“சராசரி நான்”
சாலையோர விபத்துகளை
ஒரு கணப்பொழுதுகளில்
சலனமின்றிக் கடக்கின்றேன்.......
ஒரு கணப்பொழுதுகளில்
சலனமின்றிக் கடக்கின்றேன்.......
செய்திகளில் தெறிக்கும்
இரத்தம் பார்த்தும்
சாப்பாட்டை தொடர்கிறேன்........
கையேந்தும் பிச்சைக்காரனை
சில்லறை இருந்தும்
பாராமல் நடக்கிறேன் .......
அருகிலிருந்தவன் தடுக்கிய
சத்தம் கேட்டும்
நாவல்களில் மூழ்குகிறேன்......
சாலையை கடக்க முடியாத
குருடனை மறந்து
என் வழியில் நடக்கிறேன்.....
இருந்தும்..............................
நறுக்கப்பட்ட விரலில்
சொட்டிய இரு துளி இரத்திற்காய்
துடி துடிக்கும்
சராசரி நான்....................
இது எனது தோழியொருத்தி எனது வலைப்பதிவில் இடுகையிட தந்த கவிதை. இந்த கவிதையை பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள்.
மனிதன் மனிதாபிமானம் மறந்து கன காலமாச்சு.
//
கையேந்தும் பிச்சைக்காரனை
சில்லறை இருந்தும்
பாராமல் நடக்கிறேன் .......
//
சரியா சொன்னீங்க...
//இது எனது தோழியொருத்தி எனது வலைப்பதிவில் இடுகையிட தந்த கவிதை.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு !!!
உங்கள் தோழி கவிதை சூப்பர் யோ....
இது தான் காமன் மேன்ஒ??
அது சரி..
சராசரியா எல்லாரும் இப்படித்தான் இருக்காங்க..
கவிதையும் நல்லா வந்துருக்கு..தோழிக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க...
சூப்பராக இருக்கின்றது யோகா உங்கள் தோழியின் கவிதை..
தோழியின பெயரினையும் வெளியிட்டு இருக்கலாம் அல்லவா...
சூப்பர்ப்ப்...உங்கள் தோழியும் உங்களை போலவே சூப்பராக எழுதுறாங்க...
வாழ்த்துகள் உங்கள் தோழிக்கு...
//கையேந்தும் பிச்சைக்காரனை
சில்லறை இருந்தும்
பாராமல் நடக்கிறேன் ....... //
நான் பார்த்ததாலும் கொடுக்க மாட்டேன்... கேட்டாலும் கொடுக்க மாட்டேன்...
அதுசரி, நீங்கள் உங்கள் தோழிமேல் அதிகமான அன்பு வைத்திருக்கிறீர்கள் என?
நிறையப் பதிவுகளில் தோழி என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறீர்கள்...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் யோ வொய்ஸின் தோழிக்கு... ;)
நிஜமான வரிகள்! அழகான கவிதை!
உங்கள் தோழியின் கவிதை திறமைக்கு வாழ்த்துக்கள் யோ!
//இது எனது தோழியொருத்தி எனது வலைப்பதிவில் இடுகையிட தந்த கவிதை.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு !!!
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடு......!
தோழியையும் கவிதை எழுத வைத்தது "யோ" வின் வரிகள் தான். பாராட்டுக்கு நன்றி.
அடடே ..! பந்தா உலகில் இருப்பதால் நானும் இப்படித்தான் என்று சோல்லமாட்டேன்.. அருமையான கவிதை வாய்ஸ்..!
சராசரி வாழ்க்கை தான் யோ, மற்ற அனைத்தையும், நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.
அந்த இருதுளி இரத்திற்காகவும் நாம் துடிக்கவில்லையென்றால் தான் நாம் வாழத் தவறுகிறோமோ என்று வருத்தப்படவேண்டும்.
கால்களில் சக்கரம் பூட்டிக் கொண்டு காலத்தோடு சேர்ந்து ஓடுகையில், நின்று நிதானிக்கத் தூண்டும் நிதர்சன வரிகள்.
//நறுக்கப்பட்ட விரலில்
சொட்டிய இரு துளி இரத்திற்காய்
துடி துடிக்கும்
சராசரி நான்....................//
யதார்த்தத்தின் வரிகள்.
நன்றாயிருக்கிறது.
மற்றவர்களுடைய படைப்புகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் உயர்வான மனதுக்கு பாராட்டுகள்.
நேரமிருப்பின் தொடர்புகொள்ளுங்கள் - ramnirshan@gmail.com or nirshan@response.lk
நான் என்ற தலைப்பினை மனிதன் என மாற்றியிருந்தாலும் பொருத்தமாகத் தான் இருக்கும். அருமையான கவிதை
நல்ல கவிதை....
வாழ்த்துக்கள் உங்கள் நண்பிக்கு....
தொடர்ந்தும் எழுதச் சொல்லுங்கள்....
நல்லா இருக்கு கவிதை.......
நல்லா இருக்கு...
நன்றி ஹேமா
நன்றி ரசனைக்காரி
நன்றி ஜெட்லி
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி Geetha Achal
நன்றி கனககோபி
நன்றி யாழினி
நன்றி Narmatha
நன்றி புல்லட்
நன்றி மன்னார் அமுதன்
நன்றி இறக்குவானை நிர்ஷன்
நன்றி ilangan
நன்றி சந்ரு
நன்றி Hisham Mohamed - هشام
நன்றி Ammu&Madhu
எனது தோழியின் கவிதையை ரசித்த அனைவருக்கும் நன்றிகள் வேறு பெயரில் பின்னூட்டியிருக்கும் கவிதை எழுதிய தோழிக்கும் நன்றி..