திங்கள் நூடில்ஸ்

ரெண்டு நாளா உறவினர் ஒருத்தரின் திருமணம் காரணமாக பதிவுப்பக்கமே வரலை. இன்று தான் வந்தேன்.வந்து பதிவுகளை வாசித்தால் நம்ம சந்ருவின் வலை திருடப்பட்டுள்ளது கேள்விப்பட்டு அதிர்ந்து போய் எனது கடவு சொல்லையும் மாற்றி விட்டேன், நம்ம சேரன் கிரிஸ் போன்ற தொழில்நுட்ப ஸ்பெசலிஷ்ட்கள் அவருக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்

-----------------------------------------------------
-----------------------------------------------------
 நேற்று என்னுடன் பஸ்ஸில் பயணித்தவர் என்னுடன் பேசும் போது அவர் புதிதாக இணைய இணைப்பு பெற்று கொண்டதாக தெரிவித்தார். நானும் ஆஹா நமக்கு கதைக்க ஒருத்தர் கிடைத்திட்டார் என நினைத்து சந்தோஷமாக நம்ம பதிவுலக கதையெல்லாம் சொன்னேன், கடைசியில் அவர் சொன்னது தான் எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது, அவர் என்கிட்ட சொன்னது  “ என்ன கனெக் ஷன் வாங்கி என்ன புண்ணியம் இப்ப தான் அரசாங்கத்தில ஆபாச இணைய தளங்களை எல்லாம் தடை செஞ்சிட்டாங்களே, ஆமா நீங்க எல்லாம் எப்படி பார்க்கிறீங்க என கேட்டார்” இன்டர்நெட் என்றால் இன்னும் இப்படி தான் என ரொம்ப பேர் எண்ணியிருக்காங்க.
-----------------------------------------------------
-----------------------------------------------------
வெற்றி எப் எம்மின் கண்டி அலைவரிசை 101.5 ல் இப்ப முழுமையாக லக் எப் எம் தான் கேட்கிறது. அவங்க அலைவரிசை 101.3 என நினைக்கிறேன், முன்னர் கொஞ்சம் கொஞ்சம் கேட்டது. இப்ப முழுமையாகவே வெற்றியின் அலைவரிசையை அந்த வானொலி முற்றுகையிட்டு விட்டது. இதெல்லாம் விசாரிக்க யாருமில்லையா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
இதுவும் அப்படிதான் வெற்றியிலும் சூரியனிலும் கந்தசாமி திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வானொலி தாங்கள் தான் என கூறுகிறார்கள். நான் கேட்டு பார்த்த வரையில் வெற்றி எப் எம் மட்டுமே வீ கிரியேசன்ஸ் மற்றும் படத்தின் இலங்கை விநியோகஸ்தர்களிடமும் ஒப்பந்தமிட்டு இருக்கிறது. அப்படியானால் சூரியனில் பொய் சொல்லுகிறார்களா? அல்லது எங்களை ஏமாற்றுகிறார்களா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
விடுமுறையில் பசங்க படம்  பார்க்க கிடைத்தது. அருமையான படம். தமிழில் கதாநாயகர்கள், கதாநாயகி,  லவ் என புளித்து போன விடயங்கள் இல்லாத படம். சிறுவர்கள் பேசுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் இப்ப எல்லா சின்னதுகளும் இப்படி தான் பேசுது. ஆகவே இத ஏற்று கொள்ள தான் வேண்டும்.
 -----------------------------------------------------
-----------------------------------------------------
 திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணிக்கு கமல் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவி போட போறாங்க. எப்படியும் வார நாள் என்பதால இத எனக்கு பார்க்க கிடைக்காது என்பது ரொம்ப கவலை. அந்த நிகழ்ச்சி பதிவிறக்க கிடைச்சா யாராவது சொல்லுங்க (அட்வான்ஸ் புக்கிங்)
-----------------------------------------------------
-----------------------------------------------------
ஏழை சிறுவர்களுக்கு இலவச  இதய ஆப்பரேஷன் செய்ய இருப்பதாகவும், தேவையானவர்கள் தொடர்பு கொள்ள சொல்லியும், இன்று எனக்கு நண்பனொருவனிடமிருந்து வந்த தகவல் கீழே. தகவல் உண்மை என்றால் உங்களுக்கு முடிந்த அளவுக்கு இந்த தகவலை பகிர்ந் கொள்ளுங்கள் (தகவலின் நம்பகத்தன்மை பற்றி என்னாபல் உறுதி கூற முடியாது)22 Responses
 1. Ammu Madhu Says:

  // (தகவலின் நம்பகத்தன்மை பற்றி என்னாபல் உறுதி கூற முடியாது)//

  விவரமான ஆளுதானுங்க நீங்க...தகவல் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே..

