திங்கள் நூடில்ஸ்
ரெண்டு நாளா உறவினர் ஒருத்தரின் திருமணம் காரணமாக பதிவுப்பக்கமே வரலை. இன்று தான் வந்தேன்.வந்து பதிவுகளை வாசித்தால் நம்ம சந்ருவின் வலை திருடப்பட்டுள்ளது கேள்விப்பட்டு அதிர்ந்து போய் எனது கடவு சொல்லையும் மாற்றி விட்டேன், நம்ம சேரன் கிரிஸ் போன்ற தொழில்நுட்ப ஸ்பெசலிஷ்ட்கள் அவருக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்
-----------------------------------------------------
-----------------------------------------------------
நேற்று என்னுடன் பஸ்ஸில் பயணித்தவர் என்னுடன் பேசும் போது அவர் புதிதாக இணைய இணைப்பு பெற்று கொண்டதாக தெரிவித்தார். நானும் ஆஹா நமக்கு கதைக்க ஒருத்தர் கிடைத்திட்டார் என நினைத்து சந்தோஷமாக நம்ம பதிவுலக கதையெல்லாம் சொன்னேன், கடைசியில் அவர் சொன்னது தான் எனக்கு பஸ்ஸிலிருந்து பாயலாம் போலிருந்தது, அவர் என்கிட்ட சொன்னது “ என்ன கனெக் ஷன் வாங்கி என்ன புண்ணியம் இப்ப தான் அரசாங்கத்தில ஆபாச இணைய தளங்களை எல்லாம் தடை செஞ்சிட்டாங்களே, ஆமா நீங்க எல்லாம் எப்படி பார்க்கிறீங்க என கேட்டார்” இன்டர்நெட் என்றால் இன்னும் இப்படி தான் என ரொம்ப பேர் எண்ணியிருக்காங்க.-----------------------------------------------------
-----------------------------------------------------
வெற்றி எப் எம்மின் கண்டி அலைவரிசை 101.5 ல் இப்ப முழுமையாக லக் எப் எம் தான் கேட்கிறது. அவங்க அலைவரிசை 101.3 என நினைக்கிறேன், முன்னர் கொஞ்சம் கொஞ்சம் கேட்டது. இப்ப முழுமையாகவே வெற்றியின் அலைவரிசையை அந்த வானொலி முற்றுகையிட்டு விட்டது. இதெல்லாம் விசாரிக்க யாருமில்லையா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
இதுவும் அப்படிதான் வெற்றியிலும் சூரியனிலும் கந்தசாமி திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வானொலி தாங்கள் தான் என கூறுகிறார்கள். நான் கேட்டு பார்த்த வரையில் வெற்றி எப் எம் மட்டுமே வீ கிரியேசன்ஸ் மற்றும் படத்தின் இலங்கை விநியோகஸ்தர்களிடமும் ஒப்பந்தமிட்டு இருக்கிறது. அப்படியானால் சூரியனில் பொய் சொல்லுகிறார்களா? அல்லது எங்களை ஏமாற்றுகிறார்களா?
-----------------------------------------------------
-----------------------------------------------------
விடுமுறையில் பசங்க படம் பார்க்க கிடைத்தது. அருமையான படம். தமிழில் கதாநாயகர்கள், கதாநாயகி, லவ் என புளித்து போன விடயங்கள் இல்லாத படம். சிறுவர்கள் பேசுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் இப்ப எல்லா சின்னதுகளும் இப்படி தான் பேசுது. ஆகவே இத ஏற்று கொள்ள தான் வேண்டும். -----------------------------------------------------
-----------------------------------------------------
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணிக்கு கமல் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவி போட போறாங்க. எப்படியும் வார நாள் என்பதால இத எனக்கு பார்க்க கிடைக்காது என்பது ரொம்ப கவலை. அந்த நிகழ்ச்சி பதிவிறக்க கிடைச்சா யாராவது சொல்லுங்க (அட்வான்ஸ் புக்கிங்)-----------------------------------------------------
-----------------------------------------------------
ஏழை சிறுவர்களுக்கு இலவச இதய ஆப்பரேஷன் செய்ய இருப்பதாகவும், தேவையானவர்கள் தொடர்பு கொள்ள சொல்லியும், இன்று எனக்கு நண்பனொருவனிடமிருந்து வந்த தகவல் கீழே. தகவல் உண்மை என்றால் உங்களுக்கு முடிந்த அளவுக்கு இந்த தகவலை பகிர்ந் கொள்ளுங்கள் (தகவலின் நம்பகத்தன்மை பற்றி என்னாபல் உறுதி கூற முடியாது)