நூடுல்ஸ்
கடந்த வாரம் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக எங்களுக்கு கிட்டிய இடத்தில் இருக்கும் ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு எனக்கு ஏற்பட்டிருப்பது உணவு ஒவ்வாமையினால் (Food Poison) ஏற்பட்ட வருத்தம் என மருந்து கொடுத்தனர், ஆனாலும் வலி குறையாமையால் அடுத்த நாளும் மருந்து எடுக்க வேறு ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு என்னை சோதித்து எனக்கு ஏற்பட்டிருப்பது தசைப்பிடிப்பு எனக்கூறி மருந்து தந்தனர். அந்த மருந்தால் தான் எனது வருத்தம் குணமாகியது.
எனது கேள்வி “இப்படி எல்லாம் மருந்து கொடுக்கும் இந்த வைத்தியர்களையும், தனியார் வைத்தியசாலைகளையும் கவனிக்க யாருமில்லையா?” காரணம் நான் நோயால் பட்ட வருத்தத்தைவிட பிழையான மருந்தை உட்கொண்டதால் இரண்டு நாட்கள் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். இதே நிலை சிறுவர்களுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?????
--------------------------------------------------------------------
கூகுல் புஸ்ஸோ இல்லை பஸ்ஸோ என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதை அவர்கள் பேஸ்புக்குக்கும் டிவிட்டரும் இணைந்த ஒரு சேவையாக தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். டிவிட்டர்க்கு போட்டியாக வந்தாலும் பேஸ்புக்கை மாற்றிட இப்போதைக்கு இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் பேஸ்புக்கின் விஸ்தீரணம் அதிகம்.
எனது பாடசாலை நெருங்கிய நண்பன் ஒருவன் பள்ளி காலத்திற்கு அப்புறம் தொடர்பற்றிருந்தேன், சென்ற மாதம் பேஸ்புக்கில் அவன் என்னை பார்த்து என்னுடன் தொடர்பு கொண்டு இப்போது பிரான்சில் இருப்பதாக சொன்னான், இதே போல் பலரது பல நண்பர்களை பேஸ்புக் இணைத்துள்ளது. மேலும் எனது நண்பர்களும் உறவினர்களும் பல ஊர்களிலும், பல நாடுகளிலும் இருந்தாலும் அவர்கள் என்னைவிட்டு தூர இருப்பதாக ஒரு நாளும் எண்ணியதில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த மூஞ்சி புத்தகம். இப்போதெல்லாம் நாங்கள் பேஸ்புக்கில் இடப்படும் ஸ்டேஸ் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அதே கணம் உலகிலுள்ள பலரையும் சென்றடைந்து எங்களது உணர்வுகளை பகிர செய்வதன் எங்களுடன் மிகவும் நெருங்கியமைந்து காணப்படுகிறது இந்த மூஞ்சிப்புத்தம், (இதற்கு போட்டியாகவுள்ள My Space, HI5, Friend Star என எதுவும் இலங்கையில் மூஞ்சிப்புத்தமளவுக்கு பிரபல்யமாகவில்லை).
இந்தளவு எங்களோடு உணர்வுபுர்வமாகஇணைந்துள்ள பேஸ்புக்கை கூகுலால் வெல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.
--------------------------------------------------------------------
சென்ற வாரம் எமது நிறுவனத்தை சகா சேர்ந்த ஒருவர் தனது காரில் இரவு நேரத்தில் தூர பிரயாணிக்கும் போது ஒரு வணக்கஸ்தலத்திற்கு அருகாமையில் காரை விட்டு இறங்கி கடவுளை வணங்கிவிட்டு உண்டியலில் ஒரு சில்லறை நாணயத்தை போட்டு காரில் ஏறும் போது ஒருவன் கத்தியை காட்டி பயமுறுத்தி காரை பறித்து கொண்டு சென்றுவிட்டான்.
காரையும் திருடனையும் அன்றிரவே பிடித்தாயிற்று. ஆனாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும், இரவு நேரங்களில் வாகனங்களை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுத்துவதை தவிர்த்தல் நலம்.
--------------------------------------------------------------------
அசல், தமிழ்படம் ஆகிய இரு படங்களை இந்த வாரம் பார்த்தேன், தமிழ் படம் மிகவும் சிறப்பாக இருந்த்து. ரஜனி, கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா படங்கள் முதல் அந்த கால படங்கள் வரை கலாய்த்திருக்கின்றனர். நண்பர்களோடு இணைந்து சிரித்து சிரித்து பார்க்க இந்த படம் மிக சிறந்த்து, இதை பார்த்த பின்னரும் பஞ்ச் டயலாக் பேசுவது, ஒரே பாட்டில் பணக்காரனாவது, சென்னை ரயில் நிலையத்தை அடையாளமாக காட்டுவது, விரல் வித்தை செய்வது, அறிமுக காட்சியில் சண்டை, குடும்ப பாட்டில் ஒன்று சேர்வது, பட்டங்கள் வைத்து கொள்ளுதல், வயதான நடிகர்களை நண்பர்களாக நடிக்க வைப்பது என்பவற்றை யாராவதும் செய்தால் அதை பார்த்து நாம் சிரிக்க வேண்டியதுதான்.
