ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 2)
இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.
அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். 1000 டெஸ்ட் விக்கட்டுகளை பெற்று சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி. இந்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போகிறாராம், ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய லசித் மாலிங்க கடந்த இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடியது ஐ.பி.எல் தொடர்களில் மாத்திரம் தான். தனது நாட்டுக்காக விளையாடாமல் பிரெட் லீ ஐ.பி.எல. தொடரில் விளையாட விரும்புகிறார்
இவற்றை பார்க்கும் போது சர்வதேச வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும், ஐ.பி.எல்லில் விளையாடுவதை விரும்புவதாக தெரிகிறது, ஆனால் இதை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. காரணம்
1. அதிக பிரபலமல்லாத திறமையுடைய வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக சங்கக்கார, மகேல, முரளி, டில்சான் போன்ற 4 அல்லது 5 பேர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி கொடுக்கப்போகும் விலை. அந்த அணியின் வீரரும் உலகிலுள்ள மிக சிறந்த விக்கட் காப்பாளருமான பிரசன்ன ஜயவர்தனவுக்கு இந்த காலப்பகுதியில் விளையாட போட்டிகள் கிடைக்காமல் போவதால் அவரது போர்ம் மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அவரது திறமை மங்கிப் போகலாம்.
2. FTP யில் மாற்றங்களை ஏற்படுத்தால் பல நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாமல் போதல்.
சர்வதேச கிரிக்கட் அட்டவணையை மாற்றம் செய்வதால் அந்த காலப்பகுதியில் பல நாடுகளுக்கு போட்டிகள் அற்றுப்போதல். இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது அதிகம் பிரபலமல்லாத அல்லது தனது ஒரு வீரரேனும் ஐ.பி. எல் தொடரில் விளையாடா சிம்பாபே, பங்களாதேஷ் போன்ற அணிகள்.
3. பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் ஓட்டங்களை கட்டுபடுத்துபவர்கள் மாத்திரமே என்னும் நிலை ஏற்படலாம்.
இன்னும் என்னை போன்ற பலருக்கு டெஸ்ட் போட்டிகள் பிடிக்க காரணம், அதிலுள்ள ஜீவன். திறமையுள்ளவாகள் மாத்திரமே அங்கு தொடர்ந்து சாதிக்கலாம். சச்சின் 20 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு காரணம் அவரது திறமை, ஆனால் திடீரெ னஒரு யுசுப் பதான் சச்சினை விட சிறந்த ஆட்டக்காரராக 20-20 போட்டிகளில் உருவகப்படுத்தப்படலாம், ஆனால் டெஸ்ட் போட்டி என வரும் போது யுசுப் பதானால் அவரது அதிரடியை மாத்திரம் கொண்டு சச்சின் போல் எதுவும் சாதிக்க இயலாது. காரணம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
மார்க் டெயிலர் தலைவராக இருந்த போது துடுப்பாட்ட வீரரை சுற்றி 6 பீல்டர்களை நிக்க வைத்து ஷேர்ன் வோனை பந்து வீச அழைத்து விக்கட்டுகளை கைப்பற்றியது போன்று 20-20 போட்டிகளில் ஷேன் வோர்னால் விக்கட்டுகளை பெற இயலாது காரணம் அவருக்கு பந்து தடுப்பாளர்களை விருப்பப்படி வைக்க முடியாது. அந்தளவுக்கு பந்து வீச்சாளரை கட்டுப்படுத்தி கிரிக்கட்டை துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமான விளையாட்டாக 20-20 போட்டிகள் மாற்றியது.
மேலும் எந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அநாயாசமாக அடித்து ஆடலாம் காரணம் பீல்டிங்கில் உள்ள கட்டுபாடுகள். முரளியின் விக்கட் எடுக்கும் போர்ம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஐ.பி.எல்லில் அவரை எதிர்த்து துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றதையாகும்.
4. அணி உரிமையாளர்களான பணக்காரர்கள் கிரிக்கட் வீரர்களை தங்களுக்கு வேண்டிய விதத்தில் விளையாட சொல்வது.
ஷாருக்கான் சொல்படி பொன்டிங், கிறிஸ் கெயில், இஷாந் சர்மாவும், விஜய் மல்லையாவுக்கு தேவையான படி காலிஸ், பீட்டர்சன், ட்ராவிட், கும்ளே விளையாடுவதும், சங்கக்கார, மகேல, யுவராஜ் போன்றோருக்கு பிரீத்தி ஷிந்தா போன்றோர் கிரிக்கட் பயிற்றுவிப்பதும் கிரிக்கட்டுக்கு நல்ல எதிர்காலமாக எனக்கு தெரியவில்லை.
இன்னும் சில விபரங்கள் அடுத்த பகுதியில்
ஷேன் பொன்ட்....
