அகதமாபாத் டெஸ்ட் போட்டி சதியா?

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாம் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 5 நாட்களும் நடந்த இப்போட்டி 7 பேரின் சதங்கள் மூலம் இரு அணிகளும் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. இதன் மூலம் இத்துடுப்பாட்ட வீரர்கள் தனிப்பட்ட பல மைல்கல்களை எட்டினர், ஆனால் இச்சாதனைகள் அவர்களது அணியின் வெற்றிக்கு உதவியதா என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தவர்களும் உண்டு. இந்த போட்டியில் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் இந்திய கிரிக்கட் சபையும், இப்போட்டிக்கு தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தவர்களுமாவார்.

கடந்த 5 வருடங்களாக அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளை எடுத்து பார்த்தால், அவுஸ்திரேலியாவில் கடந்த 5 வருடங்களில் 27  போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன, அதில் 2 போட்டிகள் மாத்திரமே வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன. தென்னாபிரிக்காவில் நடந்த 29 போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவடைந்திருக்கின்றன, இலங்கையில் நடந்த 22 போட்டிகளில் 4 வெற்றி தோல்வியற்ற பெறுபேற்றை தந்திருக்கின்றன. மாறாக இந்தியாவில் கடந்த 5 வருடமாக நடந்த 24 போட்டிகளில் 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை தந்திருக்கின்றன, இந்த தரவுகள் இன்னொரு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. முடிவை எட்டக்கூடிய முறையில் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டால் சில வேளைகளில் அப்போட்டிகள் 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடும், இவ்வாறு 3 அல்லது 4 நாட்களில்  போட்டி முடிந்து விட்டால் இறுதி நாளன்று விளம்பரம் செய்ய இயலாமல் இந்திய கிரிக்கட் சபைக்கு பெருந்தொகையான பணம் நட்ட மேற்படலாம், இதனாலே இந்த உப்பு சப்பற்ற பேட்டிங் விக்கட்டுகளை இந்திய கிரிக்கட் சபை ஊக்குவிக்கின்றது, மேலும் இதன் மூலம் துடுப்பாட் வீரர்களுக்கும் பல தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.



இப்போட்டியில் சச்சின் தனது 43 வது சதத்தை பெற்று கொண்டார், ஆனாலும் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்றிருப்பது 16 போட்டிகளில் தான் என்பது சற்று அதிர்ச்சியான உண்மை. ஒரு வீரர் சதம் பெற்று அவ் அணி போட்டியில் வெற்றி பெற்றதா என பார்த்த போது கிடைத்த தகவல்களில் முன்னணியில் இருப்பவர்கள் அவுஸ்திரேலியர்களே. இதில் கவாஸ்கர் பெற்ற 29 சதங்களில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது வெறும் 6 போட்டிகளில் மாத்திரமே. இங்கு முதலில் இருப்பது பொன்டிங் அவர் சதம் பெற்று அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற போட்டிகள் 27. அந்த தகவல்கள் கீழே

இடம்      வீரர்                                                வெற்றி பெற்ற போட்டிகள்
01          ரிக்கி பொன்டிங் -------------------------------27
02         ஸ்டீவ் வோ் ------------------------------------ 25
03         பிராட்மேன் -------------------------------------23
04.        ஹேடன் ----------------------------------------23
.................................................................................................
07.        சச்சின் டென்டுல்கார் ------------------------12
.................................................................................................
22       ராகுல் டிராவிட் ---------------------------------10
.................................................................................................
61      சுனில் கவாஸ்கர் --------------------------------6


இதன் மூலம் கிரிக்கட் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் தமக்கு தேவையான மாதிரி ஆக்கி கொண்டு நல்ல வருவாயை சம்பாதித்து கொண்டிருக்கின்றன.

நாம் தான் முட்டாள்களாக போட்டி முடிவுகளை பார்த்து கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.






பாடசாலையில் மதக்கல்வி தேவையா?

டிஸ்கி -  இது யாரையும் புண்படுத்தும் பதிவல்ல, என் மனதிற்கு தோன்றியதை பதிவிடுகிறேன், முக்கியமான விடயம் நானும் ஒரு கடவுளை நம்பும் ஆத்திகன்.



சைவ மதத்தை பின்பற்றும் நான், தீவிரமாக கடவுளை வணங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன், சமயம் பற்றிய கல்வியை பாடசாலையில் விருப்பத்தோடு கற்றுள்ளேன். மதத்தை பற்றி கற்கும் போது பாடசாலையில் எனது மதமான இந்து மதத்தை கற்றேன், மேலும் எனது பள்ளி ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் சிறிதளவு கிறிஸ்வத அறிவும் கிடைத்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது இச்சமயக்கல்வி மாணவர்களிடம் சிறிய வயதிலே பிரிவினையை தூண்டி விடுவதாக தோன்றுகிறது. இன்று உலகலாவிய ரீதியில் ஏற்படும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் மதங்களும் ஒரு முக்கிய காரணம், மனிதர்களிடம் அன்பை வளர்க்க வேண்டிய மதமே மனிதர்களிடம் பிரிவினையை தூண்டுகிறது என்றால், அம்மதம் மக்களுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்து.

