நூடுல்ஸ்

கொஞ்ச நாள் எழுத போராடித்ததால் எழுதவில்லை. ஆனாலும் நண்பர்கள் ஏன் எழுதவில்லை என விசாரித்ததில் நேற்று கொஞ்ச இடை வெளிக்கு பிறகு ஒரு பதிவு எழுதியிருந்தேன். எழுதாவிடினும் பலரது பதிவுகளை வாசித்தும் பின்னூட்டியும் இருந்தேன்.

======================================================================
நான் எழுதிய 2010ல் எழுதப்படும் கடிதம் மற்றைய பல பதிவர்களின் ஆக்கங்களுடன் இம்மாத “இருக்கிறோம்” சஞ்சிகை வந்திருப்பது பதிவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே. எங்களது எழுத்துகள் சஞ்சிகைகளில் வருவதை வரவேற்போம். “இருக்கிறம் ” சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம். எனது ஆக்கம் உங்களது சஞ்சிகையில் வந்தது எனக்கு தெரியாது. பதிவர் வந்தியத்தேவன் சொல்லி தான் தெரியும். அவர் கூறியிருக்காவிட்டால் இப்படி எனது ஆக்கம் ஒரு பத்திரிகையில் வந்திருப்பது கடைசி வரை தெரியாமலிருந்திருக்கலாம். ஆகவே எனது அந்தப்பதிவில் இந்த ஆக்கத்தை பிரசுரிக்கிறோம் என ஒரு பின்னூட்டமாவது இட்டிருக்கலாம். அடுத்த முறை அவ்வாறு செய்வீாகள் என எண்ணுகிறேன். இலங்கையிலிருந்து இந்திய தரத்தில் வரும் “இருக்கிறம்” சஞ்சிகைக்கு எமது ஆதரவை வழங்குவோம். இந்திய தரம் என நான் குறிப்பிட்டது அச்சுத்தரமேயன்றி ஆக்கங்களை பற்றியல்ல. தமிழக அச்சு ஊடகங்கள் (பொதுவாக இலங்கைக்கு வருபவை) சினிமாவை தான் அதிகம் தாங்கி வருகின்றன.


======================================================================


அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி இன்னொரு கிண்ணத்தை சுவீகரித்து விட்டது. கடைசிரை போராடி பாகிஸ்தானை வென்ற அவுஸ்திரேலியா ஆசிய அணிகளை விட அதிகம் கிண்ணத்துக்கு தகுதியானது தான். அரையிருதியில் சதம் கண்ட பொன்டிங் கூறிய ”ஒவ்வொரு பந்துக்கும் மதிப்பளித்து விளையாடியதால் தான் சதம் பெற்றேன்” என்னும் கூற்று கிரிக்கட் விளையாடும் சகலருக்கும் பொருந்தும். 


அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்க உமர் அக்மலுக்கு நடுவர் வழங்கிய பிழையான தீர்ப்பும் ஒரு காரணம். இந்த தீர்ப்பை வழங்கியவர் உலகத்தில் சிறந்த நடுவராக (ஆங்கில ஊடகங்களில்) கூறப்படும் சைமன் டவ்பல். இதே தீர்ப்பை இலங்கை நடுவர்கள் வழங்கியிருந்தால் ஆங்கில வர்ணனையாளர்கள் நிலைமை தலை கீழ். நடுவரை வெகு காட்டமாக விமர்சித்திருப்பார்கள். இந்திய கிரிக்கட் சபை இந்த ஆட்டமிழப்பிற்கு பின்னணியில் இருப்பதாக ஒரு ஊடகத்தில் விமர்சிக்கப்பட்டிருப்பது. இன்னொரு வேடிக்கையான செய்தி.கிரிக்கட் அதிஷ்டத்தில் தங்கியிருப்பது என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டிருக்கிறது.


கிரிக்கட் விருதுகள் ஐசீசீயால் வழங்கப்பட்டிருக்கின்றன.  இதுவும் தமிழக அரசு விருதுகளை போல கேலிக்குறியதாக தான் இருக்கிறது. இது பற்றி ஒரு பதிவு இட இருக்கிறேன்.


======================================================================
ஜெயமான வானொலி துல்லியமான தமிழ் உச்சரிப்புக்கு பெயர் போனது. அவ்வானொலிககு ரசிகர்கள் அதிகரிக்க காரணமும் இதேதான், ஆனால் கடந்த வெள்ளிமாலை ஒரு அறிவிப்பாளினி வேகமாக பேசுகிறேன் என ஏதேதோ சொன்னார். உதாரணமாக பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் என்பதை ”புதிய பம்பலப்பிட்டி, கதிரேசன்“ என கூறினார்.  இதை நிர்வாகம் கவனித்தால் நல்லது. ஏனெனில் மற்றைய ஊடகங்கள் சொற்பிரயோகங்களில் பிழை செய்வதாக விமர்சிப்பவர்கள் ஜெயமான வானொலியை விமர்சிப்பதில்லை, காரணம் அவர்களது அழகான தமிழ் உச்சரிப்பு.


======================================================================

ஏ. ஆர் ரகுமான் ஆஸ்கார் வாங்கிய பாடல் ஒரு அட்டைக்காப்பி என பிரபல பதிவர் அதிஷா கூறியிருக்கிறார். இது நான் எப்பவோ எதிர்பார்த்தது ரகுமான் என்னும் நம்ம கலைஞர் உலகப்புகழ் பெற்றது பலருக்கு பிடிக்கவில்லை.. நம்முடைய மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சினை நம்மவர்கள் சாதிக்க கூடாது, சாதித்தால் ஏதாவது குறுக்கு வழியில் தான் சாதித்திருப்பார்கள் என்ற மனபாவம் தான். கமல் தொடக்கம் ரகுமான் வரை இங்கு இதே நிலைதான். தானும் முன்னேற கூடாது, அடுத்தவரும் முன்னேற கூடாது என்னும் குறுகிய மனப்பான்மை நம்மவர்களிடம் அதிகம்.

இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதை விட சங்கீதம் பற்றி அறிந்த ஒரு பதிவர் அதை மறுத்து எழுதிய பதிவு வின் சுட்டி இங்கே. இரண்டு பதிவையும் வாசித்து பாருங்கள். தயவுசெய்து ஒரு மாபெரும் சாதனை புரிந்த கலைஞனை கேவலப்படுத்த வேண்டாம்.
======================================================================


அம்மா பகவான் பற்றி ஏராளமான சர்ச்சையான கருத்துகள் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இலங்கையின் தேசிய தமிழ்பத்திரிக்கையான வீரகேசரி அதன் இரண்டாம் பக்கத்தில் அம்மா பகவான் பற்றிய கட்டுரையை வெளியிட்டிருப்பது வேதனையான விடயம்.


======================================================================
எவ்வளவு நாள்தான் சினிமா நடிகைகளின் படங்களை போட்டு கொண்டிருப்பது. ஆகவே வேறு ஒரு படம். உலகின் சிக்கலான ரயில் பாதை கீழுள்ள படத்தில்..






16 Responses
  1. அம்மா பகவான் அங்கயுமா???....

    என்னத்த சொல்றது....
    நீ பார்த்து சூதானமா இருந்தக்க யோ


  2. பல விடயங்கள் ஒரே பதிவில் நல்லாயிருக்கே.... ஜெயமானவரே தமிழ் உச்சரிப்பை கவனிங்கப்பா.........


  3. இருக்கிறத்தில் இருந்ததற்க்கு வாழ்த்துக்கள்.

    ஐசிசி விருதுகள் எனக்கென்றால் சரிதான் எனப்படுகின்றது. ஆனால் இறுதிப்போட்டி சப் எனபோய்விட்டது.

    ராஜாவை பிழிந்துஎடுத்துவிட்டார்கள் இப்போ ரகுமான் சீசன்.

    ம்ம்ம் நானும் அவதானித்தேன் ஜெயமான வானொலியில் இந்தக் கொடுமையை. மதிய போசனம் கொடுக்கும் அறிவிப்பாளினிதான் அந்த தவறைச் செய்கின்றார்.


  4. ஹேமா Says:

    யோகன் அழகான தொகுப்பு.

    அம்மா பகவான் நம்ம ஊர்லயா இருக்கிறா ?இருந்தா எதுக்கு இருக்கிறா ?


  5. GEETHA ACHAL Says:

    எப்படி யோகா...எல்லாதையும் ஒரே பதிவில்...எழுதவில்லை என்று சொல்லி பெரிய பதிவாக போட்டுவிட்டுங்க...


  6. நல்லா இருக்கு யோகா

    ஆமா அந்த பத்திரிக்கை காசு பணம் கூடவா கொடுக்கலை....


  7. பாவம் அம்மாபகவான்!


  8. Unknown Says:

    கொடுமை... வவுனியாவுக்கு வந்தன்... ஒரு கடைக்கு போனா முன்னுக்கு அம்மா பகவான் (அதென்ன அம்மா பகவான்? திரு.திருமதி விஜகுமார் எண்டு இனி சொல்லுங்கோ) படம்... நான் மற்றக்கடைக்கு போய்ற்றன்... முடியல...

    எடுத்த ஓய்வு பொன்ரிங் எடுத்த ஓய்வு மாதிரி பலன் தருது போல?
    பொன்ரிங் ஓய்வெடுத்திற்று தான் சம்பியன் கிண்ணத்தில கலக்கினார். இப்ப யோ வொய்ஸ் ஓய்வெடுத்திற்று பதிவில கலக்கிறார்...
    வாழ்த்துக்கள் இருக்கிறமில இருக்கிறதுக்கு...


  9. // ஜெட்லி said...
    அம்மா பகவான் அங்கயுமா???....//

    ஆமாம் ஜெட்லி இங்கயும் வந்து காசு வசூலிச்சி அருள்பாலிக்கிறாங்களாம்.


  10. // மருதமூரான். said...
    பல விடயங்கள் ஒரே பதிவில் நல்லாயிருக்கே.... ஜெயமானவரே தமிழ் உச்சரிப்பை கவனிங்கப்பா.......//

    நன்றி மருதமூரான் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும்.


  11. // வந்தியத்தேவன் said...
    இருக்கிறத்தில் இருந்ததற்க்கு வாழ்த்துக்கள்.//

    நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும், சொன்னதற்கு நன்றிகள்

    //ஐசிசி விருதுகள் எனக்கென்றால் சரிதான் எனப்படுகின்றது. ஆனால் இறுதிப்போட்டி சப் எனபோய்விட்டது. //

    ஓரளவுக்கு சரிதான் ஆனால் பலரை திருப்திபடுத்த விருது வழங்கியிருக்கிறார்கள்.

    //ராஜாவை பிழிந்துஎடுத்துவிட்டார்கள் இப்போ ரகுமான் சீசன். //

    ”அப்படி செய்தால் அதுவும் தப்பு, .இப்படி செயடதால் இதுவும் தப்பு“ வைரமுத்து கவிதையில் சொல்லியிருப்பாரே அது போலதான் இது

    //ம்ம்ம் நானும் அவதானித்தேன் ஜெயமான வானொலியில் இந்தக் கொடுமையை. மதிய போசனம் கொடுக்கும் அறிவிப்பாளினிதான் அந்த தவறைச் செய்கின்றார்//

    நான் சென்ற வெள்ளி மாலை பஸ்ஸில் செல்லும்போது தான் இந்த நிகழ்ச்சியை கேட்டேன் மாலை நேரத்திலும் அவர் அறிவிப்பு செய்வாரோ தெரியவில்லை..


  12. // ஹேமா said...
    யோகன் அழகான தொகுப்பு.

    அம்மா பகவான் நம்ம ஊர்லயா இருக்கிறா ?இருந்தா எதுக்கு இருக்கிறா ?//

    காசு சம்பாதிக்க இருக்கிறா அக்கா


  13. Geetha Achal said...
    எப்படி யோகா...எல்லாதையும் ஒரே பதிவில்...எழுதவில்லை என்று சொல்லி பெரிய பதிவாக போட்டுவிட்டுங்க..

    நன்றி கீதா அக்கா வருகைக்கு சும்மா எழுதினதுதான்.


  14. // பிரியமுடன்...வசந்த் said...
    நல்லா இருக்கு யோகா

    ஆமா அந்த பத்திரிக்கை காசு பணம் கூடவா கொடுக்கலை.//

    தொடர்ந்து எழுத சொல்லியிருக்காங்க வசந்த் பத்திரிகை நிறுவனத்தோடு கதைத்தேன். வருகைக்கு நன்றி


  15. // இறக்குவானை நிர்ஷன் said...
    பாவம் அம்மாபகவான்//

    இனி அம்மா பகவான் என கூற வேண்டாமாம் விஜயகுமார் என கூற சொல்லி கனககோபி சொல்லியிருக்கிறார்..


  16. // கனககோபி said...
    கொடுமை... வவுனியாவுக்கு வந்தன்... ஒரு கடைக்கு போனா முன்னுக்கு அம்மா பகவான் (அதென்ன அம்மா பகவான்? திரு.திருமதி விஜகுமார் எண்டு இனி சொல்லுங்கோ) படம்... நான் மற்றக்கடைக்கு போய்ற்றன்... முடியல...

    எடுத்த ஓய்வு பொன்ரிங் எடுத்த ஓய்வு மாதிரி பலன் தருது போல?
    பொன்ரிங் ஓய்வெடுத்திற்று தான் சம்பியன் கிண்ணத்தில கலக்கினார். இப்ப யோ வொய்ஸ் ஓய்வெடுத்திற்று பதிவில கலக்கிறார்...
    வாழ்த்துக்கள் இருக்கிறமில இருக்கிறதுக்கு...///

    எப்ப வவுனியா போனீங்க கோபி எப்ப திரும்ப வருவீங்க.. வாழ்த்துக்கு நன்றி கோபி..