அகதமாபாத் டெஸ்ட் போட்டி சதியா?

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாம் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 5 நாட்களும் நடந்த இப்போட்டி 7 பேரின் சதங்கள் மூலம் இரு அணிகளும் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. இதன் மூலம் இத்துடுப்பாட்ட வீரர்கள் தனிப்பட்ட பல மைல்கல்களை எட்டினர், ஆனால் இச்சாதனைகள் அவர்களது அணியின் வெற்றிக்கு உதவியதா என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தவர்களும் உண்டு. இந்த போட்டியில் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் இந்திய கிரிக்கட் சபையும், இப்போட்டிக்கு தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தவர்களுமாவார்.

கடந்த 5 வருடங்களாக அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளை எடுத்து பார்த்தால், அவுஸ்திரேலியாவில் கடந்த 5 வருடங்களில் 27  போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன, அதில் 2 போட்டிகள் மாத்திரமே வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன. தென்னாபிரிக்காவில் நடந்த 29 போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவடைந்திருக்கின்றன, இலங்கையில் நடந்த 22 போட்டிகளில் 4 வெற்றி தோல்வியற்ற பெறுபேற்றை தந்திருக்கின்றன. மாறாக இந்தியாவில் கடந்த 5 வருடமாக நடந்த 24 போட்டிகளில் 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன, இந்த தரவுகள் இன்னொரு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. முடிவை எட்டக்கூடிய முறையில் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டால் சில வேளைகளில் அப்போட்டிகள் 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடும், இவ்வாறு 3 அல்லது 4 நாட்களில்  போட்டி முடிந்து விட்டால் இறுதி நாளன்று விளம்பரம் செய்ய இயலாமல் இந்திய கிரிக்கட் சபைக்கு பெருந்தொகையான பணம் நட்ட மேற்படலாம், இதனாலே இந்த உப்பு சப்பற்ற பேட்டிங் விக்கட்டுகளை இந்திய கிரிக்கட் சபை ஊக்குவிக்கின்றது, மேலும் இதன் மூலம் துடுப்பாட் வீரர்களுக்கும் பல தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.



இப்போட்டியில் சச்சின் தனது 43 வது சதத்தை பெற்று கொண்டார், ஆனாலும் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்றிருப்பது 16 போட்டிகளில் தான் என்பது சற்று அதிர்ச்சியான உண்மை. ஒரு வீரர் சதம் பெற்று அவ் அணி போட்டியில் வெற்றி பெற்றதா என பார்த்த போது கிடைத்த தகவல்களில் முன்னணியில் இருப்பவர்கள் அவுஸ்திரேலியர்களே. இதில் கவாஸ்கர் பெற்ற 29 சதங்களில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது வெறும் 6 போட்டிகளில் மாத்திரமே. இங்கு முதலில் இருப்பது பொன்டிங் அவர் சதம் பெற்று அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற போட்டிகள் 27. அந்த தகவல்கள் கீழே

இடம்      வீரர்                                                வெற்றி பெற்ற போட்டிகள்
01          ரிக்கி பொன்டிங் -------------------------------27
02         ஸ்டீவ் வோ் ------------------------------------ 25
03         பிராட்மேன் -------------------------------------23
04.        ஹேடன் ----------------------------------------23
.................................................................................................
07.        சச்சின் டென்டுல்கார் ------------------------12
.................................................................................................
22       ராகுல் டிராவிட் ---------------------------------10
.................................................................................................
61      சுனில் கவாஸ்கர் --------------------------------6


இதன் மூலம் கிரிக்கட் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் தமக்கு தேவையான மாதிரி ஆக்கி கொண்டு நல்ல வருவாயை சம்பாதித்து கொண்டிருக்கின்றன.

நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.






36 Responses
  1. Unknown Says:

    In the final day of the last test sanga asked sachin to finish the game as draw ,than one hour before of finishing time.but sachin refused it and said sanga that he want to bat untill he finish his 43rd ton.thats how his last hundred archieved.so this clearly shows the sachins' dedication to the team.


  2. காத்திரமான சிந்தனை.. இந்தியாவில் இருக்கும் விளம்பர மீடியா மாபியா எதையும் செய்யும்......


