நூடுல்ஸ் (28-10-2009)
சென்ற முறை பதிவர் சந்திப்புக்கு பின்னர் எல்லாரிடமும் அதிகரித்த பதிவுகளின் எண்ணிக்கை இப்போ மீண்டும் குறைந்து விட்டன. திங்கட்கிழமை சந்திப்புக்கு பின்னர் மீண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணலாம்.
அடுத்த முக்கிய மாற்றம் ஒரு நாள் அணிக்குள் மீண்டும் தில்ஹார பெர்ணான்டோ வந்துள்ளது. எனினும் சங்கக்கார இவரை டெஸ்ட் அணிக்குள் சேர்க்க முயற்சித்து பயனளிக்கவில்லையாம். ஒரு முறை சர்வதேச ஒலிபரப்பாளர் போட்டியொன்றில் இவரை உலகத்தில் மிக சிறந்த “ஸ்லோ போல்” வீசும் வேகப்பந்துவீச்சாளர் என கூறியதும் எனது பக்கத்திலிருந்த நண்பன் ஏன் உலகத்திலே மிக சிறந்த நோபோல் வீச்சாளரும் இவரே என கூறியது நினைவுக்கு வருகிறது. இம்முறையாவது மனுஷன் நோபோல் போடாமல் பந்து வீசுவாரா என பார்ப்போம் ?
எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது ரொம்ப குறைவு. அப்போதெல்லாம் வாரத்திற்கு 3,4 நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகும். அப்படி காட்டப்படும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடகி ராணி ஜோசப்பின் பாடல்கள் பார்க்க நேரிடும். அவர் பாடுவதை பார்த்து பார்த்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன். காலப்போக்கில் அவரது பாடல்களை பார்ப்பது குறைந்து போனது. சென்றவாரம் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கவலையடைந்தேன். எங்களை இசையால் மகிழ்வித்த அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
சென்ற வாரம் ஆதவன் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். சூர்யாவிடம் வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் குருவியில் விஜய் பறப்பதை விமர்சித்த அளவுக்கு சூர்யா பறப்பதை யாரும் விமர்சிக்கவில்லை. காரணம் என்ன வென்று தெரியவில்லை
சக பதிவர் டாக்டர் ஜீவராஜின் அவர்களின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2009) திருகோணமலையில் நடைபெறவுள்ளது. எமது பதிவர்கள் சார்பில் ஜீவராஜ், அருணா தம்பதிகளின் திருமணத்திற்கு எமது முற்கூட்டிய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று வெற்றியின் விடியலில் லோஷன் கூறிய கவிதையொன்று கேட்டு சிரித்தேன். விடியல் கேட்காதவர்களுக்கு கவிதை இதோ..
நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
உன் தங்கையை பார்த்தேன்
"அடடா வடை போச்சே"
=============================================================
இலங்கை கிரிக்கட் அணியின் இந்திய சுற்றுலாவிற்கான அணிவிபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. சென்ற வாரம் உள்ளுர் போட்டியில் சதமடித்து தனது கழகத்துக்கு வெற்றி பெற்று தந்த மஹ்ருப்க்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடதக்கது. சனத் ஜயசூரிய இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிடின் அணியில் அவரது இடம் பறிபோக வாய்ப்புள்ளது. எப்போதும் இந்தியாவோடு சிறப்பாக விளையாடும் சனத் இம்முறையும் சாதிப்பார் என எண்ணலாம். அடுத்த முக்கிய மாற்றம் ஒரு நாள் அணிக்குள் மீண்டும் தில்ஹார பெர்ணான்டோ வந்துள்ளது. எனினும் சங்கக்கார இவரை டெஸ்ட் அணிக்குள் சேர்க்க முயற்சித்து பயனளிக்கவில்லையாம். ஒரு முறை சர்வதேச ஒலிபரப்பாளர் போட்டியொன்றில் இவரை உலகத்தில் மிக சிறந்த “ஸ்லோ போல்” வீசும் வேகப்பந்துவீச்சாளர் என கூறியதும் எனது பக்கத்திலிருந்த நண்பன் ஏன் உலகத்திலே மிக சிறந்த நோபோல் வீச்சாளரும் இவரே என கூறியது நினைவுக்கு வருகிறது. இம்முறையாவது மனுஷன் நோபோல் போடாமல் பந்து வீசுவாரா என பார்ப்போம் ?
எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது ரொம்ப குறைவு. அப்போதெல்லாம் வாரத்திற்கு 3,4 நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகும். அப்படி காட்டப்படும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடகி ராணி ஜோசப்பின் பாடல்கள் பார்க்க நேரிடும். அவர் பாடுவதை பார்த்து பார்த்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன். காலப்போக்கில் அவரது பாடல்களை பார்ப்பது குறைந்து போனது. சென்றவாரம் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கவலையடைந்தேன். எங்களை இசையால் மகிழ்வித்த அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
=============================================================
=============================================================
சக பதிவர் டாக்டர் ஜீவராஜின் அவர்களின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2009) திருகோணமலையில் நடைபெறவுள்ளது. எமது பதிவர்கள் சார்பில் ஜீவராஜ், அருணா தம்பதிகளின் திருமணத்திற்கு எமது முற்கூட்டிய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
=============================================================
இன்று வெற்றியின் விடியலில் லோஷன் கூறிய கவிதையொன்று கேட்டு சிரித்தேன். விடியல் கேட்காதவர்களுக்கு கவிதை இதோ..
நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
உன் தங்கையை பார்த்தேன்
"அடடா வடை போச்சே"
=============================================================
டிஸ்கி - ஆதவன் படம் பார்ப்பதை விட அயன் படத்தை மீண்டும் பார்க்கலாம்
சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன் விற்பனைகூடமொன்றிற்கு விஜயம் செய்த வினக்சின் தந்தை லினஸ் கட்டை விரலை காமித்து என்ன சொல்ல வருகிறார்?