கதை சொல்லும் படங்கள்

இன்று ஒரு சீரியஸ் பதிவு போடதான் இருந்தேன், ஆனாலும் நேரமின்மை காரணத்தால் படப்பதிவு ஒன்று போடுகிறேன். 

ஆயிரம் கதைகளில் சொல்லுவதை சில நேரங்களில் ஒரு படத்தினால் சொல்லலாம் என்பார்கள். அது உண்மை தான் இந்த படங்கள் சொல்லும் கதைகள் ஏராளம்


01. கண்ணுக்குள் நீரை வைத்து கொண்டு முடி வெட்டுபர் மேல் உள்ள கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் மனதுக்குள் கோபத்தை காட்டும் சிறுமி (நானும் சிறுவனாக இருக்கையில் இப்படிதான், முடி வெட்டுனர் மேல் உள்ள கோபத்தை வீட்டுக்கு வந்தவுடன் தாத்தா மீது காட்டிடுவேன்)


02. இசை கேட்க வயதில்லை என கூறும் சிறுவன்



03. ஊசிக்கு பயந்து கத்தும் சிறுவன் ஒருவனை பார்த்து கேலி செய்யும் மற்றைய சிறுவர்கள், இரண்டாவதாக இருப்பனுக்கு மாத்திரம் அடுத்தது நான் தானே என்ற அச்சம் முகத்தில் தெரிகிறது.


04.கையுறைகளை கைக்கு போட்டு போட்டு போரடித்து விட்டதால் காலுக்கு போட்டு பார்க்க முயற்சிக்கும் சிறுமி.


05. எவ்வளவு காலம் தான் பெரியவர்கள் சிறுவர்களை பயமுறுத்துவர் என பெரியவர்களை பயமுறுத்த முயற்சிக்கும் குழந்தை.



06. பெரிய பெரிய விஞ்ஞானிகள், தத்துவஞானிகள், அரசியலடவாதிகள் எல்லாம் வீதியில் உட்கார்ந்து தான் படித்தார்கள் என அம்மா சொல்லுவாள். அதனால் நானும் வீதயில் உட்கார்ந்து பத்திரிகை படிக்கிறேன்.



07.தோழனுடன் உறங்கும் குழந்தை



08.ரொம்ப குளிரா இருக்கு, நானும் தண்ணீரோடு சேர்ந்து கொஞ்சம் சூடாகிக்கிறேன்.



09. குழந்தை ஹாயாக சாய்ந்திருப்பது நாய்க்கு பிடிக்கலையோ?

10. இந்த கண்ணை கொண்டு தான் நான் உலகை பார்க்கிறேன் என கூறும் குழந்தை..



 இந்த படங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய நண்பிக்கு நன்றிகள். இந்த படங்களை பார்த்து கொஞ்ச நேரமாவது உங்கள் கவலைகளை மறந்து சிரித்தால் போதுமானது. சிரிப்பு என்பது நமக்கு இலவசமாக கிடைக்கும் ஒன்று மட்டுமல்ல நாம் மற்றவர்களுக்கும் இவலசமாக வழங்கும் பரிசுகளில் ஒன்றாகும்



26 Responses
  1. Anbu Says:

    நல்லா இருக்கு அண்ணா


  2. சேம் பிளட்

    நல்ல ரசனையான கலெக்சன்ஸ் யோகா


  3. அந்த பாடல் கேட்கும் சிறுவன் தான் எனக்குப் பிடித்திருகிறது. சிலவேளை அவன் என்னைப்போல் இருப்பதாலோ தெரியாது.


  4. மனமகிழ்வைத் தந்த படங்கள்.
    நன்றி


  5. மிகவும் நல்லாயிருக்கு எனை மறந்து சிரித்தேன். முடி வெட்ட் ஏனோ குழந்தைகளுக்கு அலர்ஜி .சில குழந்தைகள் செய்யும் அட்ட காசம். தாங்க முடியாது........


  6. :)) ரெம்ப அழகாக இருக்கு யோ! முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது.

    ஆனால் இந்த வந்தி அண்ணாட லொள்ளு தான் தாங்க முடியல!:)


  7. படமும் கமெண்ட்ஸும் சூப்பர்!


  8. Admin Says:

    படங்களும் விளக்கங்களும் அருமை


  9. ilangan Says:

    பரவாயில்லயே.. இப்படியும் பதிவு போடலாமா...


  10. Unknown Says:

    //02. இசை கேட்க வயதில்லை என கூறும் சிறுவன் //
    சிறுவனா அல்லது குழந்தையா?
    ஏனென்றால் என்னைப் போன்ற வயதில் சிறியவர்களைத் தான் (ம்.. ம்..) சிறுவர்கள் என்பார்களே? அது தான்..
    அருமையான படங்கள்...
    வாழ்த்துக்கள்...


