நூடுல்ஸ்

நேற்றிரவிலிருந்தே நித்தியானந்தா பரமஹம்சர் என்ற கழிசடை சாமியாரை பற்றிய பதிவுகள், ருவிட்டுகள் இணையத்தில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தனிப்பட்ட ரீதியில் சன் டீவி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம், இருக்கவும் வேண்டும். 

இந்தளவிற்கு இப்படி பட்ட ஆட்களை சிகரத்தில் ஏற்றி வைப்பதும் ஊடகங்கள்தான், அவர்களை திடீரென்று அதால பாதளத்திற்கு தள்ளி விடுவதும் இதே ஊடகங்கள்தான். இப்போது பிரச்சினை சாமியாரோ, நடிகையே அல்ல. இந்த ஜென்மங்களின் காலை தொட்டு கையை தொட்டு வணங்கும் முட்டாள் பக்தர்கள்தான். சாமியாரின் பாலியல் தேவையை தனக்கு தேவைப்பட்ட ஒருத்தருடன் தீர்த்து கொண்டது ஒரு பெரிய குற்றமல்ல, காரணம் அந்தாளும் ஒரு சாதாரண மனிதர்தானே. அப்படி இருக்கும் போது ஏன் சாதாரண மனிதர்களை வணங்குகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. மற்றபடி அடுத்தவர் படுக்கையறையில் நடப்பதை தொலைகாட்சியில் காட்டுவது என்பது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். ஆனால் சாதாரண மனிதனான ஒருத்தனை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றது யார் பிழை? முதல் பிழை ஊடகங்கள்தான் என்பது எனது கருத்து. 

இந்த சாமியார் இவ்வளவு பிரபல்யமாவதற்கு எழுத்தூடகமான குமுதம் தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? சாதாரண ஆசா பாசம் கொண்ட மனிதனை கடவுளாக சித்தரித்துடன் மாத்திரமன்றி அவர்களுக்கு அறிவுரையும் வழங்க வழி ஏற்படுத்தி கொடுத்தற்காக தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? 

இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?

சாமிகளே உங்களது ஆசைகளை தீர்த்து கொள்வது பிழை என சொல்லவில்லை, தயவு செய்து மதத்தை வைத்து ஏமாற்றாதீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராலும் எட்ட முடியாத ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் பெறும் சாதனையை சச்சின் முறியடித்து ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்களை பெற்றுவிட்டார். பல கிரிக்கட் சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் இந்தளவிற்கு முன்னேறியதற்கு அவரது தன்னடக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் சச்சின் மற்றைய சமகால இந்திய வீரர்களை போல பிரச்சினைகளை சந்திக்காததும் அந்த மாபெரும் வீரரின் தன்னடக்கத்திற்கு சாட்சிகளாகும். தோனி கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் சச்சின் இன்னொரு 20-25 ஓட்டங்களை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்

சச்சினின் பேட்டிங் சாதனைகளும் முரளியின் பந்து வீச்சு சாதனைகளும் நீண்ட காலத்திற்கு அழியாமலிருக்கும் என நினைக்கிறேன். 

ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிலி நாட்டில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தின் பயங்கரங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது 2012 படம் நினைவுக்கு வந்தது, இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். 

----------------------------------------------------------------------r--------------------------------------------------------------------------------------------
இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

சந்தேகம் 1  - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓரு கட்டிடம் சரிந்து கிடக்கும் காட்சி

15 Responses
  1. சன் தொலைக்காட்சி செய்தது சரியோ பிழையோ என்பது மறுபக்கத்தில் இருக்க என்னைப் பொறுத்தவரை அதை எதிர்ப்பது மறுபுறத்தை நியாயப்படுத்துவது போல இருக்கிறது.

    சந்நியாசி ஆகிவிட்டேன், அவதாரம் ஆகிவிட்டேன் என்று சொல்லி மக்களை நம்பவைத்து அவர்களின் ஆன்மிக உணர்வுகளில் விளையாடி அதன்மூலம் பணம் சம்பாதித்தவர்களை இதைவிட வேறு வழியில் மக்களுக்கு இனம்காட்டமுடியாது.
    பணம் களவெடுக்கிறான் என்று சொன்னால் மக்கள் நம்பப் போவது இல்லை.
    இப்படி மக்களின் உணர்வுகளின் உறைக்கிற மாதிரிச் சொல்வதில் என்னைப் பொறுத்தவரை பிழையில்லை.

