மைக்கேல் ஜாக்சன் இறந்த செய்தி கேட்ட அவரது ரசிகர்களின் உணர்வுகள் (புகைப்படங்கள்)

உலக புகழ் பெற்ற பொப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இறந்த செய்தி கேட்ட அவரது ரசிகர்கள் ஸ்தம்பித்து விட்டார்கள். அந்த புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக

எனக்கு மெயில் பண்ணிய என் நண்பிக்கு என் நன்றிகள்




































பதிவர்கள் அனைவருக்கும் விஜய் என்றால் ரொம்ப கேவலமா?


ஹாப்பி பர்த்டே விஜய்.

நான் விஜய் ரசிகன் இல்லை என்றாலும். வலை பதிவர்களில் 90 சதவீதமானவர்கள் விஜய் என்னும் நடிகனை தரம் தாழ்த்தி எழுதுவதை கண்டு தான் நானும் கொஞ்சம் விஜய் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். ஒரு விஷயம் சொல்ல வேண்டும், எல்லாரும் விஜய் என்னும் நடிகனை தூற்றுவதால் நானும் அவரை தூற்றினால் புகழ் பெறலாம் என தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள். எதோ நான் விஜய்க்கு வக்காலத்து வாங்குகிறேன் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் எல்லாம் எந்த அளவு கோலை வைத்து விஜய் படங்களை எல்லாம் மொக்கை என விமர்சிக்கிறீர்கள் என தெரியாது

ஏனெனின் விஜய் படம் என்றால் மொக்கை, ஆனால் கிட்ட தட்ட அதே மாதிரி கதை நடிப்புடன் வரும் அஜித், சூர்யா, விக்ரம் படங்கள் என்றால் மிக சிறந்த கருத்தாளம் மிக்க படங்களாக தான் நம்ம பதிவர்கள் அநேகமானவர்கள் நினைத்து இருக்கிறார்கள். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் வில்லு படத்தில் விஜய் யும், அயனில் சூர்யாவும் ஒரே மாதிரி தான் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்கள், ஆனால் இரண்டு படத்தையும் விமர்சிக்கும் நம்ம பதிவர்கள் அது குப்பை அனால் அயன் மிக சிறந்த என கூறுகிறார்கள். என்னை பொறுத்த வரையில் இரண்டு படங்களுமே நல்ல பொழுது போக்கு படங்கள் அவ்வளவுதான் .

2 நாளைக்கு முன்னாலே "ஹமாம்" சோப்பு விளம்பரத்தை விஜய் பட DVD உடன் ஒப்பிட்டு எழுதி "நல்ல வேலை அஜித் நடித்த வரலாறு படம் வாங்கி வைத்ததாக" கூறி ஒரு பதிவு படித்தேன். இது என்னமோ அஜித் நடித்த வரலாறு கல்வி சம்பதமாக மிக முக்கிய தகவல்களை கூறும் படம் என்ற ரீதியில் எழுத பட்டு இருக்கின்றது. உங்கள் மொக்கை என வரையறுத்திருக்கும் வரையறையில் வரலாறு படம் இல்லையா? என்னை பொறுத்த வரையில் அதுவும் ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம் அவளவு தான். ஆனால் நீங்கள் மொக்கை என வரையறுத்து இருக்கும் வரையறையில் அந்த "வரலாறு" படம் ஏன் இடம் பெற வில்லை?

மேலும் சொல்லுகிறேன் நான் விஜய் ரசிகனோ அல்லது அஜித் விரோதியோ இல்லை. நீங்கள் மொக்கை என வரையறை செய்தால் நடு நிலைமையோடு செய்யுங்கள், எல்லாவற்றையும் விமர்சியுங்கள். தனி ஒருத்தனை மட்டும் விமர்சிக்க வேண்டாம். அசிங்கமாக இருக்கின்றது. எந்த நாளும் எதாவது ஒரு பதிவர் விஜய் என்னும் நடிகனை கேவலமாக எழுதி இருப்பார். இதை பார்த்து பார்த்தே வெறுத்து போய் தான் இந்த பதிவை எழுதுகிறேன். என்னை பொறுத்த வரையில் எல்லா நடிகர்களும் ஒன்னு தான். ஒரே விஷத்தை ஒருத்தர் செய்தால் நல்லது மற்றவர் அதே விசயத்தை செய்தால் எதோ உள்குத்து என்கிற ரீதியில் எல்லா விசயத்தையும் பார்காதீர்கள்.

நான் இங்கு எழுதியது யாரையாவது பாதித்திருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்


கமலா? விக்ரமா? அஜித்தா? அர்ஜுனா?


