கிரிக்கட்டோ கிரிக்கட்..... (தொடர் பதிவு)

எரிந்தும் எரியாமலும் எழுதும் பதிவெழுதும் பவனின் பதிவில் என்னையும்  இப்படி பதிவெழுத யாராவது அழையுங்கள் என பின்னூட்டினேன், மாலையில் வந்து பார்த்தால் நமக்கொரு அடிமை சிக்கிட்டான்என ஐந்தறை (மணிக்கே) பெட்டியில் பதிவழுதும் சுபாங்கனும்,  இட்டிலி போய் அல்லது கன் கொன் என பதிவெழுதும் கோபியும் என்னை இத்தொடர்பதிவை தொடர அழைத்திருக்கிறார்கள். கிரிக்கட் எப்போதுமே எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் விருப்பத்துடன் இத்தொடர் பதிவை எழுதுகிறேன்.


இத்தொடர் பதிவின் விதிகள்
§  உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

§  தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

§  குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.


1.பிடித்த கிறிக்கற் வீரர்? அரவிந்த டீ சில்வா
   இவருக்கு மற்றைய முன்னணி வீரர்களை போல் போட்டிகள் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் இன்றைக்கு பேட்டிங் சாதனைகள் அனைத்தும் இவர் வசமாகியிருக்கும். நான் கண்ட மிக சிறந்த மெட்ச் வின்னர், இதற்கு சிறந்த உதாரணம் 1996 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் 3 விக்கட்டுகள், 2 கேட்சுகள்அவுட் ஆக எந்த சந்தர்ப்பத்தையும் எதிரணிக்கு வழங்காமல் பெற்ற சதம் என்பவற்றின் மூலம் இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்ததை கூறலாம்.

2.பிடிக்காத கிறிக்கற் வீரர்? ஹர்பஜன் சிங்
  எனது பதிவுகளை வாசித்தவர்களுக்கு, ஹர்பஜன் சிங்கை நான் எந்த அளவுக்கு வெறுக்கிறேன் என தெரியும்.

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்? வெள்ளை மின்னல் அலன் டொனால்ட், ஆகிப் ஜாவேட் மற்றும் இயன் பிஷப்.
சிறுவயதில் கிரிக்கட் விளையாடையில் இவர்களது பாணியில் பந்து வீச எவ்வளேவோ முயன்றிருக்கிறேன்.  ஆகிப் ஜாவேட் மாதிரி ஹெயார் ஸ்டைல் எல்லாம் செய்து பந்த வீசியிருக்கிறேன்.

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்? ஆஷிஸ் நேரா, ஸ்ரீ சாந்த்
மைதானத்தில் மற்றைய வீரர்களுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவதில் இவர்களை அடித்து கொள்ள ஆளேயில்லை, அவ்வளவுக்கு கனவான் வீரர்கள்..

5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்? முரளி மற்றும் வோர்ன்
கலக்கல் மன்னர்கள், என்ன செய்தாவது விக்கட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். பெயிலியர் ஆன சந்தர்ப்பங்கள் மிக குறைவு.

6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்? பிடிக்காத வீரரும் ஒரு சுழல் பந்து வீச்சாளர்தான்அவரில்லாமல் பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்ஸ்.
காலுக்கு பின்னால் பந்து வீசி பொறுமையை சோதிப்பதில் மன்னன்.

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அரவிந்த டீ சில்வா மற்றும் ரிக்கி பொண்டிங்.
எல்லா விதமான ஷொட்களையும் மிக அழகாக அடிக்க கூடியவர்கள், அதிலும் முக்கியமாக எனது விருப்ப ஷொட்களான புல் மற்றும் ஹுக் ஷொட் அடிப்பதில் விண்ணர்கள் (வின்னர்களும் தான்)

8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அப்துல் ரசாக்
அவர் துடுப்பெடுத்தாடும் பாணி அசிங்கமாக இருப்பதால், முரளியை விட அசிங்கம் என கூறவில்லை, ஆனால் முரளியை துடுப்பாட்ட வீரராக யாரும் நினைப்பதில்லை என்பதால் எனது தெரிவு ரசாக்.

