ஆதிரைக்கு எலி பிரச்சினையிலிருந்து தப்ப யோசனைகள்
இலங்கையின் பிரபல பதிவர் ஆதிரை அவர்களுக்கு எலியினால் பல தொல்லைகள் ஏற்பட்டுள்ளன என பதிவுலக சக்கரவர்த்தி லோஷன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இலங்கை பதிவுலகில் பல அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அகில உலக சகலகலா பதிவர் வந்தியின் தலைமையில் இலங்கை பதிவர்கள் ஒன்று கூடி ஆதிரையின் எலிப்பிரச்சினையை தீர்க்க எந்த வகையில் பதிவர்கள் உதவலாம் என ஆராய்ந்ததன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகனை நான் பதிவிடுகிறேன். இந்த முறைகளில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி ஆதிரை அவர்கள் பதிவுலகிற்கு மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.
* முதலாவது முடிவு விஜய் ரசிகர் பதிவர் சதீஷ் முன்வைத்த யோசனை “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலை சத்தமாக போட்டு ஆடவும் அப்ப அந்த இசைக்கு எலியும் அவரோடு ஆடும். அப்போது விஜய் பிரபு தேவாவை அழைப்பது போல் ”வாங்கண்ணா” என அழைத்து எலி கிட்ட வரும் போது அதை கொல்லலாம்.
* அனானிகளால் தாக்கப்பட்டு மீண்ட பதிவர் சந்ரு தெரிவித்த யோசனை ஆதிரை அவரது அறையை யாராவது ஒரு அனானிக்கு அல்லது அவரது எதிரி ஒருத்தருக்கு குறுகிய கால வாடகைக்கு விடலாம். பின்னர் வாடகையிருப்பாளரை எலி தாக்கி ஓய்ந்த பின் அறையை மீள பெற்றுக் கொள்ளலாம். இந்த யோசனை பயன் தந்தால் ஆதிரை அறையை விற்பதும் ஒரு சிறந்த வழி என மேலும் தெரிவித்த சந்ரு அறையை இலவசாக விற்கதாக இருந்தால் எலியோடு வாழ தான் தயார் என்பதையும் தெரிவித்தார்.
* சங்க தலைவரும் தீவிர கமல் ரசிகருமான வந்தி அவர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் அமெரிக்காவில் பிரபல மேக்கப் மேன் ஒருவரை வரவழைத்து அவர் மூலமாக தினமும் ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால் பூனை இருப்பதை கண்டு எலிகள் ஓடிவிடும் என்பதை தெரிவித்தார். மேலும் இந்த முறையில் உள்ள நல்ல விடயம் இந்த முறையை பாவித்தால் ஆதிரைக்கு பூனை வாங்க தேவையில்லை என்பதால் பூனை தொல்லையும் இல்லை என்ற மேலதிக தகவலும் வழங்கினார்.
* இன்னொரு பிரபல பதிவர் புல்லட் தனக்கு நன்றாக குறி பார்த்து சுட தெரியுமென்றும் தான் ஆதிரையின் வீட்டிலுள்ள எலிகளை சுட்டு வீழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
* ஊஞ்சலில் ஆடும் பதிவர் சுபானு அவர்கள் ஆதிரைக்கு சீக்கிரமே ஒரு திருமணம் செய்து வைத்தால் பின்னர் ஆதிரையின் துணைவியார் இந்த எலிகளை கவனித்து கொள்வதாகவும், இந்த யோசனைக்கு ஆதிரை சம்மதிக்கும் பட்சத்தில் அவருக்கு தேவையான பெண்ணை தனது திருமண தளத்தில் தேர்ந்தெடுக்கலாமெனவும் கூறினார்.
* எலிகள் இனவிருத்தியை தடை பண்ணி விட்டால் அந்த எலிகளால் இனபெருக்க முடியாமல் எலிகள் தானா குறைந்து விடும் எனவும் ஆசிய எலிகளை இவ்வகையான சத்திரசிகிச்சை மூலமாக தான் ஏற்கவே பரிசோதித்து இருப்பதாகவும், அதனால் தான் முன் வந்து ஆதிரை வீட்டிலுள்ள எலிகளை இந்த சத்திரசிகிச்சை செய்வதாகவும் பம்மல் பதிவர் கனககோபி தெரிவித்தார்.
