பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்

சுபானுவிடம் நான் சொந்த செலவில் சூனியம் வைத்து பின் அவர் என்னை அழைத்த தொடர் பதிவு.எனக்கு பிடித்தவற்றை எழுத வாய்ப்பு கொடுத்த சுபானுவுக்கு நன்றி..

பாசமான உறவுகள் பிடிக்கும்
பள்ளிநாட்கள் அசை போட பிடிக்கும்
நண்பரோடு நள்ளிரவு வரை அரட்டை பிடிக்கும்
என்னேரமும் சண்டை போடும் பாசமான தோழி பிடிக்கும்
பள்ளி காலத்தில் விளையாண்ட கிரிக்கட் பிடிக்கும்

சைட் அடித்த காலம்  பிடிக்கும்
சைட் அடிப்பதை ரசிக்கும் பெண்கள் பிடிக்கும்
சண்டைக்கு வரும் தோழிகள் பிடிக்கும்
உயிர் கொடுக்கும் தோழர்கள் பிடிக்கும்

ஆசிரியரிடம் வாங்கிய திட்டுகள் பிடிக்கும்
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்

ஏ.ஆர் ரகுமான் பிடிக்கும்
இரவில் ஹெட் போனில் பாட்டு கேட்டு நடக்க பிடிக்கும்
அதுவும் ரகுமானின் மெலடி கேட்டு நடக்க ரொம்ப பிடிக்கும்
கிட்டார்  பிடிக்கும்
கிட்டாரில் இளையராஜா பாடல் இசைப்பதை கேட்க பிடிக்கும்
அதை அமைதியாக கண்மூடி ரசிக்க பிடிக்கும்

ரஜனி படத்தில் வேகம் பிடிக்கும்
கமல் படத்தை ரசிக்க பிடிக்கும்
சூர்யாவின் 6 பெக் பிடிக்கும்
மணிரத்தினம் படம் பார்க்க பிடிக்கும் 
அன்பே சிவம் மீண்டும் பார்க்க பிடிக்கும்
இளைய நிலா பாடல் பிடிக்கும்

தாய் மொழி தமிழ் பிடிக்கும்
எங்கள் முன் பீட்டர் விடும் பெண்கள் பிடிக்கும்
அழகாக தமிழ் பேசுபவர்கள்  பிடிக்கும்
என் நண்பன் சுரேசின் கையெழுத்து  பிடிக்கும்

என்நேரமும் தோழியோடு சண்டை போட பிடிக்கும்
அவளோடு கோபித்து கதைக்காத பொழுதுகள் பிடிக்கும்
மீண்டும் சமாதானம் பேசும் SMS கள் பிடிக்கும்
இனி சண்டை வேண்டாம் என சொல்ல பிடிக்கும்
அடுத்த நாள் மீண்டும் சண்டை போட பிடிக்கும்

சின்ன வயதில் இழந்த உறவுகளை மீட்ட பிடிக்கும்
முதன் முதலில் வாங்கிய பைக் பிடிக்கும்
நடுராத்திரியில் எழுப்பி பிறந்த நாளுக்கு வாழ்த்த பிடிக்கும்
எழுத  பிடிக்கும் இலக்கங்கள் ரொம்ப பிடிக்கும்
அதனால் கணித பாடம் என்றும்  பிடிக்கும்

என் நாடு இலங்கை பிடிக்கும்
அதிலும் நுவரெலியா அதிகம் பிடிக்கும்
நுவரெலியா குளிர்  பிடிக்கும்
நுவரெலியா மழையில் நனைந்து விளையாட பிடிக்கும்

காதலிப்பவர்கள்  பிடிக்கும்
காதலிக்கப்பட பிடிக்கும்
காதல் வர்ணிப்புகள் பிடிக்கும்
காதல் திருமணம் ரொம்ப பிடிக்கும்

மலையேற  பிடிக்கும்
அதுவும் நண்பர்களோடு போக பிடிக்கும்
நீண்ட தூர பயணத்தில் தூங்க பிடிக்கும்
இடையிடையே வெளியே எட்டிப் பார்க்க பிடிக்கும்
அம்மாவிடம் திட்டு வாங்கி காலையில் தூங்க  பிடிக்கும்
குட்டி தூக்கம் பிடிக்கும்
பைக்கில் ஹெல்மட் இல்லாமல் போக பிடிக்கும்
அதிவேகமாக பைக் ஓட்ட  பிடிக்கும்


இணைத்தில் உலவ  பிடிக்கும் 
பதிவுலகம் ரொம்ப பிடிக்கும் 
கணனி  பிடிக்கும் 
மிஸ் கால் வரும் தொலைபேசி  பிடிக்கும் 


அரவிந்த ஹீக் ஷொட் பிடிக்கும் 
சனத் பேட்டிங் பிடிக்கும் 
முரளியின் பந்து வீசுகையில் அவரது முகம் பிடிக்கும் 
தூக்கம் விழித்து கிரிக்கட் பார்க்க பிடிக்கும் 

