கூகுல் நிறுவனத்துக்கு கேக் வெட்டிய இலங்கை தமிழ் பதிவர்கள்.

ப்ளாக்கர் தொடங்கி 10 வருஷம் ஆகியதுக்கு கூகுல் நிறுவனம் தான் உண்மையிலும் கேக் வெட்டி இருக்கணும் (2003 பெப்பரவரி மாதம் தான் கூகுல் ப்ளாக்கரை வாங்கியதால் அவங்க 10 வருட கொண்டாட்டத்தை 2013ல தான் செய்வாங்களோ?), ஆனால் அண்ணாமைலைக்கு பால் மாதிரி நம்ம இலங்கை பதிவர்கள் அவங்களுக்காக கேக் வெட்டி சந்திப்ப தொடங்கினப்பவே நெனச்சேன் ஏதும் வில்லங்கம் இருக்குமோன்னு நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை. வந்தியத்தேவன் அவர்கள் எல்லாரையும் இந்த சந்திப்பு பற்றி எழுத சொன்னார். நானும் அப்படி தான் எழுத யோசிச்சேன் அப்புறம் தான் தோணிச்சி எல்லாரும் மாதிரி எழுதினால் கந்தசாமி படம் பார்த்து விமர்சனம் பண்ணின மாதிரி (வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுகிழமை வரை பதிவுப்பக்கம் போக முடியல, கந்தசாமி படம் பற்றி தான் எல்லாரும் எழுதி இருக்காங்க)  ஆகியிருக்கும், ஆகவே அந்த சந்திப்ப வேறு விதமா எழுதிட்டேன்.

* இலங்கை ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலே ஞாயிற்றுக்கிழமை நாள் தொடங்கி (அதாங்க  00.00 மணிக்கு  தானே நாள் தொடங்கும்)  சில மணிகளே ஆகிய அதிகாலை 5 மணிக்கு எழும்பி (நல்ல வேளை என்னுடன் இருக்கும் நண்பர்கள் நோன்பு ஆரம்பிக்க அதிகாலை 4 மணிக்கு எழும்புவதால் என்னை எழுப்பி வி்டார்கள்.) 6 மணிக்கு கொழும்பு பஸ்ஸில் ஏறி கொழும்பு தமிழ்ச்சங்கத்துக்கு சரியாக 9 மணிக்கு (நம்ம டைம் விஷயத்தில எப்பவும் ஷார்ப்புன்னு காட்டதான்) போய் சேர்ந்து விட்டேன். எனககு அந்த இடம் புதிது என்பதால் முதல் நாளே வந்தி டிவிட்டரிலும் லோஷன் தொலைபேசியிலும் எப்படி வர வேண்டும் என கூறி இருந்ததால் நான் இடத்தை தேடி கஷ்ட படவில்லை.

* சதீஷின் இனிய அறிவிப்போடு தொடங்கியது இலங்கை பதிவர்களின் இனிய சந்திப்பு

* புல்லட் பதிவுல  மட்டும் தான்  டுமீல் சுடுவார்னு  பார்த்தால் மனுசன் அங்கயும்  பம்மலா கடிச்சிட்டாரு. சிரிச்சி சிரிச்சி மனுசன கலாய்ச்சிட்டாரு ஆனா பாவம் எல்லாத்துக்கும் சாப்பிட குடிக்க கொடுத்து கைப்புள்ள மாதிரி ஆகிட்டாரு.

 * பதிவர் அறிமுகத்தில் எழுத்துக்களாக தெரிந்த நண்பர்களின் முகமும் அறிய பெற்றோம். (நான் என்னைப் பற்றி கூறும்  போது "அவனா இது?"  என கொஞ்சப் பேர் சொன்னாங்க மாதிரி இருந்தது. அவங்கள நான் பின்னூட்டத்தில கவனிச்சிக்கறேன்.)