அசல் படம் பில்லா பாதிப்பில் அஜித் நடித்திருக்கும் இன்னொரு படம். விஜய்க்கு நடனம் எவ்வாறோ, அஜித்துக்கு நடை அவ்வாறே. தல படம் முழுதும் ஸ்லோமோஷனில் நடந்திருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக போகும் படம் பம்பாய் வில்லனின் சாவிற்கு பிறகு ஸ்லோமோஷனில் போகிறது. இடைவேளையின் பின் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நாம் எதிர்பார்த்த படியே நடப்பது படத்தின் மைனஸ்.
--------------------------------------------------------------------
இன்று முடிந்த இந்திய தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து, கடைசி ஓவருக்கு முந்திய ஓவரில் இந்திய வெற்றி பெற்றிருக்கிறது, ஆனாலும் தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஹம்லா கடைசி வரை போராடியது பாராட்ட தக்கது. இதன் மூலம் இந்தியா தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் இந்தியா இம்முதலிடத்தில் இருப்பது எனக்கு பிழை என்றே படுகிறது. இந்திய முதலிடத்தை பெற்ற போட்டியில் இரண்டு இனிங்சிலும் போமிலிருந்த டில்ஷானுக்கு கொடுக்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புக்கள் காரணமாகவே இந்தியா அப்போட்டியில் வென்றது, அதே போட்டியில் சரியான ஆட்டமிழப்பு ஒன்று வழங்கப்படாத ஷேவாக் ஆடிய புயல் ஆட்டமும் இந்தியா வெல்ல ஒரு காரணமாகும்.
--------------------------------------------------------------------
கடைசியில் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின் படம்
வைத்தியர்கள் பொறுப்பாகச் செயற்படவேண்டும்...
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு அண்மையில் சாதாரண இரத்தத் திரள்வை கட்டி எனக்கூறி சத்திரசிகிச்சைக்கு வரச்சொன்னார்கள்.
அவர் தேசிய வைத்தியசாலையில் சென்று பரிசோதிக்க அது பயப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்கள்.
கொடுமை என்னவென்றால் அந்த வைத்தியர் சக்தி தொலைக்காட்சியில் 12.30 மணி நிகழ்ச்சிக்கு அடிக்கடி வந்து ஆலோசனை கூறுபவர்...
பேஸ்புக்கின் விஸ்தீரணம் அதிகம் தான்...
பார்ப்போம்...
அப்ப சாமி இல்லயோ?
கடவுளிற்ற போனாப் பிறகு பறிக்கிறது கடவுள அவமதிக்கிற மாதிரி... :P :D
தமிழ்படம் பார்த்தேன்...
அருமை...
ஆனால் கொடுமை இலங்கைத் திரையரங்குகளில் காணவில்லை... :(
ரெஸ்ற் போட்டியை நான் விரும்பக் காரணம் இதுதான்...
இந்தியர்களை விடுங்கள்.
அவுஸ்ரேலியர்களுக்கு சார்பாக நடுவார தீர்ப்புக் கொடுத்தால் அது சதி, அதுவே இந்தியாவுக்குச் சார்பாக வழங்கினால் அது தற்செயல்...
இந்தத் தொடரிலும் அது தொடர்ந்தது.
referral ஐயும் அனுமதிப்பதாகத் தெரியவில்லை.
எங்கள் நகைச்சுவைத் தளபதி செவாக்கின் வீரதீரச் செயலை குறிப்பிடாமையை கண்டிக்கிறேன்...
நூடில்ஸ் நல்லா இருக்கு...
நூடில்ஸ் சூப்பர் அண்ணா.... கடைசி படம்தான் அதை விட சூப்பர்... இவன் பவன நம்பாதிங்க.... ஒரு நேரத்துக்கு ஒருத்திய சொல்லி கொண்டு இருப்பான்....
சேவாக் பத்தியும் போட்டு இருக்கலாம்...
நானும் ஒரு தனியார் வைத்தியரிடம் போ....
யோவ் யாருப்பா அது முறாய்க்கிறது? சரி வேணாம்பா
பேஸ்புக் - நான் வேற என்னத்தைச் சொல்லப்போறன்?
