லோஷனுடன் நயன்தாரா (பதிவர் சந்திப்பு)

எப்படியோ பதிவர் சந்திப்பு எழுதிய எல்லாரும் நம்ம நயன்தாரா அக்கா பத்தியும் எழுதிட்டாங்க. நான் அதுல கொஞ்சம் மேலே போய் படமும் போட்டுட்டேன். படம் பதிவின் கடைசியி்ல் இருக்கு. எல்லாரும் ஜுஸ், கலவை, பரோட்டா எல்லாம் எழுதுறாங்களே நானும் அது மாதிரி எழுத பார்த்த முயற்சி தான் இது.

---------------------------------------------------------------
---------------------------------------------------------------
முதலாம் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் மெக்கலம் துணை விக்கட் காப்பாளர் ஜெசி ரைடர் இருவரும் வயிற்று உபாதை வந்து, இருவருக்கும் விளையாட இயலாத நிலை வந்த போது, சங்கக்கார பெருந்தன்மையாக விளையாடும் பதினொருவர் அல்லாத மேலதிக வீரரை விக்கட் காக்காளராக விளையாட அனுமதித்தார், இதிலே விஷயம் என்ன வென்றால் இதே சங்கக்கார நியுசிலாந்தில் சதமடித்த போது வாழ்த்த சென்ற முரளியை ரன் அவுட் செய்தது இதே மக்கலம் தான்.
இப்ப போட்டி முடிந்து விட்டது, முரளியின் பந்து வீச்சில் சந்தேகம் அவரது ஒவ்வொரு பந்தையும் சோதிக்க புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவருமாறு முன்னாள் நியுசிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்க் ரிச்சர்ட்சன் கேட்டுள்ளார். மனுசன் பாவம்யா, எத்தன தடவைதான் சோதித்து பார்த்திட்டு இவரின் பந்து வீச்சில் எந்த குறையும் இல்லைனு சொல்லுவாங்க..
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
இலங்கை கல்வி முறையில் தெரிந்தோ தெரியாமலோ ஆண்டு 5 புலமைப்பரிசில் முக்கிய இடம் வகிக்கிறது. மாணவர்கள் அதுக்கு விழுந்து விழுந்து படிச்சிட்டு பரீட்சைக்கு போனா, அங்க வினாத்தாள் வரலையாம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்தாங்களாம். பாவம் அதுக்கு அப்புறம் அவங்க பரீட்சை எந்த மனநிலையோட எழுதினார்களோ? இலங்கை பரீட்சைகளில் இப்ப அடிக்கடி குளறுபடி நடக்குது. சம்பந்த பட்டவங்க கவனிச்சா நல்லது. மாணவர்களின் கல்வி ஆர்வத்தை இது குறைக்கலாம்.
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
ஆதவன் பாட்டு கேட்டேன். எல்லாமே வழமை போலவே இருந்தது.  வழமை போலவே சிறப்பான பாட்டை பாடினது கார்த்திக். வழமை போலவே எங்கேயோ கேட்டது போன்ற உணர்வு. அப்ப வழமை போலவே இந்த பாட்டுகளும் ஹரிஸுக்கு ஹிட் தான். 
---------------------------------------------------------------
---------------------------------------------------------------

பதிவர் சந்திப்பில் சினிமா பதிவுக்கு மட்டும் தான் அதிக ஒட்டுக்கள் விழும் என ஒரு கருத்து கூறப்பட்டது. அது உண்மைதான், எனக்கும் அப்படி நடந்துள்ளது. ஆனால் இங்கு நான் ஒரு விஷயத்ததை தெளிவு படுத்த வேண்டும். சிறப்பாக எழுதி இருக்கிறாங்க என நினைக்கிற பதிவுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அது போதும். நல்ல பதிவுகள் அதிகமாக எழுதப்படும். நான் நீரற்று போவதை பற்றி எழுதிய பதிவுக்கு வெறும் 3 வாக்கு கிடைத்தது, ஆனால் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய பதிவுக்கு 31 வாக்குகள் கிடைத்தது. தொடர்ந்து 3 நாள் தமிழிசில் அதிக வாக்குகள் கிடைத்த இடுகையாக முன்னணியில் இருந்தது.


---------------------------------------------------------------
---------------------------------------------------------------
லோஷனும் நயன்தாராவும் இருக்கும் படம் பார்த்த லோஷன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கலாம் என கூறினார். ரொம்பவே ஆணி புடுங்க இருப்பதால் அடுத்த பதிவிலே அந்த படத்தை இணைக்கிறேன்.

44 Responses
 1. LOSHAN Says:

  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெயர் வைப்பாங்களே.. உங்கள் பதிவுக்கு?

  நூடில்ஸ்? ;)


  ஆதவன் படப் பாடல்களில் மனோ,ஹரிணி,உன்னி கிருஷ்ணன் போன்ற மறக்கப்பட்ட பலருக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்..

  லோஷன் மச்சக்காரன் தான்.. இப்படி எரியப் போகிறார்கள் சிம்பு,விஷால்,பிரபு தேவா.. ஏன்யா?

  அப்பிடியே அசின், தமான்ன போன்றோரையும் சேர்த்து விடுங்களேன்.. ஒரு ஆசை தான்..


 2. //லோஷன் மச்சக்காரன் தான்.. இப்படி எரியப் போகிறார்கள் சிம்பு,விஷால்,பிரபு தேவா.. ஏன்யா?//

  அப்ப நாங்க.....அவங்கட லிஸ்ட்ல எங்களையும் சேர்க்கலாம் ஒரு பிரச்சனையும் வராது ...


 3. பதிவு நல்லா இருக்கு. ஆனா சின்ன சந்தேகம்...

  ஏன் நம்ம டயானா நயன்தாராவ அந்தப் பார்வை பார்கிறாங்க?....

  வாழ்த்துக்கள் யோ வாய்ஸ்.....


 4. நல்லா கிளப்புறிங்கய்யா பீதிய!


 5. //அப்பிடியே அசின், தமான்ன போன்றோரையும் சேர்த்து விடுங்களேன்.. ஒரு ஆசை தான்..//


  ஆஹா அண்ணா எங்க போனாலும் இளம் பெண்கள் உங்கள சுத்துது. அதுக்குள்ளே இந்த ஆசையோ. எங்களுக்கு தெரியாம இவங்களும் சுத்துறாங்களோ.


 6. நல்ல நூடுல்ஸ் அத்துடன் நயந்தராவும் கலக்க்கிறார். இந்தப் படத்தில் இருக்கும் டயனா என்னை நினைத்திருப்பார். ஏனென்றால் அவர் நயனையே லுக் விடுகிறார்.


 7. நயந்தாரா அங்க இருக்கும் போது எங்கேயோ பார்த்து பேசறாரே லோஷன்? :))))


 8. நயன்தாரா ஒரிஜினல் பேரும் டயானா! டயானான்னு பேர் வச்சாலே வில்லங்கம் வந்து சேருதே, நமக்கு என்ன வரப்போகுதோன்னு பயந்து பாக்குறாப்போலவே இல்ல..?


 9. Sutha Says:

  நயன்தாரா போர் அடிச்சுட்டுது. ...
  இனி ஸ்ரேயாவ போடுங்கப்பா
 10. உங்கட கிரஃபிக்ஸ் நல்லா இருக்குது ஆனால் இரண்டு இமேஜீக்குமிடையில லைட்டிங் மற்றும் கலர் வேறுபாடுகள் தெரிவதால் கிராஃபிக்ஸ் வேலைதான் எண்டு அப்பட்டமாகத் தெரியுது ஆக இமேஜை ஃப்ளட்டென் ப்ண்ணீட்டு கலரையும் ப்றைட்னஸ் கெண்ட்ராஸ் என்பவற்றையும் செட்செய்து இயற்கையானது போலாக்கலாம்.


 11. Ammu Madhu Says:

  யோ ..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

  அன்புடன்,
  அம்மு.


 12. LOSHAN said...

  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெயர் வைப்பாங்களே.. உங்கள் பதிவுக்கு?

