நூடுல்ஸ்

நித்தியானந்தா சாமியாரின் லீலைகள் அம்பலமாகியவுடன் பல ஊடகங்கள் கூக்குரலிட்டு போலி சாமியாரின் லீலைகள் அம்பலமாகிவிட்டன தெரிவிக்கின்றன, ஆனால் இந்த போலி சாமியார்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை இந்த ஊடகங்கள் வகிப்பதை மறந்துவிட்டன. குமுதம் இவரை வளர்த்திருக்காவிட்டால் இந்த நித்தியானந்தா உலகுக்கு தெரியாமல் போயிருப்பார். இலங்கையை பொருத்த வரையில் நித்தியானந்தரை விட சும்மா பகவான் எனும் இன்ஸ்ட்ண்ட் கடவுள்தான் பிரபலமாயிருக்கிறார். இவரை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் ஏதொ உலகை இரட்சிக்க வந்த உத்தமர் போல் புகழுவதை கண்டால் எரிச்சலாய் இருக்கிறது.
மக்களை வழி நடத்த சிறந்த ஆயுதமான தொழிநுட்பத்தை கொண்டுள்ள இவ்வுடகங்கள் அதை பயன்படுத்தி மக்களை நல்வழிப்படுத்தாமல் சும்மா பகவான் புகழ் பாடுவது வேதனைக்குறியது. இல்லை பணம் கிடைப்பதால்தான் சும்மா பகவானை புகழுகிறோம் என்றால் பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடகங்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதிவுலகில் விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் அதிகம் வந்தாலும் இன்னும் பதிவுலகம் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை என்பதால் மக்களை விழிப்புணர்வு செய்யும் முக்கிய பணி வெகுஜன ஊடகங்களுக்கு உண்டல்லவா? இன்னும் சில பத்திரிகைகள் சாய்பாபா புகழ் பாடுகின்றன. எப்போது நம்ம தமிழர்கள் உயிருள்ள மனிதர்களை வணங்குவதை விடப்போகிறார்களோ தெரியவில்லை.

----------------------------------------------------------------------------------------------------
மேற்கிந்திய சிம்பாவே முதலாவது ஒருதினப் போட்டியில் சிம்பாபே வெற்றி பெற்றதும், சிம்பாவே (பலமான?) மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு நாள் தொடரில் வென்றிடும் என நினைத்தால் அடுத்துவரும் போட்டிகளில் சிம்பாபே மண் கவ்வியது. இதே போல்தான் அவுஸ்திரேலிய நியுசிலாந்து முதல் போட்டியில் நியுசிலாந்து வென்றதும் இத்தொடரில் நியுசிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு நல்ல போட்டியை கொடுக்கும் என எதிர்பார்த்தால் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா இலகுவாக வென்றது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக தோன்றினாலும் கிரிக்கட் என்னும் கனவான்களின் விளையாட்டை சிதைத்த வீரர்கள் அதற்குறிய தண்டனையை ஏற்று கொள்ளதான் வேண்டும், பல முன்னணி வீரர்ளை தண்டனைக்குற்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கட் போர்டுக்கு பாராட்டுக்கள். காரணம் ஆசியாவிலுள்ள கிரிக்கட் சபைகள் வீரர்களை முதன்மையாக கொண்டே இயங்குகையில் இவ்வீரர்கள் இல்லாவிட்டால் போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என பல முன்னணி வீரர்களுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை பாராட்ட தகுந்ததே
----------------------------------------------------------------------------------------------------
வேலை தேடி ஒரு முன்னணி அரசியல்வாதியிடம் சென்ற பட்டதாரி மாணவர்களை அவ் அரசியல்வாதி வேலை வேண்டுமாயின் தனது தேர்தல் வேலைகளை செய்யுமாறும் அதில் திருப்தி ஏற்பட்டால் தகுந்த வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதுதான் இலங்கையின் ஜனநாயகமா? இப்படி அரசியல் செய்வதை பார்க்க அம்மாதிரியான அரசியல்வாதிகள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்.
----------------------------------------------------------------------------------------------------
விண்ணைதாண்டி வருவாயா பார்த்தேன். கௌதம் தனது கதை சொல்லும் ஸ்டைலில் செதுக்கியிருக்கிறார். இசைப்புயல்தான் இப்படத்திற்கு உயிர் நாடி என்று சொலல்லாம். மிகவும் அழகாய், ஆர்ப்பாட்டமில்லாமல் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாகவிருந்த்து, அப்புறம் சிம்பு, மனுஷன் இந்தளவு நடிப்பு திறமையுள்ளவரா என வியந்தேன், இவ்வாறு இன்னும் 2,3 படங்கள் நடித்தால் நான் சிம்புவின் தீவிர ரசிகராகிவிடுவேன், மன்மதனுக்கு பிறகு சிம்பு நடித்த படங்களில் நான் ரசித்த்து விண்ணைதாண்டி வருவாயா மட்டுமேயாகும். நீண்ட நாட்களுக்கு பின்னர் தியேட்டரில் ரசித்து பார்த்த காதல் கதை இதுதான் என நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் எனப்படும் கோபி. காரணம் சென்ற பதிவை நான் பதிவிட்டு திரட்டிகளில் இணைக்க முன்னரே அப்பதிவிற்கு வாக்கு போட்டு, பின்னூட்டம் போட்டு முடித்து விட்டார். மனுஷன் எப்படிதான் இவ்வளவு விரைவாக பின்னூட்டம் போடுறாரோ தெரியவில்லை. எனது சமீபத்திய எல்லா பதிவுகளுக்கும் முதல் பின்னூட்டம் அவரிடமிருந்துதான் வந்தாலும் கோபி மேல் எனக்கு ஒரு கோபமுண்டு. அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன், ஆனால் இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்
----------------------------------------------------------------------------------------------------