ஒரு மாதிரியாக T20 உலக கிண்ணம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இரண்டு வாரத்தில் கிரிக்கெட் உலகில் தான் எத்தனை மாற்றங்கள்.

கிண்ணத்தை எதிர்பார்த்து வந்த பாண்டிங் அண்ட் கம்பெனி ஒரு மாட்சிலும் வெற்றி பெற முடியாமல் போனது, இந்த முறை கலக்குவார் என எதிர் பார்க்கப்பட்ட சைமோண்ட்ஸ் சீக்கிரமாகவே நாடு திரும்பினது, ஹாட் favorites ஆக இருந்த இந்தியா பங்களாதேஷ், அயர்லாந்து மட்ச்களில் மட்டும் வெற்றி. யாரும் எதிர் பார்காத அயர்லாந்து இரண்டாம் சுற்றுக்கு வந்தது. இதுவரையில் இந்தியர்கள் தலையில் தூக்கி வைத்து இருந்த தோனியை எல்லா இந்தியர்களும் சகட்டு மேனிக்கு விளாசுவது, எல்லாரும் முதல் சுற்றிலே வெளியேறும் என எதிர்பார்த்த பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரை இறுதி வரை வந்தது . இப்படி என்னவெல்லாமோ நடக்குது.

நான் இந்தமுறை அரை இறுதிக்கு வந்த அணிகளை நம்ம நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது,அதை உங்களுக்கும் சொல்லுகிறேன், உங்களுக்கு பிடிச்சது என்றால் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள், இல்லை பிடிக்கலைனாலும் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள்.


ஹீ ஹீ

கமலஹாசன் - சவுத் ஆப்ரிக்கா
எல்லா விசயத்திலும் பெர்பெக்ட். ஆனால் எப்பவுமே முதல் இடத்துக்கு வர முடியாது.

விக்ரம் - ஸ்ரீ லங்கா
வித்தியாசமான முயற்சிகள். போராட்ட குணம், விட்டுகொடுகாத மனபான்மை.


அஜித் - பாகிஸ்தான்

"எப்ப வெல்லுவாங்க எப்ப தோப்பாங்க" அவங்களுக்கே தெரியாது.

அர்ஜுன் - வெஸ்ட் இண்டீஸ்

எப்பவுமே அடிச்சி தூள் பண்ணுறது தான் இவங்களுக்கு பிடிக்கும். அதுவும் ஸ்டைல் ஆக. சும்மா லொட்டு லொட்டு என தட்டுறது இவங்களுக்கு அறவே பிடிக்காது. வெற்றிகள் குறைவு என்றாலும், எல்லாருக்கும் பிடிக்கும்.


window இல் ICON பின்புல நிறத்தை இல்லாமல் செய்தலும் HIDE ஆன FILE ஐ பார்த்தாலும்

விண்டோஸ் desktop இல் உள்ள ஐகான்களின் எழுத்துகளுக்கு பின்புலத்தில் உள்ள நிறத்தை இல்லாமல் செய்ய நான் ரொம்ப கஷ்ட பட்டு விட்டேன். ஒரு மாதிரியாக கடைசியில் கண்டு பிடித்து விட்டேன். உங்களுக்கும் இது உபயோகம் என்றால் பாவித்து கொள்ளுங்கள் அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு விட்டு செல்லுங்கள் தர்ம பிரபுகளே.....


01. My Computer ஐ ரைட் கிளிக் செய்து Properties என்னும் ஒப்சனை தெரிவு செய்யுங்கள்.

02. அதில் advanced என்னும் டேபினுள்ளே Performance மற்றும் settings என்பதை தெரிவு செய்யுங்கள்.

03. அதில் Visual Effects என்னும் டேப் இல் "Use drop shadows for icon labels on the desktop" என்பதை செக் செய்யுங்கள். (தெரிவு நிலையில் இருக்க வேண்டும்) இனி சகல விண்டோ களையும் ok செய்து வெளியே வாருங்கள்.

04. அடுத்ததாக Desktop இல் Right Click செய்து "Arrange Icons By" என்பதில் உள்ள "Lock Web Items on Desktop" என்பதை Un Select (முன்னாலே உள்ள டிக் இல்லாமல்) செய்யுங்கள்.

இப்போ உங்கள் Desktop இல் உள்ள ஐகான்களில் உள்ள பின்புல நிறம் இல்லாமல் போயிருக்கும்.

HIde செய்த பைல் Unhide செய்தும் தெரியவில்லையா அதை எப்படி பார்ப்பது என அடுத்த பதிவில் எழுதுகிறேன்.