  நூடில்ஸ்? ;)


  ஆதவன் படப் பாடல்களில் மனோ,ஹரிணி,உன்னி கிருஷ்ணன் போன்ற மறக்கப்பட்ட பலருக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்..

  லோஷன் மச்சக்காரன் தான்.. இப்படி எரியப் போகிறார்கள் சிம்பு,விஷால்,பிரபு தேவா.. ஏன்யா?

  அப்பிடியே அசின், தமான்ன போன்றோரையும் சேர்த்து விடுங்களேன்.. ஒரு ஆசை தான்..//

  நூடில்ஸ் நல்லா தான் இருக்கு. ஆகவே எல்லாருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால் இதற்கு நூடில்ஸ் என நாமகரணம் சூட்டியது. மதிப்பிற்குரிய லோஷன், ஆகவே ஏதும் திட்டனும்னா அவர திட்டிடுங்க


 13. அப்பிடியே அசின், தமான்ன போன்றோரையும் சேர்த்து விடுங்களேன்.. ஒரு ஆசை தான்..//

  இது போதுமா இல்ல இன்னும் இலியானா, அனுஷ்கா, ஸ்ரேயா அவங்க எல்லாம் எல்லாம் வேண்டாமா?. தொடர்ந்து இப்படி படம் போட முயற்சிக்கிறேன்.


 14. பிரபா said...

  //லோஷன் மச்சக்காரன் தான்.. இப்படி எரியப் போகிறார்கள் சிம்பு,விஷால்,பிரபு தேவா.. ஏன்யா?//

  அப்ப நாங்க.....அவங்கட லிஸ்ட்ல எங்களையும் சேர்க்கலாம் ஒரு பிரச்சனையும் வராது ...//

  அடுத்தவர் நீங்க தானா வாங்க உங்க ஆசையையும் தீர்த்திடுவோம்.


 15. சப்ராஸ் அபூ பக்கர் said...

  பதிவு நல்லா இருக்கு. ஆனா சின்ன சந்தேகம்...

  ஏன் நம்ம டயானா நயன்தாராவ அந்தப் பார்வை பார்கிறாங்க?....

  வாழ்த்துக்கள் யோ வாய்ஸ்.....//

  அடுத்த முறை டயானாவ காணுறப்ப கேட்டு சொல்லுறேன் சப்ராஸ், ஆமா கவிதைல கலக்கிறீங்க. வாழ்த்துக்கள்


 16. வால்பையன் said...

  நல்லா கிளப்புறிங்கய்யா பீதிய!//

  அட உண்மைய தானுங்க போட்டேன்


 17. சந்ரு said...

  //அப்பிடியே அசின், தமான்ன போன்றோரையும் சேர்த்து விடுங்களேன்.. ஒரு ஆசை தான்..//


  ஆஹா அண்ணா எங்க போனாலும் இளம் பெண்கள் உங்கள சுத்துது. அதுக்குள்ளே இந்த ஆசையோ. எங்களுக்கு தெரியாம இவங்களும் சுத்துறாங்களோ.//

  நீங்களுமா? சந்ரு சொல்லவேயில்ல


 18. வந்தியத்தேவன் said...

  நல்ல நூடுல்ஸ் அத்துடன் நயந்தராவும் கலக்க்கிறார். இந்தப் படத்தில் இருக்கும் டயனா என்னை நினைத்திருப்பார். ஏனென்றால் அவர் நயனையே லுக் விடுகிறார்.//


  உண்மையில் நான் டயானாவ எடுத்திட்டு அந்த இடத்தில தான் நயன போட இருந்தேன், என்ன தான் இருந்தாலும் டயனா எங்க ஊரு (நுவரெலியா) காரங்க அப்புறம் அது ஊருல பிரச்சினையாயிடுச்சினா? அது தான் அப்படியே விட்டுட்டேன் வந்தி


 19. கார்க்கி said...

  நயந்தாரா அங்க இருக்கும் போது எங்கேயோ பார்த்து பேசறாரே லோஷன்? :)))//


  எல்லாம் படம் எடுக்கிறாங்க என்ற பயம் தான், வீட்டுல அண்ணி கிட்ட தப்பிக்கனும் இல்லையா?


