தேவதையிடம் பத்து வரங்கள்.


தேவதையிடம் பத்து வரங்கள்.


இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் என நிலாமதி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.. 

எனக்கு தேவதை அப்படி தோன்றினால் நான் கேட்கும் வரங்களை காரணத்தோடு கேட்கிறேன்.

01. எனது கல்லூரி காலம் மீண்டும் அதே சுற்று சூழலோடு (Environment) வேண்டும்.
 எனது பள்ளிக்காலம் மறக்க இயலாதது. கவலை என்றால் கிலோ என்ன விலை என கேட்போம். அந்த வாழ்க்கை, அந்த நண்பர்கள், அந்த வகுப்பறைகள், அந்த சண்டைகள், அந்த சமாதானங்கள், அந்த கிரிக்கட் போட்டிகள், ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகள், திட்டுகள் இவை அனைத்தும் மீள கிடைத்து அந்த வாழ்க்கை மீண்டும் வாழ கிடைத்தால், இந்த உலகத்திலே என்னை விட சந்தோஷமான மனிதன் யாருமே இருக்க முடியாது. ( I love my college life)

02. தெரிந்தோ தெரியாமலோ நான் யாருடைய மனதை புண்படுத்தி விட்டால் அதை பின்னோக்கி (Undo) சென்று இல்லாமல் செய்து விட வேண்டும்.
சில நேரங்களில் நாங்கள் எங்களை அறியாமல் ஏதாவது ஒரு வழியில் மற்றையவர்களை புண்படுத்தி விடுவோம், சில நேரங்களில் தெரிந்தே புண்படுத்தி விடுவோம். இவற்றை மீண்டும் பின்னோக்கி சென்று அதை சரி செய்திட கூடிய வகையில் (கணணியில் உள்ள ”அன்டூ”  வசதியை போன்றைய) ஒரு வசதி வேண்டும்.

03. என் தாத்தா மீண்டு வர வேண்டும்.
நான் சிறிய வயதில் என் தாத்தா மடியில் உட்கார்ந்து கதை கேட்பது வழக்கம். நான் விரும்பிய அனைத்தையும் எனக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்தது மட்டுமன்றி, எனக்கு வாழ்க்கை ஏட்டு படிப்பில் மட்டுமில்லை அனுபவ படிப்பிலும் நிறைய படிக்க வேண்டும் என்றுணர்த்திய என் தாத்தா உயிருடன் மீண்டு வர வேண்டும்.

04. ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.
ஹெட் போனில் மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டே நீண்ட தூரம் நடக்க பிடிக்கும். எனது ஊரில் இருந்த போது நான் இவ்வாறு செய்திருக்கிறேன். இப்போ முடியவில்லை. மீண்டும் அந்த வாழ்க்கை வேண்டும்.

05. என் நண்பர்களது ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும்.
என்னை சூழ உள்ள நண்பர்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற கேட்பேன்.  இது கொஞ்சம் பேராசைதான் ஆனாலும் எனது இனிமையான நண்பர்கள் வாழ்க்கையில் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள என்னால் உதவ முடிந்தால், சந்தோஷமே!

06. ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.
ஏறத்தாழ என்னோடு படித்த தோழர்கள் அனைவருக்கும் சகோதரிகள் உண்டு. எனக்கு அப்படி ஒரு அக்கா அல்லது ஒரு தங்கை இல்லை என்ற குறை சிறு வயதில் ரொம்பவே இருந்தது. அப்படி இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம். அப்படி ஒரு சகோதரி கேட்பேன்.

07. பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் கிட்டார் இசை கேட்ப வேண்டும்.
எனது பாடசாலை காலத்தில் ஒரு சீனியர் எங்களது விடுதியில் இரவில் மொட்டை மாடியில் கிட்டார் இசைத்து ”இளைய நிலா பொழிகிறது” பாடலை பாட அன்று முதல் நான் கிட்டார் என்ற வாத்தியத்தின் அடிமையாகி விட்டேன். ஆனால் இன்று வரை அதை கற்க வசதியேற்படவில்லை.  கிட்டார் கற்று இரவில் தனிமையில் இசைக்க தேவதையிடம் வரம் கேட்பேன்.

08. இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒருநாள் தலைவராக வேண்டும்.
நான் விரும்பும் இலங்கை கிரிக்கட் அணியை ஒரு நாள் வழி நடத்த வேண்டும். நான் செய்ய விரும்பிய மாற்றங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். சனத் ஜயசூரியவுடன் மறு புறத்தில் நான் துடுபெடுத்தாட வேண்டும்.

09. 500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.
மழை வெயில் என பாராது கடினமாக உழைத்தும் அதற்கு தகுந்த பலனை பெறாத இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக குறைந்தது 1500.00 ரூபாய் கிடைக்க வேண்டும் என கேட்பேன்

10.ஏ. ஆர் ரகுமானை ஒரு முறையாவது நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாட வேண்டும். 
கடைசியாக என் விருப்ப இசையமைப்பாளரான ஏ. ஆர் ரகுமானை சந்தித்து, ஒரு மணி நேரம் அவர் என்னுடன் மட்டும் பேசி கொண்டிருக்க வேண்டும் என கேட்பேன். மற்றும் அவரை ”வெள்ளை பூக்கள்” பாடலை பாட சொல்லி கேட்க வேண்டும்.  

