ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 1)


2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் நோக்கோடு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கட் அணி, அப்போதைய ரேட்டிங்கில் கடைசியிடத்திலிருந்த பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டு போட்டி தொடரிலிருந்து விலகி நாடு வந்த்தும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “ஏன் இவர்களை விட நன்றாக விளையாடகூடிய வீரர்கள் நாட்டில் இல்லையா”. மேலும் முன்னணி வீரர்கள் விளம்பரம் நடிக்கும் நேரமளவுக்கு கூட கிரிக்கட் பயிற்சியிலீடுபடவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.



உலக கிண்ணத்தை 1983இல் இந்தியாவுக்கு கொண்டு வந்த தலைவரான கபில்தேவ், சிறந்த பல இளம் வீர்ர்களை சர்வதேச அளவுக்கு கொண்டு வருவதாக சூளுரைத்து, அந்த காலத்தில் இந்தியாவிலுள்ள பல இளம் கிரிக்கட் வீரர்களையும், சர்வதேச வீரர்களையும் கொண்டு உருவாக்கியதுதான் ஐ.சி.எல். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் கடையில் உடை வாங்க சென்றாலும் அந்த நிகழ்வை விற்று காசு சம்பாதிக்கும் இந்திய கிரிக்கட் சபைக்கு கபில் தேவின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஐ.சி.எல்லினால் இந்திய கிரிக்கட் சபைக்கு “பெரியளவில் எந்த வருமானமும் இல்லாத்தாகும். இதனால் இந்திய கிரிக்கட் சபை அந்த லீக்கில் விளையாடும் வீரர்களை தடைசெய்த்து மட்டுமல்லாது, தனது பணபலத்தை வைத்து ஐ.சி.சியை பணிய வைத்து ஐ.சி.எல்லில் விளையாடிய சர்வதேச வீரர்களை சர்வதே போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைத்த்து. ஆனாலும் இம்முறையை கைகொண்டு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை கண்டறிந்த இந்திய கிரிக்கட் சபை தொடங்கியதுதான் ஐ.பி.எல்.



ஐ.பி.எல். தொடங்கும் போது அதற்கு சொல்லப்பட்ட காரணம் இளம் இந்திய வீரர்களது திறமையை வளர்ப்பதற்கு என்பதாகும். இதற்கு தலைவராக திறமையான வியாபாரியான லலித்மோடியை களத்தில் இறக்கியது, இதற்கு முக்கிய காரணம் லலித்மோடி கிரிக்கட் வாரியத்தில் சேர்ந்ததன் பின்னர் இந்திய கிரிக்கட் வாரியத்தின் வருவாய் 7 மடங்காக அதிகரித்த்து. தேர்ந்த வியாபாரியான லலித் மோடி இந்த கிரிக்கட் வியாபாரத்தை நன்றாக திட்டமிட்டு இலாபகரமாக மாற்றுவார் என்பதை அறிந்துதான் தலைமை பதவியை அவருக்கு வழங்கினார்கள், அவர்களை லலித் மோடியும் ஏமாற்றவில்லை

பணம் கொழிக்கும் 8 முக்கிய நகரங்களை அடிப்படையாக வைத்து 8 அணிகளை உருவாக்கி அதை ஏலம் விட்டு பெரும் வருமானத்தை பெற்றார். கிட்டத்தட்ட ஒரு அணி 67-112 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. அதிக பட்சமாக மும்பாய் அணி 111.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தாலும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணி 67 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனத்தாலும் வாங்கப்பட்டது. இவ் ஏலத்தினால் இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலே வருமானம் கிடைத்துள்ளது. மேலதிகமாக 10 வருடங்களுக்கு உத்தியோக புர்வ ஊடகமாக தெரிவு செய்யப்பட்ட சோனி நிறுவனம் 1.026 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. தலைப்பில் (DLF IPL) தனது பெயரை போட்டு கொள்ள DLF  நிறுவனம் ஐந்து வருடத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நடுவர்களின் அனுசரனையாளர்களான கிங்பிஷர் நிறுவனம் 5 வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்மேலும் ஹீரொ ஹொன்டா நிறுவனம் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெப்சிகோலா நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளது.

இத்தனை மில்லியன் டொலர்களை இலாபமாக குவித்த இந்திய பிரிமியர் லீக்கும் இந்திய கிரிக்கட் சபையும் உலக கிரிக்கட்டுக்கு வழங்கியது என்ன வென அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்





8 Responses
  1. அருமை....

    தொடருங்கள்...

    முக்கியமான கேள்வி தான்..
    இளைய வீரர்களை ஊக்குவிப்பதானால் ஐ.சி.எல் இற்குத் தடை ஏன்...

    கபில்தேவை ஒருமாதிரி ஒதுக்கியே விட்டார்கள்.

    உங்கள் தொடருக்கு பூரண ஆதரவையும் வரவேற்பையும் தருகிறேன்....

    கலக்குங்கள்....


  2. அருமை....

    தொடருங்கள்...

    முக்கியமான கேள்வி தான்..
    இளைய வீரர்களை ஊக்குவிப்பதானால் ஐ.சி.எல் இற்குத் தடை ஏன்...

    கபில்தேவை ஒருமாதிரி ஒதுக்கியே விட்டார்கள்.

    உங்கள் தொடருக்கு பூரண ஆதரவையும் வரவேற்பையும் தருகிறேன்....

    கலக்குங்கள்....


  3. வாழ்த்துக்கள்....! இன்னும் சிறந்த தகவல்கள் வரும் என எதிர்பார்க்கின்றேன்.


  4. அருமையான, அறியப்பட வேண்டிய களம். தொடருங்கள்.. தொடர்கிறேன்.. வாழ்த்துக்கள் :)


  5. Anonymous Says:

    romba nalla eluthirukkeenga..thordarunga.


  6. Anonymous Says:

    வாழ்த்துக்கள்.. உண்மையில் அறியபடாத தரவுகளை அறிய தந்தமைக்கு நன்றி....


  7. ARV Loshan Says:

    அசத்தல் ஆரம்பம். எல்லாத் தகவல்களும் அச்சொட்டாக சரியே.
    கபில் இந்தியாவின் Zee தொலைக்காட்சிக் குழும உரிமையாளரோடு இணைந்து ஆரம்பித்ததிப் பலரும் மறந்து விட்டார்கள்.
    ஏதோ மோடி தான் இதையெல்லாம் அறிமுகப்படுத்தியதாக பறை தட்டுகிறார்கள்.


    //ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் கடையில் உடை வாங்க சென்றாலும் அந்த நிகழ்வை விற்று காசு சம்பாதிக்கும் இந்திய கிரிக்கட் சபைக்கு//

    நெத்தியடி


  8. Subankan Says:

    தகவல்களுக்கு நன்றி அண்ணா, அருமையான பதிவு :)