புதன் நூடுல்ஸ்

திங்கள்தான் இதை எழுதுவோம் என இருந்தேன், ஆனாலும் நிலாமதி அக்கா தேவதையை அனுப்பி வைத்ததாலும் கார்க்கி பாவா அழகு, கடவுள், பணம், காதல் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நண்பர் மருதமூரான் பள்ளி காலத்துக்கு அழைத்து சென்றதாலும் இன்று தான் எழுத கிடைத்தது.

---------------------------------------------------
---------------------------------------------------
இலங்கை இந்தியா அணிகளுக்கிடையில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இலங்கை அணி ரசிகனான எனக்கு சற்று கவலைதான் (கவலையில் போட்டி முடிந்த பின் பரிசளிப்பை பார்க்கவில்லை, தூங்கி விட்டேன்). ஆனாலும் இரண்டாவதாக பிரேமதாச மைதானத்தில் துடுப்பெடுத்தாடும் அணிகள் 200 ஓட்டங்களை நெருங்குவதே கடினமான விடயமாக கருதுகையில், இலக்கை விரட்டி போட்டிக்கு விறு விறுப்பை கொடுத்த இலங்கை வீரர்கள் பாராட்டுக்குறியவர்கள். இந்திய அணி வெற்றி பெற்றாலும் 44 ஒவர் வரை வெற்றி இரு அணிக்கு இடையிலும் மாறி மாறி பென்டுலம் ஆடியது,

பெங்களுரில் கமராமேனை அடித்து பெருமை சேர்த்த ஹர்பஜன் இன்னும் விட்டிருந்தால் மைதானத்தில் இலங்கை வீரர்களை அடித்து வீழ்தியிருப்பார். ஹர்பஜன், இசாந்த் சர்மா, நேஹ்ரா, பதான் போன்றோர் விளையாடும் வரையில் ICC யால் வழங்கப்படும் கண்ணியமான அணி என்ற விருது இந்தியாவுக்கு கிடைக்காது. இவ்வளவுககும் சச்சின், டிராவிட் போன்ற கண்ணியமான வீரர்கள் அந்த அணியில் தான் இருக்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

இலங்கை தோற்றது கவலையாக இருந்தாலும், ஆனானப்பட்ட ரோஜர் பெடரரே யு எஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் தோற்றுதானே விட்டார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன். இது உங்களுக்கு தெரிந்த செய்தி தான் ஆகவே இத்தொடர் பற்றிய வேறு சில தகவல்கள்.

இத்தொடரை நேரில் சென்று ரசித்தவர்கள் 721,059 பேர் இது சென்ற வருட 720,227 பேர் என்னும் எண்ணிக்கையை விட சற்று அதிகம். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சாதனை வரவு 61,554 மேலும் ஒரு வாரத்துக்கான அதிகளவு பார்வையாளர் சாதனை வரவான 423,427 என்னும் எண்ணிக்கையும் இத்தொடரிலே அமைந்தது (நீ என்ன கேப்டனா புள்ளி விபரம் சொல்லுறியே என கேட்க கூடாது)

ரபேல் நடால் ரோஜர் பெடரர் என இரு நட்சத்திரங்களும் இம்முறை கவிழ்ந்து விட்டன. (வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு). சென்ற வாரம் நான் ரிக்கி பொன்டிங்கை கலாய்த்து தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை உசுப்பி விட்டதால் சிங்கம் நேற்று அடித்து நொறுக்கி ஒரு சதத்தை பெற்று அவுஸ்திரேலியாவை வெற்றி பெற செய்து விட்டது. (சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்)
---------------------------------------------------
---------------------------------------------------

பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா?

தினமும் சில வானொலிகளில் காலையில் இன்றைய பலன்கள் பற்றி கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. சிலருக்கு இவற்றில் நம்பிக்கை இருந்தாலும் என்னை போல் பல பேர் காலையில் இதை கேட்பதில் ஆர்வமில்லை. (இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விடுவேன்). வானொலி போன்ற அறிவியல் ஊடகங்களில் ஜாதகம் போன்ற விடயங்கள் கதைப்பதை தவிர்த்து அறிவியல் சம்பந்தமான பல விடயங்களை செய்யலாமே?

உபரி தகவல் - இதே வானொலி வார இறுதியில் ஜோதிடம் சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியையும் செய்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

ஸ்ருதிஹாசனின் இசையில் உன்னைபோல் ஒருவன் பாடல்கள் கேட்டேன் பிரமாதம் என கூற முடியாவிட்டாலும், பரவாயில்லை எனலாம். அடுத்தடுத்த ஆலபங்களில் இன்னும் அதிகமாக பிரகாசிப்பார் என நினைப்போம். சில நேரம் படம் வந்த பின் பாடல்கள் ஹிட் ஆகலாம். சில பாடல்கள் படங்களில் பார்த்த பின் மனதை விட்டு அகலாதவை.

---------------------------------------------------
---------------------------------------------------
தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினைகள் பற்றி சந்ரு, வந்தியத்தேவன், கனககோபி போன்றோர் தங்களது பதிவுகளில் எழுதியமைக்கு நன்றி. வாழ்வுக்காக போராடும் இந்த மக்கள் தொடர்பாக பதிவர்கள் சிந்தித்தது அவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கும் என்பது ஐயமில்லை

---------------------------------------------------
---------------------------------------------------
யாழ்தேவி திரட்டியின் இந்த வார நட்சத்திர பதிவர் வந்தியத்தேவனுக்கு யோ வாய்ஸ் சார்பில் வாழ்த்துக்கள். சென்ற வார நட்சத்திர பதிவர் தங்க முகுந்தனுக்கும் வாழ்த்துக்கள். (சும்மா விட முடியுமா ரெண்டு பேரையும்  தொடர் பதிவுகளில் மாட்டி விட்டுருக்கோமில்ல).
யாழ்தேவி திரடை்டியில் இணைந்த பின் எனது தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன்.
---------------------------------------------------
---------------------------------------------------
என் காதலியின் படத்தை கீழே போட்டிருக்கிறென். பார்த்தவர்கள் எங்களின் ஜோடி பொருத்தத்தை பின்னூட்டவும்.