  //விடுமுறையில் பசங்க படம் பார்க்க கிடைத்தது. அருமையான படம். தமிழில் கதாநாயகர்கள், கதாநாயகி, லவ் என புளித்து போன விடயங்கள் இல்லாத படம். சிறுவர்கள் பேசுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் இப்ப எல்லா சின்னதுகளும் இப்படி தான் பேசுது. ஆகவே இத ஏற்று கொள்ள தான் வேண்டும்.//

  உண்மையிலுமே ரொம்ப நல்ல படம் தான்..அந்த ஹீரோ சிறுவன் தான் கொஞ்சம் ஓவராக டியாலக்ஸ்..மற்றபடி நன்றாக இருந்தது..

  //திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணிக்கு கமல் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவி போட போறாங்க//

  அப்டியா..

  அன்புடன்,
  அம்மு.

 2. ///இதுவும் அப்படிதான் வெற்றியிலும் சூரியனிலும் கந்தசாமி திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வானொலி தாங்கள் தான் என கூறுகிறார்கள். நான் கேட்டு பார்த்த வரையில் வெற்றி எப் எம் மட்டுமே வீ கிரியேசன்ஸ் மற்றும் படத்தின் இலங்கை விநியோகஸ்தர்களிடமும் ஒப்பந்தமிட்டு இருக்கிறது. அப்படியானால் சூரியனில் பொய் சொல்லுகிறார்களா? அல்லது எங்களை ஏமாற்றுகிறார்களா?///

  இதன் உண்மைத் தன்மையை அறிய நானும் ஆவல் படுகிறேன்...

  என்ன யோ.... பசங்க படம் பார்த்தீங்க போல?... பஸ்ல சந்தித்த அந்த நபருக்கு எத்தன வயது இருக்கும் சொல்லுங்க?....

  நல்லா இருந்தது பதிவு... வாழ்த்துக்கள்.....

 3. ilangan Says:

  துணிச்சலான கேள்விகள் கேட்கின்றீர்கள்.. கேளுங்க கேட்கும் போது தான் அதிகம் கிடைக்குமாம்.

 4. எனங்க இப்படி செய்துடீங்க. திங்கள் நூடில்ஸ் என்று ..... பசி சாப்பிடலாம் என நினைத்தால்.....? சும்மா தமாசு

 5. தகவல் களஞ்சியம்!

 6. //எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது//

  பொய்தானே யோகா

 7. //பிரியமுடன்...வசந்த் said...
  //எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது//

  பொய்தானே யோகா//  இல்லை வசந்த் ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நடிக்கிறாராம் நம்ம யோகா

 8. உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....

 9. //என்ன கனெக் ஷன் வாங்கி என்ன புண்ணியம் இப்ப தான் அரசாங்கத்தில ஆபாச இணைய தளங்களை எல்லாம் தடை செஞ்சிட்டாங்களே, ஆமா நீங்க எல்லாம் எப்படி பார்க்கிறீங்க என கேட்டார் //

  இவர் மட்டுமல்ல நிறையப் பேருக்கு இந்தக் கவலை தான்.

  //இன்டர்நெட் என்றால் இன்னும் இப்படி தான் என ரொம்ப பேர் எண்ணியிருக்காங்க. //

  எங்கள் வலைப்பதிவுகள் இன்னும் பொதுமக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றால் இப்படி ஒரு உலகம் இணையத்துள் இருக்கிறது என்று உணர மாட்டார்களா?
  ஏனென்றால் வலைத்தளங்கள் பக்கம் செல்லாத ஏராளமான இணையத்தள பாவனையாளர்கள் இருக்கிறார்களே...

 10. யோ ஒரு சின்ன சந்தேகம் இப்போ ஆபாச இணையத்தளங்கள் இலங்கையில் பார்க்கமுடியாதா? நூடுல்ஸ் கலக்கல்.

 11. Ammu Madhu said...

  விவரமான ஆளுதானுங்க நீங்க...தகவல் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே..

  உண்மையிலுமே ரொம்ப நல்ல படம் தான்..அந்த ஹீரோ சிறுவன் தான் கொஞ்சம் ஓவராக டியாலக்ஸ்..மற்றபடி நன்றாக இருந்தது..

  அப்டியா..

  அன்புடன்,
  அம்மு.//

  நன்றி கிச்சன் கில்லாடி அம்மு அவர்களே! உண்மையான்னு தெரியாது. உண்மை என்றாலட யாருக்காவது பயன்படுமே என்று தான் போட்டேன்.

 12. சப்ராஸ் அபூ பக்கர் said...
  இதன் உண்மைத் தன்மையை அறிய நானும் ஆவல் படுகிறேன்...

  என்ன யோ.... பசங்க படம் பார்த்தீங்க போல?... பஸ்ல சந்தித்த அந்த நபருக்கு எத்தன வயது இருக்கும் சொல்லுங்க?....