இதை நான் மற்றோருக்கு கூறும் போது, என்னை ஒரு மதத்துவேசியாகவே பார்க்கிறார்கள், காரணம் இங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும். நான் கடவுளை நம்புபவன், ஆனால் நான் வணங்கும் இந்து கடவுள்தான் உலகத்தில் ஒரே கடவுள் மற்றைய எல்லா மதங்களும் பொய் என கூறவில்லை, இன்னுமொரு முக்கியமான விடயம் எனக்கு
மற்றைய மதங்களை விமர்சிக்க தார்மீக ரீதியில் உரிமையுமில்லை, காரணம் அவற்றை விமர்சிக்க கூடியளவுக்கு நான் அந்த மதங்களை கற்றவனல்ல, எனது வீட்டை சுத்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

“எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.

திருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன், சற்று பெரிய வயது வந்ததன் பின்னரே சமயக்கல்வியை விட வாழ்க்கைக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன்,

மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.

தலைப்பில் உள்ளவாறு “மதக்கல்வி பாடசாலையில் தேவையா?” என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமானது, காரணம் சிறிய வயதில் மூளைக்கு செலுத்தப்படும் விடயம் கடைசி வரை அழியாது, ஆனால் இதில் இன்னாரு விடயமும் உள்ளது, நமது மதம் பற்றி எமக்கு அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.

அதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், இப்படி கற்றுக் கொடுப்பதால் எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் இது மத ஒற்றுமையை வளர்க்கும் எனவும் நினைக்கிறேன், மேலும் சமயத்தை பரீட்சைக்கு என படிக்காமல் வாழ்க்கைக்கு என படிக்கும் நிலை வர வேண்டும் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டுங்கள், எனது கருத்து பிழை எனில் அதையும் தெரிவியுங்கள்.



பிடிக்கும் ஆனால் பிடிக்காது


சுபாங்கன் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. யாராவது என்னை இந்த பதிவுக்கு கூப்பிட மாட்டார்களா என நினைத்திருந்தேன். நல்ல வேளை சுபாங்கன் அழைத்துவிட்டார், அப்படி அவர் அழைத்திருக்காவிடினும் நானே “தொபுகடீர்“ என்று இந்த தொடர் பதிவில் குதித்திருப்பேன். எனக்கு பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் சொல்ல வாய்ப்பு கொடுத்த சுபாங்கனுக்கு நன்றிகள்.


அரசியல் தலைவர்


பிடித்தவர் - நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ
தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றியதற்காக மண்டேலாவை பிடிக்கும், அமெரிக்காவுக்கு அடிபணியாமைக்காக காஸ்ட்ரோவை பிடிக்கும்


பிடிக்காதவர் - அமெரிக்க ஜனாதிபதிகள் 
அடுத்த வீட்டுக்குள்ளே புகுந்து திருடுவதால் அவர்களை பிடிக்காது.


நடிகர் 


பிடித்தவர் - இவரைதான் பிடிக்குமென்பதில்லை நன்றாக நடிக்கும் எல்லா நடிகரையும் பிடிக்கும், அன்பே சிவத்தில் கமல், சேதுவில் விக்ரம், அயனில் சூர்யா, சச்சினில் விஜய் என அந்தந்த படங்களில் அவரவர் நடித்த பாத்திரங்களினால் பிடிக்கும்.


பிடிக்காதவர் - அஜித், பிரசாந்த் இருவரையும் பிடிக்காது. காரணம் சொல்ல ல தெரியாது. 



நடிகை




பிடித்தவர் - இப்போது பாவனா, அசின் எப்போதும் ஜோ மற்றும் சிம்ஸ்



பிடிக்காதவர் - பொம்மை மாதிரி வந்து போகும் எல்லா நடிகையையும் பிடிக்காது.




