”அன்புள்ள்ள ........................ ” கடிதங்கள்

”அன்புள்ள அம்மா....”, ”அன்புள்ள அப்பா.....”, ”அன்பின் காதலிககு....” என எழுதப்ப(ட்ட)டும் கடிதங்கள் இப்போது எங்கே போய்விட்டன? கடிதம் எழுதும் கலையை நாம் இழந்து விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலையே! இன்று வியாபார ரீதியாக மட்டுமே கடிதம் எழுதப்படுகிறது. மற்றபடி கடிதங்கள் ரொம்ப குறைவு.

நானெல்லாம் சிறிய வயதில் எனது அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி எழுதி பழகியவன். அந்த நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. எனது பாடசாலை காலத்தில் 3 மாதத்திற்கு பிறகு வரும் ஒரு மாத கால விடுமுறையில்தான் வீட்டுக்கு சென்று பெற்றோரோடு இருக்கலாம். மற்றைய காலங்களில் தாத்தா வீட்டில் இருந்தபடி பாடசாலை செல்லும் வாழ்க்கைதான். அந்த காலத்தில் எனது அம்மா அப்பாவோடு நான் தொடர்பு கொண்டது கடிதங்களில்தான். அவற்றில் மறக்க முடியாத ஒரு விடயம் நான் எழுதும் கடிதங்களில் உள்ள எழுத்துப்பிழைகளை எனது தந்தை சிகப்பு பேனையால் திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி வைப்பார். எனது எழுத்து பிழைகளை நான் குறைத்து கொள்ள இதுவும் ஒரு காரணம். அந்த கடிதங்கள் தாங்கி வந்தது வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல. பாசம், கண்டிப்பு போன்றவற்றையும்தான்...

மேலும் வகுப்பில் பல மாணவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதி கொடுத்துள்ளேன். பள்ளி நண்பர்களுக்கு வரும் காதல் கடிதங்களில் மேலே ஏதாவது ஒரு காதல் பாடல் இடம் பெற்றிருக்கும் நாங்களும் அதே போல் எதிர்பாடல் ஒன்று எழுத வேண்டும். இதற்காக பாட்டு புத்தகங்கள் எல்லாம் வாங்கி பாடல் தேடுவோம். இன்றைய மாணவர்களிடம் இந்த மாதிரி கடிதக் காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று கடிதங்கள் அழிந்து போனதற்கு தொலைபேசி பேச்சுக்கள், குறுஞ் செய்திகள், மின்னஞ்சல்கள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் அவை எதுவுமே கடிதம் கொண்டு வந்த உணர்ச்சியை கொண்டு வருமென்று நான் நினைக்கவில்லை. தபால்காரனிடம் கடிதத்தை எதிர் பார்த்து காத்திருப்பது இனிமையான அவஸ்த்தை. அவை வைரமுத்து “காதலித்து பார்” கவிதையில் ”தபால்காரன் தெய்வமாவான்” இன்னொரு கவிதையில் ”காதலர்கள் இல்லா விட்டால் தபால் இலாகா நஷ்டபட்டுவிடும்” எனவும் கூறியிருப்பார், ஆனால் இது இந்த காலத்திற்கு பொருந்தாது. பிரசித்தி பெற்றவர்களது கடிதங்கள் ஏலத்தில் விடப்பட்டதை பார்த்து சின்ன வயதில் ”ஏன் இதை எல்லாம் ஏலம் விடுகிறார்கள்” என யோசித்திருக்கிறேன். ஆனால் இன்று யோசிக்கும் போது கடிதங்கள் எவ்வளவு உணர்வு மயமானவை என தோன்றுகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு தகவல் பரிமாற்றம் உடனுக்குடன் கிடைக்க போகிறது. இதனால் இவர்கள் இழக்க போகும் முக்கிய விடயங்களில் ஒன்று இந்த உணர்வுகளை காட்டும் கடிதப் போக்குவரத்து. எவ்வளவுதான் தொலைபேசியில் நேரில் கதைத்தாலும் எழுதுவதில் காட்டும் உணர்வுகளை எழுத்தில் காட்ட இயலாதென்பதே என் நிலைப்பாடு.

இனியாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதம் எழுதுவோம். அதன் உணர்வுகளை பாதுகாப்போம்.


20 Responses
  1. கடிதம் முக்வரி மாறிவந்துவிட்டது. உலகிலையே கடிதம் எழுதும் தகுதி ஒருத்தருக்குத் தான் உண்டு புரியுதா?


  2. நானும் கடிதம் பற்றிய சில விடயங்களை மீட்டுப்பார்த்துக்கொண்டேன்.

    கடிதத்தில் நாம் கையாளும் சில நடைமுறைகளையும் தொனிகளையும் நேரில் சொல்லிவிடமுடியாது.


  3. நல்ல விஷயம். சிறுவயதில் அப்பாவுக்கு கடிதம் எழுதிய ஞாபகங்கள் நிறைய உண்டு.ஒவ்வொரு கடிதத்திலும் எழுதும் விஷயம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு. "இவ்விடம் வெயில் உவ்விடம் மழையா வெயிலா ?" அம்மா சொல்ல சொல்ல எழுதிய வரிகள். மனப் பாடமாகிப் போன அந்த நாட்கள் .


  4. கடிதங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் வரை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வந்து செல்லுகின்ற சந்தோசங்களையும், துக்கங்களையும், கோபங்களையும், தாபங்களையும் வெளிப்படுத்தியவை. ஆனால், தற்கால மின்மடல்களும், அலைபேசி உரையாடல்களிலும் அந்த ஈர்ப்பும், அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. நல்ல பதிவு, ஆனால், கடிதங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது இயலாத காரியமே.


  5. என்ன நேத்து பொக்கிஷம்
    படம் பார்த்தியா??


  6. Subankan Says:

    பாடசாலையில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமே பெரும்பாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள் சிறுவயதில் அம்மா எழுதிய கடிதங்களுக்குப் பின்னால் என்னையும் ஏதாவது எழுதச் சொல்வார். அவ்வளவே. இனிவருவேர்க்கு அந்த அனுபவமும் கிடைக்காது.


  7. மறந்து விட முடியாத ஒரு பதிவு .மடல் வரைதல். அது ஒரு கலை . அழகு உணர்வுடன் வார்த்தைகளை கோர்த்து உணர்வுகளை கொட்டி எழுதும் ஒரு ஊற்று தான் மடல் வரைதல். மறக்க பட கூடாத ஒரு பதிவு. நினைக்க வைத்தமைக்கு நன்றிகள்


  8. Jackiesekar Says:

    உண்மைதான் இப்போதும் நான் என் அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் பத்திரமாய்...


  9. ஹேமா Says:

    யோகா,நான் இங்கு வந்த காலத்தில் தொலபேசிக் கண்டணம் உயர்வு அதனால் கட்டுக் கட்டாய் கடிதங்கள்தான்.நானும் பழைய கடிதங்களைப் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிறேன்.இப்போது எடுத்துப் பார்த்தாலும் மறக்காத பழைய கதைகள் சொல்கின்றன.


  10. உள்ளத்தை உருக்கிவிடது


  11. // வந்தியத்தேவன் said...
    கடிதம் முக்வரி மாறிவந்துவிட்டது. உலகிலையே கடிதம் எழுதும் தகுதி ஒருத்தருக்குத் தான் உண்டு புரியுதா?//

    உங்களது நுண்ணரசியல் புரிகிறது வந்தியரே..


  12. //இறக்குவானை நிர்ஷன் said...
    நானும் கடிதம் பற்றிய சில விடயங்களை மீட்டுப்பார்த்துக்கொண்டேன்.

