பிடிக்கும் ஆனால் பிடிக்காது


சுபாங்கன் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. யாராவது என்னை இந்த பதிவுக்கு கூப்பிட மாட்டார்களா என நினைத்திருந்தேன். நல்ல வேளை சுபாங்கன் அழைத்துவிட்டார், அப்படி அவர் அழைத்திருக்காவிடினும் நானே “தொபுகடீர்“ என்று இந்த தொடர் பதிவில் குதித்திருப்பேன். எனக்கு பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் சொல்ல வாய்ப்பு கொடுத்த சுபாங்கனுக்கு நன்றிகள்.


அரசியல் தலைவர்


பிடித்தவர் - நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ
தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றியதற்காக மண்டேலாவை பிடிக்கும், அமெரிக்காவுக்கு அடிபணியாமைக்காக காஸ்ட்ரோவை பிடிக்கும்


பிடிக்காதவர் - அமெரிக்க ஜனாதிபதிகள் 
அடுத்த வீட்டுக்குள்ளே புகுந்து திருடுவதால் அவர்களை பிடிக்காது.


நடிகர் 


பிடித்தவர் - இவரைதான் பிடிக்குமென்பதில்லை நன்றாக நடிக்கும் எல்லா நடிகரையும் பிடிக்கும், அன்பே சிவத்தில் கமல், சேதுவில் விக்ரம், அயனில் சூர்யா, சச்சினில் விஜய் என அந்தந்த படங்களில் அவரவர் நடித்த பாத்திரங்களினால் பிடிக்கும்.


பிடிக்காதவர் - அஜித், பிரசாந்த் இருவரையும் பிடிக்காது. காரணம் சொல்ல ல தெரியாது. 



நடிகை




பிடித்தவர் - இப்போது பாவனா, அசின் எப்போதும் ஜோ மற்றும் சிம்ஸ்



பிடிக்காதவர் - பொம்மை மாதிரி வந்து போகும் எல்லா நடிகையையும் பிடிக்காது.




எழுத்தாளர் 



பிடித்தவர் - சுஜாதா, சாண்டில்யன், என்டமூரி வீரேந்திரநாத் 


சுஜாதா பிடிக்க காரணம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை, ஆனாலும் சுஜாதாவிடம் கொஞ்சம் சாதி பற்று இருந்தது பிடிக்காது, சாண்டில்யன் பிடிக்க காரணம் அரசர் கால வாழ்க்கையை நான் சிறிய வயதில் அறிய காரணமாக இருந்தவரென்பதால், என்டமூரி வீரெந்திரநாத்தின் சில கதைகள் வாசித்துள்ளேன், அவற்றில் ஒன்றில் நமது கிரகத்தை காப்பாற்ற வேற்று கிரகத்துக்கு செல்லும் மனிதர்களின் கதையை ஒரு கணனியையும் சேர்த்து எழுதியிருப்பார். எனக்கு கணனி மேல் காதல் வர அந்த கதையும் காரணம். இந்த கதையை தமிழில் மொழி மாற்றியவர் சுசீலா கனகதுர்கா

பிடிக்காதவர் - பிடிக்காதவர் என்று சொல்வ யாருமில்லை. எல்லாரதும் ஏதாவர் ஒரு படைப்பாவது பிடிக்கும்.



கவிஞர் 




பிடித்தவர் - வாலிபக்கவிஞர் வாலி மற்றும் மேத்தா


காரணம் இவர்களது கவிதை பிடிக்கும். ஒரு காலத்தில் வைரமுத்துவும் பிடித்திருந்தது, ஆனால் இப்போ அவரை பிடிக்காது.




பிடிக்காதவர் - சிநேகன்.

காரணம் எல்லாருக்கும் தெரியும்


இசையமைப்பாளர்




பிடித்தவர் - A.R. ரகுமான்,  A.R.ரகுமான், A.R. ரகுமான்

ஏன் பிடிக்கும் என தெரிய எனது ஆரம்பகால பதிவுகளை பார்தால் தெரியும்

பிடிக்காதவர் - இமான். எதாவது பழைய பாடலை வெறுக்க வேண்டுமா இமானிடம் கொடுங்கள் ரீமிக்ஸ் செய்து அதை வெறுக்க செய்து விடுவார்.



இயக்குனர்



பிடித்தவர் - மணிரத்தினம்

யாரிடம் என்ன திறமை உண்டு, அதை எவ்வாறு வெளிக் கொணர வேண்டும் என அறிந்தவர். இதற்கு உதாரணமாய் அஞ்சலி படத்தை சொல்லலாம்.


