யுனிஸ் கான் - சுய அறிக்ககை
செல்லப்பெயர் - யூனுஸ் கான் (இத தான்யா உண்மையான பேர். சொல்ல மாட்டேங்குறாங்க)
முழு நேர தொழில் - WWE பற்றி பேட்டி கொடுத்தல் (நான் WWE மாதிரி இல்லீங்க, நல்லவன்)
பகுதி நேர தொழில் - தலைமை பதவி (அதுக்கும் இப்ப போட்டி வந்திடுச்சுண்ணா)
பிடித்த ஷொட் - சுவீப் ஷொட் (எப்படி போட்டாலும் கில்லி மாதிரி அடிப்போமில்ல)
பிடிக்காத ஷொட் - ரிவர்ஸ் சுவீப் ஷொட் (முக்கியமான நேரத்தில அடிச்சி அவுட் ஆகிடுவோமுல்ல)
ரொம்ப சந்தோஷபட்டது - 20-20 இறுதி போட்டி வெற்றியில் (அப்ரிடி காப்பாத்திட்டான்)
ரொம்ப துக்கப்பட்டது - பாப் வுல்மர் மரணம் (என்ன ஆளாக்கினவரு)
பிடித்த பாடல் - ஆடுங்கடா என்ன சுத்தி (அதுக்கு நான் ஒழுங்கா ஆடணுமே)
பிடிக்காத பாடல் - எங்கிட்ட மோதாதே (சொகீப் மாலிக், அப்ரிடி எல்லாம் பாடுறானுங்க)
முணுமுணுப்பது - அப்ரிடி தலமையில் தோத்துடனும்! (2 மெட்ச் வெற்றி. ர்ர்ர்)
எதிரி - யாருமே இல்ல (நான் யாரு கூடவும் சண்டைக்கு போக மாட்டேன்)
எதிரி (மனதில்) - அப்ரிடி (தலைவர் பதவி கிடைச்சதும் பொறுப்பா விளையாடுறான்)
நண்பன் - மொஹம்மட் யுசுப் (நல்ல வேளை ICL போனான்)
எரிச்சல் - இலங்கையில் தோல்வியுற்றது (காணுற நேரமெல்லாம் அடிச்சானுங்க)
சாதனை - எந்த கஷ்டம் வந்தாலும் சிரிப்பது (அதுக்குனு அழுக வந்தா சிரிப்பியானு கேக்க கூடாது)
பொறாமை - என்னத்த சொல்லுறது (இன்னும் ஏதாவது செஞ்சி பேமசாகனும்)
வேதனை - தரவரிசையில கீழே இறங்கியது (நானா எங்க இறங்குனேன், அவங்கதான்)
அவசரத்தில போட்ட பதிவு, பிடிக்காட்டி திட்டுங்க, பின்னூட்டத்தில்
//செல்லப்பெயர் - யூனுஸ் கான் (இத தான்யா உண்மையான பேர். சொல்ல மாட்டேங்குறாங்க) //
இது பெரிய குழப்பம் ஐயா...
Younus Khan என்று அவரின் சட்டையில் இருக்கும்... ஆனால் Younis Khan என்று தொலைக்காட்சியில் காட்டுவார்கள்...
ஆனால் அவரின் பெயர் யுனிஸ் கான் என்றும் யுனிஸ் கான் தான் பிழையாக யுனுஸ் கான் என்று ஆங்கில மாற்றம் செய்கையில் தவறுவிட்டார் என்றும் எங்கோ ஒரு கிறிக்கெற் குழாமில் சொன்னார்கள்... சரியாகத் தெரியவில்லை...
நீங்கள் இந்த சுயவிபரத்தை விடுவதாக இல்லை என?
ஆனால் ஒவ்வொரு முறையும் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதால் நான் உங்கள் சுயவிபர பதிவுகளை தொடர்ந்தும் வரவேற்கிறேன்...
வாழ்த்துக்கள் சகோதரா...
:))
ammu.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மு அக்கா மற்றும் நண்பர் கோபிக்கும்..