  3. Unknown Says:

    எனக்கு சச்சினின் சதம் பற்றிப் பிரச்சினை இல்லை.
    அந்த இடத்தில் சச்சின் இல்லாமல் நானாக இருந்தாலும் எனது நதத்தைப் பெறுவதைத் தான் விரும்புவேன்...
    நான் அதில் சச்சினைக் குறை கூற மாட்டேன்...

    போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவது கவலையானது தான்...
    4, 5 ஆவது நாட்களில் ஆடுகளத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படாமல் போனது இலங்கைக்கு ஆப்பாக அமைந்தது..

    இந்திய கிறிக்கெற் சபை உலகில் பண் பொருந்திய சபைகளில் ஒன்று.
    உலகில் பிச்சைக்கார சபைகளில் ஒன்று இலங்கை...
    நாம் அவர்களின் தாளத்திற்கு ஆடத்தான் வேண்டும்.

    ஐ.பி.எல் .ல் இனிவரும் 10 ஆண்டுகளில் இலங்கை வீரர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த ஏராளமான மில்லியன்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்ற சேன்ற வருடம் (சென்ற வருடம் என்று தான் நம்புகிறேன்) இந்திய கிறிக்கெற் சபையும் இலங்கை கிறிக்கெற் சபையும் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....

    என்ன செய்ய...
    எல்லாமே பணம்....


  4. Subankan Says:

    //நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்//

    புரிஞ்சா சரி. இரண்டாவது மட்ச் நடக்கேக்க யாராவது ட்வீட்ல ஸ்கோர் அப்டேற் பண்ணினதா தெரிஞ்சுது, அப்புறம் டறியல்தான்


  5. Unknown Says:

    //Subankan said...
    //நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்//

    புரிஞ்சா சரி. இரண்டாவது மட்ச் நடக்கேக்க யாராவது ட்வீட்ல ஸ்கோர் அப்டேற் பண்ணினதா தெரிஞ்சுது, அப்புறம் டறியல்தான் //

    நான் போடுவேன்.....
    எனது தனிப்பட்ட மனித உரிமையை எதிர்த்து கருத்துக் கூற முடியாது தோழரே....


  6. //// sanjeevan said...
    In the final day of the last test sanga asked sachin to finish the game as draw ,than one hour before of finishing time.but sachin refused it and said sanga that he want to bat untill he finish his 43rd ton.thats how his last hundred archieved.so this clearly shows the sachins' dedication to the team////


    சஞ்சீவன் எனக்கு அரவிந்த இந்தியாவில் விளையாண்ட ஒரு போட்டி நினைவுக்கு வருகிறது. ஆட்டத்தை வெற்றி தோல்வியிலிருந்து காப்பாற்ற முழு நாளும் ஆடி 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது வெளிச்சம் போதவில்லை ஆட்டத்தை நிறுத்துவோமா என நடுவர் கேட்டதற்கு சம்மதித்த அரவிந்த மிகவும் சிறந்த வீரர்...


  7. ///என்ன கொடும சார் said...
    காத்திரமான சிந்தனை.. இந்தியாவில் இருக்கும் விளம்பர மீடியா மாபியா எதையும் செய்யும்..///

    நன்றி என்ன கொடுமை சார்


  8. //////கனககோபி said...
    எனக்கு சச்சினின் சதம் பற்றிப் பிரச்சினை இல்லை.
    அந்த இடத்தில் சச்சின் இல்லாமல் நானாக இருந்தாலும் எனது நதத்தைப் பெறுவதைத் தான் விரும்புவேன்...
    நான் அதில் சச்சினைக் குறை கூற மாட்டேன்...

    போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவது கவலையானது தான்...
    4, 5 ஆவது நாட்களில் ஆடுகளத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படாமல் போனது இலங்கைக்கு ஆப்பாக அமைந்தது..

    இந்திய கிறிக்கெற் சபை உலகில் பண் பொருந்திய சபைகளில் ஒன்று.
    உலகில் பிச்சைக்கார சபைகளில் ஒன்று இலங்கை...
    நாம் அவர்களின் தாளத்திற்கு ஆடத்தான் வேண்டும்.

