பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)


பதிவுலக நண்பரான மருதமூரான் அழைத்த தொடர் விளையாட்டுக்கு வந்திருக்கிறேன். எனது பாடசாலை காலத்தை மீட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்த கௌரவ.மருதமூரான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

மற்றையவர்களை போல அல்லாமல் நான் பாலர் வகுப்பு எனப்படும் ஆண்டு 01 தொடக்கம் உயர்தரம் வரை படித்தது ஒரே பாடசாலையிலாகும். அது நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி. எனது பாடசாலை காலமானது எல்லாருடையதையும் போன்று மிகவும் இனிமையானது. அடுத்த மாதம் இக்கல்லூரியின் 150வது வருட நிறைவைக் கொண்டாட இருக்கின்றோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
முதலாம் ஆண்டில் எங்களுக்கு படிப்பித்த ஆசிரியை நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது காலமாகிவிட்டார். அவரது பெயர் நினைவுக்கு வரவில்லை. இரண்டாம் ஆண்டில் எங்களுக்கு மஸ்ஸினா என்ற ஆசிரியர் படிப்பித்தார், அடுத்த வருடம் ருக்மணி என்ற ஆசிரியையும் படிப்பித்தார்.
நான்காம் ஆண்டில் எனக்கு ஜெயமலர் என்ற அருட்சகோதரி வகுப்பாசிரியரானார். அவரது வகுப்பில் படித்த நாட்கள் எனது வாழ்க்கையில் நான் மறக்க இயலாத நாட்கள். அன்பு ஒன்றே எங்கள் சிஸ்டரின் ஆயுதம். யாரையும் அதட்டி கூட பேச மாட்டார். அனைத்து மாணவர்களையும் ”ராசா” என தான் கூப்பிடுவார். மேலும் இந்த வகுப்பில்தான் நான் முதன் முதலில் முதல்நிலை மாணவராக தெரிவு செய்யப்பட்டேன். எங்க சிஸ்டரிடம் நான் வாங்கிய முதலாம் நிலையை பாடசாலையை விட்டு அகலும் வரை ஒரே ஒரு முறை தவிர்ந்து யாருக்கும் விட்டு கொடுக்கவில்லை. நான் உயர்தரம் படிக்கும் வரை என்னை ராசா என்று மட்டுமே அழைத்த எங்கட சிஸ்டர் வடக்கு பக்கம் படிப்பித்து கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டேன். நான் மீண்டும் பார்க்க ஆசைப்படும் நபர்களில் ஒருவர்.
சுந்தரலிங்கம் ஆசிரியரின் கண்டிப்பான வழிகாட்டுதலில் ஆண்டு 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து ஆண்டு 6ல் பலீலா என்ற முஸ்லிம் ஆசிரியையிடம் பயின்றேன். என்னை சொந்த தம்பி போன்று கவனித்தவர் இந்த ஆசிரியை. அடுத்த வருடம் ஆசிரியர் சுகுமாரனிடம் படித்தேன். மிகவும் அசிங்கமாக இருந்த எனது கையெழுத்தை மாற்றியமைத்தவர் இவர்தான். அடுத்த வருடம் ஆசிரியர் வென்சலாஸ் எனது வகுப்பாசிரியர்.
