காதல் - அழகு - கடவுள் - பணம்
இந்த வாரம் தொடர் வாரம் என நினைக்கிறேன். நேற்று நிலாமதி அக்காவின் தேவதையிடம் 10 வரங்கள் பற்றிய தொடர் பதிவு எழுதி முடிந்த பின்னர், சாளரம் கார்க்கியிடமிருந்து காதல், அழகு, கடவுள், பணம் பற்றிய இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு வந்தது.
இன்று மீண்டும் மருதமூரானிடமிருந்து கல்லூரி வாழ்க்கை பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு. இவ் அழைப்புக்கள் பதிவுலக நட்புகள் மூலமாக வருகிறத என்பதை எண்ணிப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் அநேகமான இந்த நட்புகள் எழுத்துகள் மூலமாக அறிமுகமானவை. முகமறியாதவை.
01. அழகு
அவரவர் பார்வையை பொறுத்து வேறுபடும் ஒரு விடயமாகும். எனக்கு அழகாக தெரியும் ஒன்று உங்களுக்கு அழகாக தெரியாது, சிலருக்கு முகம் அழகு, சிலருக்கு செயல் அழகு, சிலருக்கு பேச்சு அழகு, சிலருக்கு உள்ளம் அழகு என ஒவ்வவொரு மனிதனிடமும் ஒவ்வொரு விதமான அழகுண்டு.
02. காதல்
நான் ”காதல் காதல் காதல், காதல இல்லாவிடின் சாதல்” என கூறுபவனில்லை, ஆனாலும் காதல் என்பதுவாழ்க்கையின் இன்பான நிகழ்வு. வைரமுத்துவின்
” நீ விரும்பும் அவனோ அவளோ
உன்னை விரும்பினாலும் விரும்பாவிடினும்
காதலித்துப்பார்
சொர்க்கம் நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்துப்பார்”
என்ற கவிதை வரிகள் காதல் பற்றி அருமையான விளக்கத்தை கொடுக்கிறது.
03. கடவுள்
நான் கடவுளை நம்புகிறவன், ஆனாலும் ரொம்பவே கடவுளிடம் நெருங்கி இருப்பவனல்ல. அன்பே சிவம், சிவமே அன்பு என்பது தான் கடவுள் பற்றிய எனது எண்ணம்.
04.பணம்
நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்லுற படி அளவோடு இருக்கும் பணம் எங்களை காப்பாற்றும் அளவுக்கு மீறி இருக்கும் பணத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என நம்புகிறவன், அதனால் தான் ரொம்ப பணம் சம்பாதிக்கவில்லை
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
1) சந்ரு (உங்கள் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன்)
2) மரூதமூரான் (என்னை மாட்டிவிட்டீங்க தானே இப்ப அனுபவியுங்க)
3) வந்தி (நட்சத்திர பதிவருக்கு எனது காணிக்கை)
4) நிலாமதி அக்கா (கதை சொல்லும் நீங்கள் கருத்தை சொல்லுங்கள்
5) சப்ராஸ் அபூபக்கர் (நோன்பு முடிய பதிவுலகத்துக்கு வர இருப்பவர், வந்த பின் தொடரவும்)
என்னை அழைத்த கார்க்கி பாவாவுக்கு நன்றி
1) சந்ரு (உங்கள் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன்)
2) மரூதமூரான் (என்னை மாட்டிவிட்டீங்க தானே இப்ப அனுபவியுங்க)
3) வந்தி (நட்சத்திர பதிவருக்கு எனது காணிக்கை)
4) நிலாமதி அக்கா (கதை சொல்லும் நீங்கள் கருத்தை சொல்லுங்கள்
5) சப்ராஸ் அபூபக்கர் (நோன்பு முடிய பதிவுலகத்துக்கு வர இருப்பவர், வந்த பின் தொடரவும்)
என்னை அழைத்த கார்க்கி பாவாவுக்கு நன்றி
யோ. வாய்ஸ்…..
என்னங்க இது இப்படி மாட்டி விட்டிட்டீங்கள். பழி வாங்கிறீங்களோ? எழுதுவதற்கு பஞ்சிபிடிச்ச என்னைப் போய் எழுதச் சொல்லிறியள். சரி.. தங்களின் ஆசையை ஏன் கெடுப்பான்.. நாளைக்கு ஒரு பதிவை போட்டாப் போச்சு. சந்தோசமா?
தங்களின் பார்வை அழகு. வாழ்த்துக்கள்.
நல்லா சொல்லியிருக்கிங்க!
அழைப்புக்கு நன்றி நண்பா...
நாளை பதிவிடுகின்றேன்.
இன்று என் அரசியல் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருக்கின்றது. நேரம் கிடக்க வாய்ப்பில்லை (லொள்ளு)
யோ ....என்னடா கண்ணா இப்படி மாட்டி விட்டு விடீங்க. சும்மா ...........அன்பு நட்புறவு உள்ளவர்களிடம் தானே உரிமையுடன் கேட்க முடியும் ...சரி பெரும்பாலும் இன்று எழுதுகிறேன்.
good view friend,,,,,
//மருதமூரான். said...
யோ. வாய்ஸ்…..
என்னங்க இது இப்படி மாட்டி விட்டிட்டீங்கள். பழி வாங்கிறீங்களோ? எழுதுவதற்கு பஞ்சிபிடிச்ச என்னைப் போய் எழுதச் சொல்லிறியள். சரி.. தங்களின் ஆசையை ஏன் கெடுப்பான்.. நாளைக்கு ஒரு பதிவை போட்டாப் போச்சு. சந்தோசமா?
தங்களின் பார்வை அழகு. வாழ்த்துக்கள்//
எப்படியோ எழுத பஞ்சியாக இருந்த உங்கள எழுத வச்சது சந்தோஷம் தான்
//வால்பையன் said...
நல்லா சொல்லியிருக்கிங்க!//
நன்றி வால்பையன் அவர்களே
//சந்ரு said...
அழைப்புக்கு நன்றி நண்பா...
நாளை பதிவிடுகின்றேன்.
இன்று என் அரசியல் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருக்கின்றது. நேரம் கிடக்க வாய்ப்பில்லை (லொள்ளு)//
போகிற போக்கில் நீங்கள் அரசியலில் ஈடுபட்டுருவீங்க என நினைக்கிறீங்க..
// நிலாமதி said...
யோ ....என்னடா கண்ணா இப்படி மாட்டி விட்டு விடீங்க. சும்மா ...........அன்பு நட்புறவு உள்ளவர்களிடம் தானே உரிமையுடன் கேட்க முடியும் ...சரி பெரும்பாலும் இன்று எழுதுகிறேன்.//
நன்றி நிலாமதி அக்கா எழுதுங்கள் வாசிக்கிறோம்
//பிரியமுடன்...வசந்த் said...
good view friend,,,,,//
நன்றி பிரியமுடன் வசந்த்