Show Hidden Files & Folders வேலை செய்யவில்லையா?

Show Hidden Files & Folders என்பதை தெரிவு செய்தும் Hide ஆன பைல்கள் தெரிய வில்லையா? அப்போ இதை படியுங்கள். இந்த பதிவில் பயன்பெற்றீர்கள் என்றால் ஒரு பின்னனூட்டத்தை போட்டுவிட்டு போங்கள். இல்லாவிடின் வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

எனது கணனியில் விண்மோஸ் எக்ஸ்பீ வைத்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு பைலை ஒளித்து வைக்க வேண்டி வந்தது. அந்த பைலை Hide பண்ணிவைத்து விட்டு, இன்று அதை மீண்டு்ம் பார்க்க போனால் "Show Hidden Files & Folders" என்கிற ஒப்சனை கிளிக் செய்தால் மீண்டும் மீண்டும் ”Do not Show Hidden Files & Folders" என்கிறதே வந்து ஒளித்து வைத்த பைலை காட்ட மாட்டேன்கிறது.

என்னடா செய்வதென்று யோசித்து கடைசியில் கூகுலாண்டவரிம் தேடி கண்டு பிடித்தேன். என் போன்று யாராவது கஷ்டப்படடிருந்தால் அவர்களுக்காக இந்த வழிமுறையை இங்கு தந்துள்ளேன்.



01. ஸ்டார்ட் மெனுவிலுள்ள ரன் கமாண்ட்டை கிளிக் பண்ணவும். அதில் "REGEDIT" என டைப் செய்து என்டர் பண்ணுங்கள்

02. HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL என்னும் கீயை தெரிவு செய்யவும். கீழே படம் தரப்பட்டுள்ளது. படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் பண்ணவும்.

03. CheckedValue என்னும் கீயை தெரிவு செய்து அதன் வலது பக்கத்திலுள்ள அதன் (hexadecimal) பெறுமதியை 1 என மாற்றவும். கீழே தரப்பட்ட படத்திலுள்ளதை போல். பின் ரெஜிஸ்டிரி எடிட்டரை மூடவும்


04. இனி வழமை போல் டூல்ஸ் போல்டர் ஒப்சன்ஸ் போய் ல் "Show Hidden Files & Folders" என்கிற ஒப்சனை கிளிக் செய்தால், Hide ஆன பைல்களை காணலாம்.

குறிப்பு . ரெஜிஸ்ரியை கையாள்வதில் அனுபவமற்றவர்ககள் சற்று கவனமாகவே அதை கையாளவும். பிழையாக பெறுமதியை மாற்றினால் சில வேளை சிஸ்டத்தை ஹேங்க் செய்துவிடும்.



0 Responses