    ஐ.பி.எல் .ல் இனிவரும் 10 ஆண்டுகளில் இலங்கை வீரர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த ஏராளமான மில்லியன்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்ற சேன்ற வருடம் (சென்ற வருடம் என்று தான் நம்புகிறேன்) இந்திய கிறிக்கெற் சபையும் இலங்கை கிறிக்கெற் சபையும் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..../////////

    இந்திய கிரிக்கட் சபையின் பணம் உலக கிரிக்கட்டை வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததே. ஊக்க மருந்து பிரச்சினையில் என்ன நடந்தது என நினைவிருக்கும், இப்போது இந்திய கிரிக்கட் சபை ரிவ்யு முறையை எதிர்க்கிறது


  9. /////Subankan said...
    //நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்//

    புரிஞ்சா சரி. இரண்டாவது மட்ச் நடக்கேக்க யாராவது ட்வீட்ல ஸ்கோர் அப்டேற் பண்ணினதா தெரிஞ்சுது, அப்புறம் டறியல்தா/////

    என்ன செய்ய சுபாங்கன் நம்மள கட்டுபடுத்தி பார்க்காம இருக்க முடியலையே. கிரிக்கட் நம்ம ரத்தத்திலயே ஊறிடுச்சே


  10. ///// கனககோபி said...
    நான் போடுவேன்.....
    எனது தனிப்பட்ட மனித உரிமையை எதிர்த்து கருத்துக் கூற முடியாது தோழரே/////

    அது (அஜித் ஸ்டைலில் வாசிங்க)..

    அது தான் கோபி நம்ம எப்படியும் போட்டிய பார்க்க தானே செய்வோம்..


  11. இந்திய அணியில் விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததால் சச்சின் செய்தது பிழையில்லை தோழரே


  12. சிந்திக்க வைக்கும் பதிவு. ஆனால் ரிக்கி,ஸ்டீவ் ஆகியோரின் வெற்றி சதவிகிதத்துக்குப் பின் வார்னே,மெக்ரா,கில்லி அகியோரின் பங்கும் இருக்கும். அதனால் ஒரே தட்டில் வைத்து எடை போடக் கூடாது


  13. Unknown Says:

    ///சஞ்சீவன் எனக்கு அரவிந்த இந்தியாவில் விளையாண்ட ஒரு போட்டி நினைவுக்கு வருகிறது. ஆட்டத்தை வெற்றி தோல்வியிலிருந்து காப்பாற்ற முழு நாளும் ஆடி 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது வெளிச்சம் போதவில்லை ஆட்டத்தை நிறுத்துவோமா என நடுவர் கேட்டதற்கு சம்மதித்த அரவிந்த மிகவும் சிறந்த வீரர்...///
    உங்களிடம் இருந்து இப்படி ஒரு மட்டமான செயலை எதிர்பார்க்கவில்லை. ஒருபோதும் ஒருவரை மட்டம்தட்ட இன்னொருவரை உயர்த்திப் பச்சைப் பொய் சொல்லக்கூடாது யோகா. இதோ அரவிந்தவின் அதிகூடிய ஓட்டங்கள் அடங்கிய Cricinfo பக்கம். நீங்கள் சொல்லும் 97 not out எங்கே என்று காட்டுவீர்களா??

    http://stats.cricinfo.com/ci/engine/player/48462.html?class=1;orderby=batted_score;template=results;type=batting;view=innings


  14. Unknown Says:

    ///n the final day of the last test sanga asked sachin to finish the game as draw ,than one hour before of finishing time.but sachin refused it and said sanga that he want to bat untill he finish his 43rd ton.thats how his last hundred archieved.so this clearly shows the sachins' dedication to the team///

    அப்படிக் கேட்கும்போது சச்சினுக்கு சதமடிக்கப் 13 ரன் தேவைப்பட்டது சஞ்சீவன். ஒரு நாள் முழுக்கப் போராடி அணியைக் காப்பாற்றியவர் சதமடிக்க நினைப்பது தவறா??? லாறா மூன்றாம் நாளும் ஆடி 400 அடிக்கலாம். இலங்கை மூன்றரை நாள் ஆடி 952 அடிக்கலாம். மைக்கல் கிளார்க் சச்சின் மாதிரியே போட்டியை முன்னுக்கு முடிக்காமல் சதமடிக்கலாம். சச்சின் அடித்தால் மட்டும்தான் தவறா????? என்ன நியாயம் இது. விளையாட்டு வீரர்கள் யாவருக்கும் தனிப்பட்ட சாதனைகளில் ஆர்வம் உண்டு. அதைத் தவறென்று யாரும் சொல்ல முடியாது. அத்தோடு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னம் கட்டாயம் போட்டியை முடித்தாக வேண்டும் என்று சட்டம் ஒன்றுமில்லை. (சச்சின் சதமடிக்கக் கூடாது என்று negative line வீசியதை மட்டும் சரியென்கிறீர்களா சஞ்சீவன்????)