* ஆரம்பத்தில் வந்தி, லோஷன், ஆதிரை அங்கே இங்கே ஓடி ரொம்ப பிலியா இருந்தாங்க. ஏற்பாட்டு குழு சிங்கங்களாச்சே ஆகவே அவங்க பிஸியாத்தான் இருப்பாங்க.

* சேது ஐயா பேச தொடங்கிறப்ப அநியாயமா நேரத்த வீணடிக்கிறாரே என யோசிச்சேன், ஆனால் அப்புறம் அவர் பேச பேச அவரது தமிழ் புலமை கண்டு வியந்தேன் (நான் விளக்கு என்பதை வௌக்கு என கூறுவதை கண்டிருக்கிறேன். இது ஔகாரமாக எடுக்கப்பட கூடிய சாத்தியங்கள் இருப்பதை மிக அழகாக சுட்டிக்காட்டினார்.)

* எழில் வேந்தன் மற்றும் மேமன்கவி என்போரை நேரில் காண கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ந்தேன்.

* சுபானு பதிவுச்சட்டங்கள் பற்றி கூறினார்.

* யாழ் தேவி திரட்டி பற்றி ரொம்பவும் காரசாரமாக விவாதித்தார்கள், ஆனாலும் எல்லாரும் ஒன்று பட்ட ஒரு விடயம் நம்மவருக்காக ஒரு திரட்டி முக்கியம் என்பது, ஆகவே “யாழ்தேவி ” திரட்டிக்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாகவே நான் இதனை கருதுகிறேன்.  இதனை அவர்கள் விமர்சனமாகவே எடுத்துக் கொள்ளவார்கள் என நினைக்கிறேன், காய்ந்த மரமே கல்லடிபடும் என நமக்கு நன்றாக தெரியும்.

* தமிழ் விசைப்பலகை பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டன (எனக்கும் ஆங்கிலத்தில் AMMA என எழுதி தமிழில் அம்மா என மாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் காரணம் எனது தாய் மொழியை எழுத நான் வேறு மொழியை கடன் வாங்க கூடாது என்பதால்)

* அடைமொழி வைத்து எழுதுபவர்கள் பற்றி ரொம்ப விவாதிச்சாங்க, அவங்கள வந்தி கவனிச்சி கிட்டாரு.

* பெண்கள் யாருமே பேசவி்ல்லை, முதல் சந்திப்பு என்பது தான் காரணமாக இருக்குமோ? (நானும் தான் அமைதியாக இருந்தேன், அதை வந்தி கிண்டலுடன் கூறினார்)

* ஹிட்ஸ் கிடைக்க நயன்தாரவின் சிங்கம், நமீதா என கவர்ச்சியா தலைப்பு வைக்க சொல்லி சிங்கப்புர் போய் வந்த சிங்கம் லோஷன் சொன்னார்.

* நண்பர் கௌ போய் மது லைவ்ஸ் ரீம் மூலம் இதை நேரடியாக ஒளி மற்றும் ஒலி பரப்பினார்.

* ஊரோடி தளத்தை எழுதும் நண்பர் 10 புதிய பதிவர்களுக்கு தனது ஹொஸ்டிங்கில் இலவசமாக இடம் தருவதாக கூறினார்.

* சேரன் கிரிஸ் மிக அழகாக தொழில்நுட்பங்களை விளக்கினார்.

* வந்தியத்தேவனின் பின்னூட்டங்களின் பின்னூட்டத்தோடு சநதிப்பு இனிதாகவே நிறைவுபெற்றது (வில்லங்கமா எதுவுமே நடக்க வில்லை).

* மொக்கை என்ற பதத்தைவிட நம்ம நாட்டு வசனமான பம்மல் என்னும் வசனம் பாவிக்கலாமே என பலர் கூறினார்கள், அதுவும் சரிதான்


நிகழ்வின் பின்னெ எனக்கு தோன்றிய சில விடயங்கள் தப்பாக இருக்கலாம் அப்படி தப்பு என நினைத்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்


* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம, ஏனென்றால் வடக்கிலிருந்த ஒருவரைம் தெற்கிலிருந்த ஒருவரையும் மலையகத்திலிருந்து ஒருவரையும் ஏன் இணையம் மூலம் பல நாடுகளிலுள்ளவர்களையும் இணைத்தது எம் தமிழ் மொழி தான் என்பது என் கருத்து. 