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்சனத் ஜயசூரிய மற்றும் பிரையன் லாரா
இவங்க அடிக்க தொடங்கினால் சும்மா அதிரும். நீண்ட காலமாக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள், மிக சிறந்த மெட்ச் வின்னர்கள்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்? கௌதம் காம்பீர்
இவர் எல்லா பந்துக்கும் நடந்து வந்து அடிக்கும் டெக்னிக் எனக்கு பிடிக்காமையினாலாகும்.

11.பிடித்த களத்தடுப்பாளர்? ஜொன்டி ரோட்ஸ் மற்றும் ரிக்கி பொண்டிங்
மின்னல் வேகத்தில் களத்தடுப்பில் ஈடுபடுவதால் இவர்களை பிடிக்கும், இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாமவையும் ரொம்ப பிடிக்கும்.

12.பிடிக்காத களத்தடுப்பாளர்? நுவன் சொய்சா மற்றும் அவிஸ்க குணவர்தன
பீல்டிங்கா? அது ஒரு தின்பண்டமா என கேட்பவர்கள்

13. பிடித்த ALL-ROUNDER? குளுஸ்னர், பிளின்டொப் மற்றும் அன்ஜலோ மெத்தியுஸ்
கஷ்டமான நேரங்களில் அணிக்கு கை கொடுப்பவர்கள்

14.பிடித்த நடுவர்சைமன் டௌபல், டிக்கி பேர்ட் மற்றும் பில்லி பாடன்
வீரர்களோடு மிகவம் சுமுகமாக நடப்பவர்கள் மற்றும் இரண்டாமவர் மைதானத்தில் உள்ள ரசிகாகளை கவருவதில் மன்னர்.

15.பிடிக்காத நடுவர்? டெரல் ஹெயார் 
காரணம் துவேஷத்தை கிரிக்கட்டில் காட்டியமையினால்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்ரிச்சி பேனோ, பில் லாரி, டேனி மொரிசன் மற்றும் இயன் செப்பல்
எந்த அணிக்கும் சார்பாக இல்லாமல் வர்ணனை செய்வதால் இவர்களை பிடிக்கும்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்ரவி சாஸ்திரி மற்றும் ரஞ்சித் பொணான்டோ
தங்கள் நாட்டு வீரர்களை மட்டும் உயர்த்தி பேசுவதில் மன்னாகள்

18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்

18.பிடிக்காத அணி? இந்தியா
சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி? இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளையும் விரும்பி பார்ப்பேன்

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி? பிடிக்காத போட்டி என எதுவுமேயில்லை எல்லா கிரிக்கட் போட்டிகளையும் ரசிப்பேன்.

22.பிடித்த அணித்தலைவர்மார்க் டெயிலர் மற்றும் ஷேன் வோன்
இப்போதைய அவுஸ்திரேலிய அணியை பலமான அணியாக மாற்றியதில் மார்க் டெயிலருக்கு முக்கிய பங்குண்டு. ஷேன் வோன் மிக சில போட்டிகளுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்கு தலைமைதாங்கினார், மிக சிறந்த தலைவராக வேண்டியிருந்தவர் ஆனால் அவரது நடத்தை காரணமாக நிரந்தர தலைமைப்பதவி கிடைக்கவில்லை, அவுஸ்திரேலியா இழந்த மிக சிற தலைவர் ஷேன் வோன் ஆகும்.

23.பிடிக்காத அணித்தலைவர்? மொஹம்மட் அசாருதீன் 
காசுக்காக தாய் நாட்டை காட்டி கொடுத்தவர், ஹன்சி குரோன்யே என்ற மிக சிறந்த வீரரை சூதாட்டத்திற்கு தூண்டியதும் இவர் செய்த மிகப் பெரிய பிழை.

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)
TEST -ரசித்து சுவைக்க
ODI - அளவுச் சாப்பாடு
T20 - அவசர ருசிக்கு
மூன்றுமே பசியாற்றினால் போதும்.