12 Responses
  1. நல்ல நூடுல்ஸ், ஆமாம் என் உங்கள் அண்ணியின் படத்தைப் போட்டிருக்கின்றீர்கள்.


  2. மாயா Says:

    // பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா? //

    வேற செய்திகள் இல்லையெண்டதால உதையெல்லாம் சொல்லுறதா ?


  3. This comment has been removed by the author.

  4. //இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விடுவேன்//
    அட அப்ப நீங்களும் என் கட்சி. சூரிய மாற்றம்(!) நடந்தால் அந்த வானோலி பல வெற்றிகள் அடையுமாம்.


  5. Admin Says:

    //மாயா said...
    // பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா? //

    வேற செய்திகள் இல்லையெண்டதால உதையெல்லாம் சொல்லுறதா ?//

    ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.....




    அந்த வானொலியிலே எனது சிறு வயதுமுதல் நல்ல நண்பனாக இருக்கும் ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் சொன்னார் தங்கள் நிகழ்ச்சிகளை பின்பற்றி ஒரு வானொலி வெற்றி பெற நினைப்பதாக சொன்னார். (அவரோடு வானொலி தொடர்பில் நான் அடிக்கடி சண்டை போடுவது வேறு விடயம்) எதனை யார் பின்பற்றுவது?

    //என் காதலியின் படத்தை கீழே போட்டிருக்கிறென். பார்த்தவர்கள் எங்களின் ஜோடி பொருத்தத்தை பின்னூட்டவும்.//

    யோடிப்பொருத்தம் சரியில்லை எனக்குத்தான் 100% பொருந்துகின்றது....


  6. Admin Says:
    This comment has been removed by the author.

  7. இலங்கை தோத்ததில் வருத்தமா?
    சரி வாங்க சரக்கடிக்க போகலாம்!


  8. Unknown Says:

    //பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா?

    தினமும் சில வானொலிகளில் காலையில் இன்றைய பலன்கள் பற்றி கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. சிலருக்கு இவற்றில் நம்பிக்கை இருந்தாலும் என்னை போல் பல பேர் காலையில் இதை கேட்பதில் ஆர்வமில்லை. //

    எனக்கும் தான்...
    கிட்டத்தட்ட எம் மீது ஒரு பிழையான அல்லது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றை திணிக்கிறார்கள்...

    மலையக மக்கள் விடயம் சம்பநதமாக நான் சொன்னது என் மன உளைச்சலைக் குறைக்கத் தான்.
    ஆனால் நேற்று மீண்டும் கூட்டிவிட்டார்கள்.
    405 ரூபாவுக்கு கையொப்பமிட்டு காட்டிக் கொடுத்துவிட்டார்களே அம்மக்களின் போராட்டத்தை???
    பதிவொன்று இடுங்கள் அதுபற்றி...


  9. ilangan Says:

    நல்லா சொன்னீங்க இந்திய அணியை பலருக்கு பிடிக்காமல் போனதற்கு இவர்களைப்போன்றவர்கள் தான் முதல் காரணம். இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில வீரர்களின் குணம் மட்டும் காலம் காலமாக மாறாமலே இருக்கின்றது. யார் கோவித்துக்கொண்டாலும் பரவாயில்லை இது தானே உண்மை.


  10. ARV Loshan Says:

    முக்கியமான விஷயம் எல்லாவற்றையுமே தொட்டுவிட்டீர்கள். சூப்பர்..

    பெடேரர் தோற்றது கவலை தான்.. எனினும் டெல போற்றோவின் ஆக்ரோஷம், போராட்ட குணம்,விடா முயற்சி, தன்னடக்கம் என்பவற்றுக்குக் கிடியாத்த வெற்றி அது.. வாழ்த்துவோம்..

    //பெங்களுரில் கமராமேனை அடித்து பெருமை சேர்த்த ஹர்பஜன் இன்னும் விட்டிருந்தால் மைதானத்தில் இலங்கை வீரர்களை அடித்து வீழ்தியிருப்பார். ஹர்பஜன், இசாந்த் சர்மா, நேஹ்ரா, பதான் போன்றோர் விளையாடும் வரையில் ICC யால் வழங்கப்படும் கண்ணியமான அணி என்ற விருது இந்தியாவுக்கு கிடைக்காது. //

    அச்சொட்டாக சரி.. ஹர்பஜன் மட்டும் என்னிடம் சிக்கினால் அறை வாங்குவான்.. (இலங்கையை உருட்டிய கோபம் வேறு இருக்குது)


  11. எல்லாமே அருமை, கடைசி புகைப்படத்திற்கான அறிவிப்பைத் தவிர.
    ;)

    பின்னே, என்னோட ஆளை நீங்க உங்க காதலின்னு சொன்னா யாருக்குதாங்க கோபம் வராது?!


  12. நன்றி வந்தியத்தேவன்
    நன்றி மாயா
    நன்றி வேந்தன்
    நன்றி சந்ரு
    நன்றி வால்பையன்
    நன்றி கனககோபி
    நன்றி ilangan
    நன்றி LOSHAN
    நன்றி ஊர்சுற்றி

    தங்கள் அனைவருக்கும் வருகை்கும் கருத்துக்கும் நன்றி