உலக நாடுகள் சீனாவுடன் போர் புரியாமைக்கான காரணம்! !

உலக நாடுகள் பலவும் சீனாவுடன் போர் புரிவதில்லை. இதுக்கு காரணம் என்ன தெரியுமா? -
கீழே வாங்க
-



-




-




-




-




-



பெண் வீராங்கனைகள்








ஹீ ஹீ யாருக்கப்பா இந்த அழகான தேவதைகளுடன் சண்டை போட மனசு வரும். என் நண்பன் எனக்கு அனுப்பியிருந்த ஈமெயில் மூலமாக வந்த தகவல் தானப்பா என்னை ஜொள்ளு பார்ட்டினு தப்பா எல்லாம் நெனைச்சிடாதீங்க நான் ரொம்ப நல்ல நல்லவன் என்ன நம்புங்க



ICC WORLD T-20 வெற்றி கிண்ணம் யாருக்கு?


நேற்றைய போட்டியின் முடிவுகளை வைத்து பார்த்தால், இலங்கை,
தென்னாபிரிக்கா, இந்தியா மட்டுமல்ல மேற்கிந்திய தீவுகளும் இந்த முறை ஒரு கை பார்த்துவிடுவது என இறங்கி இருப்பது தெரிகிறது. அவர்களது பந்து வீச்சு கொஞ்சம் யோசிக்க வைத்தாலும், கிறிஸ் கெய்ல் பெரிதாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமலும் பிரபல இந்திய அணியை வெற்றி கொண்டது, கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்த்துள்ளது. Group of Death எனப்படும் மிக கஷ்டமான குழுவிலிருந்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றி இந்தியாவுக்கும் அரை இறுதி வாய்ப்பை யோசிக்க வைத்துள்ளார்கள். இந்த அணியின் வெற்றிக்கு பிராவோ, கெய்ல். சிம்மொண்ட்ஸ், எட்வர்ட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களது பலவீனம் களத்தடுப்பு.

நேற்றைய முதல் போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் நம்ம இலங்கை எவளவு சிறப்பாக விளையாடினார்கள் என்று, கஷ்டமான நிலைமைகளிலும் இறுக்கமாக விளையாடி போட்டியில் வென்றார்கள். டில்ஷான் தொடர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கி கொண்டிருக்கிறார். சனத் ஜயசூரியவும் தன பங்குக்கு
பந்துவீச்சாளர்களை நிலை குலைய வைக்கிறார். அதிலும் "டில்ஷான் ஸ்பெஷல்" எனப்படும் விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக அடிக்கும் ஒரு புதிய அடியை அவர் கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இலங்கை அணிக்கு கோப்பையை வெல்ல சாதகமான விஷயம் அவர்களது பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு (ஆசியாவின் மிக சிறந்த பீல்டிங் டீம் என வர்ணனையாளர்கள் நம்ம அணியை வர்ணிக்கிறார்கள்). பாதகமான விஷயம் கடைசி 5 ஓவர்களில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறுவது. சமர சில்வாவுக்கு பதிலாக இந்திய சேரம் அல்லது மஹ்ரோப் அணிக்குள் உள்வாங்கப்பட்டால் அந்த குறையை அவர் போக்குவர் என நம்பலாம்.


பாகிஸ்தான் அணியை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர்கள் அணியில் ஒற்றுமை இல்லை என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரிகிறது. மற்றும் யூனுஸ் கான் தன அணி வீர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரியவில்லை. நேற்று இலங்கை அணி முதலில் வேக பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்த
போது அவர் ஸ்பின்னர்களுக்கு பவர் ப்ளே ஓவர்களில் பந்து வீச சற்று பயந்தார் என தெரிந்தது. அபிரிடியின் துடுப்பாட்டமும் இதே போல் தான் அவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அனுப்ப அவர்கள் யோசிக்கிறார்கள். இது அபிரிடியின் மனநிலையினை குழப்பி உள்ளதாக தெரிகிறது. ஏனேன்றால் ஒரு காலத்தில் இவரது அடிக்கு பயப்படாத பந்து வீச்சாளர்களே இல்லை எனலாம் , இந்த இடத்தில தான் டோனி சிறந்து விளங்குகிறார் தனது அணி எல்லா வீரர்களையும் நம்பி தட்டி கொடுத்து வேலை வாங்குகிறார்.

