வலைஞர்கள் - ஊடகவியாலர்கள் சந்திப்பு

வலைஞர்களுக்கு கை கொடுக்கும் “இருக்கிறம்” சஞ்சிகையானது, எதிர்வரும் போயாதினமான இரண்டாம் திகதி திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு பதிவர்களையும் அச்சூடகவியலாளர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைவரும் பங்கு பெறுவோம்.சென்ற முறை பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கிடையான அறிமுகத்தை ஏற்பபடுத்தியிருந்தது. இம்முறை சந்திப்பில் அடுத்த கட்டத்துக்கு அதை கொண்டு செல்லும் என எதிர்பார்ப்போம்.

நிகழ்வு ஏற்பாடு செய்திருக்கும் தினம் எங்களுக்கு விடுமுறை தினமென்பது மகிழ்ச்சியே. எனினும் ஏற்பாட்டு நேரம் மாலை என்பதுதான் ஒரு சிறிய பிரச்சினை காரணம், தூர இடங்களிலிருந்து வருவோருக்கு மீண்டும் அவர்களது இடத்திற்கு செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த சந்திப்பு எம்மை அச்சு ஊடகங்களுக்கும், அச்சு ஊடகங்களை எமக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்போம்.

திங்கள் நிகழ்வில் சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன்


உங்கள் தோழன்
யோகா


7 Responses
 1. சந்திப்பு இனிதாக நடைபெறவும் - நிகழ்வுகளை எம்முடன் பகிரவும் வேண்டுகிறேன்:


 2. சந்திப்போம். நல்ல பல விடயங்கள் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.


 3. நிச்சயம் கலந்து கொள்வோம். எதிர்பார்ப்புகளுடன்


 4. சந்திப்பு இனிதாக
  நடைபெற வாழ்த்துக்கள் யோ


 5. வருவோம்... சந்திப்போம்...


 6. Subankan Says:

  சந்திக்கலாம், வருகிறேன்.


 7. நன்றி தங்க முகுந்தன்
  நன்றி சந்ரு
  நன்றி மன்னார் அமுதன்
  நன்றி ஜெட்லி
  நன்றி கனககோபி
  நன்றி Subankan