எனக்காக மட்டுமே வாழ போகிறேன்
நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்
ஏனென்னை எல்லாரும்
ஏளனமாய் பார்க்கிறார்கள்
காதலித்தால் உன்னிடம்
உண்மைக் காதலில்லை என
காதலி கூறுகிறாள்.
கடைசி வரை இருப்பேன் என்ற
நண்பனோ நீ நண்பனாயிருக்க
தகுதியில்லாதவன், நயவஞ்சகன்
நீ என்றான்
சொந்தங்களோ தேவையானபோது
மட்டும் சொந்தம்
கொண்டாடும் நீ
தேவையற்றவன் என்றது
நான் அப்படி என்ன
எல்லாருக்குமாக தப்பாக
ஆகிவிட்டேன்.
நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்
நான் எனக்காகவன்றி
உங்களுக்காக வாழ்ந்தது தான்
நான் செய்த பிழையா?
நான் இனி எனக்காக
”மட்டுமே” வாழ போகிறேன்
எனக்காக என நான்
இழக்காமல் இருப்பது
நான் மட்டுமே.
எல்லாவற்றையும்
இழந்து தவிக்கும் நான்
என்னையும் இழக்க
தயாரில்லை.
இனி நான் வாழப்போவதுதான்
என் வாழ்க்கை
எனக்கான வாழ்க்கை
எனக்காக நான்
என சுயநலத்தோடு
வாழ போகிறேன்.
என்ன ஆச்சு திடிரென இப்படி ஒரு இடுகை. கவிதை நன்றாக இருக்கிறது. அனுபவம் இல்லைதானே.
எதோ தனிமை உங்களை வாட்டுகிறது போன்ற ஓர் உணர்வு கவிதையில் தெரிகிறது.
அருமையாக இருந்தது கவிதை.... வாழ்த்துக்கள் யோகா.....
//காதலித்தால் உன்னிடம்
உண்மைக் காதலில்லை என
காதலி கூறுகிறாள்//
அவள் போனாள் போகின்றாள் இன்னொருத்தி அந்த இடத்திற்க்கு வந்துவிடுவாள் ஆனால்
//கடைசி வரை இருப்பேன் என்ற
நண்பனோ நீ நண்பனாயிருக்க
தகுதியில்லாதவன், நயவஞ்சகன்
நீ என்றான்//
இதுதான் நெஞ்சில் வலிக்கும்.
அதனால்
//நான் இனி எனக்காக
”மட்டுமே” வாழ போகிறேன்//
இப்படி இருப்பது நல்லதுதான்
ஆனால் அப்படி இருக்க என்னால் முடியாது. காரணம் நான் மனிதன் ஜடமல்ல.
யோ கவிதை அற்புதம் இலகுவாக பிரச்சனையைச் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல கவிதை யோ.. வாழ்த்துக்கள்.. நீங்களும் தொடங்கீட்டிங்களா.. கிறுக்கிறத்திற்கு...
//நான் இனி எனக்காக
”மட்டுமே” வாழ போகிறேன்..
மனிதன் ஒரு சமூக அங்கி.. இவ்வாறு தனித்து முடிவுகள் எடுக்க முடியாது..
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
நல்லாருக்கு கவிதை. இன்றைய யதார்த்தம்.
//என சுயநலத்தோடு
வாழ போகிறேன்.//#
நீங்க மட்டுமில்ல யோகா எல்லாரும் இனி அப்படித்தான் வாழப்போறாங்க
யதார்த்தமா எழுதியிருக்கீங்க...
இலகுவான நடையில் சொல்லியிரிக்கிறீர்கள் இப்படியான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை
எனக்காக மட்டுமே வாழ போகிறேன்
:)
கவிதை நன்றாக இருக்கிறது....
சந்ரு said...
என்ன ஆச்சு திடிரென இப்படி ஒரு இடுகை. கவிதை நன்றாக இருக்கிறது. அனுபவம் இல்லைதானே.//
இல்ல சந்ரு சும்மா கிறுக்கியது. கவிதை எல்லாம் இல்லைங்க
சப்ராஸ் அபூ பக்கர் said...
எதோ தனிமை உங்களை வாட்டுகிறது போன்ற ஓர் உணர்வு கவிதையில் தெரிகிறது.
அருமையாக இருந்தது கவிதை.... வாழ்த்துக்கள் யோகா.....
ஆமாம் சப்ராஸ் தனிமைதான். அந்த தனிமை காரணமாக கிறுக்கியது. இதை நான் கவிதை என நினைக்கவில்லை
வந்தியத்தேவன் said...
யோ கவிதை அற்புதம் இலகுவாக பிரச்சனையைச் சொல்லியிருக்கிறீர்கள்//
வந்தி அவர்களே இது கவிதையா? அடிப்பாங்கையா இதை கவிதைனா..
சுபானு said...
நல்ல கவிதை யோ.. வாழ்த்துக்கள்.. நீங்களும் தொடங்கீட்டிங்களா.. கிறுக்கிறத்திற்கு...
//நான் இனி எனக்காக
”மட்டுமே” வாழ போகிறேன்..
மனிதன் ஒரு சமூக அங்கி.. இவ்வாறு தனித்து முடிவுகள் எடுக்க முடியாது..//
நானும் இதற்கு உடன் படுகிறேன் சுபானு
சந்ரு said...
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்//
விருதுக்கு நன்றி சந்ரு
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு கவிதை. இன்றைய யதார்த்தம்//
ஐயா! உங்களது பாராட்டுதலுக்கு நன்றி. நான் கிறுக்கியதை கவிதை என நீங்கள் கூறியதற்கு பெருமையடைகிறேன்.
பிரியமுடன்...வசந்த் said...
//என சுயநலத்தோடு
வாழ போகிறேன்.//#
நீங்க மட்டுமில்ல யோகா எல்லாரும் இனி அப்படித்தான் வாழப்போறாங்க
யதார்த்தமா எழுதியிருக்கீங்க.//
நன்றி வசந்த். வருகைக்கு
பனையூரான் said...
இலகுவான நடையில் சொல்லியிரிக்கிறீர்கள் இப்படியான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை//
வருகைக்கு நன்றி பனையுரான்..
இது நம்ம ஆளு said...
எனக்காக மட்டுமே வாழ போகிறேன்
:)
நன்றி வருகைக்கு. தொடர்ந்து வாருங்கள்
ஜெட்லி said...
கவிதை நன்றாக இருக்கிறது...
வருகைககு நன்றி ஜெட்லி. தொடர்ந்து வாருங்கள்