இவரை பிடிக்க இன்னொரு காரணம் நம்ம ஏ.ஆர். ரகுமானை சினிமாவுக்கு கொண்டு வந்ததாலும் ஆகும்


பிடிக்காதவர் - விசு, விக்கிரமன்

சினிமாவில் மெகா சீரியலை காட்டியவர்கள்



பாடகர்




பிடித்தவர் - எஸ்.பீ.பாலசுப்ரமணியம், கார்த்திக்



இருவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்து, இப்படி பட்ட பாடல்கள்தான் பாடுவோம் என இருக்காமல் எல்லா விதமான பாடல்களையும் பாடுவதால் இருவரையும் பிடிக்கும். நம்ம தல ரகுமானின் குரலும் பிடிக்கும். 



பிடிக்காதவர் - ஹரீஷ் ராகவேந்திரா 

தான் மட்டுமே சிறந்த பாடகர் என்னுமத் கர்வம் கொண்டதால் பிடிகடகாது.



பாடகி




பிடித்தவர் - சுசீலா, சுவர்ணலதா, சின்மயி

முன்னவர் காலத்தால் அழியாத குரலை கொண்டிருப்பதாலும், அடுத்த இருவரும் விதவிதமாக குரலை வெளிக்காட்டியமையாலும் பிடிக்கும்



பிடிக்காதவர் - ஜானகி 

இவரது குரல் ஏதோ அந்நியமாக தோன்றும், அதனால் பிடிக்காது. மலரே மௌனமா பாடலில் எஸ.பீ.பியின் குரலில் இருந்த மென்மை இவரது குரலில் இல்லை என எனக்கு படுகிறது.



விளையாட்டு




பிடித்தது- No Eating, No Drinking, No Sleeping, Only  Cricket


மற்றைய எல்லா விளையாட்டுகளையும் பிடிக்கும், ஆனாலும் எல்லா தெற்காசியரையும் போல கிரிக்கட் கொஞ்சம் அதிகம் பிடிக்கும்.



பிடிக்காதது - பிடிக்காத விளையாட்டு எதுவுமேயில்லை. W.W.E கூட எனக்கு பிடிக்கும்.

இந்த தொடர்பதிவிற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. காரணம் அநேகமாக எல்லாரும் இந்த தொடரை எழுதியிருஐக்கிறார்கள். அதனால் இத்தொடர் இத்துடன் முடிவடைகிறது. யாராவது விரும்பினால் தொடரலாம்.


என் கருத்துகள் யாரையும் புண்படுத்தற்கதாக நான் கூறியதல்ல எனது ரசனையை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். அவ்வாறு புண்படுத்தினால் மன்னிக்கவும்.



8 Responses
  1. Unknown Says:

    நான் தான் முதலாவது....


  2. Unknown Says:

    //பிடித்தவர் - இப்போது பாவனா, அசின் எப்போதும் ஜோ மற்றும் சிம்ஸ் //

    செல்லப் பெயர்ல எல்லாம் கூப்பிடுறீங்க...
    ம் ம்...
    ஏதோ நடக்கட்டும்...

    உங்கள் விருப்பங்கள் நன்றாகத் தான இருந்தது....

    பொதுவாக என் விருப்பங்களோடு ஒத்திருப்பதால் ஒரு சின்ன மகிழ்ச்சி...
    (எல்லாம் ஒத்திருந்தால் அங்கே ஏதோ பிழை... வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்பதே உண்மை உறவுகள் என்பார்கள்...)

    வாழ்த்துக்கள் யோ வொய்ஸ் அண்ணா....


  3. sanjeevan Says:

    who is that sims.etho pondaddiyai kooppidura maari kooppudureenga,ivanga ellaam ippa ammaa maar theriyum thaane :)

    enakkum imman i pidikkaathu
    same blood


  4. ///பாடகி


    பிடித்தவர் - சுசீலா, சுவர்ணலதா, சின்மயி

    முன்னவர் காலத்தால் அழியாத குரலை கொண்டிருப்பதாலும், அடுத்த இருவரும் விதவிதமாக குரலை வெளிக்காட்டியமையாலும் பிடிக்கும்///

    இந்தக் குரல்களில் எனக்கும் ஒரு மயக்கமுண்டு. அதுவும் சின்மயி(ன்குரல்) மீது ஒரு அதீதபற்று. ‘தெய்வம் தந்த பூவேயிலிருந்து…’ ஆரம்பித்து விட்டது.


  5. Admin Says:

    //பிடிக்காதவர் - பொம்மை மாதிரி வந்து போகும் எல்லா நடிகையையும் பிடிக்காது.//


    அப்படி என்றால்

    // பிடிக்காதவர் - ஹரீஷ் ராகவேந்திரா


    தான் மட்டுமே சிறந்த பாடகர் என்னுமத் கர்வம் கொண்டதால் பிடிகடகாது.//

    உண்மைதான்

    //பிடித்தது- No Eating, No Drinking, No Sleeping, Only Cricket//

    அப்பாடா......


  6. Subankan Says:

    இங்க கும்மி எதுவும் நடக்கலயா? என்ன கொடுமசார் இது?


  7. Admin Says:

    கும்மி நாஜகனுக்கு கும்மி தேவைப்படுதோ


  8. Anonymous Says:

    A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html