ஆதவன் - பதிவர் பார்வையில்

பார்க்க வேண்டும் என நினைத்திருந்து ஆதவன் படம் பார்த்துவிட்டேன். பதிவர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதியிருப்பதால் நான் விமர்சனம் எழுதாமல் நிறை குறைகளை எழுதுகிறேன்.

நிறைகள்

நகைச்சுவை திலகம் வடிவேல் கதாநாயகனாக நடித்து இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு அடுத்து வெளிவந்திருக்கும் படம் ஆதவன். சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு (ப்ரெண்ஸ் படத்துக்கு பிறகு என நினைக்கிறேன்) இரண்டாம் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கிறது. வடிவேலு கதாநாயகனாக நடித்த படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஸ்ரேயா வாய்ப்பிழந்து போன வரலாறு அறிந்தும் இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். இப்படி ஒருவர் பறக்கும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பது முடியாத காரியம்.  கடைசிகாட்சியில் (எங்களுக்கு) கொட்டாவி வந்தாலும் பறந்தே வெற்றியும் பெறுகிறார். சூர்யா பறக்கும் ரகசியத்தை விஜயகாந்திடமிருந்து கற்றிருக்கிறார்.

பின்னணி இசையில் ணொய் ணொய் என மிரட்டியிருக்கும் ஹாரீஸ் அழகிய தமிழ் வார்த்தைகான ஹசலி பிசிலி, தேக்கோ போன்ற வரிகளை கொண்ட பாடல்களை தந்து படத்தின் வெற்றியில் உதவியிருக்கிறார். (ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல)

படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)

படத்தில் அடுத்தடுத்து வரும் விடயங்களை நாங்களே ஊகிக்க கூடியவாறு கதை எழுதிய ரமேஷ் கண்ணாவும் பாராட்டுக்குறியவரே

குறைகள் 

முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.

படத்திற்கு சீரியசாக வருபவர்களையும் வடிவேலு சிரிக்க வைத்துவிட்டார் என்பதும் ஒரு குறையே.

இது போதும் இதுக்கு மேல என்னால முடியல.....


28 Responses
  1. நல்ல காமெடியான பதிவு..

    One of the article where I laughed all the way :)

    வாழ்த்துகள்...

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me


  2. தோழி Says:

    ha ha ha

    nalla nirai kurai alasal. keep doing


  3. நான் இன்னும் ஆதவன் பார்க்கவில்லை...:)


  4. ARV Loshan Says:

    கலக்கல் யோகா.. வாய் விட்டு சிரித்து விட்டேன்..
    //குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். //
    ஹா ஹா.. முடியல..

    //படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)//
    இவ்வளவு சீரியசா எழுத எப்பிடி முடியுது?


  5. Nimalesh Says:

    gud one bro.. keep it up.... Vadivel joke vida ithu nalla ituke...lol


  6. swizram Says:

    //இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.//
    நல்லா சொன்னிங்க போங்க.....!!!
    சூரியாவுக்கு என்ன கேட்ட நேரமோ இப்படி எல்லாரும் காமெடி பீஸா
    ஆக்குரீங்கலே
    னு தான் வருத்தமா இருக்குது ;(


  7. //முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.
    //

    கிழவி ஆனாலும் உட மாட்டிங்க போல...


  8. Subankan Says:

    கலக்கல்!!!

    //முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.
    //

    அப்படி வந்தே இங்க சோறு தண்ணி இறங்குதில்லை, இதில பில்லா மாதிரி வேற வரணுமோ?


  9. Toto Says:

    ப‌ட‌மே ஒரு பெரிய‌ குறை.. அதுல‌ எங்க‌ நிறை..அப்புற‌ம் குறை.

    -Toto
    www.pixmonk.com


  10. Anonymous Says:

    Movie is ok... not as bad as villu or kuruvi... we can watch it once.


  11. இது ஒருவகை பின்நவீனத்துவ விமர்சனம். நன்றாக இருக்கின்றது , சிரித்தேன் சிரித்தேன்


  12. பாவம் விஜயும் விஜயகாந்தும்.


  13. Anonymous Says:

    LATCS................. ha ha ha ha........ aiyo.....hooooooo hoooooo........ I cant stop laughin


  14. //////சுவாசிகா said...
    நல்ல காமெடியான பதிவு..

