நூடுல்ஸ் (28-10-2009)

சென்ற முறை பதிவர் சந்திப்புக்கு பின்னர் எல்லாரிடமும் அதிகரித்த பதிவுகளின் எண்ணிக்கை இப்போ மீண்டும் குறைந்து விட்டன. திங்கட்கிழமை சந்திப்புக்கு பின்னர் மீண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணலாம்.
=============================================================
இலங்கை கிரிக்கட் அணியின் இந்திய சுற்றுலாவிற்கான அணிவிபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. சென்ற வாரம் உள்ளுர் போட்டியில் சதமடித்து தனது கழகத்துக்கு வெற்றி பெற்று தந்த மஹ்ருப்க்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடதக்கது. சனத் ஜயசூரிய இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிடின் அணியில் அவரது இடம் பறிபோக வாய்ப்புள்ளது. எப்போதும் இந்தியாவோடு சிறப்பாக விளையாடும் சனத் இம்முறையும் சாதிப்பார் என எண்ணலாம்.


அடுத்த முக்கிய மாற்றம் ஒரு நாள் அணிக்குள் மீண்டும் தில்ஹார பெர்ணான்டோ வந்துள்ளது. எனினும் சங்கக்கார இவரை டெஸ்ட் அணிக்குள் சேர்க்க முயற்சித்து பயனளிக்கவில்லையாம். ஒரு முறை சர்வதேச ஒலிபரப்பாளர் போட்டியொன்றில் இவரை உலகத்தில் மிக சிறந்த “ஸ்லோ போல்” வீசும் வேகப்பந்துவீச்சாளர் என கூறியதும் எனது பக்கத்திலிருந்த நண்பன் ஏன் உலகத்திலே மிக சிறந்த நோபோல் வீச்சாளரும் இவரே என கூறியது நினைவுக்கு வருகிறது. இம்முறையாவது மனுஷன் நோபோல் போடாமல் பந்து வீசுவாரா என பார்ப்போம் ?


எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது ரொம்ப குறைவு. அப்போதெல்லாம் வாரத்திற்கு 3,4 நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகும். அப்படி காட்டப்படும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடகி ராணி ஜோசப்பின் பாடல்கள் பார்க்க நேரிடும். அவர் பாடுவதை பார்த்து பார்த்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.  காலப்போக்கில் அவரது பாடல்களை பார்ப்பது குறைந்து போனது. சென்றவாரம் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கவலையடைந்தேன். எங்களை இசையால் மகிழ்வித்த அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


=============================================================


சென்ற வாரம் ஆதவன் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். சூர்யாவிடம் வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் குருவியில் விஜய் பறப்பதை விமர்சித்த அளவுக்கு சூர்யா பறப்பதை யாரும் விமர்சிக்கவில்லை. காரணம் என்ன வென்று தெரியவில்லை


=============================================================


சக பதிவர் டாக்டர் ஜீவராஜின் அவர்களின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2009) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.  எமது பதிவர்கள் சார்பில் ஜீவராஜ், அருணா தம்பதிகளின் திருமணத்திற்கு எமது முற்கூட்டிய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். 


=============================================================


இன்று வெற்றியின் விடியலில் லோஷன் கூறிய கவிதையொன்று கேட்டு சிரித்தேன்.   விடியல் கேட்காதவர்களுக்கு கவிதை இதோ..


நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
 உன் தங்கையை பார்த்தேன்
"அடடா வடை போச்சே"


=============================================================
டிஸ்கி - ஆதவன் படம் பார்ப்பதை விட அயன் படத்தை மீண்டும் பார்க்கலாம்





சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன் விற்பனைகூடமொன்றிற்கு விஜயம் செய்த வினக்சின் தந்தை லினஸ் கட்டை விரலை காமித்து என்ன சொல்ல வருகிறார்?



24 Responses
  1. நல்லாயிருக்கு யோ. ராணிஜோசப் அவர்களின் மரணம் நிறைய கவலையை தந்தது. உங்களைப் போலத்தான் நானும் அவரது பாடல்களை அதிகம் ரசித்திருக்கிறேன்.

    லோஷனின் கவிதை சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    டாக்டருக்கு இனிய திருமண வாழ்த்துகள்.


  2. நூடுல்ஸ் நல்லாயிருக்கு.

    உதிரி ஓட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் டில்காராவை ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கின்றார்கள்?

    ஜீவராஜ் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

    விண்டோஸ் 7 இன்னும் முயற்சி செய்துப்பார்க்கவில்லை.


  3. //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    அருமையான கவிதை!


  4. நூடுல்ஸ் நல்லாயிருக்கு....
    கவிதை பிரமாதம்...:)


  5. Subankan Says:

    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    கம்பஸ்சின் புண்ணியத்தில்
    விடியலுக்கு வழியில்லை
    "அடடா வடை போச்சே"

    நூடுல்ஸ் கலக்கல்ஸ்


  6. ////நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"///

    Adada......


  7. //வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை.//

    வாரணம் ஆயிரம் முக்கால்வாசி பார்க்கலாம், அயன் முதல் பாதி வரைக்கும் பார்க்கலாம், ஆதவன் முழுபடமும் பார்க்க முடியாது, நல்ல முன்னேற்றம்


  8. சூர்யா படம்னு நினைச்சு போன ஆதவன் படு மோசமாக தான் இருக்கும், ரவிக்குமார் படம் என்று நினைத்து போனால் படம்
    சுமாராக இருக்கும்.....
    >>>>>>>>>>>>>>>>


  9. //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    உடன் பிறப்பு லோஷன் வாழ்க...