    கடிதத்தில் நாம் கையாளும் சில நடைமுறைகளையும் தொனிகளையும் நேரில் சொல்லிவிடமுடியாது.//

    உண்மைதான் நிர்ஷன், கடிதத்தின் உணர்வுகள் மற்றைய தொலைதொடர்பு சாதனங்களில் இல்லை


  13. // பனையூரான் said...
    நல்ல விஷயம். சிறுவயதில் அப்பாவுக்கு கடிதம் எழுதிய ஞாபகங்கள் நிறைய உண்டு.ஒவ்வொரு கடிதத்திலும் எழுதும் விஷயம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு. "இவ்விடம் வெயில் உவ்விடம் மழையா வெயிலா ?" அம்மா சொல்ல சொல்ல எழுதிய வரிகள். மனப் பாடமாகிப் போன அந்த நாட்கள் //

    எனக்கும் அந்த மாதிரி அம்மா சொல்லி கொடுத்த சில வரிகள் மனப்பாடம் நண்பரே


  14. // மருதமூரான். said...
    கடிதங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் வரை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வந்து செல்லுகின்ற சந்தோசங்களையும், துக்கங்களையும், கோபங்களையும், தாபங்களையும் வெளிப்படுத்தியவை. ஆனால், தற்கால மின்மடல்களும், அலைபேசி உரையாடல்களிலும் அந்த ஈர்ப்பும், அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. நல்ல பதிவு, ஆனால், கடிதங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது இயலாத காரியமே//

    ஆமாம் நண்பரே கடிதங்கள் மீளவும் புத்துயிர் பெறாது என்பது கவலைக்குறிய விடயம்தான்


  15. ////ஜெட்லி said...
    என்ன நேத்து பொக்கிஷம்
    படம் பார்த்தியா??////

    உங்க விமர்சனம் பார்த்தும் நான் படம் பார்க்க என்ன இழிச்சவாயனா?


  16. //Subankan said...
    பாடசாலையில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமே பெரும்பாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள் சிறுவயதில் அம்மா எழுதிய கடிதங்களுக்குப் பின்னால் என்னையும் ஏதாவது எழுதச் சொல்வார். அவ்வளவே. இனிவருவேர்க்கு அந்த அனுபவமும் கிடைக்காது.//

    ஆம் நண்பரே இனி வரப் போவது அவசர உலகம். கவலைதான்


  17. //நிலாமதி said...
    மறந்து விட முடியாத ஒரு பதிவு .மடல் வரைதல். அது ஒரு கலை . அழகு உணர்வுடன் வார்த்தைகளை கோர்த்து உணர்வுகளை கொட்டி எழுதும் ஒரு ஊற்று தான் மடல் வரைதல். மறக்க பட கூடாத ஒரு பதிவு. நினைக்க வைத்தமைக்கு நன்றிகள்//

    வருகைக்கு நன்றி நிலாமதி அக்கா கொஞ்ச நாளாக பதிவுகளை காணவில்லை ஏன்?


  18. //jackiesekar said...
    உண்மைதான் இப்போதும் நான் என் அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் பத்திரமாய்..//

    வருகைக்கு நன்றி தல..


  19. /// ஹேமா said...
    யோகா,நான் இங்கு வந்த காலத்தில் தொலபேசிக் கண்டணம் உயர்வு அதனால் கட்டுக் கட்டாய் கடிதங்கள்தான்.நானும் பழைய கடிதங்களைப் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிறேன்.இப்போது எடுத்துப் பார்த்தாலும் மறக்காத பழைய கதைகள் சொல்கின்றன///

    உண்மைதான் அக்கா பழைய கடிதங்கள் பல கதைகள் சொல்லும். என்னிடமும் பல பழைய கடிதங்கள் உண்டு..


  20. ///கவிக்கிழவன் said...
    உள்ளத்தை உருக்கிவிடது///

    நன்றி கவிக்கிழவரே..