பொசிடிவ் அப்ரோச்

எதையும் பொசிடிவாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு உதாரண கதை. எனக்கு வந்த மின் மடல். தமிழ் படுத்தியிருக்கிறேன்.


முதலில்


தந்தை : நான் தெரிவு செய்யும் பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும்.
மகன் : அதெல்லாம் முடியாது எனது மனைவியை நானே தெரிவு செய்வேன்.
தந்தை : சரி, ஆனால் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண் பில் கேட்சின் மகளடா
மகன் : அப்படியானால் சரி அப்பா


அடுத்து


தந்தை : உங்களது மகளுக்கு சிறந்த கணவன் எனது மகனே.
பில் கேட்ஸ் : ஆனால் எனது மகள் இன்னும் திருமண வயதை அடையவில்லை. மிகவும் சின்ன பெண்
தந்தை : ஆனால் என் மகன் உலக வங்கியின் உப தலைவர் பதவியிலிருக்கிறான்.
பில்கேட்ஸ் : அப்படியானால் சரி அவர்களை கட்டி வைப்போம்.


இறுதியில்


தந்தை : எனது மகனை உங்களது உலக வங்கியில் உப தலைவராக மும் மொழிகிறேன்.
 உலக வங்கி தலைவர் : ஆனால் ஏற்கனவே எங்களுக்கு தேவையான அளவுக்கு உப தலைவர்கள் இருக்கிறார்களே..
தந்தை : ஆனால் நான் சொல்லுபவன், பில் கேட்ஸின் மருமகன்.
உலக வங்கி தலைவர் : அப்படியானால் சரி அவரை உப தலைவராக ஆக்குகிறேன்.


இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் என்னிடம் எதுவுமில்லை என எண்ணாமல் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்.


9 Responses
 1. Subankan Says:

  எனக்கு ஒரு மண்ணும் தெரியவரவில்லை. நான் தான் ப.பா


 2. எனக்குப் போட்டியாக ஒரு மொழிபெயர்ப்பாளன் வந்துவிட்டார்... கிர்... கிர்... கிர்....

  அசத்தல் யோ.......................


 3. இப்படி ஒரு அப்பன் எனக்கு கிடைக்கலையே!


 4. kethees Says:

  அது சரி என்னத்தை சொல்ல வாரீங்க?


 5. //தந்தை : ஆனால் என் மகன் உலக வங்கியின் உப தலைவர் பதவியிலிருக்கிறான்.
  பில்கேட்ஸ் : அப்படியானால் சரி அவர்களை கட்டி வைப்போம்.//

  adappaavigalaa?


 6. Balavasakan Says:

  "அப்பன்" எண்டா அப்பன் தான்


 7. அசத்துறிங்க யோகா


 8. எனக்கு இப்டி ஒரு நைனா கிடைக்கவில்லையே..........


 9. ilangan Says:

  ஆகா நானும் இதை முயற்சி பண்ணிப் பாப்பம் . பலனை பிறகு சொல்லுறேன்.
  ஆகா அருமை நன்றி அண்ணா வாழக்கையில் துவண்டு போயிருந்த என்னை தூக்கி நிறுத்திவிட்டீங்கள் இதை மாதிரி ஒரு ஐடியா தந்து. நன்றி நன்றி