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? சனத் ஜயசூரிய, ரொஷான் மகானாம
வேகம், விவேகம், அதிரடி, நிதானம் கலந்த ஜோடி... 

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என யாருமில்லை.

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்? முரளிதரன், லாரா, சச்சின்
நீண்ட காலத்திற்கு இவர்களது சாதனைகள் இவர்களை பற்றி பேசும்.

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)? முரளிதரன்
எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் சாதித்து காட்டிய வீரர்

29. சிறந்த கனவான் வீரர் ? லாரா மற்றும் கோட்னி வோல்ஷ்
மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்

30. நான் பார்த்து வியந்த வீரர்கள்? சனத் ஜயசூரிய, ஷேவாக் மற்றும் அப்ரிடி
இவங்க தொடங்க மாட்டாங்க தொடங்கிட்டா அப்புறம் நிறுத்த மாட்டாங்க..


இத்தொடரை தொடர 
நான் அழைப்பது: கிரிக்கட் பதிவுகளுக்கு பெயர் போன 2 பிரபல பதிவர்கள்
(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

இங்கு நான் எழுதியது முற்றிலும் எனது சொந்த கருத்தாகும் யாரையும் புண்படுத்த எழுதவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

  ரொம்ப நாளாக பதிவு எழுதும் பார்மை இழந்து இருந்த எனக்கு இத்தொடர்பதிவை எழுதியதன் பின்னர் இனி கொஞ்சம் எழுதலாம் என தோன்றியிருக்கிறது, எழுத தூண்டியமைக்கு சுபாங்கனுக்கும் கோபிக்கும் நன்றி.




25 Responses
  1. நீங்க நம்மாளு....

    அரவிந்த, அலன் டொனால்ட், கொட்னி வோல்ஷ் போன்றவர்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்....

    பொதுவாக ஒத்துப் போகிறது...

    புதுசாக் கட்சி தொடங்குவமா?


  2. Subankan Says:

    பழைய ஆக்களையெல்லாம் ஞாபகவ் வைச்சு எழுதியிருக்கிறீர்களே :))


  3. ARV Loshan Says:

    முதல் இருவரின் பின்னூட்டங்கள் உங்களை வயசுபோனவராகக் காட்டும் ஒரு உள்குத்து விளையாட்டு யோ.. கவனியுங்கள்..

    நல்ல தெரிவுகள்.. ஆனால் பந்து கடிப்பவரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.. ;)

    என்னையும் ஜோதியில் ஐக்கியமாக அழைத்தமைக்கு மிக்க நன்றிகள் (உண்மையாத் தானப்பா.. கிரிக்கெட் பற்றி எழுதக் கசக்குமா?அலுக்குமா?)
    நாளை நேரம் கிடைத்தால் பதிவிடுகிறேன்..


  4. balavasakan Says:

    அதுதானே நான் எதிர்க்கட்சி என்றாலும் எனக்கும் ரொசான் மஹாநாம புடிக்கும் ஏனென்டால் ஒரே ஒரு அழகான இலங்கை வீரர் என்றுதான் ஹி..ஹி


  5. //பதிவு எழுதும் பார்மை//

    அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லி கொடுத்தா நாங்களும் எழுதுவோமே!


  6. full form ல இருக்கீங்க


  7. Unknown Says:

    ஏய்... பிரபல பதிவராம்... யாரப்பா அது...lol

    தொடர்கிறேன் யோகா


  8. Bavan Says:

    அண்ணா அடஅடஅட நான் பதிவை எழுதும்போது கூட நீங்க குறிப்பிட்ட சில கிறிக்கறி ஜாம்பாவான்கள் நினைவுக்கு வரவில்லை,

    பெயரைக் கேட்டாலே புல்லரிக்கிறது, அந்த மலைகளை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா,

    ஜயசூர்யா, லாரா இவங்க அடிச்ச அடில காணாமப்போன பந்து வீச்சாளர்கள் எத்தின பேர்..அப்பப்பா..;)

    @கன்கொன் - கட்சி தொடங்கிருவம்..:p


  9. aurs Says:

