நூடுல்ஸ் (11-11-2009)

எனது வலையின் பெயரான யோ வாய்ஸ் என்பதை யோ வொய்ஸ் (யோ Voice)என மாற்ற சொல்லி சில பதிவுலக நண்பர்கள் கூறியதன் விளைவாக அதன் பெயரை இன்று முதல் யோ வோய்ஸ் என மாற்றவுள்ளேன். "என்னடா இவன் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறான்" என யாரும் என்னை கும்மிவிட வேண்டாம். 


“யோ பக்கங்கள் “ என அல்லது ”யோ” என பெயர் வைக்கத்தான் ஆரம்பத்தில் நினைத்தேன், பெயர் மாற்றம் பதிவர்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்தும் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.




எனக்கு கூகுல் வேவ் அழைப்பொன்றை அனுப்பிய ஆதிரைக்கு நன்றி, ஆனால் இதுவரை சுபாங்கன் மாத்திரமே என்னுடன் ஒரு முறை அலையடித்துள்ளார். முக்கியமான விடயம் என்னால் இன்னும் 10 பேருக்கு கூகுல் வேவ் அழைப்பு அனுப்பலாம். இதுவரை யாருக்கும் நான் அழைப்பு விடுக்கவில்லை. யாருக்காவது கூகுல் வேவ் அழைப்பு வேண்டுமானால் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள். முதல் 10 பேருக்கு கூகுல் வேவ் அழைப்பை அனுப்புகிறேன்.




பலம் பொருந்திய இந்திய அணியை அனுபவமற்ற அவுஸ்திரேலியா போட்டு தாக்கு தாக்கென்று தாக்கி விட்டது. சச்சின் 175 ஓட்டங்களை பெற்றும் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போனது கவலையான விடயமே. உலகத்தின் மிக நேர்த்தியான துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் முதன்மையானவர் என்பதில் யாருக்கும் வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால் கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுக்கும் ஆற்றலை கொண்ட வீரராக அவரை ஏற்றுக் கொள்ள இயலாது. அரவிந்த டீ சில்வா, சவ்ரவ் கங்குலி, லாரா, பொன்டிங் போன்ற வீரர்கள் சச்சின் அளவுக்கு நேர்த்தியாக விளையாடாவிடினும் மெட்ச் வின்னர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். மெட்ச் வின்னர்கள் என்பது தான் மட்டும் சிறப்பாக விளையாடி போட்டியை வென்று கொடுப்பது என்பதல்ல. தன்னோடு விளையாடும் வீரர்களையும் தனது விளையாட்டால் ஊக்குவித்து வென்று கொடுப்பது என நினைக்கிறேன். அன்றைய போட்டியில் சச்சின் யாராவது ஒரு வீரரை தன்னோடு இறுதி வரை வைத்திருந்து வெற்றி பெற வைத்திருந்தால் அவரது சதத்திற்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு. இந்த இடத்தில் தான் அவுஸ்திரேலியா அணி வீரர்கள் முன்னனியில் இருக்கிறார்கள். கடைசி வரை விட்டுக் கொடுக்காமல், தான் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்க வேண்டும் என்னும் மனப்பாங்கை புதிதாக விளையாட வரும் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரனும் கொண்டிருப்பது அவர்களது பலமே.


இரண்டாவது பதிவர் சந்திப்பை ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு என்னாலான முழு உதவியையும் செய்ய காத்திருக்கிறேன். இரண்டாவது பதிவர் சந்திப்புக்கு எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள். எனது வலையிலே இரண்டாக இருந்த பின் தொடர்வர்களின் எண்ணிக்கை இப்போது 62 ஆக மாறியிருப்பதற்கான காரணம் முதலாவது பதிவர் சந்திப்பு என நினைக்கிறேன். கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து தற்போது வரை எனது பக்கத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது, இதற்கெல்லாம் காரணம் எங்களை வெளியே கொண்டு வந்த வெற்றிகரமான முதலாம் பதிவர் சந்திப்பு என நினைக்கிறேன்.


இலங்கையின் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலே இடம் பெறும் காலை நிகழ்ச்சி ஒன்றை நான் அலுவலகத்திற்கு வர தயாராகி கொண்டிருக்கையில் பார்ப்பது வழக்கம். அக்கலந்துரையாடலில் தினமும் ஒரே நேயரே முதலாவதாக தொலைபேசியில் பேசுவது வழக்கம். இப்போதெல்லாம் எங்களது நண்பர்கள் கேட்கும் கேள்வி, ”இவர் தொலைபேசி அழைப்பெடுக்கிறாரா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் இவருக்கு அழைப்பெடுக்கிறாரா?” என்பதுதான்.