    One of the article where I laughed all the way :)

    வாழ்த்துகள்...

    அன்புடன்,
    சுவாசிகா/////

    நன்றி சுவாசிகா


  15. /////தோழி said...
    ha ha ha

    nalla nirai kurai alasal. keep doing/////

    நன்றி தோழி


  16. ///// வேந்தன் said...
    நான் இன்னும் ஆதவன் பார்க்கவில்லை...:)/////

    பாருங்கள் பார்த்துவிட்டு நீங்களும் இப்படி ஒரு பதிவு போடுவீர்கள்


  17. /////LOSHAN said...
    கலக்கல் யோகா.. வாய் விட்டு சிரித்து விட்டேன்..
    //குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். //
    ஹா ஹா.. முடியல..

    //படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)//
    இவ்வளவு சீரியசா எழுத எப்பிடி முடியுது?/////

    ஏதோ நம்மளால முடிந்தது இவ்வளவு தான் லோஷன். ஆனால் பாருங்கள் கட்டாயமாக உதயநிதி அடுத்த வருடம் கதாநாயகனாக நடிப்பார்


  18. /////Nimalesh said...
    gud one bro.. keep it up.... Vadivel joke vida ithu nalla ituke...lol/////

    நன்றி நிமலேஷ்


  19. /////ரசிக்கும் சீமாட்டி said...
    //இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.//
    நல்லா சொன்னிங்க போங்க.....!!!
    சூரியாவுக்கு என்ன கேட்ட நேரமோ இப்படி எல்லாரும் காமெடி பீஸா
    ஆக்குரீங்கலே
    னு தான் வருத்தமா இருக்குது ;(/////

    என்ன செய்ய சூர்யா படம் பார்க்க போய் வடிவேல் படம் பார்த்திட்டு வர வேண்டியிருக்கு


  20. /////ஜெட்லி said...
    //முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.
    //

    கிழவி ஆனாலும் உட மாட்டிங்க போல./////

    வேற நாங்க என்னா நயன்தாரா கிட்ட நடிப்பையா எதிர்பார்த்து போறோம். அது அவருக்கே தெரியுமே தல


  21. ///// Subankan said...
    கலக்கல்!!!

    //முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.
    //

    அப்படி வந்தே இங்க சோறு தண்ணி இறங்குதில்லை, இதில பில்லா மாதிரி வேற வரணுமோ?/////

    வந்தா நல்லது என சொல்ல வந்தேன் சுபாங்கன்.


  22. /////Toto said...
    ப‌ட‌மே ஒரு பெரிய‌ குறை.. அதுல‌ எங்க‌ நிறை..அப்புற‌ம் குறை.

    -Toto/////

    வருகைக்கு நன்றி டொடொ உ.போ.ஒ. பார்த்திட்டு அடுத்து பார்த்த படமென்பதால் எனககும் படம் குறையாகதான் தெரிகிறது


  23. ///// Anonymous said...
    Movie is ok... not as bad as villu or kuruvi... we can watch it once. /////

    I don't think brother. this is in the same category or even worse then the kuruvi. can you imagine this film without vadivelu's comedy...


  24. /////வந்தியத்தேவன் said...
    இது ஒருவகை பின்நவீனத்துவ விமர்சனம். நன்றாக இருக்கின்றது , சிரித்தேன் சிரித்தேன்/////

    இந்த ”பின்“ நவீனத்துவம் எனக்கு இன்னும் விளங்கவில்லை வந்தி


  25. /////இறக்குவானை நிர்ஷன் said...
    பாவம் விஜயும் விஜயகாந்தும்/////

    ஏன் சூர்யாவை விட்டு விட்டீர்கள் நிர்ஷன் அவர்களை விட அதிக தூரம் பாய்கிறார் சூர்யா


  26. ////Mukilini said...
    LATCS................. ha ha ha ha........ aiyo.....hooooooo hoooooo........ I cant stop laughin////

    thanks mukilini


  27. sam10 Says:

    nalla vimarsanam...surya ku nalla punch...naducha elameh odiduma...


  28. haran Says:

    பதிவர்கள் அனைவரும் கிளி கிளியென்று கிழித்து தொங்கப்போட்ட ஆதவன் படம் எப்பிடிங்க ஹிட்டாச்சு