14 Responses
 1. Atchu Says:

  இன்று நான் தான் முதல் பின்னூட்டம்.......  இந்தச் சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள். அரசியவாதிகளோ அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்டையாக விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் இந்த அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடு சேரும் என்பது போல் அவர்களின் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும் இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள்.


 2. Atchu Says:

  இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குது


 3. Atchu Says:

  //அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன், ஆனால் இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்//

  அந்த மனுஷன் இப்ப C++,tamil cricket buzzzzz am


 4. பேப்பர்காரங்கள் இந்த சும்மா பகவான்களின் திருகுதாளங்களைப் பற்றி எழுதாமல் விட்டால்கூடப் பரவாயில்லை மாறாக அவையின்ட விபச்சாரத்திற்கு, மன்னிக்கவும் வியாபாரத்திற்கு கட்டுரைகள் வடிவில் இலவச விளம்பரம் தருவதுதான் கொடுமையிலுங்கொடுமை!


 5. சுவாரசியமாக
  நல்லா எழுதுறிங்க சாமி


 6. Subankan Says:

  பத்திரிகைகளில் வரும் சாமியார்களின் கட்டுரைகளைப்பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. எல்லாம் பணம் பண்ணும் வேலை

  அரசியல்வாதி - இலங்கைக்குப் புதிதல்ல

  வி.தா.வ - சேம் பிளட்

  கோபி - இப்போதெல்லாம் அவரது பேச்சுக்கூட சீரியசாகிவருகிறது. சம்திங் றோங்.


 7. பெருத்த அவமானம்....

  இப்போதுதான் வாசித்தேன்....

  ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்...

  இன்னும் சிறிது நேரத்தில் வந்து முழுமையாகப் பின்னூட்டுகிறேன்... :)


 8. சாமியாரைப் பற்றி நாங்களும் தொடர்ந்து கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், என்ன செய்வது...
  ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பொறுப்பாகச் செயற்படுவது அவசியம்.
  சிலவேளைகளில் நீங்கள் சொல்வது போல எரிச்சல் வருகிறது...
  இயலாமையை நினைத்து நம்மை நாமே நொந்து கொள்வது தான்.
  நகைப்பிற்கிடமான விடயம் என்னவென்றால் சில சிறுவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு சில படித்த பெரியவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.


  சிம்பாப்வே வென்றது பெருத்த மகிழ்ச்சி என்றாலும் தொடர்ந்து வெல்ல முடியாதது கவலையே.
  நியூசிலாந்து முன்னேற நிறைய இடமுண்டு.