ஆனால் என்னதான் பெரிய அணியாக இருந்தாலும் இந்திய அணிக்கு சேவாக் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறை தான் அந்த மனுஷன் அடிக்க தொடங்கினால் பந்து வீச்சாளர்கள் கதி அவ்வளவு தான். பார்ப்போம் அடுத்து வரும் போட்டிகளில் ரோதித் ஷர்மா சேவாக் போல விளையாடுவாரா என. மேலும் அப்துல் ரசாக்கின் வருகை பாகிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் அழைத்து செல்லுமா என்று.....?




வென்றது இலங்கை சென்றது ஆஸ்திரேலியா


ரொம்ப நாளாக பதிவு எதுவும் எழுதாமல் இருந்தேன், நம்ம கிரிக்கெட் பத்தி இப்ப எழுதலாம்னு தோணிச்சி, அதனால் தன எழுதுறேன். இலங்கை கிரிக்கெட் அணியை எப்பொழுதும் முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலியாவை வெல்லும் ஒரு அணியாகவே நங்கள் பார்த்தும் வந்துள்ளோம், மேலும் Big Occasion Team எனவும் இலங்கை அணியை கூறுவார்கள். அதை நேத்து நம்ம இலங்கை அணி நிருபித்துள்ளது.

சங்ககார தான் தலைமை ஏற்று நடத்திய முதல் போட்டியிலேயே தனது பொறுப்பு வாய்ந்த துடுப்பாட்டத்தை வெளி காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். டில்ஷான் IPL இல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் சூப்பர் போர்மில் இருந்து வருகிறார். மகேலே ரொம்ப எதிர்பார்த்த மாதிரியே சொதப்பி
னர். மகேல உங்கள் போர்ம் ரொம்ப முக்கியம். சமர சில்வா ஏன் தெரிவு செய்ய பட்டார் என்றே தெரிய வில்லை. அவரை விட அந்த இடத்துக்கு கபுகெதர அல்லது மஹ்ரோப் ரொம்ப பொருத்தமாக இருப்பார். ஜெஹான் முபாரக் நேற்று வாணவேடிக்கை காட்டினார். ஏன் அவரை அணியில் வைத்துள்ளார்கள் என கேட்டவர்களுக்கு அவர் நேற்று தனது துடுப்பால் பதில் சொன்னார். அதி வேக பந்துவீச்சாளர் லீ யின் பந்துகளை சிக்ஸர் நோக்கி விரட்டியது அவரின் திறமையை வெள்ளி காட்டியது.

பந்து வீச்சை பொறுத்தவரை நம்ம சுழல் வீரர்கள் கலக்கிடாங்கனு சொல்லலாம் ஆனால் வேக பந்து வீச்சாளர்களும் முக்கியமா மலிங்க மற்றும் புதிய கண்டுபிடிப்பு இசுரு உதான சூப்பர் ஆக பந்து
வீசினாங்க. உதான மிக துல்லியமாக ஸ்லோ பௌலிங் வீசுகிறார். அவர் பந்தை பிட்ச் பண்ணுவதில் இன்னும் consistency காட்டினால் நல்ல எதிர் காலம் இருக்கும். மாயஜால பந்து வீச்சாளர் மென்டிஸ் ஆஸ்திரேலியா அணியையும் கதி கலங்க வைச்சிட்டார்.

ஆஸ்திரேலியா கடந்த 2,3 தொடர்களில் Michel Johnsen ஐ நம்பி இருக்கிறது. இது அவர்களது துடுப்பாட்டம் எவ்வளவு கீழ் இறங்கி உள்ளது என்பதுக்கு சாட்சி. மேலும் சிறந்த ஒரு சுழல் பந்து வீச்சாளர் என்பது Shane Warne க்கு பிறகு அமையவே இல்லை. எப்படியோ வார்னே, ஹய்டேன், மகரத், கில்லி இல்லாத ஆஸ்திரேலியா அணி பல் புடுங்கிய பாம்பு தான்.

மற்றைய போட்டியில் அயர்லாந்து பங்களாதேஷ் அணியை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போதைக்கு ஸ்காட்லாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றை இப்போதைக்கு இழந்துள்ள அணிகள் முக்கியமாக ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள்
டெஸ்ட் விளையாடும் அணிகள். இதில் ரொம்ப முக்கியமானது ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டதை பெரும் என எதிர் பார்க்கப்பட ஒரு அணி.

எது வேண்டும்னாலும் நடக்கலாம் 20-20 போட்டிகளில், இன்று பாகிஸ்தான் அணிக்கு ரொம்ப முக்கியமான போட்டி. இன்று அவர்கள் வெல்ல வேண்டும் அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் வெற்றி பிரமாண்டமானதாக இருக்கவேண்டும்.


பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று இந்த 20-20 கிரிக்கெ
ட் திருவிழாவிலே ....