நூடுல்ஸ் (14-10-2009)

வார இறுதியில் தீபாவளி வருவதால் என்னைப்போன்ற பலருக்கு தீபாவளிக்கு என விடுமுறை இல்லை. எனக்கு இப்போவெல்லாம் தீபாவளி என்பது ”இந்திய கொலைக்காட்சிகளில் முதல் முறையாக” வோடே முடிந்துவிடும். சிறுவயதில் தீபாவளி என்றால் புது உடுப்பு உடுத்து, நண்பர்களோடு பட்டாசு வெடித்து அலயவர்கள் வீட்டுக்கு பலகாரம் கொண்டு செல்வது மாலையில் சொந்தங்கள் எல்லாம் இணைந்து அரட்டை அடிப்பது என்றே இருந்தது. இப்போதெல்லாம் எல்லா பண்டிகையும் இந்த கொலைக்காட்சிகளின் முன்னாலேயே முடிந்துவிடுகிறது. நானாவது பரவாயில்லை மாலையில் நண்பர்களோடு அரட்டை அடிப்போம் ஏனென்றால் பல இடங்களிலுள்ள நண்பர்கள் தீபாவளி போன்ற நாட்களில்தான் வீட்டுக்கு வருவதால் அனைவரும் ஒன்று கூடும் தினமாக தீபாவளி இருக்கும். ஆனால் பலரது தீபாவளி முழு நாளுமே கொலைக்காட்சிகளின் முன்னாலேயே முடிந்து விடுவது கொடுமை.

இதிலே சிரிப்பு என்ன வென்றால் நாத்திகம் பேசும் உலக தமிழின தலைவராக தன்னை கூறிக் கொள்ளுபவரின் சொந்த தொலைக்காட்சியில் அவரது கொள்கைக்கு எதிராக தீபாவளி நிகழ்ச்சிகள் இடம் பெறுவது.

கலைஞர் தமிழ்ப்புத்தாண்டு தைமாதம் ஆரம்பிப்பதாக கூறியபின்னரும் மற்றைய தொலைக்காட்சிகள் சித்திரை புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகள் என அறிவிப்பு செய்தபின்னர், வேறு வழியின்றி நம்ம கொலைஞர் கொலைக்காட்சி ”சித்திரை மாத முதலாம் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்” என அறிவித்தது.

கடவுளே இல்லை என கூறும் கட்சியின் கொலைக்காட்சியில் இந்த வருடம் நரகாசுரனை வதம் செய்த பண்டிகைக்கு ”தசாவதாரம்” சிறப்பு திரைப்படம் பார்த்து பண்டிகையை இனிதே கொண்டாடுவோம்.

======================================================================
எங்கெங்கோ நடக்கும் உப்பு சப்பில்லாத போட்டிகளை நேரடியாக காட்டும் நம் தொலைக்காட்சி சம்பியண்ஸ் லீக் போட்டிகளை காட்டாதது வருத்தமாக இருந்தது. இடையிடையே 2,3 போட்டிகளை பார்த்த போது இந்த போட்டிகளும் உப்பு சப்பில்லாதவையாகவே இருந்தன. போட்டி நடக்கும் ஆடுகளங்கள் பாடசாலைக் கிரிக்கட்டுக்கு கூட தகுதியற்றவை என்றே தோன்றியது. முதலாம் ஐபில்லை சிறப்பாக நடாத்திய இந்த குழு ஏன் இம்முறை இந்த மாதிரி ஆடுகளங்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியாது.

======================================================================

ஜேக்கப் ஓரம் இந்தவாரம் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 20-20களில் விளையாடுவாராம். IPL போன்ற பணம் கொழிக்கும் போட்டிகள் கிரிக்கட்டை வளர்ப்பதை விட்டு அதை அழித்துவிடுமோ என பயமாக இருக்கிறது. ”மார்க் டெய்லர்“ போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒதுங்கி REAL CRICKET எனப்படும் டெஸ்ட் போட்டிகளில் விளையான்டனர்,ஆனால் இப்போது நிலை தலைகீழ். முதலில் பிளின்டோப் பின்னர் முரளி இப்போ ஓரம். இப்போது மேற்கிந்திய அணியினர் போன்ற ஒரு அணிதான் எதிர்காலத்தில் டெஸ்ட் விளையாட வேண்டி வருமோ?
======================================================================

இலங்கையில் தமிழ் ஒளிபரப்புகள் பலவுள்ளன என பத்திரிகைகள், இணையங்கள் வாயிலாக அறிந்தாலும் கண்டியில் எமது பகுதியில் பார்க்க கூடியதாக இருப்பது தேசிய தொலைக்காட்சியின் தமிழ் சேவையான ”நேத்ரா” மட்டுமே. அதுவும் மாலையில் நாங்கள் பார்க்கும் போது 3 நெடுந் (அறுவை) தொடர்களோடு நின்றுவிடுகிறது. கொழும்பு தமிழருக்கு மட்டும்தான் இவை ஒளிபரப்பை நடத்துகின்றனவா?


9 Responses
  1. //அவரது கொள்கைக்கு எதிராக தீபாவளி நிகழ்ச்சிகள் இடம் பெறுவது.//
    கொள்கை எண்டு சொன்னாலே ஊருக்குதான் உபதேசம் தனக்கு இல்லை என்பதுதானே.


  2. கொள்கையா? கருணாநிதிக்கா? சிரிப்புத் தான் வருகின்றது. குடும்பத் தலைவரிடம் குடும்பக் கொள்கைதான் இருக்கும் மஞ்சள் துண்டு மகராசனிடம் பகுத்தறிவும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.


  3. அருமை தல...
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


  4. //கடவுளே இல்லை என கூறும் கட்சியின் கொலைக்காட்சியில் இந்த வருடம் நரகாசுரனை வதம் செய்த பண்டிகைக்கு ”தசாவதாரம்” சிறப்பு திரைப்படம் பார்த்து பண்டிகையை இனிதே கொண்டாடுவோம்//

    :))

    escappu


  5. சரியாய் சொன்னீங்க போங்கோ, இப்படியான கொண்டாட்டங்கள் வரேக்குள்ள டிவி ஸ்டேஷன் எல்லாத்துக்கும் கட்டாய விடுமுறை கொடுக்க வேணும்..எப்படியிருக்கு இந்த மாஸ்டர் brain ஐடியா...


  6. கொலைஞரா?

    யோவ் யோகா பாத்தய்யா...

    இந்த நூடுல்ஸ் கலைஞருக்காக செஞ்சதா?


  7. Unknown Says:

    //இதிலே சிரிப்பு என்ன வென்றால் நாத்திகம் பேசும் உலக தமிழின தலைவராக தன்னை கூறிக் கொள்ளுபவரின் சொந்த தொலைக்காட்சியில் அவரது கொள்கைக்கு எதிராக தீபாவளி நிகழ்ச்சிகள் இடம் பெறுவது. //

    ஹி ஹி...
    அரசியல் வாழ்க்கையில, விளம்பர வாழ்க்கையில, வியாபார வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...


    முரளியின் ரெஸ்ற் ஓய்விற்கும் மற்றவர்களின் ஓய்விற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
    முரளி ஓய்வ பெறும் வயதை அண்மித்த பின்பு தான் அந்த அறிவிப்பை விடுத்தார்.
    அதுவும் இன்னும் கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்துத் தானே?


  8. ஹேமா Says:

    யோகா,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


  9. நன்றி வேந்தன்
    நன்றி வந்தியத்தேவன்
    நன்றி கலையரசன்
    நன்றி ஜெட்லி
    நன்றி யசோ...அன்பாய் உரிமையோடு கரன்
    நன்றி பிரியமுடன்...வசந்த்
    நன்றி கனககோபி
    நன்றி ஹேமா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி