நூடுல்ஸ் (21-10-2009)

தீபாவளி முடிந்து எல்லாரும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். நான் தீபாவளி முடிந்தது என்று குறிப்பிட்டது எல்லாரும் கொண்டாடி முடித்து விட்டார்கள் என்றல்ல. என்னைப்போல் பலபேர் விடுமுறைக்கு வீடு சென்று வந்துவிட்டார்கள் என்பதைதான். எனக்கு இம்முறை தீபாவளி ஆனந்த தாண்டவம் மற்றும் தசாவதாரம் திரைப்படங்களை பார்த்ததோடு முடிந்துவிட்டது. சுஜாதாவின் ”பிரிவோம் சந்திப்போம்” நாவலை வாசித்திருந்த நான் இந்த படத்தை பார்க்க விரும்பியிருந்தேன் அது கடந்த வாரமே சாத்தியமாயிற்று. கதை வாசித்த போது இருந்த அனுபவம் படம் பார்க்கும் போது இருக்கவில்லை என்பது உண்மைதான். தசாவதாரம் படம் மீண்டும் பார்த்தேன். ஒளிப்பதிவுக்காக எத்தனை முறை படம் பார்த்தாலும் அலுக்காது.


================================================================


இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியினரின் 11 வருட நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத போது முதலில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியதற்கு நன்றிகள். சக்தியின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் சக்தியுடனேயே இருந்தனர் என்பது கண்கூடு.  சக்தி ஆரம்பிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளித்தமைக்கு எனக்கு ஒரு பொக்கட் ரேடியோ பரிசாக கிடைத்தது நன்றாக நினைவிருக்கிறது. அந்த பாடசாலை நாட்களில் அந்த வானொலி பெட்டி 24 மணிநேரமும் எங்களது அறையில் பாடி கொண்டிருந்தது. மீண்டுமொருமுறை சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு உங்களது ஆங்கில பெயர்கள், தமிழ் உச்சரிப்புகள், நிகழ்ச்சியின் தரம் போன்றவற்றை கவனிக்காவிடின் இப்போதிருக்கும் ரசிகர்கள் இன்னும் எதிர்காலத்தில் குறைய இடமிருப்பதையும் கூறிக் கொள்கிறேன்.


================================================================


ருபெல்லா தடுப்பு மருந்து இலங்கையில் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. தடுப்பு மருந்து அளிப்பது நோய் வராமல் தடுக்க என்றிருக்கும் நிலையில் அந்த மருந்தால் உயிர் போவது எவ்வளவு கொடுமையான விடயம். அரச இயந்திரம் ஒழுங்காக தொழிற்பட்டு இந்த பிரச்சினை களையபட வேண்டும். சுகாதார அமைச்சர் கூறியபடி இந்த மருந்துகளை இலங்கைக்கு விற்கும் ’ஸ்ரீராம்’ நிறுவனம் தான் உலக நாடுகள் பலவற்றிற்கு இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த பிரச்சினை எழவில்லையா?


================================================================


சம்பியன்ஸ் லீக் எதிர்பார்த்த வரவேற்பு அடையாமல் போனதற்கு நான் சென்ற வாரம் கூறியபடி ஆடுகளங்களும் ஒரு காரணம் 150 ஓட்டங்களையாவது துரத்தி பிடித்தால்தான் இவ்வகையான கிரிக்கட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் வருவர். ஆனால் இந்த மைதானங்களில் பந்து மேலெழும்பாமல் ஐந்தாம் நாள் டெஸ்ட் ஆடுகளம் போல் இருப்பது ரசிகர்களது எண்ணிக்கையை குறைக்கிறது. மேற்கிந்திய அணிகள் உலக கிரிக்கட்டில் தோற்பதையும் ட்ரினிடாட் அன்ட் டுபேக்கோ அணியினர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் காட்டிய விளைாயட்டையும் பார்க்கும் போது மேற்கிந்திய அணியின் வீழ்ச்சிக்கு பிழையான தெரிவே காரணம் என நினைக்க வேண்டியுள்ளது.


================================================================


சனிக்கிழமை ஆதவன் படம் பார்க்க போக இருந்த நான் வெள்ளியிரவு நண்பர்கள் பலரது மூஞ்சிப்புத்தக ஸ்டேசில் படம் சரியில்லை என்பதை பார்த்து எனது முடிவை மாற்றிக் கொண்டேன். இப்போ நண்பர்கள் சொல்வதை கேட்கும் போது முதல் நாள் கூட்டத்தில் அடிபட்டு விசில்களுக்கு மத்தியில் படத்தை பார்க்க இருந்த நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.


================================================================










22 Responses
  1. Subankan Says:

    நூடுல்ஸ் நல்லாருக்கு. வித்தியாசமான படத்தெரிவு.


  2. sanjeevan Says:

    நல்லாயிருக்கு.......


  3. நூடுல்சும் படமும் அருமை!


  4. இந்தப்படம் ரொம்ப பிடிச்சுருக்கு யோகா நான் ஒரு காப்பி எடுத்துக்கிறேன்


  5. ஹேமா Says:

    யோகன்,தாய்மையின் பாசத்தோடும் அழகோடும் நல்ல நூடுல்ஸ்.


  6. Unknown Says:

    நூடில்ஸ் அசத்தல்...
    சக்திக்கு நானுனும் வாழ்த்துகிறேன்...
    இனியாவது நல்ல நிகழ்ச்சிகளை செய்வார்கள் என்று நம்புகிறோம்...

    உங்கள் பதிவில் அந்த இறுதிப் படம் தான் அருமை... உண்மையான அழகு...

    சம்பியன்ஸ் லீக்கை சனல் ஐ ஒளிபரப்பாதது தான் அதன் தோல்விக்கு காரணம்... நான் பார்க்காதாதால தான் போதிய வரவேற்பு இல்ல எண்டு லலித் மோடிற்ற சொல்லுங்கோ....


  7. நல்ல நூடுல்ஸ்

    ஆனந்த தாண்டவம் திரையில் பார்க்கும்போது வாசித்த அனுபவம் போல் இருக்கவில்லை. மதுமிதாவிற்காக தமன்னா ஓகே ஆனால் ரகுவிற்காக அந்த நடிகர் பொருந்தவேயில்லை.

    சக்தி தாங்களாக திருந்தாவிட்டால் பார்க்க எவரும் இருக்கமாட்டார்கள். விவேக் ஒருபடத்தில் சொல்வதுபோல் ஆள் இல்லாத கடையில் டீ போடும் சிங்கைப் போல் இருக்கவேண்டும்.

    ருபெல்லாப் பிரச்சனையில் பாதிக்கப்படுபவர்களை நினைத்து கவலைப்படாமல் அதனை அரசியலாக்குவது கொடுமை.

    சாம்பியன் லீக்கில் ரினிடாட் அண்ட் டுபாக்கோ அணி காட்டும் சாகசம் அட்டகாசம் மேற்கிந்திய தீவுகளுக்கு புதிய பல வீரர்கள் கிடைக்கபோகின்றார்கள். பரத் நல்ல உதாரணம். பார்ப்போம் இன்றைக்கு கேப்டவுன் கோப்ராகளை வெல்கின்றார்களா என.

    ஆதவன் வேண்டாம் அதைப் பற்றிக் கதைத்தால் சூர்யா ரசிகர்கள் அடிக்க வருகின்றார்கள்.

    அம்மாவுக்கு நிகர் எவருமில்லை.


  8. Jackiesekar Says:

    யோ அந்த தாய் சேய் படம் ரொம்ப நல்லா இருந்தது...
    அன்புடன்
    ஜாக்கி


  9. ARV Loshan Says:

    சுட சுட சூடான நூடில்ஸ்..

    தசா நானும் மீண்டும் அடைந்தேன் மகிழ்ச்சி..

    ஆனந்த தாண்டவம் கொடுமை.. முன்பு திரையரங்கில் பார்த்தபின் நான் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட ஒரு வாசகம்.. சுஜாதாவின் ஆன்மா சாந்தியடைவதாக.

    ருபெல்லாவிலும் மோசடி? பாவம் பிஞ்சுகள்..

    படம் அருமை. (நீங்க எல்லாம் திருந்தினா எப்பிடி? )


  10. சுவையான நூடுல்ஸ்


  11. என்ன இண்டைக்கு மரக்கறி நூடில்சு? நல்லாருக்கு...


  12. ////Subankan said...
    நூடுல்ஸ் நல்லாருக்கு. வித்தியாசமான படத்தெரிவு//

    நன்றி சுபாங்கன்.


  13. //// sanjeevan said...
    நல்லாயிருக்கு...////

    நன்றி சஞ்சீவன்


  14. ///வால்பையன்
    October 21, 2009 3:38 PM
    நூடுல்சும் படமும் அருமை!///

    வருகைக்கு நன்றி வாலு


  15. /// பிரியமுடன்...வசந்த் said...
    இந்தப்படம் ரொம்ப பிடிச்சுருக்கு யோகா நான் ஒரு காப்பி எடுத்துக்கிறேன்///

    தாரளமா எடுத்துகுங்க வசந்த்


  16. /// ஹேமா said...
    யோகன்,தாய்மையின் பாசத்தோடும் அழகோடும் நல்ல நூடுல்ஸ்

    நன்றி ஹேமா அக்கா///


  17. /// கனககோபி said...
    நூடில்ஸ் அசத்தல்...
    சக்திக்கு நானுனும் வாழ்த்துகிறேன்...
    இனியாவது நல்ல நிகழ்ச்சிகளை செய்வார்கள் என்று நம்புகிறோம்...///

    நாங்களும் பல வருடமா அப்படி தான் நம்புறோம். செய்வாங்க ஆனா செய்ய மாட்டாங்க

    ///உங்கள் பதிவில் அந்த இறுதிப் படம் தான் அருமை... உண்மையான அழகு...///

    ரொம்ப நன்றி கோபி எவ்வளவு காலத்துக்கு தான் சினிமா நடிகைகங்க படம் போடுறது.

    ///சம்பியன்ஸ் லீக்கை சனல் ஐ ஒளிபரப்பாதது தான் அதன் தோல்விக்கு காரணம்... நான் பார்க்காதாதால தான் போதிய வரவேற்பு இல்ல எண்டு லலித் மோடிற்ற சொல்லுங்கோ...///

    சொல்லிற்றன். அடுத்த முறை வெற்றி டீவியில ஒளிபரப்புரத சொல்ல சொன்னார். உங்கள கட்டாயம் பார்க்க சொன்னார்


  18. ///வந்தியத்தேவன் said...
    நல்ல நூடுல்ஸ்

    ஆனந்த தாண்டவம் திரையில் பார்க்கும்போது வாசித்த அனுபவம் போல் இருக்கவில்லை. மதுமிதாவிற்காக தமன்னா ஓகே ஆனால் ரகுவிற்காக அந்த நடிகர் பொருந்தவேயில்லை.///

    ஆமாம் படம் கதையிலிருந்த அழகை கெடுத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இதே காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் சுஜாதா கதை எழுதியிருந்த என்ஜினியர் என்ற படம் தயாராக இருந்து டிராப் ஆகியது. மாதுரி தீக்ஸித், அரவிந்தசாமி நடிப்பில் சுஜாதா இருந்த போது தயாராகவிருந்த படம், சுஜாதா இருந்திருந்தால் இந்த படமும் சிறப்பாக வந்திருக்கும் என நினைக்கிறேன்.

    ///சக்தி தாங்களாக திருந்தாவிட்டால் பார்க்க எவரும் இருக்கமாட்டார்கள். விவேக் ஒருபடத்தில் சொல்வதுபோல் ஆள் இல்லாத கடையில் டீ போடும் சிங்கைப் போல் இருக்கவேண்டும்.///

    யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஊத்துறாங்க அவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்ல

    ///ருபெல்லாப் பிரச்சனையில் பாதிக்கப்படுபவர்களை நினைத்து கவலைப்படாமல் அதனை அரசியலாக்குவது கொடுமை.///

    வழிமொழிகிறேன்.

    ///சாம்பியன் லீக்கில் ரினிடாட் அண்ட் டுபாக்கோ அணி காட்டும் சாகசம் அட்டகாசம் மேற்கிந்திய தீவுகளுக்கு புதிய பல வீரர்கள் கிடைக்கபோகின்றார்கள். பரத் நல்ல உதாரணம். பார்ப்போம் இன்றைக்கு கேப்டவுன் கோப்ராகளை வெல்கின்றார்களா என.///

    வென்று விட்டார்கள். மீண்டும் நியு சவுத் வேல்ஸ் அணியை மீண்டும் வென்றால் அவர்களுக்கு கிண்ணம். வெல்வார்கள் என்னும் நம்பிக்கையிருக்கிறது பார்ப்போம்.

    ///ஆதவன் வேண்டாம் அதைப் பற்றிக் கதைத்தால் சூர்யா ரசிகர்கள் அடிக்க வருகின்றார்கள்.///

    மூக்கு கவனம்.

    ///அம்மாவுக்கு நிகர் எவருமில்லை///

    சேம் பிளட்


  19. /// jackiesekar said...
    யோ அந்த தாய் சேய் படம் ரொம்ப நல்லா இருந்தது...
    அன்புடன்
    ஜாக்கி///

    நன்றி தல


  20. ///LOSHAN said...
    சுட சுட சூடான நூடில்ஸ்..

    தசா நானும் மீண்டும் அடைந்தேன் மகிழ்ச்சி..///

    நன்றி லோஷன்

    ///ஆனந்த தாண்டவம் கொடுமை.. முன்பு திரையரங்கில் பார்த்தபின் நான் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட ஒரு வாசகம்.. சுஜாதாவின் ஆன்மா சாந்தியடைவதாக.///

    பாவம் இனி யாரும் சுஜாதா நாவல்களை படமாக எடுக்க கூடாது. அவரது பாத்திரங்கள் நாவல்களில் மட்டுமே வாழட்டும்.

    ///ருபெல்லாவிலும் மோசடி? பாவம் பிஞ்சுகள்..///

    என்ன செய்ய தலைவிதி

    ///படம் அருமை. (நீங்க எல்லாம் திருந்தினா எப்பிடி? )///

    எல்லாம் நயன்தாரா, பிரபுதேவா, லோஷன், ரம்லத் பிரச்சினையால்தான்


  21. /// புலவன் புலிகேசி said...
    சுவையான நூடுல்ஸ்///

    நன்றி புலவர் 23ம் புலிகேசி


  22. ///புல்லட் said...
    என்ன இண்டைக்கு மரக்கறி நூடில்சு? நல்லாருக்கு///

    நான் சைவமாக மாறிட்டேன் புல்லட்