    இத்தனைக்க ரஞ்சிதா என்பவர் திருமணமானவராம்.
    :(

    சச்சினின் சாதனை சாதனை தான்...

    //இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

    அப்படி என்று தான் கேள்விப்பட்டேன். :P

    இயற்கை அனர்த்தங்கள் மனத்தை உருக்குகி்ன்றன.. :(

  2. Unknown Says:

    நல்ல பதிவு. மக்கள் மடையர்கள் அதே போல் மண்டையை துளைத்து விடுவர்.அதையும் சாமியார்கள் உணர வேண்டும்.

  3. ARV Loshan Says:

    சாமியார்க் கதை சாக்கடை..
    அவரவர் தாம் மடையராகாமல் திருந்திக்கொள்வது அவர் பொறுப்பு.
    இன்னும் எம்மவர் கடவுளை அடைய சாமியார்களைத் தானே ஊடகமாகாமல் பயன்படுத்துகிறார்கள்.
    வேற வேலையைப் பாருங்க யோகா..

    //இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

    விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?
    //

    எல்லாம் பணம் செய்யும் வேலை.

    //ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.
    //
    நல்ல விஷயம். எழுதுங்கள்

    //இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். //
    திருந்தமாட்டோமே..இயற்கையே வா.. எம்மை விழுங்கி ஏப்பம் விடு..

    //இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை.//
    யோ என்பவரும் தானே.. ;)
    அவருக்கே காரணம் தெரியேல என்றால் எப்பிடி?

    //சந்தேகம் 1 - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

    சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?
    //

    வந்தி.. வாய்யா.. இங்கே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டிருக்காங்க

    LOSHAN
    http://arvloshan.com/

  4. ARV Loshan Says:

  5. Subankan Says:

    சாமியார் - தெரிஞ்ச விசயம்தானே?

    ஐ.பி.எல் - ஏதாவது தொடர்பதிவாக இருந்தால் நான் ரெடி

    வந்தியண்ணா இல்லாத பதிவுலகம் வெறுமையாகத்தான் இருக்கிறது. கோபியிடம் சொல்லி யாராவது ஏ.கே.பூமியின் மாந்திரீகத்தால் வந்தியாரைக் கூப்பிடமுடியுமா என்று பார்க்கலாம்.

  6. மதங்கள் மனிதன் கடவுளை அடைய ஒரு வழியாக உருவாக்கப்பட்டாலூம் அதன் மூலம் மனிதன் சீரழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

    இதனால் தானோ என்னவோ நான் மதங்களை நம்புவது இல்லை. கடவுள் ஒருவர் இருக்கிறார். ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் மதங்களே இவ்வாறான போலிச்சாமியார்களை உருவாக்கி உலாவவிட்டிருக்கின்றது.

    சச்சின் சாதனையாளர் தான். ஆனால் 1998ல் (இந்திய சுதந்திர தின நினைவு கிண்ண போட்டி என்று நினைக்கின்றேன்) அன்வர் 194 ஓட்டங்கள் பெற்ற காலத்தில் இருந்து எப்போதெல்லாம் ஜெயசூரிய 150த் தொடுகிறாரோ அப்போதெல்லாம் அவர் அந்த சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஏங்குவேன். ம்...! பாப்பம் இனி இலங்கையில் வேறு யாராவது சாதிக்க சாந்தர்ப்பம் இருக்க்கிறதா என்று...!

  7. சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?//

    இங்கிலாந்தில் பஞ்சாபிகள் அதிகம் என்பதால் பஞ்சாபி மொழியில் கூட அவர் எழுத முயற்சிக்கலாம். கொழுகொழு கொழும்புக் கிளிகளை விட்டு குழுகுழு ஊரில் இருப்பதால் மனுசன் கவலையாக இருக்கலாம், மீண்டும் எதிர்பார்த்து காத்து இருக்கிறம்

  8. டவுட்டு 1: சாமி ஏன் அந்த R நடிகையை தேர்ந்தெடுத்தார்? அல்லது, வசமாக மாட்டிக்கிட்டது மட்டும் இவா தானா?

    டவுட்டு 2: கொழு கொழு கொழும்பைப் பற்றியும், குளு குளு லண்டன் பற்றியும் ஆஸியிலுள்ள அண்ணனுக்கு எப்படித் தெரியும்?

  9. பாஸ் . first matter top .

  10. Unknown Says:

    சாமி பண்ணினது தப்புதான் அத விட தப்பு suntv அத பெரிய லைவ் ஷோ மாதிரி திரும்ப திரும்ப காட்டினது

    நுடுலஸ் சூப்பரு

    ipl பதிவு வரட்டும்

  11. நல்லதொரு நூடூல்ஸ்

    //இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது //

    எனக்கென்றால் பெரிதாக குறைந்ததாக தெரியவில்லை. சிலவேளை அனைவரும் பிசியாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. நேரம் கிடைத்தால் மாதம் ஒரு பதிவு எழுதி என்னுடைய இருப்பையும் உறுதிபடுத்துக்கின்றேன். ஓரளவு அனைவரினதும் பதிவுகள் வாசிக்கின்றேன்.

    //சந்தேகம் 1 ‍ இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது? //

    என்றைக்கும் நான் இலங்கைப் பதிவர் தான். இங்கிலாந்து தற்காலிகம் தான் ஆனால் இங்கிலாந்து நிரந்தரமாவது என் கையில் இல்லை.

    //சந்தேகம் 2 ‍ இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

    ஆங்கில‌த்தில் எழுதுவ‌தா? இல்லை இல்லை குஜார‌த்தியில் அல்ல‌து வ‌ங்காளியில் எழுதலாம். ஹிஹிஹிக்ஷ்

  12. கன்கொன் || Kangon Says:
    //
    //இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

    அப்படி என்று தான் கேள்விப்பட்டேன். :ப்//

    ஆங்கில‌மா? அப்ப‌டியென்றால் நான் ப‌ச்சைத் த‌மிழ‌ன்.
    //LOSHAN Says:

    //இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை.//
    யோ என்பவரும் தானே.. ;)
    அவருக்கே காரணம் தெரியேல என்றால் எப்பிடி?//

    அதேதான் யோவும் இப்ப அடிக்கடி எழுதுவதில்லை ஹர்பயன் மிரட்டினாரோ தெரியவில்லை.
    //வந்தி.. வாய்யா.. இங்கே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டிருக்காங்க //

    அதுதான் வ‌ந்துவிட்டேன்.

  13. Subankan Says:

    வந்தியண்ணா இல்லாத பதிவுலகம் வெறுமையாகத்தான் இருக்கிறது. கோபியிடம் சொல்லி யாராவது ஏ.கே.பூமியின் மாந்திரீகத்தால் வந்தியாரைக் கூப்பிடமுடியுமா என்று பார்க்கலாம்.

    ஏன் இந்தக் கொலை வெறி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தபின்னர் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கின்றீர்கள்.

  14. //கானா பிரபா Says:
    சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?//

    இங்கிலாந்தில் பஞ்சாபிகள் அதிகம் என்பதால் பஞ்சாபி மொழியில் கூட அவர் எழுத முயற்சிக்கலாம். கொழுகொழு கொழும்புக் கிளிகளை விட்டு குழுகுழு ஊரில் இருப்பதால் மனுசன் கவலையாக இருக்கலாம், மீண்டும் எதிர்பார்த்து காத்து இருக்கிறம்//

    ஓமையா இங்கே குளுகுளுவாகத் தான் இருக்கின்றோம் ஆனாலும் வந்த விடயத்தை விட்டுவிட்டு குளுகுளுவை கிளுகிளூவாகப் பார்த்தால் நித்தியானந்தம் கிடைக்கும் ஆனால் வந்த நோக்கம் நிறைவேறாது. சமரில் இன்னும் குளூகுளுவாக மக்கள் இருப்பார்கள் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.

    அண்ணே பஞ்சாபி அனுபவவோ? உண்மையாக பஞ்சாபிக் கிளிகள் அழகுதான்.

    //ஆதிரை Says:

    டவுட்டு 2: கொழு கொழு கொழும்பைப் பற்றியும், குளு குளு லண்டன் பற்றியும் ஆஸியிலுள்ள அண்ணனுக்கு எப்படித் தெரியும்?//

    ஆதிரையை வழிமொழிகின்றேன்.

  15. அருமையான பதிவு யோகா! ( டெம்ப்லேட் உதவி நன்றி : அண்ணாமலையான் ) ;)