இந்த வரங்கள் எல்லாமே ஆசைகள் மட்டுமே.... நிலாமதி அக்கா கேட்டுக் கொண்டபடி 10 வரங்களை கேட்டு விட்டேன் பார்ப்போம் தேவதை வரம் கொடுக்கிறதா என்று



16 Responses
  1. //ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.//
    அண்ணே நீங்க இப்ப தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு போடுர மருந்தை நிப்பாட்டினா போதும் இந்த வரம் கிடைச்சுடும்.
    //என் நண்பர்களது ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும்.//
    என் ஆசை நிறைவேறினா நீங்க இந்த வலையுலக பக்கமே வரமாட்டிங்க.
    //ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.//
    விதி வலியது...
    ----------
    மேலே எல்லாம் சும்மா லுலுலா... கோவிக்க வேண்டாம்...
    ----------
    ஆனா பாருங்கோ உங்கள் வரத்தில் நான் உடனே நிறைவேற சிபாரிசு செய்யும் வரம்
    //500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.//
    நிச்சயம் நிறைவேறும்.
    -------------
    நீங்கள் கேட்ட வரம் கிடைக்க வாழ்த்துக்கள் :)


  2. எல்லாமே நியாயமான வரங்கள்...


  3. என் அழைப்பை ஏற்று வரங் கேட்டு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள். நியாயமான ஆசைகள். நிறைவேற வாழ்த்துக்கள்.


  4. இலங்கை அணிக்கு ஒரு நாள் தலைவர்...?

    ஒரு நாளைக்கா..இல்லை ஒரு நாள் போட்டிக்கா..?

    தோட்டத்தொழிலாளர் தினச்சம்பளம்...500.00?:-(((((


  5. Admin Says:

    //ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.//


    கவனம் ஆவி வருதெண்டு எல்லோரும் ஓடப்போறாங்க.


  6. நல்ல ஆசைகள் தான்

    நிறைவேற வாழ்த்துக்கள்


  7. Unknown Says:

    //09. 500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.
    மழை வெயில் என பாராது கடினமாக உழைத்தும் அதற்கு தகுந்த பலனை பெறாத இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக குறைந்தது 1500.00 ரூபாய் கிடைக்க வேண்டும் என கேட்பேன்//
    எனக்கு நிச்சயமாக இந்த ஆசை உண்டு.
    உங்கள் பொதுநோக்கிற்காக வாழ்த்துகிறேன்...


  8. //06. ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.//

    ரொம்ப touching கா இருக்கு தோழா


  9. //வேந்தன் said...
    //ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.//
    அண்ணே நீங்க இப்ப தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு போடுர மருந்தை நிப்பாட்டினா போதும் இந்த வரம் கிடைச்சுடும்.
    //என் நண்பர்களது ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும்.//
    என் ஆசை நிறைவேறினா நீங்க இந்த வலையுலக பக்கமே வரமாட்டிங்க.
    //ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.//
    விதி வலியது...
    ----------
    மேலே எல்லாம் சும்மா லுலுலா... கோவிக்க வேண்டாம்...
    ----------
    ஆனா பாருங்கோ உங்கள் வரத்தில் நான் உடனே நிறைவேற சிபாரிசு செய்யும் வரம்
    //500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.//
    நிச்சயம் நிறைவேறும்.
    -------------
    நீங்கள் கேட்ட வரம் கிடைக்க வாழ்த்துக்கள் :)//

    நன்றி வேந்தன் வருகைக்கும் வாழ்த்துக்கும்


  10. //அமுதா கிருஷ்ணா said...
    எல்லாமே நியாயமான வரங்கள்...//

    நன்றி அமுத கிருஸ்ணா வருகைக்கும் கருத்துக்கும்


  11. // நிலாமதி said...
    என் அழைப்பை ஏற்று வரங் கேட்டு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள். நியாயமான ஆசைகள். நிறைவேற வாழ்த்துக்கள்//

    நன்றி நிலாமதி அக்கா எனது அழைப்பிற்கு நீங்கள் எழுதியதற்கு நன்றிகள்


  12. //’டொன்’ லீ said...
    இலங்கை அணிக்கு ஒரு நாள் தலைவர்...?

    ஒரு நாளைக்கா..இல்லை ஒரு நாள் போட்டிக்கா..?

    தோட்டத்தொழிலாளர் தினச்சம்பளம்...500.00?:-((((//

    ரொம்ப ஆசை எல்லாம் இல்லை ஒரே ஒரு நாள் மட்டும் தலைவனா இருந்துட்டா போதும் என் திறமையை பார்த்து தொடர்ந்து வைத்து கொள்வார்கள்.


  13. // சந்ரு said...
    //ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.//


    கவனம் ஆவி வருதெண்டு எல்லோரும் ஓடப்போறாங்க//

    சீ ச் சீ அப்படி எல்லாம் நடக்காது சந்ரு


  14. // பிரியமுடன்...வசந்த் said...
    நல்ல ஆசைகள் தான்

    நிறைவேற வாழ்த்துக்கள்//

    நன்றி வசந்த்


  15. //கனககோபி said...
    //09. 500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.
    மழை வெயில் என பாராது கடினமாக உழைத்தும் அதற்கு தகுந்த பலனை பெறாத இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக குறைந்தது 1500.00 ரூபாய் கிடைக்க வேண்டும் என கேட்பேன்//
    எனக்கு நிச்சயமாக இந்த ஆசை உண்டு.
    உங்கள் பொதுநோக்கிற்காக வாழ்த்துகிறேன்...//

    உங்களது ஆசைகளையும் பார்த்தேன் கனககோபி நன்றாக இருந்தது.


  16. // மன்னார் அமுதன் said...
    //06. ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.//

    ரொம்ப touching கா இருக்கு தோழா//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா