திங்கள் நூடில்ஸ்

ரொம்ப நாளாக பதிவு போடவில்லையே அதனால் இன்று ஏதாவது பதிவு போடலாம் என யோசித்தேன். இன்று எனக்கு சற்று பிரச்சினைக்குறிய நாள் ஆகவே ஏதாவது நகைச்சுவை பதிவு ஒன்றை வாசித்தால் அது ஒரளவுக்கு சரியாக போகும் என நினைத்து இன்று நான் வாசித்த முதல் பதிவு புல்லட்டின் வாழ்க்கையும் வெறுமையும் அது என்னை இன்னும் யோசிக்க வைத்தது. தனிமை வெறுமை இவை இரண்டுமே எனக்கும் உள்ள பிரச்சினைகள்.புல்லட்டின் பதிவு மிகவும் அருமையான, மனதை கனக்க வைத்த பதிவு.

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது தின ஊதியத்தை ரூபாய் 500 ஆக அதிகரிக்க மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை செய்து வருகிறார்கள். இந்த பதிவு எழுதும் வரை அதற்கான முடிவு எய்தவில்லை. இன்று பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அப் பேச்சு வார்த்தை சுமுகமே நடந்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். அவர்களது வாழ்க்கையை மிக அண்மையிலிருந்து அவதானித்தவன் என்கிற ரீதியில்  தோட்ட தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆனால் அவர்களது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று நான் அறிந்த வற்றை ஒரு பதிவாக இடலாம் என இருக்கிறேன். பதிவர் சந்ரு என்னோடு கூகுல் அரட்டையில் கூறியபடி மலையக மக்கள் பற்றி சில பதிவுகள் எழுத தயார் நிலையில் இருக்கிறேன். அதன் வீச்சு மற்றும் பின் விளைவுகள் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
வழமை போல இந்த முறையும் கண்டி விளையாட்டுக்கழகம் கெல்டெக்ஸ் ரக்பி கிண்ணத்தை வென்று விட்டார்கள். எவ்வாறு கொழும்பில் கிரிக்கட் விளையாடினால் இலங்கை அணிக்கு நுழைய இலகுவோ அதே போல் இலங்கை ரக்பி அணிக்குள் நுழைய இலகுவான வழி கண்டி விளையாட்டு கழகத்துக்கு விளையாடுவது. கண்டியில் ரக்பிக்கு உள்ள வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை நாங்கள் இலங்கை டெஸ்ட் போட்டி ஒன்றை பார்த்து கொண்டிருக்கையில் மாலை 3.00 மணிக்கு பின்னர் போட்டியை எங்களோடு பார்த்து கொண்டிருந்த அநேகமானோர் எழும்பி போய் கொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் அங்கு சங்கக்கார தனது சதத்தை நெருங்கி கொண்டிருந்தார். பின்னர் தான் விளங்கியது அவர்கள் ரக்பி போட்டியை பார்க்க போய்விட்டார்கள். உள்ளுர் போட்டிக்கு இவ்வாறு வரவேற்பு இருப்பது மகிழ்ச்சியானது.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
மில்லிகொம் அலைபேசி நிறுவனம் தனது இலங்கை அலைபேசி நிறுவனத்தை விற்பனை செய்ய போவதாகவும் அதை ஏற்கனவே இங்குள்ள இரு அலைபேசி நிறுவனங்கள் வாங்க போட்டி எனவும் கடந்த சில தினங்களாக பேச்சு அடிபடுகிறது. இவ்வளவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிறுவனம் இலங்கையில் முன்னனி தொலைபேசி பாவனையாளர்களில் 03ம் இடத்தை கொண்டிருக்கிறது. இந்த செய்தி வதந்தியா இல்லை உண்மையா? அவ்வாறு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை நம்பி வேறு தொலைபேசிகளை விட்டு விட்டு அவர்களது சிம்களை வாங்கியவர்களது கதி? 
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
மீண்டும் 20-20 போட்டிகளில் இலங்கை அணி தோற்று விட்டது. அவர்கள் தோற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும் அதில் போட்டியின் முடிவை ஓரளவுக்கு  தீர்மானிக்கும் காரணியாக டாஸ் இருப்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும். இப்போது அநேகமான ஒரு நாள் மட்டும் 20-20 போட்டிகள் டாஸினால் தீர்மானிக்கப்படுவது கிரிக்கட்டுக்கு நல்லதல்ல இது கிரிக்கட் போட்டியை அதிஷ்டமிருந்தால் மட்டும் ஜெயிக்க கூடிய நிலைக்கு கொண்டு சென்று விடும். ஆகவே இதை தவிர்க்க ICC சீக்கிரமாக ஏதாவது செய்ய வேண்டும்.
சச்சின் கூறுவதை போல 25 ஓவர்கள் கொண்ட இரு இனிங்ஸ் என்கிற விடயம் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடியது. மேலும் டாஸில் தோற்ற அணிக்கும் போட்டியிடும் சமநிலையை கொடுக்க இன்னொரு யோசனை டாஸ் போட்ட பிறகு அணியை அறிவிக்க கூடிய வாய்ப்பு. இதனால் இரண்டாவது இனிங்ஸில் ஆடுகளத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு தகுந்த முறையில் வீரர்களை போட்டியில் ஈடுபடுத்தலாம். இப்படி ஏதாவது ஒரு முறை இல்லாவிடின் டாஸ் தான் போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்க போகின்றது என்பதை கவலையுடன் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

பதிவர் நிமல பிரகாசின் புகைப்படங்களை அவர் அனுமதியில்லாமல் இங்கு பாவித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்று தவறு இனி நிகழாமல் பார்த்துக் கொள்ளுகிறேன்.



16 Responses
  1. யோகா நூடுல்ஸ் நல்லாத்தான் இருக்கு இந்த சம்பளப் பிரச்சனையை ஒரு தனிப் பதிவாக கொஞ்சம் விபரமாக எழுதுங்கள். என்றைக்கு அவர்களின் வாழ்க்கை மாறுமோ.

    முதல்வன் அர்ஜீன் ஸ்டைலில் கடைசியாக என்னையும் கலாய்த்துவிட்டீர்கள்..



  2. ARV Loshan Says:

    நான் தந்த பெயர் கிளிக்காயிட்டுது போல.. ;) வாழ்க..

    நல்லா எழுதியிருக்கீங்க யோகா.. ரக்பி பற்றியும் சம்பளப் பிரச்சினை பற்றியும் எழுதியது மகிழ்ச்சி..

    கீழ கிழிச்சிட்டீங்க..

    பாவம் வந்தி இரத்தம் வடியுது..

    ஓஹோ.. அப்ப புல்லட் வைக்கப் போகிற பிறந்தநாள் பார்ட்டி கலெக்ஷன் இப்படித் தானா?


  3. GEETHA ACHAL Says:

    வடையினை காட்டி எல்லாம் கலக்சன் நடக்குதா ...

    நல்லா எழுதி இருக்கின்றிங்க...


  4. Admin Says:

    விரைவில் மலையக தொட்டத்தொளிளார்கள் பற்றியும், மலையகம் பற்றியும் பதிவுகளையும் எதிர் பார்க்கின்றேன்.


    மலையகம் தொடர்பாக பதிவிடும் பதிவர்கள் நானறிந்தவரை குறைவு என்று நினைக்கின்றேன். மலையகம் பற்றி அதிகமான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன்.


  5. Admin Says:

    மலையகம் பற்றி கலை, மற்றும் சசி ஆகியோர் பதிவிட்டு வந்தனர் சசி இப்போது பதிவிடுவதைக் காணவில்லை. கலையின் பதிவுகள் குறைந்துவிட்டன. மலையக மக்களின் பிரட்சனைகளை நன்கு உணர்ந்த நீங்கள் பதிவிடுங்கள்.

    சரியான தகவல்களை வழங்குங்கள் வரும் பிரட்சனைகளில் இருந்து விலகிக்கொள்ளலாம்.


  6. நல்ல நூடுல்ஸ் யோகா... கலவையும் கலக்கல்.. புல்லட்டுக்கு கடியும் பிரமாதம்... கலக்குங்க..


  7. Arun Says:

    இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

    ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
    அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்


  8. வந்தியத்தேவன் said...
    யோகா நூடுல்ஸ் நல்லாத்தான் இருக்கு இந்த சம்பளப் பிரச்சனையை ஒரு தனிப் பதிவாக கொஞ்சம் விபரமாக எழுதுங்கள். என்றைக்கு அவர்களின் வாழ்க்கை மாறுமோ. //

    இன்னும் அவர்கள் சம்பள பிரச்சினை சரிவரவில்லை வந்தி. இது பற்றிய விரிவான இடுகை சீக்கிரமே இடுகிறேன்.


  9. கார்க்கி said...
    :)))

    //

    வருகைக்கு நன்றி தல


  10. //LOSHAN said...
    நான் தந்த பெயர் கிளிக்காயிட்டுது போல.. ;) வாழ்க..//

    ஆமாம் நாமகரணம் உங்கள் புண்ணியம் தான்

    //நல்லா எழுதியிருக்கீங்க யோகா.. ரக்பி பற்றியும் சம்பளப் பிரச்சினை பற்றியும் எழுதியது மகிழ்ச்சி..//

    இன்னும் எழுத வேண்டியுள்ளது

    //கீழ கிழிச்சிட்டீங்க..

    பாவம் வந்தி இரத்தம் வடியுது..//

    அதை எடுத்துட்டேன்


  11. Geetha Achal said...
    வடையினை காட்டி எல்லாம் கலக்சன் நடக்குதா ...

    நல்லா எழுதி இருக்கின்றிங்க...//

    வருகைக்கு நன்றி கீதா அக்கா


  12. சந்ரு said...
    விரைவில் மலையக தொட்டத்தொளிளார்கள் பற்றியும், மலையகம் பற்றியும் பதிவுகளையும் எதிர் பார்க்கின்றேன்.


    மலையகம் தொடர்பாக பதிவிடும் பதிவர்கள் நானறிந்தவரை குறைவு என்று நினைக்கின்றேன். மலையகம் பற்றி அதிகமான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன்//

    விரைவில் பதிவிடுகிறேன்..


  13. சந்ரு said...
    மலையகம் பற்றி கலை, மற்றும் சசி ஆகியோர் பதிவிட்டு வந்தனர் சசி இப்போது பதிவிடுவதைக் காணவில்லை. கலையின் பதிவுகள் குறைந்துவிட்டன. மலையக மக்களின் பிரட்சனைகளை நன்கு உணர்ந்த நீங்கள் பதிவிடுங்கள். //

    ஆமாம் சந்ரு உங்கள் ஆதரவுதான் அது பற்றி எழுத எனக்கு ஆர்வத்தை தூண்டியது


  14. சுபானு said...
    நல்ல நூடுல்ஸ் யோகா... கலவையும் கலக்கல்.. புல்லட்டுக்கு கடியும் பிரமாதம்... கலக்குங்க.//

    வருகைக்கு நன்றி சுபானு


  15. Ram said...
    இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

    ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
    அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய //

    நன்றி ராம் நான் அதை ஏற்கனவே பயன்படுத்துகிறேன்.