நூடுல்ஸ் (04-11-2009)
இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு பண்ணிய சந்திப்பை என் போன்ற பலர் பதிவர் சந்திப்பென்று நினைத்து சென்று கொஞ்சம் ஏமாற்றமடைந்து திரும்பினோம். முதலாவது பதிவர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் மனதில் ஏற்பட்ட ஆனந்தமே இம்முறை எம்மை அந்நிகழ்வுக்கு எடுத்து சென்றது என்பது மறுக்கவியலாத உண்மை.
இருக்கிறம் தனது இருப்பை வெளிகாட்ட ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்காக விடுமுறை தினத்திலே கிட்டத்தட்ட 400 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணிக்கு பயணிக்க தொடங்கிய நான் இரவு 10.45 மணியளவில் எனது அறையை வந்தடைந்தேன். சில ஏமாற்றங்களை தந்தாலும் முகம் தெரியா பதிவர்கள் பலரை நேரில் கண்டு பேச கிடைத்த வாய்ப்பு கிடைத்ததை மறுக்க இயலாது. முதலாவது பதிவர் சந்திப்பில் அறிமுகமான வந்தி, லோஷன், ஆதிரை போன்றோரையும். அந்நிகழ்வில் முகமறிந்த மன்னார் அமுதன், மருதமூரான், கௌபோய் மது, சுபானு போன்றோரை கண்டு கதைக்க கிடைத்தது. மேலும் கீர்த்தி, நாச்சியாதீவு பர்வீன் (பெயர் சரி என நினைக்கிறேன்), இறக்குவானை நிர்ஷன், கனககோபி, சுபாங்கன், அருண்பிரசாத், சந்ரு, வரோ, பண்டாரவளை புனாகலையிலிருந்து ஒரு நண்பர் இன்னும் பல நண்பர்களை (பலரது பெயர்கள் நினைவுக்கு வரவில்லை மன்னிக்கவும்) சந்திக்க கிடைத்தது. இவர்களது நட்பு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
அவுஸ்திரேலியா அணியில் எத்தனை பேருக்கு காயம் வந்தாலும் புதிதாக வரும் வீரர்கள் கலக்குகிறார்கள். என்னதான் அடிவாங்கினாலும் சிங்கம் சிங்கம்தான். சச்சின், தோனி இல்லாத இந்திய அணியும் சங்கக்கார, தில்ஷான், மகேல இல்லாத இலங்கை அணியும் நினைத்தே பார்க்க முடியாது, ஆனால் அவுஸ்திரேலியா புதிதாக அணிக்குள் கொண்டு வரும் அனைவரும் சீனியர் வீரரை போல் ஆடுகின்றனர். இது அவர்களது உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பு எவ்வளவு உறுதியானது என காட்டுகிறது.
மேற்கிந்திய அணி கிறிஸ் கெயிலின் தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்க்க போகிறது வரவேற்க படவேண்டிய ஒன்று. இவ் அணி தாங்கள் முன்வைத்த கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள்தான் என இத்தொடரில் நிருபிக்க வேண்டியிருக்கிறது.
"அடடா வடை போச்சே...”
“பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக் காய்ச்சலை”
விஜய் படம் போட்டால் “இருக்கிறம்” சஞ்சிகை நன்றாக விற்பனையாகிறதாக அச்சுவலை சந்திப்பில் அச்சஞ்சிகை சார்பில் சொல்லப்பட்டது. நானும் ஒரு விஜய் படம் போடுகிறேன் பார்க்போம் இந்த பதிவுக்கு அதிக வாக்குகள் கிட்டுகிறதா என???????
இருக்கிறம் தனது இருப்பை வெளிகாட்ட ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்காக விடுமுறை தினத்திலே கிட்டத்தட்ட 400 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணிக்கு பயணிக்க தொடங்கிய நான் இரவு 10.45 மணியளவில் எனது அறையை வந்தடைந்தேன். சில ஏமாற்றங்களை தந்தாலும் முகம் தெரியா பதிவர்கள் பலரை நேரில் கண்டு பேச கிடைத்த வாய்ப்பு கிடைத்ததை மறுக்க இயலாது. முதலாவது பதிவர் சந்திப்பில் அறிமுகமான வந்தி, லோஷன், ஆதிரை போன்றோரையும். அந்நிகழ்வில் முகமறிந்த மன்னார் அமுதன், மருதமூரான், கௌபோய் மது, சுபானு போன்றோரை கண்டு கதைக்க கிடைத்தது. மேலும் கீர்த்தி, நாச்சியாதீவு பர்வீன் (பெயர் சரி என நினைக்கிறேன்), இறக்குவானை நிர்ஷன், கனககோபி, சுபாங்கன், அருண்பிரசாத், சந்ரு, வரோ, பண்டாரவளை புனாகலையிலிருந்து ஒரு நண்பர் இன்னும் பல நண்பர்களை (பலரது பெயர்கள் நினைவுக்கு வரவில்லை மன்னிக்கவும்) சந்திக்க கிடைத்தது. இவர்களது நட்பு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
======================================================
நேற்று அப்ரிடி நியுசிலாந்தோடு விளையாடிய ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மனுஷன் நேற்று போல் பொறுப்பாக விளையாண்டால் அவரை அடிக்க ஆளே கிடையாது. ஒரு காலத்தில் நான் அப்ரிடியின் அதிரடிக்காக தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். கம்ரான் அக்மலும் எந்த இடத்தில் விளையாண்டாலும் கலக்குறார். அவுஸ்திரேலியா அணியில் எத்தனை பேருக்கு காயம் வந்தாலும் புதிதாக வரும் வீரர்கள் கலக்குகிறார்கள். என்னதான் அடிவாங்கினாலும் சிங்கம் சிங்கம்தான். சச்சின், தோனி இல்லாத இந்திய அணியும் சங்கக்கார, தில்ஷான், மகேல இல்லாத இலங்கை அணியும் நினைத்தே பார்க்க முடியாது, ஆனால் அவுஸ்திரேலியா புதிதாக அணிக்குள் கொண்டு வரும் அனைவரும் சீனியர் வீரரை போல் ஆடுகின்றனர். இது அவர்களது உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பு எவ்வளவு உறுதியானது என காட்டுகிறது.
மேற்கிந்திய அணி கிறிஸ் கெயிலின் தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்க்க போகிறது வரவேற்க படவேண்டிய ஒன்று. இவ் அணி தாங்கள் முன்வைத்த கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள்தான் என இத்தொடரில் நிருபிக்க வேண்டியிருக்கிறது.
======================================================
பதிவர் சந்திப்புக்கு சென்று திரும்புகையில் இன்னொரு விடயம் நடந்தது. பஸ்ஸில் எனது பக்கத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். நானும் பொழுது போகாவிடின் அவளுடன் கடலை போடலாம் என நம்பி (வடிவேலு மாதிரி வாசிக்க வேண்டும்) இருந்தால் பஸ் பயணத்தை தொடங்கி சிறிது நேரத்தில் அவள் நன்றாக தூங்கிவிட்டாள். அப்படியே நானும் தூங்கிவிட்டேன் கேகாலை நகருக்கு அண்மையில் பஸ் போய் கொண்டிருக்கையில் நான் விழித்து கொண்டேன். எனது தோளில் சாய்ந்து யாரோ தூங்கி கொண்டிருந்தார்கள். அப்புறம் பார்த்தால் அந்த பெண் ஏதொ ரொம்பவே நெருங்கியவருடைய தோளில் தூங்குவது போல் எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு எழுப்புவோமா, வேண்டாமா என யோசனை கடைசியில் எழுப்பவில்லை. கடைசியில் பேராதனை வரும் போது அவள் முழித்து கொண்டாள். எனது தோளில் தூங்கியதை கண்டு மன்னிப்பு கேட்டாள். நானும் பெரிய மனிதர் போல் மன்னித்து விட்டேன். கண்டியை பஸ் நெருங்குகையில் அவள் பஸ்ஸை விட்டு இறங்கி விட்டாள்."அடடா வடை போச்சே...”
