ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 விடயங்கள்

இதுவும் எனக்கு வந்த மின்மடல் தான், அதை தமிழ் படுத்த முயற்சிக்கிறேன்.

பொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு (பெண்கள் மட்டும் அப்படி செய்ய மாட்டாங்கன்னு சொல்லி கேக்க கூடாது, ஏனென்றால் எனக்கு இந்த மின் மடலை அனுப்பியவர் ஒரு பெண் தோழி). அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ் ( ஆண்கள் என்னோடு கோவிக்க கூடாது).01. காதலன் கடைசி நிமிடத்தில் இருவரும் போக இருந்த பயணத்தை அல்லது வெளியே செல்லுவதை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்.
காதலாகள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்

02. வெளியே செல்லும் போது சில இடங்களை வேண்டாம் என கூறுதல்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

03. அவரது சொந்தங்களுடன் பழகுவதை விரும்பாமல் இருத்தல்
அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றோரோடு நீஙகள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம். தனது மகன் அல்லது சகோதரன் ”வேறு பெண்ணை அல்லவா காதலிக்கிறான்” என உங்களிடம் சொல்லிவிட கூடிய அபாயம் இருக்கிறது. நண்பர்களிடம் ”மச்சான் நான் ரெண்டு பிகர லவ் பண்ணுறேன்” சொல்லும் நம்ம பிரதர்ஸ் தனது தாய், சகோதரிகளிடம் அப்படி சொல்ல மாட்டாங்க.

04. கண்கள் அலைபாய்தல்
உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.

05. அவரது தொலைபேசி, மடிக்கணனி, பர்ஸ் போன்றவற்றை உங்களிடமிருந்து மறைத்தல்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.

06. உங்களை செல்லப் பெயர் கொண்டு அழைத்தல்
அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.

07. அவள் எனது முன்னால் காதலி இப்போ நாங்க ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் என கூறல்

ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டோம் என கூறி அவரோடு தொடர்பில்லை சும்மா கதைப்போம் என கூறினாலும் கவனித்துக் கொள்ளவும்.

ஆண்கள் என்னோடு கோபித்துக் கொள்ள கூடாது உங்களுக்காக ஒரு நவீன பேஷன் உடையோடு ஒரு பெண்ணின் படம்


7 Responses
 1. என் பழைய டெம்ப்ளேட் இது..

  நல்லா தமிழாக்கம் பண்ணி இருக்கிங்க..


 2. யோ வாய்ஸ்..... போட்டுக் கொடுத்துட்டீங்களே!.... நான் follow பண்ணிய எல்லா வழிகளையும் சொல்லி ஒரு பதிவைப் போட்டுட்டீங்களே!....(அதுவும் தமிழாக்கம் superbbbb ) இனி எப்படி நான் கதையை மாத்துறது?. முடியலடா சாமியோ..... இப்போ அதற்க்கு மாற்று வழியா இன்னுமொரு நல்ல பதிவு போடுங்க சார்..... (லொள்......)


 3. நன்றி கார்க்கி பாவா. எனது பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க சிரமமபயிருக்கிறது.


 4. சப்ராஸ் அபூ பக்கர் said...

  யோ வாய்ஸ்..... போட்டுக் கொடுத்துட்டீங்களே!.... நான் follow பண்ணிய எல்லா வழிகளையும் சொல்லி ஒரு பதிவைப் போட்டுட்டீங்களே!....(அதுவும் தமிழாக்கம் superbbbb ) இனி எப்படி நான் கதையை மாத்துறது?. முடியலடா சாமியோ..... இப்போ அதற்க்கு மாற்று வழியா இன்னுமொரு நல்ல பதிவு போடுங்க சார்..... (லொள்...

  நன்றி சப்ராஸ் அந்த மாதிரி பதிவு ஒன்னு போட்டு பெண்களின் சாபத்தையும் வாங்கிக்கிறேன்.


 5. பெண்கள் ஏமாற்றும் விசயம் எப்போ வரும்?


 6. வால் நான் முதல்ல ஒரு ட்ரையல் போய் பார்த்திட்டு வந்திடுறேன், அப்புறம் எப்படி எல்லாம் ஏமாத்தினாங்கன்னு சொல்லி ஒரு பதிவு போடுறேன். அனுபவ கட்டுரை மாதிரி...


 7. Mani Says:

  எல்லா ஆண்களும் அப்படி இல்லை.என்னை போன்று உண்மையான ஆண்களும் இருக்கின்றணர்