தினமும் எனது காலை பொழுது வெற்றி FM இன் விடியலோடு ஆரம்பிப்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. பதிவர்களிடம் பிரபலமான பச்சைப்பாலகர் நகைச்சுவையை லோஷன் வெற்றியின் காலை நிகழ்சியிலும் சொல்வது அவரை இன்னும் பிரபல்யமாக்கும் என நினைக்கிறேன். 


மூஞ்சிப்புத்தகத்தில் ”அகில உலக பச்சை பாலகர் சங்கம்” குழு ஆரம்பித்துள்ளேன். யார் வேண்டுமானாலும் வந்து இணைந்து பச்சை பாலகனாக மாறலாம் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.


சென்ற முறை விஜய் படம் போட்டால் ஹிட்ஸ் அதிகரிக்குமா?” என்னும் கேள்வியோடு போட்ட ”நூடுல்ஸ்” பதிவு பதிவு போட்ட 2 மணித்தியாலத்திலேயே தமிழிஷில் முன்னணி பதிவாகியது. விஜய்க்கு பதிவுலகில் அதிகம் ரசிகர்கள் இருப்பதை காட்டியது. விஜய்க்கு அடுத்து குறுகிய நேரத்தில் அதிகமாக எனக்கு ஹிட்ஸ் கிடைத்த பதிவு ”பதிவர் வந்திக்கு பிறந்தநாள்”.


ஆகவே என்னை பொருத்த வரையில் ”விஜய்க்கு அடுத்து வந்தி” தான் அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.


என் நண்பியொருத்தி கூறிய கவிதை அல்லது ஹைக்கூ அல்லது வசனம். எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம்.


”நான் என்றைக்கும்
தீவாகவே இருக்கிறேன்
என்னை சுற்றி 
எல்லாமே நீயாகவே
இருப்பதால்”


எனக்கு பிடித்த WWE வீரர் படிஸ்டா (BATISTA THE ANIMAL)





பிற்சேர்க்கை - கூகுல் வேவ் எனது கணக்கிலிருந்து யாருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை. காரணம் தேடியபோது கூகுலுக்கு இப்போதைக்கு அதிகரித்த கூகுல் வேவ் அழைப்புகள் காரணமாக இப்போதைய அழைப்புகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் தான் எங்களுக்கு அச்சேவை வழங்கப்படுமாம். வழங்கிய மறு கணமே மின்னஞ்சல் முகவரி தந்த அனைவருக்கும் அழைப்பை அனுப்புகிறேன் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அழைப்பு அனுப்புகிறேன் என கூறி என்னால் அவ் அழைப்பை அனுப்பவியலாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.



30 Responses
  1. Admin Says:

    //யாருக்காவது கூகுல் வேவ் அழைப்பு வேண்டுமானால் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள். முதல் 10 பேருக்கு கூகுல் வேவ் அழைப்பை அனுப்புகிறேன்//

    நான்தான் முதல் எனக்கும் அனுப்பிவிடுங்கள்.


    //இரண்டாவது பதிவர் சந்திப்பை ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். ..................//


    எல்லோரும் ஒன்றிணைந்து இரண்டாவது பதிவர் சந்திப்பை சிறப்பாக நடாத்த ஏட்பாடுகளைச் செய்வோம்.


    //இலங்கையின் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலே இடம் பெறும் காலை நிகழ்ச்சி ஒன்றை.............//

    இலங்கையின் தொல்லைக்காட்சிகளைப்... மன்னிக்கவும் தொலைக்காட்சிகளைப் பற்றி பேசவேண்டாம். மிரட்டல் வரும் கவனமாகப் பார்த்துப் பேசுங்கள்.


    //மூஞ்சிப்புத்தகத்தில் ”அகில உலக பச்சை பாலகர் சங்கம்” குழு ஆரம்பித்துள்ளேன்//


    நானும் வந்து சேந்துக்கிறேன்.

    //சென்ற முறை விஜய் படம் போட்டால் ஹிட்ஸ் அதிகரிக்குமா?” என்னும் கேள்வியோடு போட்ட ”நூடுல்ஸ்” பதிவு பதிவு போட்ட 2 மணித்தியாலத்திலேயே தமிழிஷில் முன்னணி பதிவாகியது. //


    நம்ம ஆளாச்சுதே அதுதான்.


    //”விஜய்க்கு அடுத்து வந்தி” தான் அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.//


    என் படம் போட்டுப்பாருங்க விஜய்க்கு அடுத்ததா நான்தான்.


