நூடுல்ஸ்

இந்த வாரம் யாழ்தேவி நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்ததால் அதிக பதிவுகள் எழுதியிருப்பதால் நூடுல்ஸ் எழுத நாட்கள் எடுத்து விட்டது.

======================================================================
இன்று காலை செய்திதாளில் இந்திய கிரிக்கட் அணி பயிற்றுவிப்பாளர் ”சிறப்பாக கிரிக்கட் விளையாட செக்ஸ் உதவுகிறதாக” கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சும்மாவே யுவராஜ் போன்ற வீரர்களின் பேர் மைதானத்திற்கு வெளியே கெட்டு போயுள்ளது. (ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி பெற்றதற்கு முதல் நாளிரவு. யுவராஜ், ரைனா போன்ற வீரர்கள் மொடல்களோடு சுற்றியதை ஆதாரத்தோடு இந்திய செய்தி சேனல்கள் ஒப்பித்திருந்தன.) இப்படி பயிற்றுவிப்பாளரே கூறினால் இனி அவ்வளவுதான்.

======================================================================

வேட்டைக்காரன் பாடல்கள் கேட்டேன், வழமையான விஜய் பாடல்கள் போன்றேிருந்தன. முதன் முதலில் கேட்கும் போது (First Impression) சில பாடல்கள் மனதை கவரும். அந்த வகையில் பாடல்கள் இல்லை எனதான் கூற வேண்டும். ”அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, மோதி பாரு வீடு போய் சேர மாட்ட” போன்ற கபிலனால் இளைய தளபதிக்காகவே எழுதும் பாடல்களை கோண்டிருக்கின்றன. கபிலன் எழுதிய இதே போன்ற இன்னொரு பாடலும் படத்தில் உண்டு. கில்லி பாடல்கள் முதலில் என்னை கவரவில்லை, ஆனாலும் படத்தை பார்த்த பின் பாடல்கள் நன்றாக ஹிட் ஆகின. அந்த வகையில் தான் இதுவும் சேர்கிறதா பார்ப்போம்.  பாடல்கள் பற்றிய சகா கார்க்கியின் கலக்கல் விமர்சனத்தை இங்கு வாசிக்கவும்

======================================================================

பிரகாசமான வானொலியில் தொலைபேசியில் ஒருத்தருக்கு கதைத்து தாங்கள் யாரென்று கூறாமல் அவரை பேச விட்டு கிண்டலடிக்கிறார்கள். இப்போ கொஞ்சம் மேலே சென்று அவரது தொழிலை, அவருக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என எல்லாம் கிண்டலடிகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவரின் மனம் நோகும் என அவர்கள் அறிந்திருக்கவில்லையா? இதே போன்றொரு நிகழ்ச்சி முன்னர் வேறொரு வானொலியில் ”ஒலித்து வைத்த ஒலிவாங்கி” என ஒலித்தது. அது இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரை புண்படுத்தவில்லை என நினைக்கிறேன்.

======================================================================

ஆங்கிலம் என்று கூறியவுடன் சென்ற வாரம் விஜய் டீவியில் இடம்பெற்ற நீயா? நானா? நினைவுக்கு வந்தது. ஆங்கிலம் பேச கஷ்டபடுபவர்களும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களும் கலந்து கொண்டனர். அங்கு பேசிய ஒரு பெண் லைசன்ஸ் இல்லாமல் போய் போலிசிடம் மாட்டிக் கொண்டால் ஆங்கிலத்தில் பேசி தப்பித்துக் கொள்ளலாம் என கூறியதற்கு நிகழ்ச்சி அறிவிப்பாளர் கோபிநாத் ”அரிவாளுடன் போறவரையும் தான் போலீஸ் விட்டுவிடும், உங்களையும் அதே போல் விட்டு விடும். ஆகவே நீங்கள் ஆங்கிலத்தை அரிவாள் போன் று பயமுறுத்தி தவறு செய்யவே பாவிக்கிறீர்கள்” என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஆங்கிலம் பேசும் பக்கமுள்ள ஒருபெண் "ORACLE என்பதை பலர் ஒராக்கிள் என்கின்றனர். இது போன்றவை கேட்க கடினமாக இருக்கிறது.இது ஆரக்கிள் என வரவேண்டும்.” என்றார். எங்களுக்கெல்லாம் இலங்கையில் அதை ஒராக்கிள் என்றுதானே சொல்லி கொடுக்கின்றனர். மறுநாள் எனது கணனி ஆசிரியரை தொடர்பு கொண்டு கெட்ட போது அது ஒராக்கிள் என தான் உச்சரிக்க வேண்டும் என கூறினார். அப்போது அந்த பெண் கூறியது பிமையா?