  15. Unknown Says:

    பொண்டிங் 27 ல் வென்றார், ஸ்டீவ் வோ 25ல் வென்றால் என்றெல்லாம் கணக்குச் சொல்லலாம். ஆனால் டெஸ்ட் வெற்றிகளொன்றும் தனித்துப் பெறப்படக்கூடியவை அல்ல. சேவாக், ட்ராவிட், கங்கூலி, லக்ஷ்மன் ஆகியோர் அணிக்குள் நிலைபெறும் காலம் வரைக்கும் சச்சின்தான் இந்திய அணியைக் கொஞ்சம் அசாரின் துணையோடு தாங்கினார் என்பதை மறந்திடக் கூடாது. வோ,பொண்டிங் ஆகியோருக்கு பெரும்பாலும் அந்த நிலை இருந்ததில்லை. அதிலும் பொண்டிங் விளையாடிய முக்கால்வாசிக் காலத்தில் வோ சகோதரர்கள், ஹெய்டன், லாங்கர் என்று 25க்கு மேல் சதமடித்த ஜாம்பவான்கள் விளையாடியதையும், மெக்ராத, வோர்ன் விளையாடியதையும் மறக்கலாகாது.


  16. Unknown Says:

    இன்னொன்றையும் சொல்லிப் போகிறேன்.
    இந்தியா வென்ற டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் சராசரி 65.17, தோல்வியில் 36.29 ட்ரோகளில் 65.36

    அவுஸ்திரேலியா வென்ற போட்டிகளில் பொண்டிங்கின் சராசரி 62.08, தோல்விகளில் 36.08, ட்ரோவில் 60.12

    மேற்கிந்தியா வென்றதில் லாறாவின் சராசரி 61.02, தோல்வியில் 42.19, ட்ரோவில் 71.30.

    இப்படிப் பார்த்தால் வேறு செய்திகள் தெரிகிறதல்லவா நண்பர்களே. மூவருமே கிட்டத்தட்ட ஒரேயளவுதான் பங்களிக்கிறார்கள். வெற்றி தோல்விகளைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. இந்த முறையில் பார்த்தால் சங்ககாரா இவர்கள் எல்லோரையும்விட சிறந்த மட்ச் வின்னர். ஏனென்றால் இலங்கை வெல்லும் போட்டிகளில் இவரது சராசரி 75+... சனத்தின் சராசரி 48+... ஆனால் மேலோட்டமாகப் பார்த்தால் சனத் சங்காவைவிட நல்ல மட்ச் வின்னராகத் தெரிவார்

    (நான் சொன்ன இலக்கங்கள் பொய்யல்ல. cricinfo விளக்கமாக எல்லாம் சொல்கிறார்கள்)


  17. Unknown Says:

    நண்பரே....
    உங்கள் அனைத்து வாதங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
    எனது முன்னைய பின்னூட்டத்தில்
    //எனக்கு சச்சினின் சதம் பற்றிப் பிரச்சினை இல்லை.
    அந்த இடத்தில் சச்சின் இல்லாமல் நானாக இருந்தாலும் எனது சதத்தைப் பெறுவதைத் தான் விரும்புவேன்...
    நான் அதில் சச்சினைக் குறை கூற மாட்டேன்...//

    என்று குறிப்பிட்டிருந்தேன்.

    ஆனால்

    //(சச்சின் சதமடிக்கக் கூடாது என்று negative line வீசியதை மட்டும் சரியென்கிறீர்களா சஞ்சீவன்????) //

    என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    Outside off stump இல் பந்துவீசுவது எப்படி நெகற்றிவ் வகையாக ஆகும்?
    சச்சின் சதமடிக்கக் கூடாதல்ல அதன் நோக்கம்.
    சச்சினுக்கு 90 களில் அட்டமிழக்கும் பழக்கமொன்று இருக்கிறது.
    அதனால் சச்சினின் பொறுமையை சோதித்து ஆட்டமிழக்கச் செய்வதே அதன் நோக்கம்.

    நெகற்றிவ் பந்துவீச்சு என்றால் அதற்கு முதல்நாள் இலங்கை அணியின் ஓட்டவிகிதத்தைக் கட்டுப்படுத்த அமித் மிர்ஷா way outside leg stump இல் வீசிய பந்துகளைப் பாருங்கள்....
    அதுதான் நெகற்றிவ் வகை....


  18. Unknown Says:

    //Kiruthikan Kumarasamy said...
    பொண்டிங் 27 ல் வென்றார், ஸ்டீவ் வோ 25ல் வென்றால் என்றெல்லாம் கணக்குச் சொல்லலாம். ஆனால் டெஸ்ட் வெற்றிகளொன்றும் தனித்துப் பெறப்படக்கூடியவை அல்ல. சேவாக், ட்ராவிட், கங்கூலி, லக்ஷ்மன் ஆகியோர் அணிக்குள் நிலைபெறும் காலம் வரைக்கும் சச்சின்தான் இந்திய அணியைக் கொஞ்சம் அசாரின் துணையோடு தாங்கினார் என்பதை மறந்திடக் கூடாது. வோ,பொண்டிங் ஆகியோருக்கு பெரும்பாலும் அந்த நிலை இருந்ததில்லை. அதிலும் பொண்டிங் விளையாடிய முக்கால்வாசிக் காலத்தில் வோ சகோதரர்கள், ஹெய்டன், லாங்கர் என்று 25க்கு மேல் சதமடித்த ஜாம்பவான்கள் விளையாடியதையும், மெக்ராத, வோர்ன் விளையாடியதையும் மறக்கலாகாது. //

    சகோதரரே....
    மற்றவர்கள் செய்த பிழைகளைத் தானே நீங்களும் செய்கிறீர்கள்?
    சச்சினை உயர்த்துவதற்காக பொன்ரிங்கின் சாதனைகளை சிறிது தாழ்த்தப் பார்க்கிறீர்கள்...

    அனைவருக்கும் ஒரு கருத்து...
    நவ்ஜோத் சிதுவின் commentaries கேட்டிருந்தால் அவர் statics களை அருமையாக விபரிப்பார். அது கொஞ்சம் ஆபாசமானது கூட.

    Statistics are like miniskirts (or bikinis). What they reveal is tantalizing, but what they hide is crucial.

    அதைத் தான் சொல்கிறேன்...
    சதங்களும்,சராசரிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு துடுப்பாட்ட வீரரை கணிக்க முடியாது..


  19. ////kiruthikan Kumarasamy said...

    உங்களிடம் இருந்து இப்படி ஒரு மட்டமான செயலை எதிர்பார்க்கவில்லை. ஒருபோதும் ஒருவரை மட்டம்தட்ட இன்னொருவரை உயர்த்திப் பச்சைப் பொய் சொல்லக்கூடாது யோகா. இதோ அரவிந்தவின் அதிகூடிய ஓட்டங்கள் அடங்கிய Cricinfo பக்கம். நீங்கள் சொல்லும் 97 not out எங்கே என்று காட்டுவீர்களா?? /////

    http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/153364.html

    இதை வாசித்து பாருங்கள் தெரியும் கிருத்திகன் அரவிந்த இந்த போட்டியில் 98 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியை வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தினார், பின்னர் மீண்டும் வெளிச்சம் சரியாகியவுடன் ஆடுகளம் வந்து வீரர்கள் விளையாண்டனர், அதில் அரவிந்த சதம் பெற்றுக் கொண்டார்.