  10. Admin Says:

    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//


    கவிதை அருமை. மொத்தத்தில் நூடுல்ஸ் அருமை.


  11. Unknown Says:

    கவிதை அருமை.

    எனக்கு உண்மையில் டில்காரவை பிடிக்கும்.
    விரல்களுக்கிடையில் பந்தை வைத்து வீசும் மெதுவான பந்து துடுப்பாட் வீரர்களை ஏமாற்றவது வழக்கம்.
    அவரது பிரச்சினை என்னவென்றால் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் 2 அசத்தல் பந்துதுகள் வீசுவார், 2 பரவாயில்லையான பந்துகள் வீசுவார், 2 சொதப்பல் பந்துகள் வீசுவார்.
    போதுமானளவு தொடர்ச்சி இல்லை. (inconsistent)
    மகேல ஜெயவர்த்தன ஒருமுறை 'டில்கார பெர்னானர்டோ அதிகமாக முயற்சிக்கிறார். அதனால் தான் இப்படி என்றார். (He is trying too many)'

    பதிவர் சந்திப்பின் பின்னர் அதிகரிக்கும் என்ற நம்பலாம்... ;)


  12. Nimalesh Says:

    sanath counting his day's in international cricket


  13. ///////இறக்குவானை நிர்ஷன் said...
    நல்லாயிருக்கு யோ. ராணிஜோசப் அவர்களின் மரணம் நிறைய கவலையை தந்தது. உங்களைப் போலத்தான் நானும் அவரது பாடல்களை அதிகம் ரசித்திருக்கிறேன்.

    லோஷனின் கவிதை சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    டாக்டருக்கு இனிய திருமண வாழ்த்துகள்//////

    வருகைக்கு நன்றி நிர்ஷன்


  14. //////வந்தியத்தேவன் said...
    நூடுல்ஸ் நல்லாயிருக்கு.

    உதிரி ஓட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் டில்காராவை ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கின்றார்கள்?

    ஜீவராஜ் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

    விண்டோஸ் 7 இன்னும் முயற்சி செய்துப்பார்க்கவில்லை//////

    முயற்சி செய்து பாருங்கள் விண்டோஸ் 7 நன்றாக இருக்கிறதாம் எனது நண்பன் சொன்னான்


  15. //////வால்பையன் said...
    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    அருமையான கவிதை//////

    சேம் பிளட் வால்


  16. //////வேந்தன் said...
    நூடுல்ஸ் நல்லாயிருக்கு....
    கவிதை பிரமாதம்...:)//////

    நன்றி வேந்தன் கவிதை லோஷன் கூறியது


  17. ////// Subankan said...
    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    கம்பஸ்சின் புண்ணியத்தில்
    விடியலுக்கு வழியில்லை
    "அடடா வடை போச்சே"

    நூடுல்ஸ் கலக்கல்ஸ்//////

    வடை போச்சா சுபாங்கன்...


  18. ////// மருதமூரான். said...
    ////நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"///

    Adada......//////

    நன்றி மருதமூரான்


  19. //////சங்கர் said...
    //வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை.//

    வாரணம் ஆயிரம் முக்கால்வாசி பார்க்கலாம், அயன் முதல் பாதி வரைக்கும் பார்க்கலாம், ஆதவன் முழுபடமும் பார்க்க முடியாது, நல்ல முன்னேற்றம்//////

    எனது கருத்தும் அதே சங்கர்


  20. //////ஜெட்லி said...
    சூர்யா படம்னு நினைச்சு போன ஆதவன் படு மோசமாக தான் இருக்கும், ரவிக்குமார் படம் என்று நினைத்து போனால் படம்
    சுமாராக இருக்கும்.....
    >>>>>>>>>>>>>>>>//////

    நான் சூர்யா படமென்றுதான் பார்க்க போனேன் தல


  21. //////பிரியமுடன்...வசந்த் said...
    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//

    உடன் பிறப்பு லோஷன் வாழ்க...//////

    வாழ்க வாழ்க லோஷன் வாழ்க


  22. //////சந்ரு said...
    //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
    உன் தங்கையை பார்த்தேன்
    "அடடா வடை போச்சே"//


    கவிதை அருமை. மொத்தத்தில் நூடுல்ஸ் அருமை//////

    நன்றி சந்ரு


  23. ////// கனககோபி said...
    கவிதை அருமை.

    எனக்கு உண்மையில் டில்காரவை பிடிக்கும்.
    விரல்களுக்கிடையில் பந்தை வைத்து வீசும் மெதுவான பந்து துடுப்பாட் வீரர்களை ஏமாற்றவது வழக்கம்.
    அவரது பிரச்சினை என்னவென்றால் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் 2 அசத்தல் பந்துதுகள் வீசுவார், 2 பரவாயில்லையான பந்துகள் வீசுவார், 2 சொதப்பல் பந்துகள் வீசுவார்.
    போதுமானளவு தொடர்ச்சி இல்லை. (inconsistent)
    மகேல ஜெயவர்த்தன ஒருமுறை 'டில்கார பெர்னானர்டோ அதிகமாக முயற்சிக்கிறார். அதனால் தான் இப்படி என்றார். (He is trying too many)'

    பதிவர் சந்திப்பின் பின்னர் அதிகரிக்கும் என்ற நம்பலாம்... ;)//////

    எனக்கும் ஒரு காலத்தில் பிடித்தமான பந்துவீச்சாளராகதான் இருந்தார். இப்போ இல்லை. காரணம் அவர் சொதப்பிய முக்கியமான போட்டிகள் ஏராளம்


  24. //////Nimalesh said...
    sanath counting his day's in international cricket//////

    yea it's true, but I hope he'll shine in india