  2. Admin Says:

    மின்னஞ்சல் முகவரி shanthruslbc@gmail.com


  3. Unknown Says:

    அழைப்பு அனுப்ப வசதி இருந்தும் எனக்கு துவரை அழைப்பு அனுப்பாத உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன்...

    பெயர் மாற்றத்திற்கு நன்றி.
    ஆனால் நீஞ்கள் முதலில் தமிழில் பெயர் வைக்க விரும்பியிருந்தால் யோவின் குரல்கள் என்று வையுங்கள்... தமிழ் நன்றாகத் தான் இருக்கிறது.
    (profile இலும் மாற்றலாமே?)

    சந்ரு அண்ணா சொன்னதைப் போல தொல்லைக் காட்சிகள் பற்றிக் கதைப்பதை விட கதைக்காமல் விடுவது மேல்.
    நாங்களும் எவ்வளவு கதைச்சிக் கொண்டு இருக்கிறம் அவங்களும் தாங்கள் இருக்கிற மாதிரியே இருக்கிறாங்கள்.
    நாங்களும் விடுறதில்லை எண்டு தான் இருக்கிறம்.

    இந்தியாவை விடுங்கள்... தலைக்கனம் கூடினால் இதுவல்ல இன்னமும் நடக்கும்...


  4. நண்பருக்கு வணக்கம்,

    எனது முகவரிக்கு கூகிள் வேவ் அழைப்பிதழ் அனுப்பவும்.

    sang.nilavan@gmail.com


  5. எனக்கு அனுப்புங்க அழைப்பு!


  6. //ஆனால் கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுக்கும் ஆற்றலை கொண்ட வீரராக அவரை ஏற்றுக் கொள்ள இயலாது//


    தங்களின் இந்த கருத்தை நான் மறுக்கிறேன் நண்பரே. ஆட்டத்தின் தொடக்கம் முதல் ரன் ரேட் விகிதத்தை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் 47 வது ஓவர் வரை விளையாடி விட்டுதான் அன்று சச்சின் ஆட்டம் இழந்தார்.கடைசி 5 விக்கட்டுகள் 15 ஓட்டங்கள் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்ததும் அவர் தலையில்தானா ? சுரேஷ் ரெயினாவுடனான சிறந்த இணை ஆட்டத்தையும் மறுக்க முடியாது.பதற்றத்துடன் ஆடிய ஜடேஜாவுக்கு ஆலோசனை கூறி ஆட வைத்ததும் அன்று சச்சின்தான் .பந்து வீச்சின் இடையே பலமுறை அவர் ரெயினா,ஜடஜவுடன் நடத்திய பேச்சுக்கள் சான்று.

    மள மளவென அடித்து பாதியில் ஆட்டமிழந்து செல்வது வேறு.எதிர் முனையில் வரிசையாக விக்கட்டுகள் வீழ்ந்தபோதும் மறுமுனையில் நின்று அதே சமயம் ரன் ரேட் விகிதம் குறையாமல் 47 ஓவர் விளையாடுவதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்க்கறீர்கள்? 175 ஓட்டங்கள் எடுத்து போக ,ஜெயிப்பதற்கு வேண்டிய மீதி 15 ஓட்டங்களையும் அவரேதான் அடித்து கொடுக்க வேண்டுமெனில் அணியில் மற்றவர்கள் எதற்காக? கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்பதாகத்தான் நினைவு :-)


  7. Ramesh Says:

    எனக்கும் அனுப்புங்க
    இலவசம் எண்டா ஆசை தான் எல்லோருக்கும்
    ramesh
    msrames@gmail.com


  8. Unknown Says:

    appadiyae nammaku konjam invite pannunga...arunkumarme@gmail.com


  9. Anonymous Says:

    please send me the google wave invitation . ambiatni@gmail.com


  10. பொதுவா வாய்ஸ்ன்னுதானே சொல்வோம்..

    கவிதை தூள்..நண்பிகிட்ட சொல்லிடுங்க..

    வந்திய விஜயோட போட்டிக்கு விட்ட உம்மை..


  11. ஏன் இந்தப் பெயர் மாற்றம் ? எந்தப் பெயர் என்றாலும் நாங்கள் வருவோம்.

    எனக்கு அலையடிக்க பஞ்சியாக இருக்கின்றது.

    ஆஸி என்றைக்கும் தன்னை சாம்பியனாக நிரூபிப்பதில் முதன்மையானது.