கடவுளிட்டப் போனதாலதான் காரை உடனயே கண்டுபிடிச்சாச்சோ? (கோபி அமைதி)
தமிழ்ப்படம் - சைக்கிள் ஓடுறதை விட்டுட்டீங்களே :)
//விஜய்க்கு நடனம் எவ்வாறோ, அஜித்துக்கு நடை அவ்வாறே. //
ஆமால்ல?
எமா வட்சன் என்னதான் கஸ்டப்பட்டாலும் நம்ம பாவனாவுக்குக்கிட்ட வருமா?
//கடவுளிட்டப் போனதாலதான் காரை உடனயே கண்டுபிடிச்சாச்சோ? (கோபி அமைதி)//
கடவுளிற்ற போயிருக்காட்டி களவே போயிருக்காதே?
(நான் அந்தப் பின்னூட்டம் போடும்போது இந்தப் பதில் வருமெண்டு எதிர்பார்த்தன்)
//நான் அந்தப் பின்னூட்டம் போடும்போது இந்தப் பதில் வருமெண்டு எதிர்பார்த்தன்//
நானும் அந்தப் பின்னூட்டம் போடும்போது இதைத்தான் எதிர்பார்த்தேன்
//நானும் அந்தப் பின்னூட்டம் போடும்போது இதைத்தான் எதிர்பார்த்தேன் //
ஆனா இப்பிடியொரு பதில் வருமெண்டு எதிர்பார்க்கவே இல்ல... :D
அது செம்மா உங்களைச் சீண்டுவதற்காக இடப்பட்ட பின்னூட்டம் கோபி. மற்றபடி இந்தக் கடவுள் ஆதரவு - எதிர்ப்பு விவாதத்தில் தலைப்போட எனக்கு விருப்பமில்லை :)
//அது செம்மா உங்களைச் சீண்டுவதற்காக இடப்பட்ட பின்னூட்டம் கோபி. மற்றபடி இந்தக் கடவுள் ஆதரவு - எதிர்ப்பு விவாதத்தில் தலைப்போட எனக்கு விருப்பமில்லை :) //
எனக்கும் விருப்பமில்ல...
நானும் அதை உணர்ந்து தான் பதில் போட்டன்...
நல்ல நூடில்சுப்பா!
எம்மா வாட்சன் அழகாருக்கார்.. நானும் லைனப்போடலாமோ? யாரட்ட பெமிசன் கேக்கவேணும்?
நுடுல்ஸ் நல்லாத்தான் இருக்கு...
//நானும் லைனப்போடலாமோ? யாரட்ட பெமிசன் கேக்கவேணும்? //
என்னட்ட...
என்னட்டக் கேக்கோணும்..
ஆனா ஒத்துக் கொள்ள மாட்டன் எண்டுறது வேற விசயம்...
மசாலா கொஞ்சம் தூக்கல் ........
பதிவ விட இந்த பின்னுட்டங்கள் சீ கும்மிகள் அதுவும் அந்த லோசன் அண்ணா பதிவுக்கு
வைத்தியசாலைகளை ஒன்றுமே செய்யமுடியாது, அவர்களாக திருந்தினால்தான் உண்டு..:(
***
மூஞ்சிப்புத்தகம் நல்லது செய்தாலும் FAKE Account வைத்திருப்பவர்களை தடுக்க வழிசெய்தால் நல்லது என்று நினைக்கிறேன்..;)
***
//கத்தியை காட்டி பயமுறுத்தி காரை பறித்து கொண்டு சென்றுவிட்டான்.//
என்ன கொடுமை இது, கத்தியைக்காட்டி காராயும் பறிக்கிறாங்களா?...
***
ஹாஹா தமிழ்ப்படம் பார்த்து வயிற்று வலி வராத குறை எனக்கு..
சப்பா... என்ன காமடி.. என்ன காமடி...
நான் இரண்டு முறை பார்த்துவிட்டேன்... இன்னும் பலதடவை பார்க்க வேண்டும்..:D
பில்லா குறூப் சண்டைக்கதை, அசல் குடும்பச்சண்டைக்கதை அவ்வளவுதான்... அதைவிட ஸ்டைலில் கலக்கியிருக்கிறார்கள் என்ன?..;)
***
ஹசிம் அம்லாவைப் பார்த்து எத்தனை Bowlers கிறிக்கட்ட விட்டு ஓடப்போறாங்களோ..ஹீஹீ
***
//கடைசியில் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின் படம்//
ஹாஹா... நன்றி அண்ணா..:p
நூடுல்ஸ் சூப்பர் அண்ணா..;)
***
@ புல்லட் அண்ணா,
//எம்மா வாட்சன் அழகாருக்கார்.. நானும் லைனப்போடலாமோ? யாரட்ட பெமிசன் கேக்கவேணும்?//
இயஸ் இயஸ் பவனிடம் கேக்கவேணும்..:p
ஆனா லைன் போட்டு வேலையில்ல ஏற்கனவே செட்டாகிட்டுதாம்..
//இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின்//
ஏன் பவனின்ர உள்ளுர் ஆக்கள் பாத்தா என்னா ஆகிறது ஏன்...?
வைத்தியர்களைப் பற்றி இன்னொரு விஷயம்.. எவ்வளவோ நல்லவர்கள் நல்ல சேவைகளை வழங்கும்போது இவர்கள் போன்ற ஒரு சிலரால் எல்லோருக்கும் கெட்ட பெயர்.
கூகுல் புஸ்ஸோ இல்லை பஸ்ஸோ//
எனக்கும் இது அவ்வளவாக ஈர்க்கவில்லை.மாறாக தொல்லையாகவும் உள்ளது. ட்விட்டரில் உள்ள அமைதியும்,திருப்தியும் இதில் இல்லை.
//வணக்கஸ்தலத்திற்கு அருகாமையில் காரை விட்டு இறங்கி கடவுளை வணங்கிவிட்டு உண்டியலில் ஒரு சில்லறை நாணயத்தை போட்டு காரில் ஏறும் போது//
போட்ட காசு போதவில்லை என சாமி குடுத்த தண்டனை இதுவோ?
// தனிப்பட்ட ரீதியில் இந்தியா இம்முதலிடத்தில் இருப்பது எனக்கு பிழை என்றே படுகிறது.//
இன்னும் சில மாதங்கள் தான்..
உந்த எம்மாவை விட புல்லட்டின் முன் வீட்டு அம்மம்மா அழகு.. ;)
//கடைசியில் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின் படம்
//
வடை போச்சே...இந்த விஷயம் எம்மாவுக்கு
தெரியுமா??
//புல்லட்
எம்மா வாட்சன் அழகாருக்கார்.. நானும் லைனப்போடலாமோ? யாரட்ட பெமிசன் கேக்கவேணும்?//
யோவ்! என்ன ஆளுய்யா நீர்! கொஞ்சம் கூட ஆசையில்லை. கிழவியல் காணாதெண்டு குமருகளுக்கு நூலு விடுறீரோ! எலும்பு பத்திரம்.ஹீஹீ
//Loshan said...
உந்த எம்மாவை விட புல்லட்டின் முன் வீட்டு அம்மம்மா அழகு.. ;)//
யார் அந்த கிழவியா?
நூடில்ஸ் சிக்கலில்லை யோகா! டேஸ்ட் தான்
@ கன்கொன் || Kangon
ஷேவாக் பற்றி சொல்ல நினைத்து பின்னர் சொல்லாமல் விட்டு விட்டேன், எப்படியும் நம்ம பவன் காலால் பந்தை வெளியே தள்ளியதை படப்பதிவு போட்டுடுவார். அப்ப பார்த்து கொள்வோம்
@ அனுதினன்
பவன் பாவம் பார்க்க அப்பாவி மாதிரி இருக்கிறார், பவன் தம்பியிடம் எமாவுக்கு அக்கா இருக்கானு கேட்டு பார்க்கனும்
@ Subankan
நம்ம பாவனாவா? நம்மனு சொல்றது ஒரு மாதிரி இல்ல இருக்கு...
@ கன்கொன் || Kangon மற்றும்
@ Subankan
உங்க சண்டைக்கு நான் வரவில்லை, கடைசியில் யாருக்கு வெற்றி?????
@ புல்லட்
தாராளமா லைன் போடலாம், ஆத்து தண்ணியை கையில் அள்ளினால் தண்ணி குறையவா போகுது?
@ Sangkavi
நன்றி சங்கவி நான் உங்க ரசிகனப்பா
@ கன்கொன் || Kangon
பர்மிஷன் கொடுக்க நீர் என்ன இங்கிலாந்து நாட்டாமையா?? அப்படினா
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
@ V.A.S.SANGAR
லோஷனுடைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் உள்வீட்டு சதி
எ பவன்
///ஆனா லைன் போட்டு வேலையில்ல ஏற்கனவே செட்டாகிட்டுதாம்.///
ஆமாம் செட் ஆனவருடன் எடுத்த படம் உள்ளது போட்டால் நீங்கள் கவலை படுவீங்க என போடவில்லை
@ இலங்கன்
அவங்க பார்க்க மாட்டாங்க என ஒரு நம்பிக்கைதான்
@ LOSHAN
அந்த சில மாதங்கள் சீக்கிரமே வந்து முதலிடத்தை இழக்க வேண்டும்
@ ஜெட்லி
எமாவுக்கு தெரியுமொ தெரியாது.ஷ
எங்கம்மாவுக்கு தெரிந்து வீட்டில் ஒரே பிரச்சினை
@ VARO
அப்ப புல்லட்டின் முன் வீட்டு பாட்டி பற்றிய கதை உண்மைதானா வரோ??