======================================================
போன வாரம் ”வடை போச்சே ” என லோஷன் கூறிய கவிதை பலருக்கும் பிடித்தமானதால் இவ்வாரம் எனது நண்பனொருவன் நடுராத்திரியில் என்னை எழுப்பி அலைபேசிய கவிதை“பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக் காய்ச்சலை”
======================================================
விஜய் படம் போட்டால் “இருக்கிறம்” சஞ்சிகை நன்றாக விற்பனையாகிறதாக அச்சுவலை சந்திப்பில் அச்சஞ்சிகை சார்பில் சொல்லப்பட்டது. நானும் ஒரு விஜய் படம் போடுகிறேன் பார்க்போம் இந்த பதிவுக்கு அதிக வாக்குகள் கிட்டுகிறதா என???????
சந்திப்பு + பஸ் பிரயாணம் = வடை போச்சே.. ;)
அவுஸ்திரேலியா அணியை எனக்கு (இலங்கைக்கு அடுத்தபடியாகப் ) பிடிக்க காரணம் இதுவே..
கவிதை நல்லா இருக்கு.. எனக்கும் இதே sms வந்து அதை சிலபேருக்கு அனுப்பி நான் வாங்கிக் கட்டியது.. ஹீ ஹீ..
விஜய் படமா? ஏன் இந்தக் கொலை வெறி..
அது பதிவர் சந்திப்பு இல்லை என்பது எனக்குத் தெரியும் அண்ணா.
ஆனால் வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்றுவிட்டு வலைப்பதிவர்களுக்கு போதிய மதிப்பை வழங்காதது பிழையே.
வலைப்பதிவர்கள் சார்பாக கதைக்குமாறு எவரையும் உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லையே?
அவர்களது பிழையை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.
எனக்கு பிழை என்பதை நான் சொல்வேன்...
பின்னூட்டங்களில் எனது கருத்துக்கள் எங்காவது மறுக்கப்பட்டால் எனக்கு பதிவிடத் தெரியும்.
இனிய சந்திப்பு என்றவிட்டு அதை இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பாக மாற்றியமை முழுப்பிழையே.
*****************************
பேருந்தில் சைற் அடிக்க முற்பட்டதால் உங்களை பச்சிளம் பாலகர் சங்கத்திலிருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம்.
//பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக் காய்ச்சலை//
இது எங்கோயோ வாசித்த ஞாபகம்...
அனேகமாக ட்விற்றரில் தான்... ஹி ஹி ஹி....
// LOSHAN said...
அவுஸ்திரேலியா அணியை எனக்கு (இலங்கைக்கு அடுத்தபடியாகப் ) பிடிக்க காரணம் இதுவே..//
same blood....
//விஜய் படம் போட்டால் “இருக்கிறம்” சஞ்சிகை நன்றாக விற்பனையாகிறதாக அச்சுவலை சந்திப்பில் அச்சஞ்சிகை சார்பில் சொல்லப்பட்டது.//
எவ்வளவு விற்பனை ஆகிறது??
//நானும் ஒரு விஜய் படம் போடுகிறேன் பார்க்போம் இந்த பதிவுக்கு அதிக வாக்குகள் கிட்டுகிறதா என???????//
கிடைக்கிறது கூட கிடைக்காம போயிட போகுது
கண்டி குளிருக்குள்ள ராத்திரீல ஒரு இளம் பொண்ணு தோளில படுத்திருந்தா
வடை மட்டுமா போகும். :)
கொடுத்து வைச்ச ஆளப்பா நீங்க
//"அடடா வடை போச்சே...”//
வட போகாம என்ன பண்ணுமாம்?
பக்கதுல உள்ளப்ப கடிக்காம..
போனதுக்கப்புறம் கதறுனா, வருமா?
நல்ல நூடில்ஸ்!
சுவைத்துச் சாப்பிட்டேன்....
ஆனால் விஜய் பட “டெசேட்” தான் கசக்கிறது... :-D
இந்தக் கிழமை நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருந்தது.
இருக்கிறத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் நீங்கள் தான்.
அதிர்ஷ்டம் ஓரிரு முறை தான் கதவைத் தட்டும்.