    இரண்டாவது சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

    என்னுடைய சங்கத்தில் நானும் இணைந்துள்ளேன்

    என்னை விஜயுடன் ஒப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    உங்கள் நண்பியின் கவிதை நன்றாக இருக்கின்றது ஆனால் ஒரு சந்தேகம் அவரைச் சுற்றியிருப்பவர் தசாவதாரம் கமல் போல் பல அவதாரம் எடுப்பவரா? ஏனென்றால் ஒருவரே எப்படி இன்னொருவரைச் சுற்றி இருக்கமுடியும். கவிதைக்கு பொய் அழகு

    படிஸ்டாவின் உடல்வாகு கனககோபிபோல் உள்ளது


  12. எனக்கும் ஆதிரை அழைப்பு அனுப்பினார், ஆனால் என்னால் வேறு யாருக்கும் அழைப்பு விட அழைப்பு இல்லை. :(((
    உங்கள் அழைப்பில் அவ்வாறான வசதி இருந்தால் veenthan@gmail.com ஒன்று அனுப்புங்கோ.


  13. /////யாருக்காவது கூகுல் வேவ் அழைப்பு வேண்டுமானால் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள். முதல் 10 பேருக்கு கூகுல் வேவ் அழைப்பை அனுப்புகிறேன்.////

    enakkum anuppungal YAGA...
    praveentr9@gmail.com


  14. Subankan Says:

    யோ வொய்ஸ் - ஸ்வீட் வொய்ஸ்


  15. Subankan Says:

    கூகுல் வேவ் அழைப்பை எம்மால் அனுப்ப முடியாது. அலை மட்டும்தான் அடிக்கலாம்


  16. Subankan Says:

    10,000 ஹிட்ஸ் பெற்றதற்குப் ட்றீட் எப்போ?


  17. Subankan Says:

    ஹிட்ஸ் மன்னன் வந்திக்கு வாழ்த்துக்கள். என்னை மாதிரி நயன்தாராவை வம்புக்கு இழுத்துப் பாருங்கள். ஹிட்ஸ் மழை பொழியும்


  18. யோ...அஜித்தை ட்ரை பண்ணி பார்க்கலாமே??


  19. Shiva Says:

    Can you please send me one


  20. Shiva Says:

    Please send me to pshiva@gmail.com


  21. Admin Says:

    உங்களை இங்கே அழைக்கின்றேன் http://shanthru.blogspot.com/2009/11/keelvikkenna-pathil.html தொடர் பதிவுக்காக


  22. Anonymous Says:

    My Id is m.e.vasanth@gmail.com.Pls sent the Google Wave invitation.


  23. AmAlAn Says:

    my mail id im1lyme@gmail.com thank you


  24. Free Radical Says:

    iamfreeradical@gmail.com please send wave to this id.

    thanks in adv


  25. பகீ Says:

    "யோ வோய்ஸ்" யோ வாய்ஸ் இனை விட நல்லா இருக்கு..


  26. Please send me the invitation to me

    Poonkundran@gmail.com


  27. Anonymous Says:

    Vijay kku appuram v'aa'ndhi


  28. Anonymous Says:
    This comment has been removed by the author.

  29. மன்னிக்கவும் நண்பர்களே எனக்கு இன்றுதான் கூகுல் வேவ் அழைப்பு அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டது, அதுவும் 8 பேருக்கு மாத்திரமே அனுப்பலாம். ஆகவே பின்னூட்டத்தில் குகூல் வேவ் விண்ணப்பித்த முதல் 8 பேருக்கு அழைப்பை அனுப்பியுள்ளேன். (முதல் 8 பேரில் ஏற்கனவே இவ்வசதியியுள்ளவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை.)

    இவர்கள் தான் என்னால் கூகுல் வேவிற்கு அழைக்கப்பட்டவர்கள்.

    01. sang.nilavan@gmail.com - NIlavan Sangaiah

    02. வால்பையன்

    03. msrames@gmail.com - Ramesh

    04. arunkumarme@gmail.com - Arun

    05. praveentr9@gmail.com - மருதமூரான்

    06. pshiva@gmail.com - pshiva

    07. m.e.vasanth@gmail.com

    08. im1lyme@gmail.com - AmAlAn

    மற்றைய நண்பர்களுக்கு அனுப்பவியலாமல் போனதற்கு மன்னியுங்கள் நண்பர்களே..


  30. Poonkundran@gmail.com
    iamfreeradical@gmail.com
    im1lyme@gmail.com

    ஆகியோருக்கும் கூகுல் வேவ் அழைப்பினை அனுப்பியுள்ளேன்.