உன்னை பார்க்க விரும்பவில்லை
உன்னை நான் பார்க்க
விரும்பவில்லை
மீண்டும் நான் உன்னை
பார்க்க விரும்பவில்லை
நீ தான் எனக்கு
முதல் காதலி..
கடைசி காதலியும் கூட..
நீயும் நானும்
சிரித்து பேசினோம்,
என்னை பற்றி அறிந்தாய்
உனது எல்லமே சொன்னாய்
ஆனால் என்னை நீ
காதலிப்பதை ஏன்
சொல்லவில்லை...
உன்னை நானும்
என்னை நீயும் காதலித்தது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஆனாலும் நாம்
அதை வெளிப்படுத்தவில்லை..
என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..
என் நேரத்தை எல்லாம்
நீயே பறித்து கொண்டாய்
உன் நேரமெல்லாம்
எனக்காக
செலவழித்ததும் நானறிவேன்
காதல் கைகூடாததற்கு
என்னென்னமோ
காரணமிருக்கலாம்
காதலித்த நாமே
காரணமாயிருந்தது
நமக்கு மட்டுமே
பல வருடம் கழிந்தாலும்
என் மனதில் ஒரு முலையில்
உன் ஞாபகம்
இருந்து கொண்டேயிருக்கிறது..
”சோகங்கள் எனக்கும்,
நெஞ்சோடு இருக்கு,
சிரிக்காத நாளில்லையே”
பாடல் வரி கேட்கும்
போதெல்லாம் என்னை பற்றிய
பாட்டோ என
வியந்திருக்கிறேன்.
இன்று இன்னொருவருக்கு
மனைவியாகிவிட்ட
உன்னை
மீண்டும் நான்
பார்க்க விரும்பவில்லை
உன் வாழ்க்கை
நலமாயிருக்க வாழ்த்தும் நான்
மீண்டும் உன்னை
பார்க்க விரும்பவில்லை
அண்ணா காதல் சோகமோ? உருகி எழுதியிருக்கீங்க.....
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
//
காதலித்த நாமே
காரணமாயிருந்தது
நமக்கு மட்டுமே
//
90 சதவிகிதம் பேருக்கு இப்படி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.
என்னைப்போல் பச்சிளம் பாலகனாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
கவிதை நல்லாயிருக்கு! சோகம் இழையோடுகிறது...
////நீயும் நானும்
சிரித்து பேசினோம்,
என்னை பற்றி அறிந்தாய்
உனது எல்லமே சொன்னாய்
ஆனால் என்னை நீ
காதலிப்பதை ஏன்
சொல்லவில்லை...////
ஏன் நீங்க கேட்காம விட்டீங்க?
நல்லாயிருக்கு.
//என்னைப்போல் பச்சிளம் பாலகனாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
//
ரீப்பீட்
//என்னைப்போல் பச்சிளம் பாலகனாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
//
ரீப்பீட்
யோகு,உங்கள் உணர்வைக் கொட்டியிருக்கிறீர்கள்.இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோ !
//என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..//
super lines
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கிறீங்க போல
ரொம்ப நல்லா இருக்கு..
//என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..//
எல்லாருக்கும் அப்படித்தான்!
//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
அண்ணா காதல் சோகமோ? உருகி எழுதியிருக்கீங்க.....
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்//
நன்றி கீர்த்தி. சும்மா எழுதிப்பார்த்தேன்...
r.selvakkumar said...
//
காதலித்த நாமே
காரணமாயிருந்தது
நமக்கு மட்டுமே
//
90 சதவிகிதம் பேருக்கு இப்படி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்
எனக்கு நடந்தது பலருக்குமா? வருகைக்கு நன்றி செல்வகுமார்.
//வந்தியத்தேவன் said...
என்னைப்போல் பச்சிளம் பாலகனாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.//
நானும் தங்களை போல பச்சிளன் பாலகன் தான் 10,15 வருடமாக..
// யாழினி said...
கவிதை நல்லாயிருக்கு! சோகம் இழையோடுகிறது//
நன்றி யாழினி வருகைக்கு
// மருதமூரான். said...
////நீயும் நானும்
சிரித்து பேசினோம்,
என்னை பற்றி அறிந்தாய்
உனது எல்லமே சொன்னாய்
ஆனால் என்னை நீ
காதலிப்பதை ஏன்
சொல்லவில்லை...////
ஏன் நீங்க கேட்காம விட்டீங்க?
நல்லாயிருக்கு//
ஏன்னு தெரிஞ்சா அன்றே கேட்டிருப்பேனே மருதமூரான்
//ஜெட்லி said...
//என்னைப்போல் பச்சிளம் பாலகனாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
//
ரீப்பீட்//
தல நீங்க பச்சிளம் பாலகன் என்று நம்பிட்டேன்
//ஹேமா said...
யோகு,உங்கள் உணர்வைக் கொட்டியிருக்கிறீர்கள்.இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோ //
சும்மா முயற்சித்தேன் அக்கா, வருககைக்கு நன்றி
// VISA said...
//என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..//
//
வருகைக்கு நன்றி விசா அவர்களே
// jeyamee said...
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கிறீங்க போல
ரொம்ப நல்லா இருக்கு..//
நன்றி ஜெயமீ வருகைக்கும் கருத்துக்கும்
//வால்பையன் said...
//என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..//
எல்லாருக்கும் அப்படித்தான்!//
உங்களுக்கும் அப்படியா வால்.. சொல்லவேயில்லை
ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html
////ஆப்பு said...
ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html////
wel come back