    18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
    ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்


    18.பிடிக்காத அணி? இந்தியா
    சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

    you see this he is saying my conuntry srilanka he loves srilanka and most of srilankan players then stupid indians please think about it we should support india and indian tamilan not to the srilankan tamils and no need of getting angry of anyone who doesnt support sri-tamils, as a human we can think of thier problems but we cannot insist our country to support tamil terrors done by LTTE


  10. Unknown Says:

    சரி நாங்களும் உங்க கட்ட்சிதான்

    பழமை எல்லாம் இன்னும் நினைவு இருக்கு


  11. கிரிக்கெட்டா? அப்படியென்றால் என்ன?


  12. @ கன்கொன் || Kangon

    என்ன கட்சி தொடங்கலாம்? இட்லி போய் கட்சி????


  13. @ Subankan

    ஏதோ என்ன பாராட்டி எழுதிட்டீங்களோ என தப்பா யோசிச்சிட்டேன் சுபாங்கன், லோஷன் சொன்னதுக்கப்புறம் தான் உங்க உள் குத்து விளங்கியது


  14. @ LOSHAN

    நீங்க சொன்னப்புறம்தான் இட்டிலி போயினதும் ஐந்தறைப்பெட்டியினதும் உள்குத்து விளங்கியது...

    தொடருங்கள், உங்கள் கிரிக்கட் ரசனைகளை அறிந்து கொள்கிறோம்.


  15. @ Balavasakan

    கிரிக்கட்டுக்கும் அழகுக்கும் என்னா சம்பந்தம் வைத்தியரே?


  16. @ Atchu

    தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கேட்பது முறையல்ல அச்சு


  17. @ Atchu

    தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கேட்பது முறையல்ல அச்சு


  18. @ அண்ணாமலையான்

    இல்லை அண்ணாத்த, இப்பதான் வந்துருக்கேன், அதுக்குள்ள பார்ம் அப்பிடி இப்பிடி ஏதும் சொல்லிடாதீங்க


  19. @ Kiruthikan Kumarasamy

    நீங்கதான் தல பிரபல பதிவர்


  20. @ Bavan

    இதுவும் உள்குத்தா இல்லை பாராட்டா பவன்?

    கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்


  21. @ aurs

    For your kind attention, i'm not a sri lankan tamil, i'm a indian origin tamil who lives in sri lanka.

    Do you know so many indian origin tamils living in sri lanka, who supports india. but indian politicians never spoke about our community, then why should I support india?


  22. @ V.A.S.SANGAR
    அப்ப கட்சி தொடங்கிடுவோம்.


  23. @ வந்தியத்தேவன்

    அது ஒரு பயங்கர மிருகம், வந்தால் கடித்து வைக்கும்


  24. அட கிரிக்கெட்டில் நம்மிருவர் ரசனைகளும் ஒத்துப் போகின்றன. எனக்கும் எப்போதும் பிடித்த வீரர் அரவிந்ததான்.மகாநாமாவும் சனத்தும் ஆரம்ப ஜோடியாக களமிறங்கியது ரொம்பவும் சொற்பம். இல்லையென்றே சொல்லலாம். மகாநாமவுக்கு ஏற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிடைக்காமல் துலிப் சமரவீர,ஹத்துருசிங்க எனப் பலரை பரீட்சித்த போது சனத் அத்தனை பிரபலம் இல்லை. அதன் பின் சனத் ,கழு முன்னிலை பெற ரொஷான் பின் வரிசைக்கு சென்று விட்டார்.


  25. நிறைய விடயங்களில் எனக்கு உங்களுடன் உடன்பாடு.அரவிந்தவை என்னவென்று சொல்வது? அந்த ஒப்பினிங் ஸ்ரான்ஸ் , கம்பி இல்லா ஹெல்மட், பழைய பாட்ஸ், முறால் பார்வை என துடுப்பெடுத்தாடும்போது அரவிந்தவின் லுக்கே ஒரு கெத்தாகத்தான் இருக்கும்.இப்ப நினைத்தாலும் புல்லரிக்கும்.