அகதமாபாத் டெஸ்ட் போட்டி சதியா?
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாம் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 5 நாட்களும் நடந்த இப்போட்டி 7 பேரின் சதங்கள் மூலம் இரு அணிகளும் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. இதன் மூலம் இத்துடுப்பாட்ட வீரர்கள் தனிப்பட்ட பல மைல்கல்களை எட்டினர், ஆனால் இச்சாதனைகள் அவர்களது அணியின் வெற்றிக்கு உதவியதா என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தவர்களும் உண்டு. இந்த போட்டியில் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் இந்திய கிரிக்கட் சபையும், இப்போட்டிக்கு தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தவர்களுமாவார்.
கடந்த 5 வருடங்களாக அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளை எடுத்து பார்த்தால், அவுஸ்திரேலியாவில் கடந்த 5 வருடங்களில் 27 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன, அதில் 2 போட்டிகள் மாத்திரமே வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன. தென்னாபிரிக்காவில் நடந்த 29 போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவடைந்திருக்கின்றன, இலங்கையில் நடந்த 22 போட்டிகளில் 4 வெற்றி தோல்வியற்ற பெறுபேற்றை தந்திருக்கின்றன. மாறாக இந்தியாவில் கடந்த 5 வருடமாக நடந்த 24 போட்டிகளில் 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன, இந்த தரவுகள் இன்னொரு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. முடிவை எட்டக்கூடிய முறையில் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டால் சில வேளைகளில் அப்போட்டிகள் 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடும், இவ்வாறு 3 அல்லது 4 நாட்களில் போட்டி முடிந்து விட்டால் இறுதி நாளன்று விளம்பரம் செய்ய இயலாமல் இந்திய கிரிக்கட் சபைக்கு பெருந்தொகையான பணம் நட்ட மேற்படலாம், இதனாலே இந்த உப்பு சப்பற்ற பேட்டிங் விக்கட்டுகளை இந்திய கிரிக்கட் சபை ஊக்குவிக்கின்றது, மேலும் இதன் மூலம் துடுப்பாட் வீரர்களுக்கும் பல தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.
இப்போட்டியில் சச்சின் தனது 43 வது சதத்தை பெற்று கொண்டார், ஆனாலும் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்றிருப்பது 16 போட்டிகளில் தான் என்பது சற்று அதிர்ச்சியான உண்மை. ஒரு வீரர் சதம் பெற்று அவ் அணி போட்டியில் வெற்றி பெற்றதா என பார்த்த போது கிடைத்த தகவல்களில் முன்னணியில் இருப்பவர்கள் அவுஸ்திரேலியர்களே. இதில் கவாஸ்கர் பெற்ற 29 சதங்களில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது வெறும் 6 போட்டிகளில் மாத்திரமே. இங்கு முதலில் இருப்பது பொன்டிங் அவர் சதம் பெற்று அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற போட்டிகள் 27. அந்த தகவல்கள் கீழே
இதன் மூலம் கிரிக்கட் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் தமக்கு தேவையான மாதிரி ஆக்கி கொண்டு நல்ல வருவாயை சம்பாதித்து கொண்டிருக்கின்றன.

இடம் வீரர் வெற்றி பெற்ற போட்டிகள்
01 ரிக்கி பொன்டிங் -------------------------------27
02 ஸ்டீவ் வோ் ------------------------------------ 25
03 பிராட்மேன் -------------------------------------23
04. ஹேடன் ----------------------------------------23
.................................................................................................
07. சச்சின் டென்டுல்கார் ------------------------12
.................................................................................................
22 ராகுல் டிராவிட் ---------------------------------10
.................................................................................................
61 சுனில் கவாஸ்கர் --------------------------------6
இதன் மூலம் கிரிக்கட் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் தமக்கு தேவையான மாதிரி ஆக்கி கொண்டு நல்ல வருவாயை சம்பாதித்து கொண்டிருக்கின்றன.
நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.