* கையெழுத்து மறைந்து இனி தமிழ் மெல்லச் சாகும் என எல்லாரும் நினைத்திருந்த நேரத்தில் பதிவுலகம் மொழியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு பாடசாலை விட்டு பதிவுலகம் பக்கம் வரும் வரை தமிழை எழுதும் வாய்ப்பு அமையவில்லை, அந்த வகையில் இந்த பதிவுலகம் எம்மொழியை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. மொழிக்கான ஊடகம் மாறும் அதாவது ஏட்டுசுவடியிலிருந்து காகிதத்துககு வந்தது இன்று இணையத்தில் கோலோசசுகிறது.

ரொம்ப எழுதிட்டேனா? அப்படி என்றால் மன்னித்து விடுங்கள்

வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே23 Responses
 1. வணக்கம்,

  இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு என ஒருங்கிணைத்த ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்காதது ஒரு குறையே!

  //* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம்//
  இது ஆரம்பம் தானே, அடுத்த சந்திப்பில் தவறில்லாமல் நடத்துவார்கள் என நம்புவோம்.


 2. அப்ப இனி மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, ஆய்வுரை, அந்த உரை, இந்த உரை என்று கொண்டு வந்து இறுதியில் தேசிய கீதத்துடன் விழாவைச் சிறப்பாக முடிக்கலாம் என்று சொல்லுறியளோ???


 3. என்னுடைய வலைப்பதிவில் புகைப்படங்கள் போட்டிருக்கிறேன்.. பாருங்கள்...
  தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதில் தவறில்லை. ஆனால் நடந்தது இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்புத் தானே? தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு இல்லையே?


 4. //என்.கே.அஷோக்பரன் said...
  அப்ப இனி மங்கல விளக்கேற்றல், //
  தோழா... நிறைய நாட்களாக ஒரு சந்தேகம்... மங்கள விளக்கேற்றல் தானே சரியானது? மங்கலம் என்பது சத்தம் சார்ந்தவைகளுக்கு என்று எங்கோ படித்த ஞாபகம். விளங்கப்படுத்த முடியுமா?


 5. ஈழவன் said...

  வணக்கம்,

  இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு என ஒருங்கிணைத்த ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்காதது ஒரு குறையே!

  //* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம்//
  இது ஆரம்பம் தானே, அடுத்த சந்திப்பில் தவறில்லாமல் நடத்துவார்கள் என நம்புவோம்.

  இதை நான் குறையாக கூறவில்லை, எனது சொந்தக் கருத்து இதை ஏற்பாட்டுக்குழுவின் பிழை என கைகாட்ட விரும்பவில்லை. அவர்கள் ஏராளமாக கஷ்டப்பட்டு இந்த சந்திப்பை செய்துள்ளார்கள். சந்திப்பு சிறப்பாக அமைந்தது, அடுத்த முறை இவ்வாறு நடைபெறாமல் இருக்க முயற்சிப்போம், ஏனெனில் அவர்கள் கூறியபடி இதில் 4 மட்டுமல்ல ஏற்பாடு செய்தது. ஆகவே குறை ஏற்பட்டிருந்தால் அது சகலரது குறையே ஆகும். தனிப்பட்ட யாரையும் காரணம் காட்ட இயலாது.


 6. என்.கே.அஷோக்பரன் said...

  அப்ப இனி மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, ஆய்வுரை, அந்த உரை, இந்த உரை என்று கொண்டு வந்து இறுதியில் தேசிய கீதத்துடன் விழாவைச் சிறப்பாக முடிக்கலாம் என்று சொல்லுறியளோ??

