந்த பாகிஸ்தான் சுற்று பயணத்தில் இரட்டைசதங்கள் அடித்து தூள் கிளப்பினார். இங்கும் அந்த மாதிரி ஏதாவது செய்வார் என பார்த்திருந்தோம். கடைசி டெஸ்ட் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

03. சமிந்த வாஸ்
மிகச்சிறந்த வீரர் கடைசி போட்டியில் விளையாடும் போது மிகவும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தால், காலை வாரிவிட்டார். இவரை அணிக்கு சேர்க்காதது நியாயமாகவே படுகிறது.


ரொம்பவே ஏமாற்றியவர்கள்
பாகிஸ்தான் அணி

எல்லாரும் யுனிஸ் கானை ஏமாற்ற யுனிஸ் கான் எல்லாரையும் ஏமாற்றி விட்டார். தனியாக குறிப்பிட்டு இவர்தான் ஏமாற்றினார் என கூறமுடியாது. ஏனென்றால் எல்லாரும் சொதப்பலாகவே விளையாடினார்கள், முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொஹம்மட் யுசூப் மற்றும் ஊமர் குல்..

பொதுவாக பாகிஸ்தான் அணி இந்த தொடர் முழுவதும் பின்னடைவவை சந்தித்தற்கு காரணிகளாக நான் காண்பவை

01. அணித்தெரிவு
விக்கட் எடுக்ககூடிய பந்து வீச்சாளரான கனோரியாவுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்காமை.

02. போராட்ட குணம் இல்லாத தலைவர்
சிறிதும் போராட்ட குணமற்ற தலைவராக இருக்கும் யுனிஸ்கான் எந்த நேரமும் சிரித்து கொண்டிருப்பது எரிச்சலாக இருக்கிறது. ஏதோ வடிவேலு நகைச்சுவை போல இருக்கிறது.

03. பொறுப்பற்ற ஆட்டம்
நன்றாக விளையாடி கொண்டிருந்த யுனிஸ்கான் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ஆட்டமிழந்து, அதை தொடர்ந்து சகல விக்கட்டுகளும் விழுந்து போட்டியை தோற்றமை நினைவிருக்கலாம். இதேபோல் தான் முதலாம் போட்டியில் சல்மான் பட் தனது விக்கட்டை இழந்து போட்டியையும் இழந்தனர்.

இலங்கை அணியின் புதிய தலைவர் வெற்றிகளோடு தனது கணக்கை தொடங்கியுள்ளார். அவரது வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.