இன்னும் ரொம்ப விடயங்கள்  பிடிக்கும் 


இந்த தொடர் பதிவில் யாரையாவது மாட்டிவிட பிடிக்கும்
இப்போதைக்கு கனககோபி, சகா கார்க்கி, மன்னார் அமுதனை அழைக்கவும் பிடிக்கும்


13 Responses
 1. போட்டுடுவோம் சகா


 2. பிடிக்கிற விசயங்கள அருமையா வெளிப்படுத்தி இருக்கீங்க யோ

  நட்சத்திரப் பதிவராக உயந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


 3. உங்களுக்கு பிடித்தவை எனக்கும் பிடித்தது .........பாராட்டுக்கள்.


 4. ஹேமா Says:

  ஓ....எத்தனை எத்தனை பிடிக்கும்.எல்லாமே எனக்கும் பிடிக்கும் யோகா.


 5. உமக்குப் பிடித்ததில் எனக்குப் பிடித்தது!

  //என் நாடு இலங்கை பிடிக்கும்
  அதிலும் நுவரெலியா அதிகம் பிடிக்கும்
  நுவரெலியா குளிர் பிடிக்கும்
  நுவரெலியா மழையில் நனைந்து விளையாட பிடிக்கும்//
  அருமை! கலக்குறீங்க - யோ! வாழ்த்துக்கள்!


 6. //சைட் அடிப்பதை ரசிக்கும் பெண்கள் பிடிக்கும்//

  உண்மையான விடயம் சிலர் மிகவும் ரசிப்பார்கள்.

  உங்களின் நிறையப் பிடிப்புகள் எனக்கும் பிடிக்கும்,


 7. என்நேரமும் தோழியோடு சண்டை போட பிடிக்கும்
  அவளோடு கோபித்து கதைக்காத பொழுதுகள் பிடிக்கும்
  மீண்டும் சமாதானம் பேசும் SMS கள் பிடிக்கும்
  இனி சண்டை வேண்டாம் என சொல்ல பிடிக்கும்
  அடுத்த நாள் மீண்டும் சண்டை போட பிடிக்கும்

  அண்ணா உங்கள் ஆசைகள் சூப்பர்.. உங்களோட ஆசைகளில் அனேகமானவை என்னோடதும்

  நல்லா இருக்கு அண்ணா 8. //சண்டைக்கு வரும் தோழிகள் பிடிக்கும்
  உயிர் கொடுக்கும் தோழர்கள் பிடிக்கும் //

  கொடுமைய பாத்தீங்களா?
  தோழிகள் எண்டா சண்ட பிடிச்சா பிடிக்குமாம். ஆனால் தோழர்கள் எண்டா உயிர் கொடுத்தா தான் பிடிக்குமாம்....
  இத தட்டிக் கேக்க யாரும் இல்லயா?

  உங்கள் அழைப்புக்கு நன்றி...
  விரைவில் பதிவிடுகிறேன்...

  அழகான ஆசைகள்...
  வாழ்த்துக்கள்...


 9. Geetha Achal Says:

  எப்படி யோகா இப்படி எல்லாம்...இவ்வளவு விஷயங்கள் பிடிக்குமா...

  அனேகமாக இதில் அனைவருக்கும் அம்மாகிட்ட திட்டு வாங்கிய பிறகும் தூங்க கண்டிப்பாக பிடிக்கும் ...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...

  //என்னேரமும் சண்டை போடும் பாசமான தோழி பிடிக்கும்//யார் அந்த தோழிகள்...பாவம் தான் போங்க...தோழிகள்

  //இளைய நிலா பாடல் பிடிக்கும்//உங்களுக்குமா...


 10. arun Says:

  பிடிக்கும்!
  பிடிக்கும்!
  பிடிக்கும்!
  பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்...
  உங்களை எனக்கும் பிடிக்கும்
  நண்பா!!!
  அன்புடன்,
  ப.அருண்.


 11. Saranya Says:

  எல்லாம் சரி
  இது
  /மிஸ் கால் வரும் தொலைபேசி பிடிக்கும்/
  சலிப்பு வராதா.....
  /மலையேற பிடிக்கும்
  அதுவும் நண்பர்களோடு போக பிடிக்கும்/
  நன்றாக சொல்லியுள்ளீர்கள்...


 12. கார்க்கி said...
  மன்னார் அமுதன் said...
  நன்றி நிலாமதி
  நன்றி ஹேமா
  நன்றி தங்க முகுந்தன்
  நன்றி வந்தியத்தேவன்
  நன்றி ஜோ.சம்யுக்தா கீர்த்தி
  நன்றி பிரியமுடன்...வசந்த்
  நன்றி கனககோபி
  நன்றி Geetha Achal
  நன்றி arun
  நன்றி Saranya

  நன்றி எனக்கு பிடித்ததை வாசித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்..