    நான் மட்டமான செயலை செய்யவில்லை, கிருத்திகன் உண்மையை தான் சொல்கிறேன், அப்போது அரவிந்த 98 ஓட்டங்களோடு இருக்கும் போது நடுவரிடம் வெளிச்சமின்மை என கூறியதை மிகவும் சிறப்பாக வர்ணனையாளர்கள் விவரித்தார்கள். அந்த போட்டியை நேரடியாக பார்த்தவன் என்னும் ரீதியில் சொல்கிறேன், அந்த போட்டியின் காணொளி கிடைத்தால் பாருங்கள், நான் சொல்வது பற்றி தெரியும்.


  20. ///kiruthikan Kumarasamy said...

    உங்களிடம் இருந்து இப்படி ஒரு மட்டமான செயலை எதிர்பார்க்கவில்லை. ஒருபோதும் ஒருவரை மட்டம்தட்ட இன்னொருவரை உயர்த்திப் பச்சைப் பொய் சொல்லக்கூடாது யோகா. இதோ அரவிந்தவின் அதிகூடிய ஓட்டங்கள் அடங்கிய Cricinfo பக்கம். நீங்கள் சொல்லும் 97 not out எங்கே என்று காட்டுவீர்களா?? ////

    கிருத்திகன்

    http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/153364.html

    என்னும் பக்கத்தில் உள்ள

    De Silva unselfishly took an offer of bad light when unbeaten on 98, though the skies brightened long enough for him to complete his hundred
    என்பதை வாசித்து பாருங்கள், நான் சொல்வது பொய்யில்லை என்பது தெரியும்.


  21. Unknown Says:

    யோகா, இந்தப் போட்டி எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளைக்குச் சற்று முன் நடந்த சம்பவம் அது. அதன் பின்னரும் வந்து குத்துக்கட்டைபோட்டு இலங்கை அந்தப் போட்டியைச் சமநிலை செய்தது. அரவிந்தவுக்குத் திரும்பி வரும் வாய்ப்பு இருந்தது. அதைவிட, அவர் ஆட்டமிழந்தால் இலங்கை தோற்றுவிடும் வாய்ப்பு அந்தப் போட்டியில் இருந்தது. அதனால் எப்படியாவது போட்டியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. இங்கே வெளிச்சமின்மை, தோல்விக்குரிய வாய்ப்பு எதுவுமே இல்லாதபோது, சச்சின் சதமடித்ததில் எந்தத் தவறுமே இல்லை என்பதே என்னுடைய கருத்து.


  22. Unknown Says:

    கனக கோபி...
    http://www.cricinfo.com/indvsl2009/content/story/435933.html
    இந்தப் பக்கத்தை வாசித்துப் பாருங்கள்.

    ///சச்சினை உயர்த்துவதற்காக பொன்ரிங்கின் சாதனைகளை சிறிது தாழ்த்தப் பார்க்கிறீர்கள்///
    அது என் நோக்கமில்லை நண்பரே. ஆனாலும், சச்சின் விளையாடும் அழுத்தங்களுக்கும் பொண்டிங் விளையாடும் அழுத்தங்களுக்கும் வித்தியாசமிருப்பதை ஒப்புக்கொண்டேயாகவேண்டும்.

    ///சதங்களும்,சராசரிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு துடுப்பாட்ட வீரரை கணிக்க முடியாது///
    இதே கருத்தைத்தான் சச்சின், லாரா, பொண்டிங், சங்கா, சனத் ஆகியோரின் சராசரி மூலம் சொல்லியிருக்கிறேன். என்னதான் சனத்தைவிட சங்காவுக்கு வெற்றிகளில் அதிக சராசரி இருந்தாலும், ஒரேயடியாக சனத்தை மட்ச் வின்னர் இல்லை என்று மட்டம்தட்டிவிட முடியாதில்லையா??? (ஆனால் சித்துவின் கருத்தோடு முழுக்க முழுக்க ஒத்துப்போக முடியாது. Statisticsம் ஒரு வீரரின் greatness ஐத் தீர்மானிக்கும் காரணி. அதை மட்டும் வைத்துத் தீர்மானிக்கக்கூடாதே ஒழிய, அதையும் மனதில் வைத்துத்தான் தீர்மானிக்க வேண்டும்)


  23. Unknown Says:

    // Kiruthikan Kumarasamy said...
    கனக கோபி...
    http://www.cricinfo.com/indvsl2009/content/story/435933.html
    இந்தப் பக்கத்தை வாசித்துப் பாருங்கள். //

    இந்தப் பக்கத்தை வாசிக்கச் சொன்ன அர்த்தம் விளங்கவில்லை.

