யாழ்தேவிக்கு எனது நன்றிகள்யாழ்தேவி திரட்டியில் இணைந்து ஒரு மாதமே முடிந்துள்ள நிலையில் என்னை இந்தவார நட்சத்திர பதிவாளராக யாழ்தேவி அறிவித்துள்ளது. இது எனக்கு மிக்க சந்தோஷத்தை அளிக்கின்றது, நானெல்லாம் சும்மா நேரத்தை போக்க பதிவெழுத வந்தவன் என்கிற ரீதியில் தான் என்னை நோக்குகிறேன். இந்நிலையில் என்னை நட்சத்திர பதிவாளராக்கியது சந்தோஷமே என்றாலும் இந்த வாரம் கட்டாயம் அதிகம் பதிவுகள் எழுத வேண்டுமென்பது தான் கொஞ்சம் கடினமாயிருக்கிறது.

எவ்வாறாயினும் எனக்கு என் உணர்வுகளை சகலருக்கும் வெளிக்காட்ட ஒரு களமாக இந்த வாரத்தை உபயோகிக்கலாம் என்பது மகிழ்ச்சியான விடயமே.  நேற்று திங்கள் எங்களுக்கு விஷேட விடுமுறை நாளாகையால் காலை எனது மின்னஞ்சலை காலை திறந்து வந்த மடல்களை பார்த்துவிட்டு நண்பர்களோடு முழு நாளையும் வெளியே களித்துவிட்டு வந்ததால் மீண்டும் மின்னஞ்சல்களை பார்க்க இயலாமல் போய்விட்டது. எனக்கு நேற்று இரவு 10 மணியளவில் தான் இந்த வார நட்சத்திர பதிவர் நான் என்ற விடயம் தான் தெரியும். ஆகையால் நட்சத்திர வாரத்தில் முதல் பதிவை இன்று செவ்வாய் கிழமையே போடுகிறேன்.

நான் இலங்கை பதிவர் சந்திப்பிற்கு போன பின்பே யாழ்தேவி என்கிற ஒரு திரட்டி இலங்கையில் இருக்கின்ற விடயம் தெரியவந்தது. அடுத்த நாளே யாழ்தேவியில் இணைந்தேன். எனது பக்கத்துக்கு வருவோர்களின் எண்ணிக்கையை யாழ்தேவி அதிகரித்துள்ளது என்பதை கடந்த வாரமே சொல்லியிருந்தேன்.

மீண்டும் என்னை நட்சத்திர பதிவராக்கிய யாழ்தேவி திரட்டிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மேலும் புலத்திருக்கும் இலங்கை பதிவர் தங்க முகுந்தனுக்கும் எனது நன்றிகள். என்னை நட்சத்திர பதிவராக ஆக்கிய விடயம் தெரியவந்து நேற்று இரவே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். என்னால் அவரோடு பேச இயலவில்லை காரணம் அசதி காரணமாக நேற்று நேரத்துடன் தூங்கி விட்டேன். பின்னர் குறுஞ்செய்தியிலும் எனது பதிவிலும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். நன்றி தங்க முகுந்தன் அவர்களே!


5 Responses
 1. வாழ்த்துக்கள்...
  இந்த வாரத்தில் கலக்குங்கள்...
  முதல் பதிவு என்ன போடப் போறீங்க....???


 2. வாழ்த்துக்கள் யோ கலக்குங்க. ஆமாம் இந்தவாரம் எந்த கிரிக்கெட் வீரரை வம்புக்கு இழுக்கபோகின்றீர்கள்.


 3. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் யோக...ராஜ்


 4. ஓ! அதுவா தொலைபேசியில் கதைக்கவில்லை! நான் நினைத்தேன் - அடிக்கடி தொல்லை படுத்துகிறானே என்று தொலைபேசியை எடுக்காமல் விட்டுவிட்டீர்களோ? என்று யோசித்தேன்! யோ!(உங்கள் பெயரைத்தான் சொன்னேன்) தப்பாக எண்ணியிருந்தால் மன்னிக்கவும்! அது சரி ஏன் என் பெயரையெல்லாம் பதிவில்போட்டு ஒரு வாங்கு வாங்குகிறீர்? சரி பரவாயில்லை விடும்! இலங்கைப் பதிவர் சந்திப்பின்பின்னர் அடிக்கடி தொடர்பு கொள்ளும் பிரமுகர்களில் நீங்களும் ஒருவர்

  வாழ்த்துக்கள்!


 5. நன்றி கனககோபி
  நன்றி வந்தியத்தேவன்
  நன்றி பிரியமுடன்...வசந்த்
  நன்றி தங்க முகுந்தன்