எழுத்தாளர் 



பிடித்தவர் - சுஜாதா, சாண்டில்யன், என்டமூரி வீரேந்திரநாத் 


சுஜாதா பிடிக்க காரணம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை, ஆனாலும் சுஜாதாவிடம் கொஞ்சம் சாதி பற்று இருந்தது பிடிக்காது, சாண்டில்யன் பிடிக்க காரணம் அரசர் கால வாழ்க்கையை நான் சிறிய வயதில் அறிய காரணமாக இருந்தவரென்பதால், என்டமூரி வீரெந்திரநாத்தின் சில கதைகள் வாசித்துள்ளேன், அவற்றில் ஒன்றில் நமது கிரகத்தை காப்பாற்ற வேற்று கிரகத்துக்கு செல்லும் மனிதர்களின் கதையை ஒரு கணனியையும் சேர்த்து எழுதியிருப்பார். எனக்கு கணனி மேல் காதல் வர அந்த கதையும் காரணம். இந்த கதையை தமிழில் மொழி மாற்றியவர் சுசீலா கனகதுர்கா

பிடிக்காதவர் - பிடிக்காதவர் என்று சொல்வ யாருமில்லை. எல்லாரதும் ஏதாவர் ஒரு படைப்பாவது பிடிக்கும்.



கவிஞர் 




பிடித்தவர் - வாலிபக்கவிஞர் வாலி மற்றும் மேத்தா


காரணம் இவர்களது கவிதை பிடிக்கும். ஒரு காலத்தில் வைரமுத்துவும் பிடித்திருந்தது, ஆனால் இப்போ அவரை பிடிக்காது.




பிடிக்காதவர் - சிநேகன்.

காரணம் எல்லாருக்கும் தெரியும்


இசையமைப்பாளர்




பிடித்தவர் - A.R. ரகுமான்,  A.R.ரகுமான், A.R. ரகுமான்

ஏன் பிடிக்கும் என தெரிய எனது ஆரம்பகால பதிவுகளை பார்தால் தெரியும்

பிடிக்காதவர் - இமான். எதாவது பழைய பாடலை வெறுக்க வேண்டுமா இமானிடம் கொடுங்கள் ரீமிக்ஸ் செய்து அதை வெறுக்க செய்து விடுவார்.



இயக்குனர்



பிடித்தவர் - மணிரத்தினம்

யாரிடம் என்ன திறமை உண்டு, அதை எவ்வாறு வெளிக் கொணர வேண்டும் என அறிந்தவர். இதற்கு உதாரணமாய் அஞ்சலி படத்தை சொல்லலாம்.


இவரை பிடிக்க இன்னொரு காரணம் நம்ம ஏ.ஆர். ரகுமானை சினிமாவுக்கு கொண்டு வந்ததாலும் ஆகும்


பிடிக்காதவர் - விசு, விக்கிரமன்

சினிமாவில் மெகா சீரியலை காட்டியவர்கள்



பாடகர்




பிடித்தவர் - எஸ்.பீ.பாலசுப்ரமணியம், கார்த்திக்



இருவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்து, இப்படி பட்ட பாடல்கள்தான் பாடுவோம் என இருக்காமல் எல்லா விதமான பாடல்களையும் பாடுவதால் இருவரையும் பிடிக்கும். நம்ம தல ரகுமானின் குரலும் பிடிக்கும். 



பிடிக்காதவர் - ஹரீஷ் ராகவேந்திரா 

தான் மட்டுமே சிறந்த பாடகர் என்னுமத் கர்வம் கொண்டதால் பிடிகடகாது.



பாடகி




பிடித்தவர் - சுசீலா, சுவர்ணலதா, சின்மயி

முன்னவர் காலத்தால் அழியாத குரலை கொண்டிருப்பதாலும், அடுத்த இருவரும் விதவிதமாக குரலை வெளிக்காட்டியமையாலும் பிடிக்கும்



பிடிக்காதவர் - ஜானகி 

இவரது குரல் ஏதோ அந்நியமாக தோன்றும், அதனால் பிடிக்காது. மலரே மௌனமா பாடலில் எஸ.பீ.பியின் குரலில் இருந்த மென்மை இவரது குரலில் இல்லை என எனக்கு படுகிறது.



விளையாட்டு




பிடித்தது- No Eating, No Drinking, No Sleeping, Only  Cricket


மற்றைய எல்லா விளையாட்டுகளையும் பிடிக்கும், ஆனாலும் எல்லா தெற்காசியரையும் போல கிரிக்கட் கொஞ்சம் அதிகம் பிடிக்கும்.



பிடிக்காதது - பிடிக்காத விளையாட்டு எதுவுமேயில்லை. W.W.E கூட எனக்கு பிடிக்கும்.

இந்த தொடர்பதிவிற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. காரணம் அநேகமாக எல்லாரும் இந்த தொடரை எழுதியிருஐக்கிறார்கள். அதனால் இத்தொடர் இத்துடன் முடிவடைகிறது. யாராவது விரும்பினால் தொடரலாம்.


என் கருத்துகள் யாரையும் புண்படுத்தற்கதாக நான் கூறியதல்ல எனது ரசனையை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். அவ்வாறு புண்படுத்தினால் மன்னிக்கவும்.