    //He walked across to a delivery so wide it would have been called in an ODI, and flicked it to the square-leg boundary to get into the 90s. //

    இதைச் சொல்கிறீர்களா?
    மத்தியூஸ் வீசிய அந்தப் பந்து ஒருநாள்ப் போட்டிகளில் அகலப்பந்து என்று சித்தார்த் மொங்கா சொல்கிறார் என்கிறீர்களா?

    நாங்கள் cricinfo வை crapinfo என்றுதான் அழைப்போம்.

    இலங்கை அணியை மட்டம் தட்டுவது இதொன்றும் புதிதல்ல.

    திலான் சமரவீர ரெஸ்ற் போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருந்தபோது இதே கிறிக்கின்போவில் தான் How good is Samaraweera? என்றொரு ஆக்கத்தைப் போட்டு ஏராளமான இலங்கையர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.
    ( http://blogs.cricinfo.com/fromeditor/archives/2009/08/how_good_is_samaraweera.php )

    Is Sambit Bal an indian என்பது தான் இலங்கையை ஆதரிக்கும் அல்லது நடுநிலையாளர்கள் பலர் எழுப்பிய கேள்வி.....

    கிறிக்கின்போவில் இலங்கை சம்பந்தமான, இந்தியா சம்பந்தமான ஆக்கங்களை ஆதாரமாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    சனத்தை விட சங்காவை போட்டியை வென்று கொடுப்பவர் என்று யார் சொன்னது?
    கிறிக்கெற உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிறிக்கெற் வீரர் (கவனிக்க கிறிக்கெற் வீரர். துடுப்பாட்ட வீரர் அல்ல) என்று நான் சொல்கிறேன்....


  24. Unknown Says:

    ///கிறிக்கெற உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிறிக்கெற் வீரர் (கவனிக்க கிறிக்கெற் வீரர். துடுப்பாட்ட வீரர் அல்ல) என்று நான் சொல்கிறேன்..../// அது உங்கள் கருத்து. அதைப் பிழையென்று நான் வாதிடமுடியாது. நான் இங்கே வாதிடுவது சச்சின் இந்தப் போட்டியில் பெற்ற சதம் பற்றிய ஒருதலைப்பட்சமான விமர்சனங்களுக்கு எதிராகவே.

    இன்னொன்று கனககோபி... எனக்குச் சச்சினைப் பிடிக்கும். ஆனால் இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் துடுப்பாட்டம் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் போய்ச்சேரப்போவது பொண்டிங்கிடமே. நிச்சயமாக அவர் சச்சினை முந்துவார். அப்படி அவர் முந்துவதற்கு அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. அவரை நான் மட்டம் தட்ட முயலவில்லை. என்னைப் பொறுத்தவரை சில முட்டாள்தனமான ஒப்பீடுகள் பிடிப்பதில்லை. அதனால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.


  25. Anonymous Says:

    Sachin is
    1.Selfish

    2.Scoring Against weaker Oppostions

    3.Failing in pressure situation


  26. Anonymous Says:

    I really believe Sachin is a legend and the best cricketer, but it doesn't really mean he is perfect. I am not a great fan of Sachin and I completely agree with you. He is just like any other cricketer under pressure.

    I really hate Sachin see playing both forms of the game, just to score more runs and make his records stronger. He is old enough to quit from one form of the game and try to play in Test cricket rather playing two ODI's and missing the next two ODI's for the past year.


  27. Anonymous Says:

    Sachin tendulkar is a great batsman with the max number of 100's. But do u know he is not in the wisden 100 bcos none of his 100's were match winning. Sachin plays well in one days, but just in the first innings. The only time he played and has won matches for india in second innings is in sharjah and partly in the wc. He cannot play under pressure specially when wickets are down, as you saw in the first one day against england during chasing. YOu need people with a big heart to play at number 4. Thats the reason he doesnt want to play at that position. Chappel wanted him to bat at that position.