 20. கிருஷ்ணமூர்த்தி said...

  நயன்தாரா ஒரிஜினல் பேரும் டயானா! டயானான்னு பேர் வச்சாலே வில்லங்கம் வந்து சேருதே, நமக்கு என்ன வரப்போகுதோன்னு பயந்து பாக்குறாப்போலவே இல்ல..?

  நல்லா சொல்லுறீங்க கிருஷ்ணமூர்த்தி அண்ணே டீடெயிலு, இது எங்களுக்கு புது தகவல். நன்றிங்க


 21. Sutha said...

  நயன்தாரா போர் அடிச்சுட்டுது. ...
  இனி ஸ்ரேயாவ போடுங்கப்பா

  போட்டுட்டா போச்சு சுதா செஞ்சிடுவோம்.


 22. வழிப்போக்கன் said...

  very nice editing..
  :)))
  நன்றி வழிபோக்கரே.


 23. பிரியமுடன்...வசந்த் said...

  நல்லாருக்கு யோகா

  நன்றி தல.


 24. என்.கே.அஷோக்பரன் said...

  உங்கட கிரஃபிக்ஸ் நல்லா இருக்குது ஆனால் இரண்டு இமேஜீக்குமிடையில லைட்டிங் மற்றும் கலர் வேறுபாடுகள் தெரிவதால் கிராஃபிக்ஸ் வேலைதான் எண்டு அப்பட்டமாகத் தெரியுது ஆக இமேஜை ஃப்ளட்டென் ப்ண்ணீட்டு கலரையும் ப்றைட்னஸ் கெண்ட்ராஸ் என்பவற்றையும் செட்செய்து இயற்கையானது போலாக்கலாம்.

  நன்றிங்க, அப்படி செய்யலாம் தான், ஆனால் அது ரொம்ப சீரியஸா எழுதியிருந்தா ஓகே. இது சும்மா நம்ம லோஷன கலாய்க்க தானே, அதுதான் இப்படி அவசரமா செஞ்சேன் நண்பா.


 25. Ammu Madhu said...

  யோ ..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

  அன்புடன்,
  அம்மு.

  விருதுக்கு நன்றி அம்மு அவர்களே!. தொடர்ந்து எழுதுங்க..


 26. இங்கே வந்து பார்க்கவும்..
  http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html


 27. கீதா ஆச்சல் said...

  இங்கே வந்து பார்க்கவும்..
  http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html

  நன்றி. வருகிறேன்.


 28. R.V.Raj Says:

  நன்றாக இருக்குக்குது உங்க நூடில்ஸ் . இப்படியும் பண்ணலாமா? . நயந்தாராவையும் டயானாவையும் கொம்பையர் பனாதிங்கப்பா டயானா ரசிகர்களுக்கு குத்துதில்ல!


 29. ilangan Says:

  பாஸ் எனக்கு பக்கத்தில சிம்புவும் இருந்தார்.


 30. R.V.Raj said...

  நன்றாக இருக்குக்குது உங்க நூடில்ஸ் . இப்படியும் பண்ணலாமா? . நயந்தாராவையும் டயானாவையும் கொம்பையர் பனாதிங்கப்பா டயானா ரசிகர்களுக்கு குத்துதில்ல!//

  ஆமா நாங்க எங்கங்க கொம்பையர் பண்ணுனோம். நன்றி ராஜ் அடிக்கடி வந்து போங்க


 31. ilangan said...

  பாஸ் எனக்கு பக்கத்தில சிம்புவும் இருந்தார்.

  சொல்லவேயில்ல, ஆமா இலங்கன் லோஷன பார்த்து சிம்பு வயிறு எரிஞ்சாரா?


 32. ஆஹா.... இதை இப்பிடியும் வேற சொல்லலாமா??? என்று சிந்திக்க வைச்சிட்டீங்க...

  நன்றிகளும் வாழ்த்துக்களும்....


 33. //எல்லாரும் நம்ம நயன்தாரா அக்கா பத்தியும் எழுதிட்டாங்க//
  உங்கட profile இல உங்களுக்கு 29 வயசு எண்டு இருக்கு...???
  எப்பிடி அக்கா ஆவாங்க???
  ---
  வேண்டுமென்றே யோசிப்போர் சங்கம்.


