இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.
அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். 1000 டெஸ்ட் விக்கட்டுகளை பெற்று சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி. இந்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போகிறாராம், ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய லசித் மாலிங்க கடந்த இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடியது ஐ.பி.எல் தொடர்களில் மாத்திரம் தான். தனது நாட்டுக்காக விளையாடாமல் பிரெட் லீ ஐ.பி.எல. தொடரில் விளையாட விரும்புகிறார்
இவற்றை பார்க்கும் போது சர்வதேச வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும், ஐ.பி.எல்லில் விளையாடுவதை விரும்புவதாக தெரிகிறது, ஆனால் இதை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. காரணம்
1. அதிக பிரபலமல்லாத திறமையுடைய வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக சங்கக்கார, மகேல, முரளி, டில்சான் போன்ற 4 அல்லது 5 பேர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி கொடுக்கப்போகும் விலை. அந்த அணியின் வீரரும் உலகிலுள்ள மிக சிறந்த விக்கட் காப்பாளருமான பிரசன்ன ஜயவர்தனவுக்கு இந்த காலப்பகுதியில் விளையாட போட்டிகள் கிடைக்காமல் போவதால் அவரது போர்ம் மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அவரது திறமை மங்கிப் போகலாம்.
2. FTP யில் மாற்றங்களை ஏற்படுத்தால் பல நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாமல் போதல்.
சர்வதேச கிரிக்கட் அட்டவணையை மாற்றம் செய்வதால் அந்த காலப்பகுதியில் பல நாடுகளுக்கு போட்டிகள் அற்றுப்போதல். இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது அதிகம் பிரபலமல்லாத அல்லது தனது ஒரு வீரரேனும் ஐ.பி. எல் தொடரில் விளையாடா சிம்பாபே, பங்களாதேஷ் போன்ற அணிகள்.
3. பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் ஓட்டங்களை கட்டுபடுத்துபவர்கள் மாத்திரமே என்னும் நிலை ஏற்படலாம்.
இன்னும் என்னை போன்ற பலருக்கு டெஸ்ட் போட்டிகள் பிடிக்க காரணம், அதிலுள்ள ஜீவன். திறமையுள்ளவாகள் மாத்திரமே அங்கு தொடர்ந்து சாதிக்கலாம். சச்சின் 20 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு காரணம் அவரது திறமை, ஆனால் திடீரெ னஒரு யுசுப் பதான் சச்சினை விட சிறந்த ஆட்டக்காரராக 20-20 போட்டிகளில் உருவகப்படுத்தப்படலாம், ஆனால் டெஸ்ட் போட்டி என வரும் போது யுசுப் பதானால் அவரது அதிரடியை மாத்திரம் கொண்டு சச்சின் போல் எதுவும் சாதிக்க இயலாது. காரணம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
மார்க் டெயிலர் தலைவராக இருந்த போது துடுப்பாட்ட வீரரை சுற்றி 6 பீல்டர்களை நிக்க வைத்து ஷேர்ன் வோனை பந்து வீச அழைத்து விக்கட்டுகளை கைப்பற்றியது போன்று 20-20 போட்டிகளில் ஷேன் வோர்னால் விக்கட்டுகளை பெற இயலாது காரணம் அவருக்கு பந்து தடுப்பாளர்களை விருப்பப்படி வைக்க முடியாது. அந்தளவுக்கு பந்து வீச்சாளரை கட்டுப்படுத்தி கிரிக்கட்டை துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமான விளையாட்டாக 20-20 போட்டிகள் மாற்றியது.
மேலும் எந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அநாயாசமாக அடித்து ஆடலாம் காரணம் பீல்டிங்கில் உள்ள கட்டுபாடுகள். முரளியின் விக்கட் எடுக்கும் போர்ம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஐ.பி.எல்லில் அவரை எதிர்த்து துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றதையாகும்.
4. அணி உரிமையாளர்களான பணக்காரர்கள் கிரிக்கட் வீரர்களை தங்களுக்கு வேண்டிய விதத்தில் விளையாட சொல்வது.
ஷாருக்கான் சொல்படி பொன்டிங், கிறிஸ் கெயில், இஷாந் சர்மாவும், விஜய் மல்லையாவுக்கு தேவையான படி காலிஸ், பீட்டர்சன், ட்ராவிட், கும்ளே விளையாடுவதும், சங்கக்கார, மகேல, யுவராஜ் போன்றோருக்கு பிரீத்தி ஷிந்தா போன்றோர் கிரிக்கட் பயிற்றுவிப்பதும் கிரிக்கட்டுக்கு நல்ல எதிர்காலமாக எனக்கு தெரியவில்லை.
இன்னும் சில விபரங்கள் அடுத்த பகுதியில்