என்ன செய்வது தெரியவில்லை?

நான் எனது மடிக்கணனியில்தான் இணைய பாவனை செய்வது வழக்கம். அதில் நான் இணைய பாவனைக்கு கூகுல் குரோமை மென்பொருளாக பாவித்து வந்தேன்.

நான் எனது எல்லா பாஸ்வேர்டுகளையும் குரொமில் சேமித்து வைத்திருந்ததால், வழமையாக எனது மின்னஞ்சல்கள், மூஞ்சி புத்தகம், புலோக் ஆகியவற்றிற்கு செல்லும் போது என்னிடம் கடவுச்சொல்லை குரோம் கேட்பது இல்லை. இது எவ்வளவு பெரிய வசதி என்று நினைத்திருந்த நான், எனது ஜீமெயில், யாகூ மெயில், பேஸ்புக் ஆகியவற்றின் பாஸ்வேர்ட்டுகளை யாரோ திருடி அதை மாற்றி என்னை அதற்குள் புகவிடாமல் தடுத்ததை தொடர்ந்து செய்வதறியாமல் இருக்கிறேன்.

ஏதொ எனது டிவிட்டர் கடவு சொல் மாத்திரம் களவு போகாமல் பாவிக்கும்படியுள்ளது. எனது யோ வொய்ஸ் புலோக்கிற்கு எனது வேறொரு மின்னஞ்சலை தொடர்புபடுத்தி வைத்திருந்தது இப்போது உதவியிருக்கிறது, ஆனாலும் என்னால் யோ வொய்ஸ் புலோக்கிற்கு சென்று செட்டிங்குகளை மாற்ற இயலாது.

என்னால் முடிந்தளவு யாகூ, கூகுல், பேஸ்புக் ஆகியவற்றுக்கு முறையிட்டும் பலனில்லை.

எனது யாகூ மெயில், ஜீமெயில், பேஸ் புக் ஆகியவற்றை மீட்டு தர யாராவது வழி சொல்லமுடியுமா?



I can't access my email

testing post