ஆண்டு 9,10, 11 என மூன்று வருடமும் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் கணிதபாட ஆசிரியர் உசைர் ஆவார். ஏற்கனவே எனது விருப்ப பாடமாக இருந்த கணிதத்தை இன்னும் இனிக்க வைத்தவர் இவராவர். கணிதம் என்றாலே ஓதுங்கும் மற்றைய மாணவர்களையும் கணிதபாடம் மேல் விருப்பமடைய வைத்தது இவரது வெற்றியாகும்.
மேலும் இந்த காலத்தில் நான் படித்த அகிலாண்டேஸ்வரி டீச்சர், யோகராஜா சேர், ஈஸ்வரன் சேர், பென்ஜமின் சேர், உலகநாதன் சேர், சோமா டீச்சர், பெரேரா டீச்சர், விஜயகோண் சேர், அத்தப்பத்து டீச்சர், ராஜலட்சுமி டீச்சர், மலர் டீச்சர் போன்றோரும் என்னை செம்மையாக்கியிருக்கிறார்கள்.
எனது அதிபர் பொனிபஸ் சேர் கண்டிப்பு, மற்றும் அன்பு இரண்டையும் மாணவர் மேல் காட்டுபவர். முன்னாள் அதிபராக இருந்த மறைந்த செல்வநாயகம் (வீரையா மாஸ்டர்) சேரும் மிகவும் அன்பான மனிதர். கிரிக்கட் சொல்லிக் கொடுத்த கீர்த்தி சேர் மற்றும் பென்ஜமின் சேர் ஆகிய இருவரும் தான் நான் இப்போது இப்படி கிரிக்கட்டில்ஆர்வமாய் இருப்பதற்கான காரணம்.
மேலதிக வகுப்பு ஆசிரியை விமலினி டீச்சர் கண்டிப்புக்கு பெயர் போனவர். இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். மற்றும் மேரி டீச்சர் வீட்டில் இலவசமாக எனக்கும் இன்னும் 3 மாணவர்களுக்கும் விஞ்ஞானம் கற்பித்தார்.
உயர்தர வகுப்புகளில் படிப்பித்தவர்கள் மகேஸ்வரி டீச்சர்கள் (பௌதீக ஆசிரியரும் மகேஸ்வரி, தாவரவியல் ஆசிரியரும் மகேஸ்வரி) மற்றும் தேவகி டீச்சர் ஆவார்.
இவ்வளவுதான் எனது ஆசிரியர்கள் பற்றி, கல்லூரி காதல் கதைகளை பற்றி நான் இங்கு சொன்னால் அது வேறு பிரச்சினைகளை தரலாம் ஆகவே அது பற்றி இங்கு கதைக்க வில்லை. நான் கல்லூரயில் ரொம்ப நல்ல மாணவன் (அட சத்தியமா சொல்லுறேங்க, நம்புங்க) அதனால் அடிகள் திட்டுகள் வாங்கியது குறைவு. பாடசாலை அனுபவம் பற்றி எழுதினால் இந்த பதிவு கிலோ மீற்றர் அளவுக்கு நீண்டு விடும், ஆகவே அதை இன்னொரு பதிவில் இடுகிறேன்.
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது.
01. தங்க முகுந்தன் (தொடர் பதிவுக்கு மருத மூரான் அழைக்கவில்லை என கவலை பட்டீங்கதானே? இப்ப மாட்டிகிட்டீங்க)
02.கனககோபி (ரொம்ப எல்லாத்தையும் கலாய்க்கும் நீங்க ஒரு சீரியஸ் பதிவு போடுங்க
03.சதீஷ்  ( சினிமா கதை சொல்லுற மாதிரி உங்கட பாடசாலை கதை சொல்லுங்க)

1. உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.




19 Responses
  1. ////எனது பாடசாலை காலத்தை மீட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்த கௌரவ.மருதமூரான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.////


    என்னது கௌரவ மருதமூரானா? தாங்கள் அழைத்த ‘காதல், அழகு, கடவுள், பணம்’ தொடர் விளையாட்டுக்கான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்களின் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.


  2. Prapa Says:

    oh ! ivvalavu irukkaa???
    nadakkaddum.


  3. கடந்த மூணு இடுகைகள் முழுவதம்
    தொடர் பதிவு,.. அசத்து.....


  4. Admin Says:

    //கல்லூரி காதல் கதைகளை பற்றி நான் இங்கு சொன்னால் அது வேறு பிரச்சினைகளை தரலாம் //


    அப்போ நாங்கள் அறிந்தது எல்லாம் உண்மைதான்போல...


  5. Unknown Says:

    வருகிறேன்...
    ஏற்கனவே மருதமூரான் அழைத்திருக்கிறார்...
    உங்களுக்காகவும் எழுதுகிறேன்...

    //அடுத்த மாதம் இக்கல்லூரியின் 150வது வருட நிறைவைக் கொண்டாட இருக்கின்றோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். //
    பாடசாலையின் சாதனைகளில் மகிழ்ச்சியடைபவன் தான் உண்மையான மாணவன்...
    வாழ்த்துக்கள் உங்கள் பாடசாலைக்கும் உங்களுக்கும்...


  6. உங்கள் அழைப்புக்கு நன்றிகள். உங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். ஆனால் என்னை மன்னிக்கவேண்டும் நீங்கள் அழைத்த தொடர்பதிவை என் பள்ளிக்காலம் என பதிவிட்டுள்ளேன். எனவே மீண்டும் அதே கருப்பொருளில் பதிவிடுவது பொருந்தாது என நினைக்கின்றேன்.


  7. பாடசாலையில் ஒன்றாய் படித்த நண்பர்களையே மறந்து திரியும் இந்த காலத்தில், முதலாம் வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் பற்றி நினைவோடு வாழ்த்தி இருக்கீங்க

    வாழ்த்துக்கள்

    //உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.// பிடிக்காத ஆடிரியர்கள் கூட இருக்காங்கோ மறந்துடாதீங்க


  8. //மருதமூரான். said...
    ////எனது பாடசாலை காலத்தை மீட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்த கௌரவ.மருதமூரான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.////


    என்னது கௌரவ மருதமூரானா? தாங்கள் அழைத்த ‘காதல், அழகு, கடவுள், பணம்’ தொடர் விளையாட்டுக்கான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்களின் பதிவு அருமை. வாழ்த்துக்கள்//

    ஆமாம் பெரியவங்கள அப்படி கூப்பிடுறதுதானே நல்லது..


  9. //பிரபா said...
    oh ! ivvalavu irukkaa???
    nadakkaddum.//

    நன்றி பிரபா, வருகைக்கு


  10. //ஜெட்லி said...
    கடந்த மூணு இடுகைகள் முழுவதம்
    தொடர் பதிவு,.. அசத்து...//

    நன்றி ஜெட்லி என் அமௌண்ட் இன்னும் வந்து சேரலையே?


  11. //சந்ரு said...
    //கல்லூரி காதல் கதைகளை பற்றி நான் இங்கு சொன்னால் அது வேறு பிரச்சினைகளை தரலாம் //


    அப்போ நாங்கள் அறிந்தது எல்லாம் உண்மைதான்போல..//

    பப்ளிக்ல அதெல்லாமா கேப்பாங்க.. நீங்க என்னா சந்ரு


  12. //கனககோபி said...
    வருகிறேன்...
    ஏற்கனவே மருதமூரான் அழைத்திருக்கிறார்...
    உங்களுக்காகவும் எழுதுகிறேன்...

    //அடுத்த மாதம் இக்கல்லூரியின் 150வது வருட நிறைவைக் கொண்டாட இருக்கின்றோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். //
    பாடசாலையின் சாதனைகளில் மகிழ்ச்சியடைபவன் தான் உண்மையான மாணவன்...
    வாழ்த்துக்கள் உங்கள் பாடசாலைக்கும் உங்களுக்கும்...//

    நன்றி கோபி வருகைக்கும் கருத்துக்கும் தொடர்ந்ததற்கும்


  13. //SShathiesh said...
    உங்கள் அழைப்புக்கு நன்றிகள். உங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். ஆனால் என்னை மன்னிக்கவேண்டும் நீங்கள் அழைத்த தொடர்பதிவை என் பள்ளிக்காலம் என பதிவிட்டுள்ளேன். எனவே மீண்டும் அதே கருப்பொருளில் பதிவிடுவது பொருந்தாது என நினைக்கின்றேன்//

    ஆமாம் வாசித்தேன், அநியாயமாக வேறு ஒருத்தர மாட்டிவிட்டு இருக்கலாம் உங்கள வேறு தொடர்பதிவுல இழுத்து விட்டுருக்கலாம்.