  அவை தேவை என்றால் செய்யலாம் நண்பரே தப்பில்லை. நான் கூறிய விடயம் எனது கருத்தை நீங்களும் உங்களது கருத்தை நானும் பரிமாற காரணம் எமது தமிழ் மொழி இதற்கு நன்றி கூறி இருக்கலாமே என்றுதான். இது கட்டாயமல்ல, எனது கருத்து அவ்வளவு தான்.


 7. கனககோபி said...

  என்னுடைய வலைப்பதிவில் புகைப்படங்கள் போட்டிருக்கிறேன்.. பாருங்கள்...
  தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதில் தவறில்லை. ஆனால் நடந்தது இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்புத் தானே? தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு இல்லையே?

  நன்றி நண்பரே ஆமாம் நீங்கள் கூறுவதும் சரிதான்


 8. முதல் சந்திப்பே அசத்தல் இனி என்ன சாதிப்போம் பதிவுலகில்.


 9. சந்ரு said...

  முதல் சந்திப்பே அசத்தல் இனி என்ன சாதிப்போம் பதிவுலகில்.


  நன்றி சந்ரு வருகைக்கு, சாதிப்போம் தோழா


 10. // மறுமொழி @கனககோபி

  இந்தப் பிரச்சினை பொதுவாகத் தமிழர்களிடம் இருக்கிறது. மங்களம் என்றால் முடிவு என்று பொருள்படும் அதனால் தான் சுப மங்களம் என்று நிகழ்ச்சிகள் முடிவின் போது சொல்லுவார்கள். மங்கலம் என்றால் தூய்மையான, புனிதமான என்ற அடிப்படையில் பொருள் தரும்.


 11. உங்கள் பதிவையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்கும் போது அருமையான ஒன்று கூடலாகத் தெரிகிறது. 'பம்பல்' க்கு மேலாக நிறைய விடயங்களை அறியத் தந்ததாகவும் உணர முடிந்தது.
  கலந்து கொள்ள முடியாத கவலை வாட்டகிறது.


 12. ஒவ்வொருவருடைய பதிவுகளும் வெற்றி கரமான சந்திப்பைத் தான் உறுதி செய்கிறது. இது ஆரம்பம் தானே. நிச்சயம் தொடரும் வருடங்கள் வெற்றி கரமாய் அமையும்.

  பதிவு இட்டமைக்கு நன்றி யோ.....


 13. என்.கே.அஷோக்பரன் said...

  // மறுமொழி @கனககோபி

  இந்தப் பிரச்சினை பொதுவாகத் தமிழர்களிடம் இருக்கிறது. மங்களம் என்றால் முடிவு என்று பொருள்படும் அதனால் தான் சுப மங்களம் என்று நிகழ்ச்சிகள் முடிவின் போது சொல்லுவார்கள். மங்கலம் என்றால் தூய்மையான, புனிதமான என்ற அடிப்படையில் பொருள் தரும்

  நன்றி நண்பரே கருத்துக்கு. உங்கள் தளத்துக்கு சென்று வந்தேன் பல பயனுள்ள பதிவுகள் இட்டுருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்


 14. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  உங்கள் பதிவையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்கும் போது அருமையான ஒன்று கூடலாகத் தெரிகிறது. 'பம்பல்' க்கு மேலாக நிறைய விடயங்களை அறியத் தந்ததாகவும் உணர முடிந்தது.
  கலந்து கொள்ள முடியாத கவலை வாட்டகிறது.

  கவலைப்பட வேண்டாம், அடுத்த முறை சந்திப்போம். எங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட “இருக்கிறோம்” சஞ்சிகையில் உங்களது அருமையான பதிவு ஒன்று கட்டுரையாக வந்துள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே!


 15. சப்ராஸ் அபூ பக்கர் said...

  ஒவ்வொருவருடைய பதிவுகளும் வெற்றி கரமான சந்திப்பைத் தான் உறுதி செய்கிறது. இது ஆரம்பம் தானே. நிச்சயம் தொடரும் வருடங்கள் வெற்றி கரமாய் அமையும்.