======================================================================

மனிதனின் சிறந்த நண்பன் என நாயை கூறுவார்கள். அதை இந்த படம் நிருபிக்கின்றது. அவ்வளவுதான் நோ கொமண்ட்ஸ்




7 Responses
  1. Prapa Says:

    //பிரகாசமான வானொலியில் தொலைபேசியில் ஒருத்தருக்கு கதைத்து தாங்கள் யாரென்று கூறாமல் அவரை பேச விட்டு கிண்டலடிக்கிறார்கள். இப்போ கொஞ்சம் மேலே சென்று அவரது தொழிலை, அவருக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என எல்லாம் கிண்டலடிகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவரின் மனம் நோகும் என அவர்கள் அறிந்திருக்கவில்லையா? இதே போன்றொரு நிகழ்ச்சி முன்னர் வேறொரு வானொலியில் ”ஒலித்து வைத்த ஒலிவாங்கி” என ஒலித்தது. அது இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரை புண்படுத்தவில்லை என நினைக்கிறேன்.//

    நிச்சயமாக கொஞ்சம் கவனம் எடுக்கட்டும்,
    அத்தோடு நூடுல்ஸ் ரொம்ப சுவையாக இருக்கிறது....


  2. பிரகாசமான ப்ரோக்கராமுக்கு தங்கள் டீடெய்சை அனுப்பும் குரங்குகளுக்கு எங்கே பொனது மூளை.. கோமண்த்துள கொடுக்கானைப் போட்டுவிட்டு கொஞ்சுது குலாவுது எண்டால் என்ன செய்யுறது?

    கடைசியா ஒளிச்சு நிக்கிறது யாரு நம்ம மஜாவா ? நீங்க ஆதிரைக்கு குடுத்த ஐடியாவில உதையும் சேருங்க.. எலிக்குஞ்சு ஒளிச்சு நிண்டாலும் அதண்ட ஓனரையாவது பிடிக்குது..


  3. நானும் அந்த விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்தனான். சிலர் ஆங்கிலம் தெரிந்தால் தான் அறிவாளிகள் என நினைக்கின்றார்கள். இது எவ்வளவு அபத்தம் என்பதை ஏனோ கோபிநாத்தோ ஏனையவர்களே அவர்களுக்கு விளங்கப்படுத்தவில்லை.

    கடைசிப் படம் சூப்பர்.


  4. நூடுல்ஸ் கலக்கல்...
    கடைசி படம் சூப்பர்ஒ சூப்பர்


  5. //மனிதனின் சிறந்த நண்பன் என நாயை கூறுவார்கள்//
    இந்தப் படத்தில நாய், ஒருத்தருக்கு நண்பனாகவும், இரண்டு பேருக்கு வில்லனாகவும் இருக்கு ;)

    எஜமான் விசுவாசம்....:)


  6. நல்லாப்பாருங்க!

    நாய் புருஷனக்கு தான் நண்பன், பொண்டாட்டிக்கு எதிரி!


  7. நன்றி பிரபா
    நன்றி புல்லட்
    நன்றி வந்தியத்தேவன்
    நன்றி ஜெட்லி
    நன்றி வேந்தன்
    நன்றி வால்பையன்

    அனைவருக்கும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.