ஆனால் என்னைப் பொறுத்தவரை முரளியின் ஓய்வையும் மற்றவர்களின் ஓய்வையும் நான் பிரித்துப் பார்க்கிறேன்.
முரளி சாதனைகளைப் படைத்துவிட்டு களைத்துப் போன தோள்களோட ஓய்வு பெறுகிறார், முரளியின் போர்ம் சிறிது கவலைக்குரியதாக இருக்கிறது.
துரத்துப்படாமல் தானாக ஓய்வு பெறுவதும் சிறந்தது தானே...
மற்றும்படி ஐ.பி.எல்லைப் பற்றி கருத்துக் கூற ரணதுங்க தான் சரி.
ஒருமுறை, 'இருபதுக்கு இருபது போட்டிகள் தான் வீரர்களின் திறமையைத் தீர்மானிக்கும் என்றால் இந்தியாவின் தலைசிறந்த ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், சச்சினும் இருக்கமாட்டார்கள், மாறாக யுவ்ராஜ்ம், யூசுப் பதானுமே இருப்பார்கள்' என்று தெரிவித்திருந்தார்...
உங்கள் பணி தொடரட்டும்....
ஆகா கிரிக்கெட்டு...
பகிரங்கமாக இந்தப்பதிவிற்கான பின்னூட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்... ஹி.. ஹி..
நல்லதொரு அலசல் யோ..
என்னைப் பொறுத்தவரை கில்க்ரிஸ்ட்,ஷேன் போண்ட் ஆகியோரின் ஓய்வையும் கூட இவ்வாறு தான் பார்க்கிறேன்.
ஒரு காருடத்தில் இரண்டு மாத காலப் பகுதியில் மாத்திரம் விளையாடி ஒரு வருடம் பூராக விளையாடி உழைப்பதைவிட பல மடங்கு பணம் உழைக்கலாம் என்றால் யாருக்குத் தான் ஆசை வராது?
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் லக்ஸ்மனிடம் உள்ளதை விட பல மடங்கு விலை மதிப்புள்ள கார் ரோகித் சர்மாவிடம் உள்ளதாம்.. என்ன கொடுமையப்பா இது?
கங்கோன் சொன்னது போல முரளி 18 வருட காலம் விளையாடி பல சாதனைகள் படித்தபின் வயது காரணமாகவே ஓய்வு பெறுகிறார். மற்றவர்களின் நிலை அவ்வாறல்ல..
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய எல்லாக் காரணங்களும் நூற்றுக்கு நூறு சரியானவை.
LOSHAN
http://arvloshan.com/
தகவலுக்கு நன்றி அண்ணே
அதே அதே ஆனால் நீங்கள் சொன்னதைப்போல பந்துவீச்சாளர்கள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
துடுப்பாட்டத்திலும் அதே நிலைமைதான் கடைநிலையில் பட்டிங் வருபவரும் சிக்சர் அடிப்பார்.
இதன் விளைவு சச்சின் போன்ற சாதனை வீரர்களால் படைக்கப்பட்ட உலக சாதனைகளை குருட்டுலக்கில் எவனாவது முந்திவிடலாம்,(T20 வருகையால் சிறிய மைதானங்களின் வருகை)
நல்ல அலசல் இன்னும் எதிர்பார்க்கிறோம் தொடருங்கள் அண்ணா..
// Subankan said...
தகவலுக்கு நன்றி அண்ணே//
ஹிஹி இங்க தகவலே சொல்லயே..:p
//ஹிஹி இங்க தகவலே சொல்லயே..:p
//
கிரிக்கெட் என்றாலே எங்களுக்கு தகவல்தானப்பா. ஓவருக்கு 5 பந்துவீச்சுகள் என்பது உட்பட
//ஹிஹி இங்க தகவலே சொல்லயே..:p
//
கிரிக்கெட் என்றாலே எங்களுக்கு தகவல்தானப்பா. ஓவருக்கு 5 பந்துவீச்சுகள் என்பது உட்பட
// தகவலுக்கு நன்றி அண்ணே //
யோ அண்ணா...
ரெம்ப்ளற்ற மாத்த முடியுமா?
//கிரிக்கெட் என்றாலே எங்களுக்கு தகவல்தானப்பா. ஓவருக்கு 5 பந்துவீச்சுகள் என்பது உட்பட//
விளங்கீரும் நல்லகாலம் பூச்சியாஎண்டு கேக்காம விட்டீங்களே...
nalla kudukkuranga detailu
அண்ணா நான் போட நினைத்த கருத்துகளை எல்லாரும் சொல்லி விட்டார்கள். சுபாங்கன் அண்ணா உட்பட எனவே,
அண்ணா நல்ல பதிவு தொடருங்கள் என் ஆதரவு உங்களுக்கு உண்டு
வெளிவராத தகவல்களை வெளிகொணர்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்