  28. Anonymous Says:

    During chasing, numbr 4 is a very crucial position, and is a match wining position, players like rahul dravid, yuvraj, dhoni, inzamam, even gibbs (although he was an opener) have played at umber 4 in pressure situations an won matches. Sachin tendulkar does not have the heart to play at that position and gets out when situation starts worseninng. Yuvraj has played mch less games that tendu, but he still has won more matches, people argue thats bcos tendulkar opens he cant bat for 50 overs. all i want to say is, just bcos sachn has max number of runs doesnt mean he is a match winner. The problem wid people in our country is that if someone like Kapil speaks the truth, that sachin needs to play like dhoni (1st test vs endland), where he stood his ground wid tailenders, people will come on streets in favor of sachin, Thats the reason y our cricket team is losing. They cant hear the truth. The reality is that the world laughs on BCCI and indian public for supporting tendulkar, who in his career of 18 years gives up incrucial situations. I believe sachin has the capability of hhitting 500 runs, even against australia, but that match will be a draw. He cant play an innings like VVS laxman in calcutta against australia (281). Instaed of taking our flags on street and burning effigy of people like kapil and Chappel, think abt it, thy might be right.


  29. Anonymous Says:

    Manjrekar had based his case over 51 ODIs, in which Tendulkar's batting average was 62.10 in 24 innings when the side batted first. The same average was as low as 26 in 27 innings in which India batted second and Manjrekar wrote in his column that this was hurting the side.

    The cricketer-turned-commentator said Tendulkar got away with it because of his stature and felt the batsman had become an elephant in the dressing room that no one wanted to talk about.

    Talking to reporters in the capital on Thursday, Manjrekar said he would not disown the statement because Tedulkar indeed was struggling in that phase.

    "That was a phase when he was too cautious and tension could be seen on his face. He was afraid of failure and getting out. That seems to have disappeared now and he is playing with more freedom," Manjrekar said.


  30. Anonymous Says:

    kruthihan kumarasamy.

    if you are still not able to judge about sachin, please grow up.

    There is no fire without the smoke.

    Just think why most critics or cricket veterans blame sachin and asking him to retire?


  31. Unknown Says:

    பெயரிலிகளுக்கும் கிருத்திகனுக்கும்...
    சச்சின் என்பவர் உலகில் தோன்றிய தலைசிறந்த தடுப்பாட்ட வீரர்களுள் ஒருவர்....

    யார் என்ன வொன்னாலும் அதுதான் உண்மை....

    ஒரு வீரரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது....

    சச்சின் சச்சின் தான்... பொன்ரிங் பொன்ரிங் தான்.... டொன் பிரட்டமன் டொன்பிரட்மன் தான்......


  32. Admin Says:

    //பெயரிலிகளுக்கும் கிருத்திகனுக்கும்...
    சச்சின் என்பவர் உலகில் தோன்றிய தலைசிறந்த தடுப்பாட்ட வீரர்களுள் ஒருவர்....

    யார் என்ன வொன்னாலும் அதுதான் உண்மை....

    ஒரு வீரரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது....

    சச்சின் சச்சின் தான்... பொன்ரிங் பொன்ரிங் தான்.... டொன் பிரட்டமன் டொன்பிரட்மன் தான்......//

    கோபி கோபிதான். கறுப்பு நமிதா கறுப்பு நமீதாதான் அப்படியும் சொல்லலாம்.


  33. Unknown Says:

    //சந்ரு said...
    //பெயரிலிகளுக்கும் கிருத்திகனுக்கும்...
    சச்சின் என்பவர் உலகில் தோன்றிய தலைசிறந்த தடுப்பாட்ட வீரர்களுள் ஒருவர்....

    யார் என்ன வொன்னாலும் அதுதான் உண்மை....

    ஒரு வீரரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது....

    சச்சின் சச்சின் தான்... பொன்ரிங் பொன்ரிங் தான்.... டொன் பிரட்டமன் டொன்பிரட்மன் தான்......//

    கோபி கோபிதான். கறுப்பு நமிதா கறுப்பு நமீதாதான் அப்படியும் சொல்லலாம். //

    ஏனய்யா இந்தக் கொலைவெறி?


  34. http://spiritual-indian.blogspot.com/2009/11/blog-post_30.html......


    இதை பார்க்கவும் உடனே


  35. Nimalesh Says:

    wat ever said & that sachi he is best ....


  36. Anonymous Says:

    What do you mean?