  நல்லா இருந்தது பதிவு... வாழ்த்துக்கள்....

  நன்றி சப்ராஸ் நானும் அந்த பதிலதான் பார்த்திட்டு இருக்கேன். சூரியன் சார்பில யாருமே ஒன்னும் சொல்ல வில்லை. அவருக்கு 30 தொடக்கம் 35 வயது இருக்கும்

 13. ilangan said...

  துணிச்சலான கேள்விகள் கேட்கின்றீர்கள்.. கேளுங்க கேட்கும் போது தான் அதிகம் கிடைக்குமாம்.//

  பதில் கிடைச்சா சரி வேற ஏதும் கிடைக்காம.

  வருககைக்கு நன்றி இளங்கன்

 14. நிலாமதி said...

  எனங்க இப்படி செய்துடீங்க. திங்கள் நூடில்ஸ் என்று ..... பசி சாப்பிடலாம் என நினைத்தால்.....? சும்மா தமாசு//

  இலங்கைக்கு வாரப்ப சொல்லுங்க நூடில்ஸ் என்ன அதுக்கு மேலேயே போட்டுருவோம் நிலாமதி அக்கா. வருகைக்கு நன்றி

 15. வால்பையன் said...

  தகவல் களஞ்சியம்!//

  இதுல ஏதோ உள் குத்து இருக்க மாதிரி இருக்கே வால்பையன் அவர்களே!

 16. பிரியமுடன்...வசந்த் said...

  //எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது//

  பொய்தானே யோகா//

  எப்படி உங்களுக்கு அந்த விஷயம் தெரியும் வசந்த். இன்றைக்கு உங்கள் பதிவு கலகலக்கல்

 17. சந்ரு said...

  இல்லை வசந்த் ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நடிக்கிறாராம் நம்ம யோகா//

  இப்படி பொது இடத்தில நீங்க உண்மைய சொல்லி என்ன போட்டு குடுக்க கூடாது சந்ரு. ஆமா இப்ப நீங்க பிரச்சினை எல்லாத்தையும் சரி பண்ணிட்டீங்களா?

 18. சப்ராஸ் அபூ பக்கர் said...

  உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....//

  வாரேன் சப்ராஸ் உங்கள் அன்புக்கு நன்றி

 19. கனககோபி said...

  //என்ன கனெக் ஷன் வாங்கி என்ன புண்ணியம் இப்ப தான் அரசாங்கத்தில ஆபாச இணைய தளங்களை எல்லாம் தடை செஞ்சிட்டாங்களே, ஆமா நீங்க எல்லாம் எப்படி பார்க்கிறீங்க என கேட்டார் //

  இவர் மட்டுமல்ல நிறையப் பேருக்கு இந்தக் கவலை தான்.

  //இன்டர்நெட் என்றால் இன்னும் இப்படி தான் என ரொம்ப பேர் எண்ணியிருக்காங்க. //

  எங்கள் வலைப்பதிவுகள் இன்னும் பொதுமக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றால் இப்படி ஒரு உலகம் இணையத்துள் இருக்கிறது என்று உணர மாட்டார்களா?
  ஏனென்றால் வலைத்தளங்கள் பக்கம் செல்லாத ஏராளமான இணையத்தள பாவனையாளர்கள் இருக்கிறார்களே...//

  உங்கள மாதிரி ஆட்கள் தான் அவங்கள இந்த பக்கம் வரவழைக்க வேண்டும். உங்கள் பழைய பதிவுகள் சில பார்த்தேன் கலக்கல் கனக கோபி

 20. வந்தியத்தேவன் said...

  யோ ஒரு சின்ன சந்தேகம் இப்போ ஆபாச இணையத்தளங்கள் இலங்கையில் பார்க்கமுடியாதா? நூடுல்ஸ் கலக்கல்.//

  ஆமாம் வந்தி இலங்கையிலிருந்து வந்த அனைத்து இணையங்களும் அரசு தடை பண்ணிட்டது.

 21. நச்சென பல விடயங்களை அதிக பில்டப் இல்லாமலே அழகாக சொன்னது அழகு.

  பலதரப்பட்ட விடயங்களில் உங்கள் உணர்வுகளின் பதிவுகள் சொன்ன பதில்கள் அற்புதம்.

  தொடர்ந்தும் கலக்குங்க.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 22. உதய தாரகை said...

  நச்சென பல விடயங்களை அதிக பில்டப் இல்லாமலே அழகாக சொன்னது அழகு.

  பலதரப்பட்ட விடயங்களில் உங்கள் உணர்வுகளின் பதிவுகள் சொன்ன பதில்கள் அற்புதம்.

  தொடர்ந்தும் கலக்குங்க.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை//

  நன்றி உதயதாரகை வருகைக்கும் கருத்துக்கும்