  14. ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
    பாடசாலையில் ஒன்றாய் படித்த நண்பர்களையே மறந்து திரியும் இந்த காலத்தில், முதலாம் வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் பற்றி நினைவோடு வாழ்த்தி இருக்கீங்க

    வாழ்த்துக்கள்

    //உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.// பிடிக்காத ஆடிரியர்கள் கூட இருக்காங்கோ மறந்துடாதீங்க

    நன்றி கீர்த்தி பிடிக்காத ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களை இப்போ வெறுக்க வில்லை கீர்த்தி. என்னதான் இருந்தாலும் ஆசிரியர்களே!


  15. parameswaran Says:

    ஹாய் அண்ணா...நானுன் இதே பாடசாலையில் தான் படித்தேன்....
    தரம் 7-10 வரை படித்தேன்.....இதை படிக்கும் பொது சந்தோசமாக உள்ளது.....
    அண்ணா நீங்கள் எந்த வருடம் படித்திர்கள்...
    எனக்கு யோகராஜா சேர், ஈஸ்வரன் சேர்,அத்தப்பத்து டீச்சர்,, மலர் டீச்சர்,சுகுமாரன் சேர் மட்டும் தான் தெரியும்.......எனக்கு மலர் டீச்சர் ரம்பா பிடிக்கும்....ஏன்டா கிளாஸ் டீச்சர் அவங்கதான் தரம் 10.நான் மாணவ தலைவனாக இருந்தேன்.
    எனக்கு என் நண்பர்களை பக்கம் போல இருக்கு....உங்களால் அவர்களை சந்திக்க முடயுமா..
    நான் நுவரெலிய போயிட்டு 5 வருஷம் ஆகிடுது....அண்ணா..


  16. parameswaran Says:

    நான் 2000-2004 வரை அங்குதான் படித்தேன்...


  17. ///parameswaran said...
    ஹாய் அண்ணா...நானுன் இதே பாடசாலையில் தான் படித்தேன்....
    தரம் 7-10 வரை படித்தேன்.....இதை படிக்கும் பொது சந்தோசமாக உள்ளது.....
    அண்ணா நீங்கள் எந்த வருடம் படித்திர்கள்...
    எனக்கு யோகராஜா சேர், ஈஸ்வரன் சேர்,அத்தப்பத்து டீச்சர்,, மலர் டீச்சர்,சுகுமாரன் சேர் மட்டும் தான் தெரியும்.......எனக்கு மலர் டீச்சர் ரம்பா பிடிக்கும்....ஏன்டா கிளாஸ் டீச்சர் அவங்கதான் தரம் 10.நான் மாணவ தலைவனாக இருந்தேன்.
    எனக்கு என் நண்பர்களை பக்கம் போல இருக்கு....உங்களால் அவர்களை சந்திக்க முடயுமா..
    நான் நுவரெலிய போயிட்டு 5 வருஷம் ஆகிடுது....அண்ணா////

    ரொம்ப சந்தோஷம் தம்பி நம்ம பள்ளி மாணவர் ஒருவரை கண்டதுல. நான் இன்னும் பள்ளி நண்பர்களோடு தொடர்பில் இருக்கிறேன். நாலை மாலை நுவரெலியா போவேன். பேஸ்புக்கில் இருந்தால் நமது பள்ளி நண்பர்களோடு தொடர்பில் இருக்கலாம். எமது பள்ளி நண்பர்கள் அநேகமானோர் அதில் உறுப்பினர்கள்..


  18. ////parameswaran said...
    நான் 2000-2004 வரை அங்குதான் படித்தேன்..////

    நான் 2000 ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து விலகினேன் நண்பரே. சந்தித்தால் உங்களை அடையாளம் காணலாம் என நினைக்கிறேன்..


  19. parameswaran Says:

    நானும் பேஸ்புக்கில் இருக்கிறேன்...parames55@gmail.com

    அவர்களை எனக்கு suggest பண்ணி விடவும்..