  11. நானும் இந்தப் படங்களை மின்னஞ்சல்களில் பார்த்திருக்கிறேன். வேலையில் மூழ்கி இருக்கும்போது, மனதை இலகுவாக்கிவிட்டுப்போகும் இத்தகைய மின்னஞ்சல்கள்.


  12. Anbu said...
    நல்லா இருக்கு அண்ணா//

    வருகைக்கு நன்றி அன்பு தொடர்ந்து வாங்க..


  13. பிரியமுடன்...வசந்த் said...
    சேம் பிளட்

    நல்ல ரசனையான கலெக்சன்ஸ் யோகா//

    ஆமாம் வசந்த் வொய் பிளட் சேம் பிளட் தான்..

    வருகைக்கு நன்றி


  14. வந்தியத்தேவன் said...
    அந்த பாடல் கேட்கும் சிறுவன் தான் எனக்குப் பிடித்திருகிறது. சிலவேளை அவன் என்னைப்போல் இருப்பதாலோ தெரியாது//

    கொஞ்சம் ஓவராதான் இருக்குது. அவனுக்கு உங்களவிட வயது அதிகம் வந்தி...


  15. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    மனமகிழ்வைத் தந்த படங்கள்.
    நன்றி//

    வருகைக்கு நன்றி யோகன், தொடர்ந்து வாங்க..


  16. நிலாமதி said...
    மிகவும் நல்லாயிருக்கு எனை மறந்து சிரித்தேன். முடி வெட்ட் ஏனோ குழந்தைகளுக்கு அலர்ஜி .சில குழந்தைகள் செய்யும் அட்ட காசம். தாங்க முடியாது.......//

    ஆமாம் நிலாமதி அக்கா நானும் சிறுவயதில் அவ்வாறே! வருகைக்கு நன்றி அக்கா.


  17. யாழினி said...
    :)) ரெம்ப அழகாக இருக்கு யோ! முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாழினி

    //ஆனால் இந்த வந்தி அண்ணாட லொள்ளு தான் தாங்க முடியல!:)//

    என்ன செய்ய இத எல்லாம் தாங்கி கொள்ள தான் வேண்டும்.


  18. வால்பையன் said...
    படமும் கமெண்ட்ஸும் சூப்பர்!//

    நன்றி தல..


  19. சந்ரு said...
    படங்களும் விளக்கங்களும் அருமை//

    நன்றி சந்ரு. சும்மா அவசரத்துக்கு கிறுக்கியது


  20. ilangan said...
    பரவாயில்லயே.. இப்படியும் பதிவு போடலாமா..//

    ஆமாம் சும்மா இப்படி போட்டால் தான் இப்ப எல்லாம் ஹிட்ஸ் கிடைக்கிது


  21. கனககோபி said...
    //02. இசை கேட்க வயதில்லை என கூறும் சிறுவன் //
    சிறுவனா அல்லது குழந்தையா?
    ஏனென்றால் என்னைப் போன்ற வயதில் சிறியவர்களைத் தான் (ம்.. ம்..) சிறுவர்கள் என்பார்களே? அது தான்..
    அருமையான படங்கள்...
    வாழ்த்துக்கள்...//

    சரி நம்பிட்டேன் கனக கோபி..


  22. ஊர்சுற்றி said...
    நானும் இந்தப் படங்களை மின்னஞ்சல்களில் பார்த்திருக்கிறேன். வேலையில் மூழ்கி இருக்கும்போது, மனதை இலகுவாக்கிவிட்டுப்போகும் இத்தகைய மின்னஞ்சல்கள்.//

    நன்றி ஊர் சுற்றி எனக்கும் அவ்வாறே. மனதை இலகுவாக்கும் படங்கள்..


  23. param Says:

    ரொம்பவும் அருமையாக இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதனைப் பார்க்க நேரிட்டது இருந்தும் ,பச்சைக் குழந்தைகளின் பால் வடியும் முகங்கள் உடல் அசௌகரியத்தைக் கூட போக்கி விட்டது. நன்றி.


  24. param said...
    ரொம்பவும் அருமையாக இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதனைப் பார்க்க நேரிட்டது இருந்தும் ,பச்சைக் குழந்தைகளின் பால் வடியும் முகங்கள் உடல் அசௌகரியத்தைக் கூட போக்கி விட்டது. நன்றி.//

    ரொம்ப நன்றி பராம் வருகைக்கு. உங்களுக்கு இந்த பதிவு ஏதாவது நன்மை செய்திருந்தால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியே.. உங்கள் உடல் நிலை நன்றாய் ஆக பிரார்த்திக்கிறேன்..



  25. விழிமேலழகர் said...
    good creativity//

    நன்றி விழிமேலழகர் வருகைக்கு.