  பதிவு இட்டமைக்கு நன்றி யோ.....

  நன்றி சப்ராஸ் உங்களது உள்ளம் எங்களோடு சந்திப்பில் இருந்தது எனக்கு தெரியும்


 16. “இருக்கிறோம்” சஞ்சிகையில் எனது பதிவு வந்த தகவலுக்கு நன்றி. முன்பு சில அதில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். மீண்டும் எழுதும்படி கேட்டிருக்கிறார்கள். எழுத முடிவு செய்துள்ளேன்.


 17. SShathiesh Says:

  நன்றாக இருந்தது. தமிழ்த்தாய் வால்த்த்டுப்பற்றி நீங்கள் கூறி இருப்பது உங்கள் தமிழ் உணர்வை காட்டுகின்றது. வாழ்த்துக்கள் நன்றிகள்.


 18. LOSHAN Says:

  நல சுருக்கமான பதிவு..

  இந்தக் கூட்டம் வழமியான கூட்டம் போல சம்பிரதாயங்கள் அடிப்படையில் நடைபெர்க்கூடாதென்று தான் மாலை, குத்து விளக்கு, தமிழ் வாழ்த்து, தேவாரம்,பிரார்த்தனை என்பவற்றையெல்லாம் தவிர்த்தோம்..


 19. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  “இருக்கிறோம்” சஞ்சிகையில் எனது பதிவு வந்த தகவலுக்கு நன்றி. முன்பு சில அதில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். மீண்டும் எழுதும்படி கேட்டிருக்கிறார்கள். எழுத முடிவு செய்துள்ளேன்.

  தொடர்ந்த எழுதுங்கள் வாசிக்கின்றோம்.


 20. SShathiesh said...

  நன்றாக இருந்தது. தமிழ்த்தாய் வால்த்த்டுப்பற்றி நீங்கள் கூறி இருப்பது உங்கள் தமிழ் உணர்வை காட்டுகின்றது. வாழ்த்துக்கள் நன்றிகள்.

  வருகைக்கு நன்றி சசதீஷ்


 21. LOSHAN said...

  நல சுருக்கமான பதிவு..

  இந்தக் கூட்டம் வழமியான கூட்டம் போல சம்பிரதாயங்கள் அடிப்படையில் நடைபெர்க்கூடாதென்று தான் மாலை, குத்து விளக்கு, தமிழ் வாழ்த்து, தேவாரம்,பிரார்த்தனை என்பவற்றையெல்லாம் தவிர்த்தோம்..

  நானும் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன் லோஷன்


 22. யோ அடுத்த முறை நீங்கள் தான் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடுகிறீர்கள்.
  லோஷன் சொன்ன பதில் தான் என் பதிலும் குத்துவிளக்கு பற்றியெல்லாம் நாங்கள் கதைத்தோம் சில நடைமுறைப் பிரச்சனைகளால் அவற்றைத் தவிர்த்து முற்றுமுழுதான புதியவகை கலாச்சாரத்தை ஆரம்பித்தோம்.


 23. வந்தியத்தேவன் said...

  யோ அடுத்த முறை நீங்கள் தான் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடுகிறீர்கள்.
  லோஷன் சொன்ன பதில் தான் என் பதிலும் குத்துவிளக்கு பற்றியெல்லாம் நாங்கள் கதைத்தோம் சில நடைமுறைப் பிரச்சனைகளால் அவற்றைத் தவிர்த்து முற்றுமுழுதான புதியவகை கலாச்சாரத்தை ஆரம்பித்தோம்.//

  ஆஹா ஐடியா சொன்னால் என்னையே அதுக்குள்ள தள்ள பார்க்கிறீங்க. எனக்கு எழுத தெரிந்த அளவுக்கு கதைக்க, பாட தெரியாது. நான் தமிழ்தாய் வாழ்த்து பாட நீங்க எல்லாரும் இடத்தை விட்டு ஓட இதெல்லாம் தேவையா வந்தி?