  பாகிஸ்தான் கிறிக்கற் சபை எடுத்த நடவடிக்கையைப் பாராட்டலாமென்றால் அவர்களின் கடந்த காலத் தடைகள் பற்றிய வரலாறு ஞாபகம் வருவதால் பாராட்ட முடியவில்லை.
  அக்தர், ஆசிப் போன்றவர்களின் தடைகள் குறைக்கப்பட்டது இங்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது...

  அரசியல்வாதிகளிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது யோ அண்ணா.
  அதுவும் எங்கள் நாட்டில்... ம்ஹ்ம்...

  விதாவ - ம்... அருமை....
  சிம்பு அழகாக நடித்திருக்கிறார்....


 9. //இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் எனப்படும் கோபி.//

  :)

  அனேகமான பதிவுகளுக்கு நான் முதலில் பின்னூட்டக் காரணம் நான் உங்கள் எல்லோரின் எழுத்துக்களையும், உங்கள் இயலாமைகளை எழுத்துக்களாக எழுதும்போது உள்ள அந்த தார்மீகக் கோபத்தையும் இரசிக்கிறேன்.
  அத்தோடு பின்னூட்டம் இடுவது எனக்கு பதிவிடுவதை விடப் பிடித்த செயல்... :)

  நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் இடுவேன் தானே...
  அதுவா வரோணும்.

  //கோபி - இப்போதெல்லாம் அவரது பேச்சுக்கூட சீரியசாகிவருகிறது. சம்திங் றோங்//

  வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் தானே... :)


 10. மறந்துவிட்டேன்,
  பெருத்த அவமானம்...
  இப்படி நான் முதலாவதாகப் பின்னூட்டுகிறேன் என்று சொல்லும் 2ஆவது பதிவில் நான் நிறையவே பிந்தி பின்னூட்டும் சந்தர்ப்பம் இது.

  முன்பொருமுறை பவனின் பதிவிலும் நடந்தது.
  :(


 11. Bavan Says:

  //பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடகங்களுக்கும் என்ன வித்தியாசம்?//

  அதே... ஊடகங்கள் உதவவேண்டும் பார்க்கலாம்.....

  ***

  பாகிஸ்தான் வீரர்களும் என்ன செய்வார்கள் தங்கள் நாட்டில் போட்டி நடத்த முடியாத சூழ்நிலை அதனால் இவர்களுக்கு சம்பளமும் குறைவு அப்ப காசுக்கு என்ன செய்வதெண்டு இப்படி நடந்திருக்குமோ என்னமோ.. ஆனால் செய்தது மாபெரும் தவறு.. ஆனால் பாக். அடுத்த சிம்பாபே ஆகிடுமா என்றுதான் கவலை..:(

  ****

  //அரசியல்வாதிகள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்//

  ஹிம்ம்... திறமைக்கு களமிருந்ததெல்லாம் ஒரு காலம்.. இப்போது எல்லாம் அரசியல்தான் அண்ணே... என்ன செய்வது..

  ***

  விண்ணைத்தாண்டி வருவாயா.. இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை.. மூன்று முறை பார்த்திருக்கிறேன்.. சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் பார்க்க முடிவு... ஒரிஜினல் டிவிடி வந்தால் வாங்கிவைக்க வேண்டும் ஒருமுறையுமில்லாதவாறு மனதை வருடிய படம்...

  ***

  //இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்//

  ஆம் நானும் நானும் கண்டனங்கள்..;)

  ***

  //படம்//

  ஹாஹா


 12. கமல் Says:

  சமூகத்தின் விழிப்பு நிலை பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்... தொடருங்கோ.


 13. கமல் Says:

  பாவம் சாமியார்கள்... பிழைச்சுப் போகட்டும்... விடுங்கோ :)))


 14. Anonymous Says:

  சத்தியம் என்பது உன் சொந்த அனுபவம் ஆகாதவரை, உனக்கு அது வெறும் பொய்யே; உனக்கு அது சொந்த அனுபவம் ஆகும் போது மட்டுமே அது சத்தியம்...

  எதுவும் தெரியாமல் அம்மா பகவானை தவறாக கூறுவதை தவிர்க்கவும்...