சில நாட்களாக கிரிக்கெட் கூட பார்க்கமுடியாமல் மழையும் சில வேலைகளும் என்னை குழப்புகின்றன.
விஜயின் வேட்டைக்காரன் படம் தானே இது
/////LOSHAN said...
சந்திப்பு + பஸ் பிரயாணம் = வடை போச்சே.. ;)
அவுஸ்திரேலியா அணியை எனக்கு (இலங்கைக்கு அடுத்தபடியாகப் ) பிடிக்க காரணம் இதுவே..
கவிதை நல்லா இருக்கு.. எனக்கும் இதே sms வந்து அதை சிலபேருக்கு அனுப்பி நான் வாங்கிக் கட்டியது.. ஹீ ஹீ..
விஜய் படமா? ஏன் இந்தக் கொலை வெறி//////////
வடை போயே போய்ருச்சி...
விஜய் படம் ஹிட்ஸ் வாங்குதானு பார்க்க ஒரு முன்னோட்டம். வாங்கினால் அடிக்கடி விஜய் படம் போடப்படும்
////////கனககோபி said...
அது பதிவர் சந்திப்பு இல்லை என்பது எனக்குத் தெரியும் அண்ணா.
ஆனால் வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்றுவிட்டு வலைப்பதிவர்களுக்கு போதிய மதிப்பை வழங்காதது பிழையே.
வலைப்பதிவர்கள் சார்பாக கதைக்குமாறு எவரையும் உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லையே?
அவர்களது பிழையை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.
எனக்கு பிழை என்பதை நான் சொல்வேன்...
பின்னூட்டங்களில் எனது கருத்துக்கள் எங்காவது மறுக்கப்பட்டால் எனக்கு பதிவிடத் தெரியும்.
இனிய சந்திப்பு என்றவிட்டு அதை இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பாக மாற்றியமை முழுப்பிழையே.////////
சேம் பிளட்
//////// சங்கர் said...
எவ்வளவு விற்பனை ஆகிறது??
கிடைக்கிறது கூட கிடைக்காம போயிட போகுது////////
பார்ப்போம் சங்கர். வருகைக்கு நன்றி
///////sanjeevan said...
கண்டி குளிருக்குள்ள ராத்திரீல ஒரு இளம் பொண்ணு தோளில படுத்திருந்தா
வடை மட்டுமா போகும். :)
கொடுத்து வைச்ச ஆளப்பா நீங்க///////
என்னத்த குடுத்து வைக்க இட்ஸ் ஓக்கே தவிர எதுவுமே பேச கிடைக்கலையே
//////கலையரசன் said...
//"அடடா வடை போச்சே...”//
வட போகாம என்ன பண்ணுமாம்?
பக்கதுல உள்ளப்ப கடிக்காம..
போனதுக்கப்புறம் கதறுனா, வருமா?//////
“உன்னைச் சொல்லி குத்தமில்ல. என்னை சொல்லி குத்தமில்ல. காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குத்தமடி” என பாட தோணுகிறது.
//////என்.கே.அஷோக்பரன் said...
நல்ல நூடில்ஸ்!
சுவைத்துச் சாப்பிட்டேன்....
ஆனால் விஜய் பட “டெசேட்” தான் கசக்கிறது... :-D//////
நூடுல்ஸசுக்கு நட்சத்திரத்திடமிருந்து வந்த வாழ்த்துக்கு நன்றி.
டெசேட் சுவையை பரிசோதிக்க
///// வந்தியத்தேவன் said...
இந்தக் கிழமை நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருந்தது.
இருக்கிறத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் நீங்கள் தான்.
அதிர்ஷ்டம் ஓரிரு முறை தான் கதவைத் தட்டும்.
சில நாட்களாக கிரிக்கெட் கூட பார்க்கமுடியாமல் மழையும் சில வேலைகளும் என்னை குழப்புகின்றன.
விஜயின் வேட்டைக்காரன் படம் தானே இது/////
அதிர்ஷடம் கதவை தட்டியது திறந்து பார்க்கிறப்ப ஓடிப்போய்ட்டது.
சிட்டுக்கு சிறகு முளைசிட்டது. பறந்துட்டது.
கண்ணூறு படாமலிருக்க ஒரு படம் கட்டுவாங்களே, அது மாதிரி இருக்கு நீங்க போட்ட படம். இருக்கிறம் சந்திப்பில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.
ஆங், சொல்ல மறந்துட்டன், அந்தத் தோள் பத்திரம். அதுக்கு பத்தடி உயரத்தில ப.பா.சங்கத்தின் சார்பாக கட்டவுட் வைக்கணும்.
/////Subankan said...
கண்ணூறு படாமலிருக்க ஒரு படம் கட்டுவாங்களே, அது மாதிரி இருக்கு நீங்க போட்ட படம். இருக்கிறம் சந்திப்பில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.
ஆங், சொல்ல மறந்துட்டன், அந்தத் தோள் பத்திரம். அதுக்கு பத்தடி உயரத்தில ப.பா.சங்கத்தின் சார்பாக கட்டவுட் வைக்கணும்/////
சொன்னாலும் சொல்லாட்டியும் இந்த பதிவுதான போட்டு 3 மணித்தியாலத்திலேயே தமிழிஷில் முதல் பக்கத்திலே வந்தது. விஜய்க்கு ஹிட்ஸ் வாங்குற சக்தியிருக்கு
நன்றி யோகா...பஸ் பயணம் நன்றாக இருந்தது போல...வடை போச்சா....
அம்மா எப்படி இருக்காங்க..கேட்டதாக சொல்லவும். நன்றி.
// Geetha Achal said...
நன்றி யோகா...பஸ் பயணம் நன்றாக இருந்தது போல...வடை போச்சா....
அம்மா எப்படி இருக்காங்க..கேட்டதாக சொல்லவும். நன்றி.//
வருகைக்கு நன்றி கீதா அக்கா. பஸ் பயணம் நன்றாக இருந்தது, ஆனா இல்ல. அம்மாவ கட்டாயம் கேட்டதாக சொல்லுகிறேன்
யோ..... வடை போன என்ன??
நமக்குன்னு ஒரு போண்டாவோ பஜ்ஜியோ கிடைக்காமலா
போகும்
எல்லாம் கலந்துகட்டிக் குடுத்திருக்கிறீங்கள்.. நல்லாயிருக்குது..
இருக்கிறம் சந்திப்புக்கு வந்து வடைகூடக் கிடைக்காமப் போச்சுதா.. :))
நூடுல்ஸ் + sms நல்லா இருக்கு.. :)
////ஜெட்லி said...
யோ..... வடை போன என்ன??
நமக்குன்னு ஒரு போண்டாவோ பஜ்ஜியோ கிடைக்காமலா
போகும்////////
நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன் தல
//////மதுவதனன் மௌ. / cowboymathu said...
எல்லாம் கலந்துகட்டிக் குடுத்திருக்கிறீங்கள்.. நல்லாயிருக்குது..
இருக்கிறம் சந்திப்புக்கு வந்து வடைகூடக் கிடைக்காமப் போச்சுதா.. :))//////
ஆமாம் வடை போய்ட்டது..
//////வேந்தன் said...
நூடுல்ஸ் + sms நல்லா இருக்கு.. :)//////
நன்றி வேந்தன்
நானும் இணையத்துக்கால வந்திருந்து பாத்தனான். ஒழுங்கா நடக்காதமாதிரி இருந்ததால விட்டுட்டு போயிட்டன்.
///பகீ said...
நானும் இணையத்துக்கால வந்திருந்து பாத்தனான். ஒழுங்கா நடக்காதமாதிரி இருந்ததால விட்டுட்டு போயிட்டன்////
முதலாம் பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தியதில் உங்களது பங்களிப்பும் அதிகமிருந்தது. அடுத்த சந்திப்பு வெகு சீக்கிரத்தில் நடக்குமென பட்சி சொல்லுகிறது. அதற்கு தாங்கள் வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
அதிகம் எதிர்பார்த்துவிட்டேன். பல பதிவர்களை சந்தித்தோம் என்பதில் சந்தோசமே.