 34. நயனுக்கு இப்போ டிமான்ட் இல்ல பாஸ்..ரொம்ப அடிவாங்கிட்டாங்க இப்ப இங்க பதிவுலையும் ..சரி விடுங்க பதிவு நல்லாருக்கு முக்கியமா டெம்ப்ளேட்..


 35. //லோஷனும் நயன்தாராவும் இருக்கும் படம் பார்த்த லோஷன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கலாம் என கூறினார்..

  முடியல...


 36. தலைவர் வீட்டில நொந்து நூடில்சாகி இருப்பார்..
  அருமையான எடிற்றிங்..


 37. மயில்வாகனம் செந்தூரன். said...

  ஆஹா.... இதை இப்பிடியும் வேற சொல்லலாமா??? என்று சிந்திக்க வைச்சிட்டீங்க...

  நன்றிகளும் வாழ்த்துக்களும்....//

  நன்றி செந்தூரன் வருகைக்கு


 38. கனககோபி said...

  //எல்லாரும் நம்ம நயன்தாரா அக்கா பத்தியும் எழுதிட்டாங்க//
  உங்கட profile இல உங்களுக்கு 29 வயசு எண்டு இருக்கு...???
  எப்பிடி அக்கா ஆவாங்க???
  ---
  வேண்டுமென்றே யோசிப்போர் சங்கம். //


  என் வயதை வெளியே கூறி என் இமேஜை குறைத்ததுக்காக உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப போறேன்.


 39. தேஜஸ்வினி said...

  நயனுக்கு இப்போ டிமான்ட் இல்ல பாஸ்..ரொம்ப அடிவாங்கிட்டாங்க இப்ப இங்க பதிவுலையும் ..சரி விடுங்க பதிவு நல்லாருக்கு முக்கியமா டெம்ப்ளேட்..

  இல்ல அது லோஷனுடைய விருப்பம் அதால தான் போட்டேன். இனி தமன்னா மாதிரி யாராவது போடுவோம்.


 40. சுபானு said...

  //லோஷனும் நயன்தாராவும் இருக்கும் படம் பார்த்த லோஷன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கலாம் என கூறினார்..

  முடியல...///

  பாவம் அவரு ஆசைய ஏன் கெடுக்கிறீங்க


 41. புல்லட் said...

  தலைவர் வீட்டில நொந்து நூடில்சாகி இருப்பார்..
  அருமையான எடிற்றிங்..//

  உங்களுக்கும் வந்திக்கும் ஒன்று செய்ய யோசித்திருக்கிறன். நேரம் இல்லை எதிர்காலத்தில் வரலாம்.


 42. LOSHAN Says:

  முதலில் யோ வுக்கு ஒரு கண்டனம்..

  நீண்ட காலமாகியும் இன்னமும் என்னை நயனுடனே இணைத்து கிசுகிசுக்க வழிவகுத்தமை என் போன்ற பிரபலத்துக்கு அவமானம்.. நான் என்ன சிம்புவா எப்போதும் ஒரே நடிகையுடன் கிசு கிசு வர..

  தமன்னா,அசின்,தீபிகா அப்பிடி போய்ட்டே இருக்கணும்.. ;)


  //தலைவர் வீட்டில நொந்து நூடில்சாகி இருப்பார்..
  அருமையான எடிற்றிங்//
  புல்லட் போன்றோர் என் மீது வைத்துள்ள அன்பு கண்டு வியந்தேன்..

  வீட்டு நிலைமை ரொம்பவே சுமுகம்..நானும் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் சுகமாய் இருக்கிறேன்.. :)


  //உங்களுக்கும் வந்திக்கும் ஒன்று செய்ய யோசித்திருக்கிறன்//
  எப்போது எப்போது எப்போது????

  என்னை வைத்து ஹிட் தேடியதனால் அந்த ஹிட்சில் பாதியை எனது ஏதாவது சொதப்பல் பதிவுக்கு அர்ப்பணிக்கவும்.. ;)