* மேலும் இறுதியாக ஆதிரயைின் பிரச்சினை வேறு எந்த பதிவருக்கும் வரகூடாது, வந்தால் இலங்கை பதிவர்கள் சார்பில் அதனை தீர்த்து வைக்க பதிவர் சந்ரு தலைமையில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. அது சம்பந்தப்பட்ட தகவல்களை சந்ரு அவரது பதிவில் அறிவிப்பார் எனினும், எனக்கு அந்த சங்கத்தின் பொருளாளர் பதவி கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் பல யோசனைகள் இருந்தாலும் இவற்றின் மூலமாகவே இலகுவாக ஆதிரையின் எலிப் பிரச்சினை தீர்த்து வைக்கலாம் என வந்தி தெரிவித்து கொண்டதன் காரணமாக எங்களது கூட்டத்தினை அத்துடன் கலைத்து விட்டோம்.
* பிற்குறிப்பு - வேறு யாருக்காவது எலிப்பிரச்சினை வந்து அதற்கு இந்த முறையில் தீர்வு காண எங்களது சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்து கொள்கிறோம் அவ்வாறு இல்லாத பட்சத்தில் சொ.செ.சூ சட்டம் 452ன் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்டும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்..

ஆஹா ஆஹா கலக்கல். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள்.
// ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால் பூனை இருப்பதை கண்டு எலிகள் ஓடிவிடும் என்பதை தெரிவித்தார். //
ரசித்த வரிகள்.
இந்த மேட்டரை விடற ஐடியா இல்லையா?
எனக்கு கணினியிலுள்ள எலியால் பிரச்சினை. என்ன செய்ய?
நானும் "கார்ட்டூன் : ஆதிரை ஸ்பெஸல்" போட்டிருக்கின்றேன்.
http://skylinelk.blogspot.com/2009/09/blog-post_18.html
//ஊஞ்சலில் ஆடும் பதிவர் சுபானு அவர்கள் ஆதிரைக்கு சீக்கிரமே ஒரு திருமணம் செய்து வைத்தால் பின்னர் ஆதிரையின் துணைவியார் இந்த எலிகளை கவனித்து கொள்வார்//
அப்ப ஆதிரைக்கு எலிபிடிக்கத் தெரிந்த பொண்ணுபார்த்தா சரிபோலக்கிடக்கு.. நல்ல சிம்பிளான requirement.. நல்லது நல்லது.. வாழ்க வளமுடன்..
முதலாவது முடிவு விஜய் ரசிகர் பதிவர் சதீஷ் முன்வைத்த யோசனை “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலை சத்தமாக போட்டு ஆடவும் அப்ப அந்த இசைக்கு எலியும் அவரோடு ஆடும். அப்போது விஜய் பிரபு தேவாவை அழைப்பது போல் ”வாங்கண்ணா” என அழைத்து எலி கிட்ட வரும் போது அதை கொல்லலாம்
=>>
எலியுடன் விஜயை ஆட அழைத்ததுக்கு எலிப்பாதுகாப்பு சங்கம் சார்பாக வன்மையான கண்டனங்கள்.
எலி பாது காப்பு சங்க விபரம்.
தலைவர்.
வந்தியத்தேவன் மாமா.
செயலாளர்.
லோஷன் அண்ணா.
பொருளாளர்
புல்லட் அண்ணே.
என்னை கேட்காமல் என் அடையாளப்பாடலை பயன்படுத்தியதுக்கு உங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றது. எனவே நீங்கள் நூறு தடவை பிடிபடும் எலிகளை தப்ப விட வேண்டும்.
நல்ல யோசனைகள் யோ...
இப்போ நான் இருக்கும் ரூமில்
ரெண்டு எலி இருக்கு என்ன பண்ணலாம்?
உங்க சங்கத்து ஆள அனுப்பி உடுங்க...
ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால //
சிரித்தேன்.. :D
ஆதிரைையை எல்லாரும் நக்குகிறார்கள்.. பாவம்..
ஆகா...
என்ன எலிக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு செய்யிற அளவுக்கு மாத்தீற்றீங்களா...
ஆகா...
போயும் போயும் எலிக்கு...
ஹி ஹி...
அழகான, அற்புதமான நகைச்சுவை...
கலக்கியிருக்கிறீர்கள்...
நீங்கள் உண்மையிலேயே நட்சத்திரம் தான்...
நன்றி வந்தியத்தேவன்
நன்றி Subankan
நன்றி வேந்தன்
நன்றி சுபானு
நன்றி SShathiesh
நன்றி ஜெட்லி
நன்றி புல்லட்
நன்றி கனககோபி
தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி..